Friday 8 March 2013

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்,

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது யோவான் 15 :5

உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு மரித்தாரே, அதில் நாம் எந்தப் பங்கும் எடுக்க முடியாது....... அந்தப் பாதையில் நடக்கவும் முடியாது! ஆனால் இயேசு பூமியில் இருந்த நாட்களிலெல்லாம் தன் மாம்சத்தில் தொடர்ச்சியாக மரித்தாரே, அந்த மரணத்தில் (மாம்சத்தில் உண்டாகும் பாடுகளில்) நமக்குப் பங்குண்டு! இப்படித்தான் நாம் இயேசுவின் ஜீவியமாகிய திவ்விய சுபாவத்தில் பங்கு பெறுகிறோம். இதை 2கொரிந்தியர் 4:10 வசனம் தெளிவுபடுத்துகிறது. நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து அதில் நிலைத்திருந்து வாசமாய் இருக்கும்படி நடந்துசெல்ல வகை செய்யும் புதிதும் ஜீவனுமான மார்க்கம் இதுவேயாகும்!!

மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தவனே, கிறிஸ்தவ ஜீவியத்தில் உன்னத ஸ்தானத்தை அடைந்தவனாவான்! இம்மகா பரிசுத்த ஸ்தலத்தில் நல் அபிப்ராயம் தேடும் பொருட்டு எந்த ஜனங்களும், எந்தத் தலைவர்களும் அங்கு இருக்க மாட்டார்கள். தேவன் ஒருவரே இருப்பார்!

இதில் நிலைத்து வாசமாயிருப்பவர்களே, ஜனங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள்! கிறிஸ்தவத் தலைவர்களேயானாலும், அவர்களது புகழ்ச்சியைத் தேடுவதிலிருந்தும் விடுதலைபெற்றிருப்பார்கள்! மனம் புண்படுவதிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பார்கள்! குறை சொல்லுதல், முறுமுறுத்தலிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பார்கள்! மனக் கசப்பிலிருந்தும், பொறாமையிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பார்கள்! மற்றவர்கள் அன்புகூரா விட்டாலும், அவர்களை அன்புகூருவதற்கும் முழு விடுதலை பெற்றிருப்பார்கள்! இவர்கள் ஜெபித்தாலும் அல்லது கூட்டங்களில் பேசினாலும் ஜனங்களைக் குறித்த உணர்வைவிட, தேவனைப்பற்றிய உணர்வாலேயே எப்போதும் ஆட்கொள்ளப் பட்டிருப்பார்கள்!! கர்த்தருக்குப் பயந்தவர்களாய், அவர்களின் வெளிப்புற ஜீவியம் எவ்வளவு தூய்மையாய் இருக்கிறதோ அதைப்போலவே தங்களின் உள்ளான மறைந்திருக்கும் ஜீவியத்திலும் தூய்மையாய் திகழ்வார்கள். இங்கு தங்கி வாசமாயிருப்பவர்கள்தான், மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படும் யாவும் தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது என்பதை நிஜமாகவே காண்பார்கள்!

இப்போது கிறிஸ்துவுக்குள்ளாக தாங்கள் வந்துவிட்ட தேவனுடைய பரிபூரணத்தையும் சுதந்தரித்திடும் சிலாக்கியத்தை ஒப்பிட்டு, உலகின் மற்ற “எல்லாவற்றையும்” குப்பையாக மதிப்பார்கள்!! பாவத்தின் மேல் பரிபூரண வெற்றி கொண்ட வாழ்விற்குள் இப்போது இவர்கள் பிரவேசித்து விட்டபடியால், தேவனுடைய வல்லமையால் இனி வழுவாதபடி தொடர்ந்து காக்கப்பட்டு, ஆண்டவரின் மகிமையில் இன்னும் அதிக அதிகமாய் பங்கு பெறுவார்கள்!! இங்கு பிரகாசிக்கும் தேவ வெளிச்சத்தில், மனுஷீகமானவைகள் யாதென்றும், உண்மையான ஆவிக்குரியவைகள் யாதென்றும் வகையறுத்து அறியும் பகுத்தறிதலையும் (discernment) அதிக அதிகமாய் இவர்கள் பெற்றிடுவார்கள்!!
— with Lax Mavadi and 17 others.

1 comment: