Friday 8 March 2013

1. சாத்தானின் தோல்வி (உயிர் மீட்சியே நமது தேவை)

by Arputharaj Samuel on Tuesday, September 27, 2011 at 9:40am ·

"என்ன சுவிசேஷம்?" என்று கேட்டான் சாத்தான்.

"மிகப் பெரிய நற்செய்திதான்" என அலாஸ்கா அதிபதி பதில் கூறினான்.

"எஸ்கிமோ ஜனங்களில் யாரேனும் கேள்விப் பட்டார்களா?" என்று வியப்புடன் வினவினான் பிசாசுகளின் தலைவன்.

"ஒரு தனி நபர்கூட இல்லை! நானே அதைப் பார்த்துக்கொண்டேன்" என்று சொல்லித் தலைவணங்கினான்.
"யாரேனும் உள்ளே போக முயற்சித்தார்களா?" என்று அதிகாரத் தொனியில் சாத்தான் கேட்டான்.
"முயற்சித்தார்கள் ஐயா, ஆனால், எல்லாம் அபத்தமாய்ப்போயிற்று" என்று ஜெயக் குரலுடன் அதிபதி மகுமொழி பகர்ந்தான்.
"அது எப்படி என்று எனக்குச் சொல் பார்க்கலா" என்றான் சாத்தான்.
"வட துருவத்தில் தனியாக வாசஞ் செய்யும் ஜாதிகளைப் பார்க்கும்படியாக நான் அங்கு சென்று அலைந்து திரிகையில் இரண்டு மிஷனரிகள் நாய்கள் இழுக்கும் வண்டிகளில், என் இராஜ்யமாகிய அலாஸ்காவில் பிரவேசித்து எஸ்கிமோ மக்களத் தேடி வந்தார்கள் என்னும் திடுக்கிடும் ஒரு செய்தியைக் கேட்டேன்" என்றான்.
"அப்படியா! நீ என்ன செய்தாய்?" என்று ஆத்திரத்துடன் சாத்தான் கேட்டான்.
"உடனே நான் என் ஆதீனத்திலுள்ள அந்தகார சேனைகளைக் கூட்டினேன். ஆலோசனைகள் பல‌ செய்தோம். கடைசியாக, அந்த மிஷனெரிகளை உறைபனியால் கொல்வதே சுலபமான வழியென முடிவு செய்தோம்.
"அவர்கள் அன்றைக்கே தொலைவிலுள்ள ஜாதியாருக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க ஆத்தும பாரத்தோடும், தைரியத்தோடும், ஒரு மாத உணவு எடுத்துக்கொண்டு பயணஞ் சென்றார்கள். இதுவே ஏற்ற வாய்ப்பென்று அறிந்து, நாங்கள் எங்கள் தீயசெயல்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒருவார யாத்திரை தூரத்திலிருக்கும்போது பாரப்பளுவால் ஆகாரமிருந்த வண்டி இளகின பனியில் அமிழ்ந்து மறைந்தது.
"இளைத்துக் களைத்தபோதிலும் அவர்கள் வீரத்தோடு முன் சென்றார்கள். ஆகாரம் இல்லாததால் அவர்கள் சோர்வுற்றுப் பிரயாணத்தை நிறுத்திவிட யோசித்துக் கொண்டிருக்கையில், என் க‌ட்ட‌ளையால் உட‌னே புச‌ல் காற்று வீச‌த்தொட‌ங்கிற்று. உறைப‌னியால் ப‌னிக்க‌ட்டிக‌ள் குவிந்த‌ன‌. ஆகாய‌ அதிப‌ராகிய‌ என் ஆண்ட‌வ‌னே! அவ‌ர்க‌ள் குளிரினால் விறைந்து கொண்டார்க‌ள்" என்றான் அதிப‌தி.
"சிற‌ந்த‌ வேலைதான்!" என‌ ப‌தில‌ளித்தார் சாத்தான்.
இச்ச‌ம்பாஷ‌ணையைக் கேட்டுக்கொண்டு நின்ற‌ தீபெத்து அதிப‌தியிட‌ம் சாத்தான் திரும்பி "நீ கொண்டு வ‌ந்த‌ செய்தி என்ன‌?" என்றான்.
"அர‌சே, த‌ங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சியைக் கொடுக்கும் செய்தியை நானும் கொண்டு வ‌ந்திருக்கிறேன்" என‌ப் ப‌தில‌ளித்தான்.
"ஓஹோ! உன்னுடைய‌ இராஜ்ய‌த்தையும் கைப்ப‌ற்ற‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌தா? அதெப்ப‌டி? ச‌ங்க‌தியை உட‌னே சொல்" என்றான்.
"இராஜாவே, தீபெத்தின் ம‌த்தியில் நான் என் அலுவ‌லிலிருந்த‌போது, என் இராஜ்ய‌த்தில் சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌ வேண்டுமென்று ஒரு புது ச‌ங்க‌ம் ஸ்தாப‌ன‌மான‌ செய்தி எட்டிய‌து. உட‌னே நான் என் ச‌காக்க‌ளை அழைத்து ஆலோசித்துச் சித்தியாகும் ஒரு முடிவு க‌ட்டினோம்.
"அதிக‌ தைரிய‌த்துட‌ன் அச்ச‌ங்க‌ம் அனுப்பின‌ இர‌ண்டு ம‌னித‌ர் சீனா தேச‌த்தைக் க‌ட‌ந்து, த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கும் பிர‌தேச‌த்தின் எல்லையைத் தாண்டி துணிக‌ர‌மாக‌ உள்ளே வ‌ந்த‌ன‌ர். மூன்று நாள் ப‌ய‌ண‌ஞ் செய்ய‌ அவ‌ர்க‌ளுக்கு இட‌ங்கொடுத்த‌ நாங்க‌ள், ஒரு மாலை ம‌ய‌ங்கும் வேளையில் அப்பிர‌தேச‌த்திலுள்ள‌ கொடூர‌மான‌ இர‌ண்டு நாய்க‌ளை அவ‌ர்க‌ள் மேல் பாய‌ ஏவினோம். அஞ்சா நெஞ்ச‌த்துட‌ன் ச‌ண்டை செய்த‌ அவ்விருவ‌ரில் ஒருவ‌ன் இறுதியில் கீழே விழுந்து உயிர் துற‌ந்தான். ம‌ற்ற‌வ‌னோ அத‌ரிச‌ன‌ சேனைக‌ளால் காக்க‌ப்ப‌ட்டுத் த‌ப்பித்துக்கொண்டான். அந்த‌ச் சேனைக‌ளை மேற்கொள்ள‌ எங்களால் முடிய‌வில்லை" என்றான்.
"த‌ப்பிக்கொண்டான் என்றாயே, அவ‌ன் அப்புற‌ம் சுவிசேஷ‌ தூத‌த் தெரிவித்தானோ?" என்று கூச்ச‌லிட்டான் பிசாசு.
"இல்லை, என் அதிப‌னே, நாங்க‌ள் அத‌ற்கு இட‌ங் கொடுக்க‌வில்லை அத்தேச‌ மொழியில் ஒரு வார்த்தையைக் க‌ற்கும் முன்னே, ந‌ம் சேனைக‌ள் அவ‌னைப் பிடித்து அக்குடிக‌ளிட‌ம் ஒப்ப‌டைத்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் விரைவாக‌ விசாரித்து விதித்த‌ தீர்ப்பைக் கேட்டால் இராஜாவே, நீங்க‌ள் மிக‌வும் ம‌கிழ்வீர்க‌ள். ஈர‌மான‌ ஒரு க‌வ‌ரிமான் தோலினால் அவ‌னை மூடித் தைத்து வெளியில் காய்ந்து சுருங்க‌ச் சுருங்க‌ அவ‌னுடைய‌ எலும்புக‌ளும் முறிந்து அவ‌ன் செத்தான்."
இச்செய்தியைக் கேட்ட‌ சாத்தானின் கூட்ட‌ம் ஆர‌வார‌த்தோடு த‌ங்க‌ள் த‌லைவ‌னாகிய‌ சாத்தானை வ‌ண‌ங்கிய‌து.
இந்த‌ இரைச்ச‌ல் நின்ற‌தும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிப‌தியான‌ குட்டிச்சாத்த்டானைப் பார்த்து, "நீ என்ன‌ செய்திகொண்டு வ‌ந்திருக்கிறாய்? நீ இன்னும் அங்குதானே இருக்கிறாய்? உன்னுடைய‌ இராஜ்ய‌த்திலும் ஏதாவ‌து முய‌ற்சி ந‌ட‌ந்த‌தா?" என‌ச் சாத்தான் அவாவுட‌ன் கேட்டான்.
"ஆம், என் ஆண்ட‌வ‌னே, கேளுங்க‌ள், நான் சொல்லுவேன்" என்று சொல்லி அவ‌ன் அமைதி நில‌வ‌ சைகைகாட்டிக் க‌தையை ஆர‌ம்பித்தான்.
"நான்கு ம‌னித‌ர் த‌ங்க‌ள் இர‌ட்சக‌ரை அறிவிக்கும்ப‌டி மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌ன் புற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். என் இராஜ்ய‌த்தின் எல்லைக்குள் அவ‌ர்க‌ள் வ‌ந்த‌தும்'' இந்த எல்லையை தாண்டி, ஆப்கானிஸ்தான் பூமிக்குள் பிர‌வேசிப்ப‌து கூடாது'' என்று எழுதிக் தொங்கும் வாச‌க‌த்தைத் த‌லை வாச‌லில் க‌ண்டார்க‌ள். உட‌னே அவ‌ர்க‌ள் அவ்விட‌த்தில் முழ‌ங்காற்ப‌டியிட்டு ஜெபித்தார்க‌ள். சுமார் ஐம்ப‌து அடிதூர‌த்தில் ஒரு க‌ற்குவிய‌லின்மேல் ஓர் ஆப்கானிய‌ காவ‌லாள‌ன் துப்பாக்கியோடிருந்தான். ஜெபித்த‌பின், அந்த‌ நால்வ‌ரும் தைரிய‌த்துட‌ன் என் எல்லைக்குள் புகுந்த‌ன‌ர். சுமார் இருப‌து அடிக‌ள் வ‌ந்த‌வுட‌னே, அந்த‌க் காவ‌லாள‌ன் மின்ன‌ல் வெட்டினாற்போல் மூன்று குண்டுக‌ளை அவ‌ர்க‌ள்மேல் சுட்டான். மூன்று பேர் த‌ரையில் விழுந்த‌ன‌ர்; இருவ‌ர் ஸ்த‌ல‌த்திலேயே ம‌ரித்த‌ன‌ர்; ஒருவ‌ன் காய‌ப்ப‌ட்டான். நான்காவ‌து ம‌னித‌ன் காய‌ப்ப‌ட்ட‌வ‌னை எல்லைக்கு வெளியே உட‌னே இழுத்துச் சென்றான். இர‌ண்டொரு நாள்க‌ளுக்குள் அவ‌னும் இற‌ந்தான். உயிருட‌னிருந்த‌ நான்காவ‌து ம‌னித‌னோ இள‌க்க‌ரித்துத் தேச‌த்தை விட்டு ஓடிப்போனான்" என்று சொல்லி முடித்தா.
உடனே பேய்க் குழாங்கள் கும்மாளம் போட்டு கூச்சலிட்டன. சாத்தானும் ஆடிப்பாடி அகமகிழ்ந்தான்.
அதன்பின் அவர்கள் சாத்தானை நோக்கி; "மகா இராஜாவே, சுவிசேஷம் நமது இராஜ்யங்களுக்குள் வரக்கூடாதென்று ஏன் தாங்கள் ஆர்வங்கொள்ளுகிறீர்கள்? இதன் காரணத்தைத் தாங்கள் அடியாருக்குச் சொல்ல மாட்டீர்களா? நமது இந்திய தேசத்தின் அதிபதி இராஜ்யத்தையும், சீனா தேச அதிபதியின் அரசையும், ஆப்பிரிக்கா தேச அதிபதியின் இராஜ்யத்தையும் பலமுள்ள சேனைகள் கைப்பற்றுகிறார்கள் என்பதையும், கிறிஸ்து இயேசுவினிடம் மனிதர்கள் தினமும் சேருகிறார்கள் என்பதையும் தாங்கள் அறியாமலிருக்கிறீர்களா?" என்று வினவினார்கள்.
"ஆம், அவை அனைத்தியும் நாம் நன்றாய் அறிவோம்; என்றாலும் நான் இப்போது சொல்வதை எல்லாரும் கவனித்துக் கேளுங்கள். நான் ஏன் மூடப்பட்டிருக்கும் தேசங்களின்மேல் கவனம் செலுத்துகிறேன் என்றால், அநேக தீர்க்கதரிசன மொழிகளால் இதுவே எனக்கு அதிகக் கவலை கொடுக்கிறது. அது யாதெனில் ''இராஜ்யத்தின் இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல் ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவுவரும்'' என்பதே. கடவுள் தமக்கென்று ஒரு ஜனத்தைப் புறஜாதிகளிலிருந்து எடுக்கும்படியாக அவர்களைச் சந்திக்கிறார். அதற்குப் பின்பு "நான் வருவேன்" என்று அவர் சொல்லுகிறார். சகல ஜாதிகளினின்றும் சீடர்கள் அவரிடம் வருவார்கள் என்று அவர் கட்டளையில் காணப்படுகிறது. ஆகையால் ஒவ்வொரு நாட்டின் ஜனமும் சுவிசேஷத்தைக் கேட்கும் வரைக்கும் இயேசு கிறிஸ்து ஆட்சி செய்ய இவ்வுலகத்திற்குத் திரும்பி வரமாட்டார் என்பது திண்ணம். ஏனெனில் ''தான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் என்று வேதாகமத்திலெழுதியிருக்கிறது (வெளி 6:9). ஆகவே, ஏற்கனவே சுவிசேஷம் அறிவித்து வரும் தேசங்களுக்கு எத்தனை மிஷனெரிகள் அனுப்பப்பட்டாலும் அல்லது எத்தனை பேர் கிறிஸ்தவர்கள் ஆனாலும் அது நமக்குக் கவலை இல்லை. ஆனால் சுவிசேஷம் கேள்விப்படாமல் இருக்கும் பிரதேசங்களாகிய அலாஸ்காவிலும், தீபெத்திலும், ஆப்கானிஸ்தானிலும் மற்றுமுள்ள நமது இராஜ்யங்களிலும் அச்செய்தி அறிவிக்கப்படுமட்டும் அவர் ஆட்சி செய்யத் திரும்பமாட்டார் என்பது நிச்சயமே நிச்சயம்" என்று சாத்தான் விளக்கிக் காட்டினான்.
"அப்படியானால் மூடப்பட்ட தேசங்களுக்குள் எவ்வகை சுவிசேஷகரும் புகவிடாமல் தடுத்துவிட்டால் அவர் பூமிக்கு வந்து அரசாட்சி செய்யும் நோக்கத்தை அழித்து விடலாம் அல்லவா?" என்று பிரென்ஞ்சு, இந்தோசீனா அதிபதி கூறினான்.
"நாம் அவ்வாறே செய்து முடிப்போம்" என்று கம்போடியா அதிபதியாகிய சாத்தான் ஆரம்பித்து ''என் நாட்டிலே இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு கம்போடியனுமில்லை என்று ஒரு மிஷனெரியுங்கூட ஒப்புக்கொண்டான். நம் கையினின்று ஒர்வனாவது தப்பிப் போகாதபடிக்கு நாம் பார்த்துக் கொள்ளுவோம்" என்று கர்வத்துடன் சொன்னான்.
"நீ சொன்ன‌து மிக‌வும் ந‌ல்ல‌து; நாம் இன்னும் அதிக‌ விழிப்பாயிருந்து மூட‌ப்ப‌ட்டிருக்கும் தேச‌ங்க‌ளினு அவ‌ர்க‌ள் எடுக்கும் ஒரு சிறு முய‌ற்சியையுங்கூட‌ உட‌ன‌டியாக‌ அழிக்க‌வேண்டும்" என்று தீர்மான‌ம்ப‌ண்ணின‌ பின் சாத்தான் கூட்ட‌ம் முழுவ‌தும் குதூக‌லத்துட‌ன் எழுந்து "அப்ப‌டியே செய்வோம்" என்று வாக்குறுதி கொடுத்துத் த‌ம் த‌ம் இராஜ்ய‌த்தை நோக்கி விரைந்து சென்ற‌ன‌.
ஆண்டுக‌ள் ஐம்ப‌து க‌ழிந்த‌ன‌. இவ்வுல‌க‌ அதிப‌தியாகிய‌ சாத்தான் ம‌ன‌ நிம்ம‌திய‌ற்று கோப‌முக‌த்தோடு இங்கும‌ங்கும் ந‌ட‌ந்துகொண்டு த‌ன‌க்குள்ளே முணுமுணென்று பேசினான். "சுவிசேஷ‌ப் பிர‌ப‌ல்ய‌ம் செய்யாத‌ தேச‌ங்க‌ளில் அதை அறிவிக்கும் நோக்க‌ம் என‌க்குக் கொஞ்ச‌ங்கூட‌ பிடிக்கிற‌தில்லை. அவ‌ர்க‌ள் எழுதியிருக்கும் வாக்குமூல‌ம் என‌க்கு அதிக‌ வெறுப்பாயிருக்கிற‌து. அவ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌திலும் ச‌க‌ல‌ சிருஷ்டிக்கும் அறிவிக்க‌வேண்டும் என்றும், சுவிசேஷ‌க‌ரை அனுப்பின‌ இட‌த்திற்கே ம‌றுப‌டியும் அனுப்பாம‌ல், புது இட‌ங்க‌ளிலும், ந‌ற்செய்தியைக் கேளாத‌ ஜாதியாரிட‌த்திற்கும், ஜ‌ன‌த்தார‌ண்டைக்கும் அனுப்ப‌வேண்டும் என்றும் திட்ட‌ம் வ‌குத்திருக்கிறார்க‌ள். தாங்க‌ள் இயேசு இராஜாவைக் குறித்து ஓயாம‌ல் பிர‌லாபித்து அவ‌ரை அழைத்துவ‌ர‌ வேண்டுமென்று வ‌ற்புறுத்துகிறார்க‌ள். அவ‌ர் வ‌ருவாரானால் என் க‌தி என்ன‌வாகும்? இதை த‌டுக்க‌ நான் உட‌னே ஒரு ச‌ங்க‌ம் கூட்ட‌வேண்டும்" என்று சொல்லிச் சாத்த்டான் த‌ன் ச‌காக்க‌ளையெல்லாம் வ‌ரும்ப‌டிக் க‌ட்ட‌ளையிட்டான்.
சில‌ நிமிட‌த்திற்குள் குட்டிச் சாத்தான் அனைவ‌ரும் வ‌ந்து ஆஜ‌ராயிருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளெல்லாரும் வான‌த்தினின்று த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ தூத‌ர்க‌ளேயாவ‌ர். சாத்தானின் ச‌முக‌த்தில் உத்திர‌வில்லாம‌ல் ஒருவ‌னும் பேச‌த் துணிய‌வில்லை. அப்புற‌ம் சாத்தான்: "அலாஸ்காவின் அதிப‌தியே, நீ எழுந்து நில்" என்றான். அவ‌ன் ப‌ய‌ந்து ந‌டுங்கிக்கொண்டு நின்றான்.
"அவ‌ர்க‌ள் இன்னும் உள்ளே வ‌ந்தார்க‌ள்?" என்று கேட்டான். "ஆம், என் ஆண்ட‌வ‌னே" என்று மில்லிய‌ குர‌லில் ப‌ய‌த்துட‌ன் ப‌தில‌ளித்தான்.
"அது எப்ப‌டி? நீ ஏன் என் இராஜ்ய‌த்தைச் ச‌ரியாய்க் காவ‌ல் காக்க‌வில்லை?" என்று க‌ர்ச்சித்தான் சாத்தான்.
"ம‌ஹா இராஜாவே, நாங்க‌ள் எங்க‌ளாலான‌ம‌ட்டும் காவ‌ல் புரிந்தோம். ஆனால் ஒன்றும் முடிய‌வில்லை. எஸ்கிமோ ஜாதியாருக்கு எப்ப‌டியோ செய்தி எட்டிவிட்ட‌து. ப‌னிக்க‌ட்டியினால் மாண்ட‌ முத‌ல் இருவ‌ரின் ச‌ரீர‌ங்க‌ள் க‌ண்டுப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இக்காரிய‌ம் ச‌பை முழுவ‌தையும் அன‌ல் மூட்டிவிட்ட‌து. ஆக‌வே, ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் துணிவு கொண்டார்க‌ள். சில‌ரை நாங்க‌ள் அழித்தோம்; அநேக‌ர் சோர்வுற்றுப் பின்வாங்கினார்க‌ள். என்றாலும், நாங்க‌ள் என்ன‌தான் த‌டை செய்தாலும், திர‌ளான‌ தேவ‌ தூத‌ர்க‌ளால் காக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர்க‌ள் உள்ளே நுழைந்து த‌ங்கிவிட்டார்க‌ள். அவ‌ர்க‌ளை அப்புற‌ப்ப‌டுத்த‌ எங்க‌ளால் முடிய‌வில்லை. இன்றைக்கு நூற்றுக்க‌ண‌க்கான‌ எஸ்கிமோ ஜ‌ன‌ங்க‌ள் க‌ட‌வுளின் இராஜ்ய‌த்தில் சேர்ந்திருக்கிறார்க‌ள். ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் ந‌ற்செய்திய‌க் கேட்டு இருக்கிறார்க‌ள்!" என்றான்.
இதைக் கேட்ட‌தும் சாத்தானுக்கு அட‌ங்காங்கோவ‌ம் வ‌ந்த‌து. பிர‌தான‌ பேய்க‌ளும் அவ‌னுடைய‌ கொடூர‌ப் பார்வைக்குப் ப‌ய‌ந்து மிர‌ண்டு ஓட‌ முய‌ற்சித்தன‌.
சாத்தான் வேறொரு குட்டிச் சாத்தானைப் பார்த்து: "தீபெத்தின் அதிப‌தியே, நீ முன்னால் வா. நீ ந‌ல்ல‌ செய்தி கொண்டு வ‌ந்திருக்கிறாய் என‌ நான் ந‌ம்புகிறேன்.
"இல்லை, என் ஆண்ட‌வ‌னே, என் நாட்டிலும் அப்ப‌டித்தான்" என‌ப் ப‌தில‌ளித்தான்.
சாத்தான்: "என்ன‌டா! யாரேனும் உன் இராஜ்ய‌த்தில் இயேசுவைப்ப‌ற்றி கேள்விப்பட்டார்க‌ளா?"
"ஐயா! அல்லும் ப‌க‌லும் எங்க‌ளாலான‌ம‌ட்டும் அவ‌ர்க‌ளைத் த‌டுத்தோம். ஒன்றும் முடிய‌வில்லை. அவ‌ர்க‌ள் புதிதாக‌ ஒரு ச‌ங்க‌ம் ஏற்ப‌டுத்தியிருப்ப‌தாக‌த்ட் தெரிகிற‌து. அத‌ன் நோக்க‌மாவ‌து; ஒருவ‌ரும் போகாத‌ பிர‌தேச‌த்திற்குப் போக‌ வேண்டும்; ம‌ற்றோர் கைப்ப‌ற்றியிராத‌ இட‌ங்க‌ளில் பிர‌ச‌ங்கிக்க‌வேண்டும் என்ப‌தே. அச்ச‌ங்க‌த்தின் த‌லைவ‌னைச் சீனா தேச‌த்து ந‌ம‌து அதிப‌தி த‌ன் சேனைக‌ளைக் கொண்டு அழிக்க‌ப் பிர‌யாச‌ப்ப‌ட்டும் வீணாய்ப் போயிற்று. திர‌ளான‌ தேவ‌ தூத‌ர்க‌ளால் அவ‌ன் காக்க‌ப்ப‌ட்டு உயிரோடிருக்கறான். நாய்க‌ள் அவ‌ன்மேல் பாய்ந்த‌ன‌. ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளை அவ‌னுக்கு விரோத‌மாய் எழுப்பிவிட்டோம். ஆனால், இவைக‌ள‌னைத்தும் ப‌ய‌ன‌ற்றுப்போயின‌. மேலும் மேலும் அவ‌ர்க‌ள் முன்னேறி வ‌ந்த‌மையால் த‌ற்ச‌ம‌ய‌ம் நூற்றுக்க‌ண‌க்கான‌ தீபெத்தின் ம‌க்க‌ள் ந‌ம்மைவிட்டு நிர‌ந்த‌ர‌மாக‌ப் பிரிந்து போய்விட்டார்க‌ள். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ந‌ற்செய்தியைக் கேட்டுவிட்ட‌ன‌ர். வெகுதூர‌ம்வ‌ரை அவ‌ர்க‌ளின் சாட்சிய‌ம் கூற‌ப்ப‌ட்டும் ஆயிற்று" என்று சொன்னான்.
இச்செய்தியைக் கேட்ட‌தும் சாத்தானின் கோப‌த்திற்கு ஓர் அள‌வில்லை. உட‌னே அவ‌ன் ஆப்கானிஸ்தானின் அதிப‌தியாகிய‌ வேறொரு குட்டிச் சாத்தானை "நீ எழுந்திரு" என்று க‌ட்ட‌ளையிட்டான். உட‌னே அவ‌ன் திகைப்புற்று எழுந்து முன்வ‌ந்தான்.
"நீ எப்பொழுதும் என் இராஜ்ய‌ங்க‌ளை ந‌ன்றாய்க் காவ‌ல் புரிந்த‌வ‌ன் அல்ல‌வா! உன் ச‌ங்க‌தி இப்போது எப்ப‌டி?" என்றான்.
அவ‌னோ ஒரு ப‌திலும் கூற‌வில்லை. கூட்ட‌ம் முழுவ‌திலும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து.
"சொல், அவ‌ர்க‌ள் பிர‌வேசித்தார்க‌ளா?" என்று சாத்தான் அத‌ட்டிக் கேட்டான்.
"த‌லைவ‌ரே, அவ‌ர்க‌ள் பிர‌வேசித்தார்க‌ள்" என்றான்.
சாத்தான் மூர்க்க‌த்துட‌ன் குதித்தெழுந்து அவ‌னைப் பார்த்து, "நீயாவ‌து உண்மையோடு உழைக்க‌க்கூடாதா?" என‌க்கேட்டான்.
"உழைத்தேன், என் ஆண்ட‌வ‌னே, அப்ப‌டியே உழைத்தேன்; ஆனால் ப‌ல‌ன் இல்லை. எங்க‌ளாலான‌ ம‌ட்டும் போராடினோம். போன‌ வ‌ருட‌ம‌ட்டும் ஒருவ‌ரும் அச்செய்தியைக் கேள்விப்பட‌வில்லை. அத‌ன்பின்பு அந்த‌ப் புது ச‌ங்க‌த்தாரால் இர‌ண்டு வாலிப‌ர் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர் (இச்ச‌ம‌ய‌த்தில் சாத்தான் குறுக்கிட்டு ''அவ‌ர்க‌ள் நாச‌மாய்ப்போக‌ட்டும்'' என்றான்). ச‌பையார் எல்லாரும் ஜெப‌ம்ப‌ண்ணினார்க‌ள். ஒவ்வொரு பாஷைக்கார‌ருக்கும் சுவிசேஷ‌ம் அறிவிக்க‌ப்ப‌டாவிட்டால், அவ‌ர்க‌ள‌து ஆண்ட‌வ‌ர் அர‌சாட்சி செய்ய‌ வ‌ர‌மாட்டார் என்று சொல்லுகிறார்க‌ள். தேவ‌ தூத‌ர்க‌ள் அவ‌ர்க‌ளைக் காவ‌ல் காத்தார்க‌ள். மெய்யாக‌வே நாங்க‌ள் போராடிப் பார்த்தோம். ஆனால் அவ‌ர்க‌ளுக்கு எதிர்த்து நிற்க‌ எங்க‌ளால் முடிய‌வில்லை. அவ‌ர்க‌ள் வெகுவாய் முன்னேறினார்க‌ள். போன‌வார‌மே ஒரு ம‌னித‌ன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான்; சில‌ர் செய்தியைக் கேட்ட‌றிந்த‌ன‌ர்" என்றான்.
"அப்ப‌டியானால் ச‌க‌ல‌மும் தொலைந்து போய்! விட்ட‌தே" என்று கெர்ச்சித்தான் சாத்தான். "பாருங்க‌ள் இந்தியாவிலும், சீனாவிலும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஜ‌ன‌ங்க‌ள் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டாயிற்று. இப்பொழுது நான் கேட்ட‌ செய்தியோ யாவ‌ற்றிலும் வெகு மோச‌மான‌து இச்ச‌ங்க‌த்தாரின் ஒழுங்கின்ப‌டி சுவிசேஷ‌ம் ச‌க‌ல‌ ஜாதியாருக்குள்ளும் ப‌ர‌வும். ஆக‌வே, இயேசுநாத‌ர் இப்பொழுதே ஏதாவ‌து ஒரு நாளில் வ‌ர‌க்கூடும்; உட‌னே வ‌ர‌க்கூடும்; உட‌னே வ‌ராவிட்டாலும் அத‌ற்கு அதிக‌ கால‌ம் செல்லாது. அப்பொழுது என் க‌தி அந்தோ! நிர்ப்ப‌ந்த‌மாகும்" என்று புல‌ம்பினான்.

No comments:

Post a Comment