Saturday, 9 March 2013

தேவ ஜனமே வஞ்சகம் உனக்கு இனிமையாய் போய்விட்டது காக்கை போல் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஊராம் பிள்ளை வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்று சுகஜீவியாய் வாகிறாய்.தேவ வசனத்திற்கு ஏற்ற ஜீவியம் செய்ய போனால் பாடுகள் வரும் கஷ்டம் வரும் என்ரு என்ணி உனக்குத்தானே உன் சுயத்தை சந்தோசப்படுத்த அநேக சொந்த உலக காரியத்திற்காய் உபவாசம் போடுகிறாய்! உன் பிள்ளை படிப்புக்கு ,நல்ல வீடு கட்டவும் ,கார் வாங்கவும் கூடவே எதிரி நாசமாய் போகவும் நீ வாழவும்,உபவாசிக்கிராய் உனக்கு கஷ்டம் வந்தால் உடனே தேவனிடம் போய் யாராவது மனிதர் உதவியை கிடைக்கும்படி தயவு காட்டும் தேவனே! என்கிறாய்.எந்த ஜெபம் செய்தாலும் அதி முழு நோக்கமும் ஆபிரகாம் ஆசிர்வாதம் வேண்டு என்கிறாய் அதே ஆபிரகாமின் பிரதிஷ்டை வேண்டாம் என்று உன் மனது கூறுகிறது.அவனோ தன்னை இந்த உலகத்தில் பரதேசியாக எண்ணிக்கொண்டு வாழ்ந்தான் காணாத பரலோகமே என் சொந்த வீடு என்று எண்ணி விசுவாசத்தில் வாழ்ந்தவன் .நீயோ அப்படி இல்லை அவனுடைய சொத்து சுகம் வேண்டும் அவனுடைய தேவனுக்கேற்ற ஜீவியம் வேண்டாம் என்கிறாய் .ஒரு நாளாவது உன் ஜீவியத்தில் தேவனுக்கேற்ற பரிசுத்தத்திற்காய் உபவாசித்தது உண்டா? ஆதரவற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது பாவம் என்கிறாய் பரிதாபபடுகிறாய் ஆனால் உதவீ என்று வரும் போது வசனத்தின் படி வாழ ஒப்புக்கொடுத்து உதவுவத்தில்லை உன்னை மறைத்துக்கொள்கிறாய்! பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். என்ற வசனம் அப்பொது பேசியும் நீ கீழ்படியவில்லை காரியம் இப்படி இருக்க தேவனே உன்னைப்பார்த்து வேதனைப்படுகிறார் எப்படியேனில் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று தன்னைப்போல் பிறறை நேசிக்கிற அன்பு என்ற கனிகொடாத உன்னைப்பார்த்துக் கேட்பேன் என்கிறார்.நீயாத்தீர்ப்பிலே உன் நிலையைப்பார் வேதம் கூறுகிறது “இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். ”.மத்25:41-46
தேவ ஜனமே! மனந்திரும்பு!உன் சுயநல ஜெபத்தை விட்டுவிடு தேவன் உன்னை ஆள ஒப்புக்கொடு அப்போது பிளைப்பாய் .ஊழியக்காரர்களே!உங்களுக்கு
ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலா6:1-9

No comments:

Post a Comment