Friday 8 March 2013

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்-பாகம் 2

by Johnson Durai Mavadi on Sunday, February 24, 2013 at 6:42pm ·

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்-பாகம் 2

உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்: உமது ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்1: பழைய ஏற்பாட்டின் காலத்தில் பிரதான ஆசாரியன் அபிஷேக தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டான்.அதைப்போன்ற அபிஷேகதைலம் வேறு செய்யப்படக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்த்து (யாத்30:32)
நம்முடைய மணவாளன் ஒரு பிரதான ஆசாரியராகவும், அதேசமயத்தில் ஒரு இராஜாவாகவும் இருக்கிறார். மணவாட்டி முதலாவது,அவருடைய அன்பின் இனிமையை கண்டு கொண்டாள்.இப்போது அவருடைய நாமத்தின் இனிமையை கண்டுப்பிடித்திருக்கிறாள். ஊற்றுண்ட பரிமளதைலம் சுகந்த வாசனையைக் கொடுக்கிறது அவருடைய திவ்விய சுபாவத்தின் இனிமையை ஒரு தூய்மையுள்ள கற்புள்ள கன்னிகையால் மட்டுமே பாரட்டவும் நேசிக்கவும் கூடும். ஊற்றுண்டபரிமளதைலத்திற்கு ஒப்பிடப்படும் கிறிஸ்துவின் பொறுமை ,மனதுருக்கம் ,தாழ்மை, சாந்தம் ,அன்பு போன்ற திவ்விய சுபாவங்களும் ,திவ்விய வல்லமையும் வஞ்சையுடன் ஏங்கி கொண்டிருக்கும் அவருடைய மண்வாட்டிக்கு நற்கந்தத்தைக் கொடுக்கின்றன.
அவள் இத்தைலங்களை விரும்புகிறாள் . “கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்”. (நீதி18:10). கிறிஸ்துவின் மணவாட்டிக்கு அவருடைய நாம்ம் பலத்த துருகமாயிருக்கிறது. அவள் அவருடைய நாமத்தை நேசிக்கிறாள். உமது நாமமும்............எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது’ (ஏசயா26:8) அவருடைய நாமத்திலே சுகம் உண்டு.
‘அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே........ இவனைப் பெலப்படுத்தினது .’( அப் 3:16) இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கிழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு.. எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்(பிலி2:10,11)

அவருடைய நாம்ம் அவளுடைய துக்கங்களை நீக்கி அவளுடைய காயங்களை ஆற்றுகிறது. ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை, ஆவலுடன் சேர்ந்த ஏக்கமும் அவளால் சகித்துக்கொள்ள முடியாததாகிறது. எனவே என்னதான் நேரிட்டாலும் பரவாயில்லை என்று அவரை முற்றிலும் பின்பற்றும்படி அவள் தன்னுடையவைகள் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும்படி தீர்மானிக்கிறாள். அவள் தன்னைத்தான் முழுவதும் தன் இருதயத்தையும் ,ஆத்துமாவையும் செல்வாக்கையும் , உடைமையையும் முற்றிலும் அவருக்கு இணங்கி ஒப்புக்கொடுத்து விடுவாள் ஏனேனில் ,மணவாளன் தன்னுடன் கூட இல்லாமல் இருக்கும்போழுது ஏற்படும் ஒரு ஆதாரமற்ற நிலை அவளுக்கு வெறெருபோதுமில்லை.இன்னொருன் மோரியாவுக்கு அல்லது ஏன் கல்வாரிக்கு அவர் அவளை வழிநட்த்தினாலும் கூட அவரைப் பின்பற்றுவாள்
----தொடரும் மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின் ஐக்கியம்
http://www.facebook.com/johnson.duraimavadi

No comments:

Post a Comment