Saturday 9 March 2013

இயேசுகிறிஸ்துவில் இளைப்பாறுதல்


இயேசுகிறிஸ்து தன்னுடைய சிலுவை மரனத்தின் மூலம் உலகத்தில் உள்ள அனைவருக்குள் இருந்த ஆதாமின் கீழ்படியாத சுபாவத்திற்கான தண்டனையை தான் பெற்று எல்லோரையும் ஆண்டுகொண்டிருந்த மரனத்தில் இருந்து விடுவித்து அவருடைய ஜீவனை நமக்குத்தந்தார் ,ஆதாமுடைய ஜீவனை (ஆதாமுடைய கீழ்படியா சுபாவத்தை) சிலுவையில் அறைந்தார் .இந்த ஆதாமுடைய கீழ்படியா சுபாவம் தான் நம்முடைய சுயம் இது சிலுவையில் அடிக்கப்பட்டுள்ளது .இந்த சத்தியத்தை கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் அறிவோம் அதேவேளையில் விசுவாசித்து செயள்படும்போதுதான் இந்த சத்தியம் நம் ஜீவியத்தில் சாத்தியமாகும் .ஒருவன் இயேசுகிறிஸ்துவை இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும் போது அவன் பாவம் மண்ணிக்கப்படுகிறது அப்படியே நித்திய ஜீவனாகிய இயேசுகிறிஸ்து அவனுள் வந்து அமர்கிறார் இங்கு “நான்” அல்ல என்கிற ஆதாம் சிலுவையில் அறையப்பட்டான் என்பதை விசுவாசித்து கிறிஸ்துவே இப்போது என்னில் ஜீவிக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதால் அங்கே ஆதமின் சுபாவமும் கிறிஸ்துவின் சுபாவமும் இருக்கிறது கொஞ்சம் விளக்கமாய் சொன்னால் பழைய மனுசனாகிய ஆதாமும் புதியதாக உள்ளான மனுசனும் இயேசுகிறிஸ்துவும் இருக்கிறார்கள். பவுல் சொன்னது போல் நான் அனுதினம் சாகிறேன் இது பளைய மனுசன் ஆதாம் (சுயம்) செத்து ,புதிய மனுசன் இயேசுகிறிஸ்து அந்த ஆத்துமாவை ஆளுகை செய்து செயல்படுவதாகும்.இயேசுகிறிஸ்து கூறினது போல் ஒருவன் தன் ஜீவனை காத்துக்கொள்ள விரும்பினால் அதை இழந்து போவான்.என் நிமித்தம் தன் ஜீவனை (சுயமாகிய ஆதாமை) இழக்கிறவன் ஜீவனை( நித்திய ஜீவனாகிய கிறிஸ்துவை) பெற்றுக்கொள்வான் என்றார்.இதைதான் மாம்சமும் (சுயமாகிய ஆதாமின் கீழ்படியா சுபாவமும்)உள்ளான மனிதனை பெலப்படுத்தும் ஆவியும் (கிறிஸ்துவின் ஆவி) ஒன்றுக்கொன்று எதிரடையாக யுத்தம் செய்கிறது இப்படி இருக்கும் நிலையில் தான் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் சுபாவம் மாறிமாறி அமைகிறது.இந்த போராட்டத்தில்தான் பவுல் இருந்து விடுப்பட்டு கிறிஸ்துவின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார் .இனி நான் அல்ல எனக்குள் இருக்கும் ஜீவன் இயேசுகிறிஸ்து அவர்தான் என்னை ஆளுகை செய்து எனக்குள் இருந்து நான் என்கிற சுயத்தால் செய்யாமுடியாத நற்கிரியைகளை இயேசுகிறிஸ்து செய்கிறார் என்றார் இதை பவுல் நான் அதிகமாய் பிரையாசப்பட்டேன் ஆனாலும் நான் அல்ல எனக்குள் இருந்த கிருபையே அப்படி செய்தது என்றார் இங்கே கிருபை என்று இயேசுகிறிஸ்துவை கூறுகிறார்.இந்த அனுபவம் இந்த சத்தியத்தை விசுவாசத்தால் உரிமையாக்கிக்கொண்டு நடக்க அற்பனிக்கிறவர்களுக்கு சாத்தியம் .இப்படிப்பட்டவர்கள்தான் சொல்லமுடியும் இந்த உலகத்தை சார்ந்து வாழ சாதகமாய் இருந்த அனைத்து நன்மையான காரியங்களும் நஷ்டம் என்று

No comments:

Post a Comment