Friday 8 March 2013

உண்மையும் பயன் உள்ளவனும் ஆனவன் ( 09.07.2011 )

by Jo Joshua on Saturday, July 9, 2011 at 2:24am ·
தேசத்தின் உண்மையானவர்கள் என்னேடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும் உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான் (சங்.101:6).


தாவீது இவ்விதம் கூறினால் தாவீதின் குமாரனும் இவ்விதமே கூறுவார் என்பது நிச்சயம். இயேசு உண்மையானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை முன்னேறச் செய்யவும் அவர்களுக்கு ஊக்கமும் பரிசும் அளிக்கவும் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறார். உண்மையான எந்த மனிதனும் தான் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகக் கவலைப்படவேண்டியதில்லை. அரசரே அவர்மேல் நோக்கமாயிருக்கிறார்.


அரசர் அவர்மேல் நோக்கமாயிருப்பதால் இருபயன்கள் ஏற்படுகின்றன. முதலாவது அவர்கள் அவரோடு வாசம் பண்ணுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையானவர்களைத் தம் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து தம் அரண்மனையில் அமர்த்துகிறார். அவர்களைத் தம் தோழர் ஆக்கி அவர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.


நாம் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு எவ்வளுவுக்கெவ்வளவு பெருமுயற்சி தேவைப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பயன் கொடுப்பதாய் இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு வெறிகொண்டு மக்கள் நம்மை விலக்கி வைக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆண்டவர் நம்மை வரவேற்கிறார்.


இரண்டாவதாக உத்தமமான வழியில் நடப்பவன் என்னைச் சேவிப்பான் என்கிறார். மதிநுற்பத்தின் தந்திரங்களை வெறுத்து ஒதுக்கி இயேசுவுக்கும் அவர் வார்த்தைக்கும் அவர் சிலுவைக்கும் உண்மையாய் நடப்பவர்களை அவர் மகிமைக்கென்று பயன்படுத்துவார். அவர்கள் அரசரான அவருடைய பரிவாரமும் மதிப்புக்குரிய ஊழியக்காரரும் ஆவார்கள். உண்மையாய் நடப்பவர்கள் தோழமையும் பயனுடைமையும் பெறுவார்கள். ஆண்டவரே நான் உம்மோடு இருந்து உமக்கு ஊழியம் செய்வதற்காக என்னை உண்மையுள்ளவன் ஆக்கும்.

No comments:

Post a Comment