Friday 8 March 2013

ஞானஸ்நானம்...!!!

by Peter Samuel S on Wednesday, September 7, 2011 at 12:15pm ·
இயேசுவின் இரத்தத்தினாலன்றி வேறு எந்த கிரியையாலும் இரட்சிப்பில்லை.! ஆனால் உண்மையாய் இரட்சிக்கப்பட்டவன் தனக்காய் இரத்தம்சிந்தி ஜீவநன்தந்தவரை நேசிப்பான். இயேசு கூறினார், என்னிடத்தில் அன்பாய் இருந்தால் என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் என்று. ஞானஸ்நானம் என்பது இயேசு கடைசி கட்டளையாக கொடுத்தது. அவர் எனக்காய் உண்மையில் ஜீவனையே கொடுத்தார் என விசுவாசிப்பவன், தலைகீழாக தண்ணீரில் நடக்கவேண்டும் என கூறியிருந்தாலும் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வான். எவ்வளவு தூரம் அவரை பிரியப்படுத்தலாம் என அங்கலாய்ப்பான் (ஒரு காதல் மனைவியை பிரியப்படுத்த ஒருவன் அங்கலாய்ப்பதைவிட அதிகமாய்). அவரிடத்தில் அன்பாய் இருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கட்டளைக்கு கீழ்படியவில்லையெனில் (பழையஏற்பாட்டின் கட்டளையல்ல, புதிய ஏற்பாட்டின் கட்டளைகள்) அவனுடைய அன்பு உண்மையானதல்ல என்று யோவான் அப்போஸ்தலர் கூறுகிறார். எனவே உண்மையான அன்பிருந்தால் இயேசு எடுத்துக்கொண்ட முறைப்படி, அப்போஸ்தலர் கொடுத்த முறைப்படி எடுத்துக்கொள்ளலாமே.! அதில் என்ன தயக்கம், எதற்காக ஒரு விவாதம்..! ஒருமுறை மூழ்குகதல் என்பது 40 நாள் உபவாசத்தைப் போன்று ஒரு கடினமான காரியம் அல்லவே.! மேலும் ஒரே ஞானஸ்நானம் என்பது பிதா, குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் மூழ்கியெழும் ஞானஸ்நானம்தான். மற்றபடி பலவிதமான (தெழித்தல், மரத்தை சுற்றுதல் போன்ற) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் எல்லாம் ஆண்டவர் காண்பித்தமுறையல்ல, அது ஜனங்கள் தங்கள் வசதிக்காக மாற்றியமைத்துக் கொண்ட முறைகள்) ஞானஸ்நானத்தை சரிவர புரிந்துகொள்ளாதவர்கள் மற்றும் எடுப்பதற்கு சமயம் வாய்க்காமல் மரித்தவர்கள், நிச்சயம் அவர்கள் ஆண்டவரின் அன்பை புரிந்துகொண்டு அவரில் அன்பு கூர்ந்தது உண்மையானால் நிச்சயம் பரலோகம் தான். ஆனால் சமயம் கிடைத்தும், அதைக்குறித்து தர்க்கித்துக் கொண்டிருக்கிறவர்கள் ஆண்டவரில் முழுமையாய் அன்புகூரவில்லை எனக் கூறுவேன். என்னிடத்தில் அன்பாய் இருந்தால் ”என்” (இயேசுவின்) கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் என்று அவர் கூறினாரே..!!
சகோ. விஜய் அவர்கள் ஆண்டவரில் மிகவும் அன்புள்ளவர் என புரிந்துகொண்டிருக்கிறேன் (I don't know him personaly). அவருடைய கோபமெல்லாம் ஜனங்களை தவறாய் சுயந்லத்திற்காய் வழிநடத்தும் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களிடம் தான். அந்த கோபம் நியாயமானதும் கூட. ஆனால் கூட்டத்தில் செருப்பு வீசியவன் மீது தடியடி நடத்தும் போலீஸ் போல அவருடைய அடிகள் உண்மையாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் பிள்ளைகள் மீதும் விழுந்துவிடுகிறது. எனவே சகோ. விஜய் கொஞ்சம் கவனமாக உங்கள் வாளை சுழற்றுங்கள்.
சகோ இம்மானுவல் ஆப்ரகாம் (I don't know him also personaly) உண்மையான ஊழியர்கள் மேல் அடிவிழுவதைக் காணும்போது பொறுக்கமாட்டாமல் அடிப்பவர்கள் மீது பொங்கியெழுகிறார். அடிப்பவர்களது நோக்கம் புரியாமல் பொங்குகிறார். அவரும் ஆண்டவருக்காய் தான் வைராக்கியம் பாராட்டுகிறார்.
ஒவ்வொருவருடைய உள்நோக்கங்களையும் (சுயநலத்திற்காய் செயல்படுகிறவர்களை களைந்து, மற்றவர்களை) புரிந்துகொண்டு அனைவரும் இணைந்து ஆண்டவருக்காய் செயல்பட முயல்வோம், ஆண்டவர் நம்முடைய பிரயாசங்களை வாய்க்கச்செய்வார்.

No comments:

Post a Comment