Friday, 8 March 2013

வாலிப பிள்ளைகளுக்கு ஒரு எச்சரிக்கை

by Balaji Lakshmipathi on Wednesday, October 24, 2012 at 4:46pm ·


தன்னை ஒரு வளரும் பென்னி ஹின்னாகவும், டான் மொயனாகவும் நினைத்து நடந்து கொண்டிருக்கும் வாலி ஜன கவனத்திற்கு. நம்மில் எத்தனை பேர் நம்மிடம் இருக்கும் குறைகளை  திருத்தி  கொள்வதற்காய்  அங்கே மன்றாடுகிறோம் என்பதை சிந்திக்கும் நேரமிது.  நாம் அனைவரும் நமது மாரில் அடித்துக்கொண்டு நமது பாவங்களை அறிக்கை செய்யும் நிலையிலே உள்ளோமே தவிர யாரும் தாவிதை போலவும் யோசேப்பை போலவும் தானியேலை போலவும் நிற்கவில்லை. தேவ கூட்டங்களிலும் ஆராதனைகளிலும் சில போதகர்கள் நம்மை நோக்கி நீ மோசே என்றும் தாவீது என்றும் கூறும் தீர்க்கதரிசனங்களை கண்டு ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நமது உண்மையான செயலோ அப்படி இருப்பதில்லை. நாம் செய்யும் உலக காரியங்கள் நாம் செய்யும் தேவ காரியங்களை விட அதிகமாகவே உள்ளது... ஞாயிறு ஆராதனை பெறுவதற்காக இருக்குமானால் மீதி ஆறுநாட்கள் கொடுபதற்காய் இருப்பவையே. ஆனால் நமக்கோ ஆயிரம் வேலைகளும் உலக உல்லாசமும் இருக்கின்றனவே. கர்த்தர் நமக்காய் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொல்லும் நேரத்தைவிட, நாம் பள்ளியிலும் கல்லூரியிலும் செய்த பாவத்தை நினைத்து ஆனந்தம் கொள்வதிலே நேரம் அதிகமாய் இருக்கிறது. ஏழைகளுக்கும் கைவிடப்படவர்களுக்கும் செலவழிக்கும் பணத்தை விட நண்பர்களுக்கும் அவர்களுக்கு கொடுக்கும் பார்டியிலே தான் அதிக பணம் செலவிடுகிறோம். எவ்வளவு வீணாக்கிரோம். வீணாக்குவது ஆடம்பரம் என்று கூறப்படுகிறது.

நானும் ஆர்பநேஜ் செல்கிறேன், குழந்தைகளை காண்கிறேன் என்று கூறுகின்றனர். கர்த்தருக்குள் பிரியமானவர்களே, அன்பு அப்படி உருவாகுவதில்லை. அன்பு சிலுவையிலிருந்து உருவாகுகிறது. இன்றைய கிறிஸ்துவ வாலிப பிள்ளைகளுக்கு  ஆராதனைகளும் ஜெபங்களும் களியாட்டமாய் ஆகிவிட்டது. தவறான உபதேச்ங்களினாலும் வழி நடதுதளினாலும்  , வாலிப பிள்ளைகள் பாபிலோனை கட்ட முற்பட்டு கொண்டிருக்கின்றனர். உண்மையான அன்பு இல்லாமல், பலர் குமுறிக்கொண்டு இருக்கின்றனர்.பொறுமை இல்லதோராய் தலைவிரித்தாடி சுற்றி திரிகின்றனர். புதிய டாக்டிரிங்களையும் உருவாகுகின்றனர். உலக மக்களை வெறுத்து பேசிவிட்டு சபைக்குலேயே உலக மக்களை போல் பாபிலோனை கட்டுகின்றனர். உலகத்தில் இருப்பதை போன்ற அணைத்து கட்டுமானங்களும் சபைக்குள்ளே இருக்க விரும்புகின்றனர். அதையும் கட்டுகின்றனர். திரையரங்கமும், ஆட்டம் பாட்டம் போடும் அரங்குகளும், பண விளையாட்டுகளும் சபைக்குள்ளே தலைவிரித்தாட ஆரம்பித்துவிட்டது. உலகத்தில் என்னென்ன அமைப்புகளெல்லாம் இருக்கின்றனவோ அவையனைத்தும் அப்படியே சபைக்குள்ளே திணிக்கப்பட்டுவிட்டன. இத்தகைய பாபிலோனிய சபை மொத்தமாய் வாலிப பிள்ளைகளை கெடுத்துவிட்டன. இவைகளின் ஆரம்பம் பிரகாசமாய் இருந்தாலும், இவைகளின் முடிவு அற்பமாய் சாவதே என்பதை அறியாமல் ஆடுகின்றனர்.

வாலிப பிள்ளைகளின் கண்ணீர்களும் வருத்தமும் தங்களுடைய வேலைக்காகவும், காதலுக்காகவும், பணத்திற்காகவும் இருக்கிறதே தவிர, கர்த்தருடைய ராஜ்ஜியதிர்க்காய் இல்லை. மனதிலே பாரம் இல்லை, உலகத்தினால் படும்  வருத்தமும் துக்கமுமே மிஞ்சுகிறது. இந்த ஆட்டத்திற்காக தான் தேவன் நமக்காய் சிலுவையில் உயிர் நீத்தாரா. இப்படி உருவாகும் வாலிபன், தனது கிறிஸ்துவ வாழ்க்கையிலும்,திருமண வாழ்க்கையிலும் தோத்து போகிறான், ஏன்னென்றால் அவனுடைய நம்பிக்கை கர்த்தர் அல்ல, அவன் கர்த்தர் என்று நினைத்து கட்டிய பாபிலோனிய சபை. விநாயகரை போலவும், கிரிஷ்னரை போலவும் கர்த்தரை எண்ணி ஆராதனை செய்கின்றனர். ஐ பீ எள் ஆட்டம் இருந்தால் அன்றைய ஜெபம் நேரம் மாறுகிறது. ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு கான்வாஸ் செய்யும் பிள்ளைகள். வாலிப பிள்ளைகள் உல்லாசத்திலும் ஆடம்பரத்திலும் சிக்கி சீரழிகின்றனர். இதன் விளைவு, இன்னும் பல பாபிலோனிய அமைப்புகளில் சபைகள் அவர்களே உருவாகுகின்றனர்.

காதலிப்பது தவறு என்று நினைத்துகொண்டு அதை முறிக்கும் வாலிப பிள்ளைகள், அது கடவுள் சித்தம் என்று அவர்கள் சபைக்குள்ளேயே வேறு ஒரு வாலிபரின் கையை பிடிக்கின்றனர். அதுவும் சில நாட்களில் உடைந்து அந்த உறவு அறுவெருக்கபடுகிறது. சகோதர பாசமும், சகோதர பார்வையும் கெட்டுபோன வாலிப ஜனமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குல்லாய் உறவு வைத்துக்கொள்ள முற்படும் வாலிபர்களின் நட்பு உலகத்தரமாய் மாறுகிறது. அதற்கேற்றார் போல் சபையின் நெறிகளும் மாற்ற படுகிறது. மக்களின் மேன்மை அவர்களின் பணமும், படிப்பும் அந்தஸ்தையும் கொண்டு அமைக்கபடுவாதால், வாலிப பிள்ளைகள் அதுதான் வாழ்கையின் குறிக்கோள் என்று அவர்களின் பெற்றோராலும் போதகராலும் தவறாய் வழிமாற்றபடுகின்றனர். இப்படி சபையின் வாலிப பிள்ளைகள் வழிமாற்றபடுகின்றனர். இதை தவறு என்று அறிந்து கொள்ளாத வாலிப பிள்ளைகள் இதை திருத்திகொள்வதிலும் ஆர்வம் செலுத்துவதில்லை.

வாலிப கூட்டம் , வாலிப கூடுதல், வாலிப ஆராதனை என்று வாலிபர்களை கவறுவதற்கு பாபிலோனின் கூட்டங்கள் நடத்தபடுகிறது. பரிசுத்த ஆவி என்று தவறான அசுத்த  ஆவிகள்  திணிக்கபடுகிறது. கர்த்தர் யோவானில் கூறிய பரிசுத்த ஆவியானவரின் அர்த்தம் புரியாதவர்களாய் இளைஞர்கள் கண்கள் மூடியவர்களாய் ஆடிக்கொண்டும் உருண்டிகொண்டும் இருக்கின்றனர். கண்கள் இருந்தும் காணாதவர்களுமாய் காதுகள் இருந்தும் கேளாதவர்களுமாய் வாலிப பிள்ளைகள் நடக்கின்றனர். கூட்டம் சேருகின்ற இடம் அபிஷேகிக்க பட்ட இடம் என்று தவரிளைகின்றனர். வாலிப மிஷன்களும் அவர்களை வழிமாற்றுகின்றன. இப்படி வாலிப பிள்ளைகள் கர்த்தரை நாடாமல், சபைக்குள்ளேயே வழிமாறுகின்றனர்.

வாலிப பிள்ளைகளே. இதெல்லாம் அறிந்து அவற்றிலிருந்து வெளியேறும் நேரமிது. யூத் மிஷன்கள்  தங்களின் மிஷன்கள் பெரிதாக சில மைல்கற்க்களையும் அவர்களுக்காக அவர்களே நாட்டுகின்றனர். தங்களின் சாதனைகளையும் மேன்மைகளையும் பாபிலோனின் கோட்டைகளை உயர்த்திகொள்கின்றனர். கர்த்தர் நாமம் கர்த்தர் நாமம் என்று கூறி அவர்கள் பாபிலோனை அழகாய் வாலிபர்களை கொண்டு கட்டுகின்றனர். நிதானிக்கும் நேரமிது. வாலிபிரயாயதிலையே இவற்றை நாம் திருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இவற்றை நீங்கள் நடைமுறையில் கொண்டுவர முற்பட்டால், அப்படியெல்லாம் இருக்கனும் என்று அவசியம் இல்லை என்று கிறிஸ்துவர்களே கூறுவார்கள். கிறிஸ்துவை போல் நடக்க விரும்புபவன் இவைகளை பின்பற்றுகிறான், உலகத்தை போல் இருக்க விரும்புகிறவன், இவற்றை மதியான்.கிறிஸ்துவை வெறுத்தது போல் உங்களையும் கிறிஸ்துவர்கள் வெறுப்பார்கள். ஆனால் இடம் மாறாதிருங்கள். வேதத்தை படித்து அதிலே நிலைபெறுங்கள். கர்த்தரையே நாடுங்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு, நம்பிக்கை வீண் போகாது. கர்த்தரையே பற்றி கொள், திருவசனம் கற்றுகொள், அவரே பாதை காட்டுவார். அதிலே நீ நடந்திடு.

கர்த்தரின் இனிய நாமத்தில் தங்களை ஆசிர்வதிக்கிறேன். இன்னும் நிறைய விசயங்களை எழுத நினைத்தாலும், நீங்கள் படிக்க மாடீர்கள் என்று தெரிந்து கட்சிதமாய் முடித்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment