Friday 8 March 2013

கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.யோவா15:2

by Johnson Durai Mavadi on Sunday, February 24, 2013 at 6:38pm ·
கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.யோவா15:2
தன்னையே குறியாக வைத்து வந்த அநேக உபத்திரவங்களைக்கண்டு ஒரு தேவனுடைய மனிதன் மலைத்துப்போனான்.இலையுதிர் காலத்தில் அந்த மனிதன் திராட்சத் தோட்டத்தைக் கடந்து சென்றான்.அந்தத் தோட்டம் சுத்தம் செய்யப்படாமல் கொடிகள் இலைகள் நிறைந்து அவ்விடம் முழுவதும் கவனிக்கப்படாமல் பாழாய்கிடந்தது ஆனால் பார்க்கும்போது எல்லாம் பச்சையாய் செழிப்பாய் தெரிந்த்தது .ஆனால் கனி அங்கு எங்கும் தென்படவில்லை.தேவன் அந்த மனிதனுக்கு ஒரு உண்மையைத் தெரிவித்தார்.அதை அவன் மற்றவர்களுக்கு கூற விரும்புகிண்றான். “என்னுடைய அன்பான கிறிஸ்துவின் சரீரங்களே உங்கள் ஜீவியத்தில் கஷ்டங்கள் அடுத்து அடுத்து வருவதைக் குறித்து மலைத்துப் போய் சோர்ந்துபோய் இருக்கிறாயா? அந்த திராட்சத் தோட்டத்தைப் பார்த்து நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.திராட்சத் தோட்டத்திலிருந்து அவ்வருடம் ஒருபயனும் கிடையாது என்று காண்பதினால்,தோட்டக்காரன் அதை வெட்டாமலும்,கத்திகரிக்காமலும்,கொத்திவிடாமலும் களை எடுக்காமலும் விட்டுவிடுகிறான்.அதன் கனிதரும் காலம் கடந்து போயிற்று.மேலும் அதில் பாடுபடுவதால் பயனில்லை என்பதாலது சும்மா விடப்பட்டுள்ளது.பயனற்ற ஜீவியத்திற்கு பாடு கிடையாது நண்பா!இந்த சத்தியத்தை அறிந்த பின்பு தேவன் உங்களைச் சுத்திகரிப்பதை விட்டுவிட விரும்புகிறாயா?தேவன் உங்களை கஷ்டப்பட அனுமதிக்காமல் விட்டுவிட வேண்டுமா? இதைக்கேட்கும் நண்பா உன் இதயதுடிப்பில் இருந்து ஒரு சத்தம் பிறக்குது அது தேவனுக்காய் கனிகொடுக்கும் படியாக பாடுகள் என்னைவிட்டு நீங்க வேண்டாம் ”என்று சொல்லுகிறதை நான் விசுவாசத்தின் கருவியால் கேட்கிறேன்

கனி கொடுக்கும் கொடியே கத்திக்கு இரையாகும்!
கத்தியால் வெட்டப்படும் போது புத்துயிர் பெறும்
துளிர்க்கும் ஒவ்வொரு துளிரும் வெட்டப்பட்டாலும்
துளிர்க்கும் இலையும் ,கொப்பும் அழிக்கப்படலாம்.
உன் ஆசையும் ,கனவும் ,உன் ஒவ்வொரு நம்பிக்கையும் மாண்டுபோனாலும் கர்த்தரின் அன்பின் கரம் இதைச்செய்த்தது என்று மகிழ்ந்திரு நண்பா!
வெட்டினாலும் , உடைத்தாலும், முன்பு சிறிது கனி கொடுத்த உங்களை இன்னும் அதிக கனிகொடுக்க இவைகள் யாவும் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment