Friday 8 March 2013

ஆண்டவர் அதிகமாய்க் கொடுப்பவர் ( 24.06.2011 )

by Jo Joshua on Friday, June 24, 2011 at 11:09am ·
அப்பொழுது அமத்சியா அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யணே;டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத் தேவனுடைய மனுஷன் அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான் (2.நாளா.25:9).


நீங்கள் தவறு செய்து விட்டால் அதனால் வரும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய சித்தத்துக்கு மாறாகமட்டும் எதுவும் செய்யாதிருங்கள். நீங்கள் நஷ்டத்தினால் இழப்பதைவிட அதிகமாக ஆண்டவர் கொடுக்கக் கூடியவர். அவர் அபு;படிக் கொடுக்காவிட்டால் நீங்கள் அவரோடு பேரம் பேசத்தொடங்குவீர்களா? யூதாவின் அரசன் விக்கிரகங்களை வணங்கின இஸ்ரவேலின் சேனையைக் கூலிக்கு அமர்த்தியிருந்தான். அவர்களோடு கடவுள் இல்லாதபடியால் தீர்க்கர் அவர்களை அனுப்பிவிடச் சொன்னார். அவன் அவர்களை அனுப்பிவிட சம்மதித்தான். ஆனால் போர் செய்யாமலேயே அவர்களுக்கு நூறு தாலந்துகள் கொடுக்கத் தயங்கினான். இது எவ்வளவு இழிவானது என்று நினைத்துப் பாருங்கள். அவர்கள் போர் செய்யாமலேயே ஆண்டவர் வெற்றியைக் கொடுப்பதென்றால் அவர்களுக்குப் பேசின கூலியைக் கொடுத்து அனுப்பி விடுவது நல்லதல்லவா?


மனச்சாட்சிக்காகவும் சமாதானத்துக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் பணத்தை இழக்கவும் ஆயத்தமாயிருங்கள். ஆண்டவருக்கென்று இழப்பவை உண்மையான இழப்பல்ல என்று திட்டமாய் நம்புங்கள். இந்த வாழ்க்கையிலேயே நஷ்டத்துக்கு அதிகமாகவே ஈடு செய்யப்பட்டு விடுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஆண்டவர் நஷ்டம் ஏற்படுவதையே தடுத்து விடுகிறார். இயேசுவுக்கென்று நாம் இழப்பவை பரலோகத்தில் நித்தியவாழ்விலே ஈடு செய்யப்பட்டு விடுகின்றன. பேராபத்தைப்போல் தோன்றுவதைக் குறித்துப் பதட்டங் கொள்ளாதேயுங்கள். அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்னும் மெல்லிய சத்தத்துக்குச் செவி கொடுங்கள்.

No comments:

Post a Comment