Friday 8 March 2013

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்- பாகம் 3

by Johnson Durai Mavadi on Tuesday, February 26, 2013 at 7:19pm ·

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.உன்1;4

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்;
         இங்கே மனவாட்டிக்குச் சம்பவிப்பது என்ன? ஆச்சரியமிக்க மகிழ்ச்சிக்குரிய ஒரு வியப்பான அனுபவம் ! மோரியாவும் அல்ல, கல்வாரியும் அல்ல  அதற்குப்பதிலாக ராஜா அவளைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவருகிறார்.இது நாம் நம்முடைய இருதயத்தை இணக்கத்துடன் ஒப்புக்கொடுக்கும்போது  கர்த்தராகிய இயேசு அங்கு ஆளுகை செய்கிறார். 

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.(ரோ5-17)

 கர்த்தராகிய இயேசு ஆளுகை செய்யும்போது அங்கே இளைப்பாறுதல் உண்டு.நம்முடைய ஞானத்தினால் நாம் அவரைக்கிட்டிச் சேர முடியாது: ஆனால் அவர் நம்மை இழுத்துக்கொள்கிறார். மனவாட்டி தன் கர்த்தரிடம் இழுக்கப்படும்போது அவருக்குப் பின்னே  ஓடுகிறாள். அவர் தம் மணவாட்டி எங்கே நடத்திக்கொண்டு போகிறார்?

            ராஜா முதலாவது அவளை விருந்துசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை .குறித்த காலத்தில் அவள் அங்கு அழைத்துச் செல்லப்படுவாள்.இப்போது  அவள் முதலாவது அவருடைய அறைகளில் அவரோடு கூட தனித்திருக்கும்படி அழைத்து வரப்படுகிறாள்.இது நமக்கு மிகவும் அருமையான ஒருவரை ஒரு கூட்டத்தில் வைத்து நாம் சந்திப்பதில் மட்டும் திருப்தியடைந்து விடுவோமா? இல்லை. அப்படிப்பட்ட ஒருவரை நாம் தனிமையாக  அவர் நம்முடன் இருக்கும்படி விரும்புகிறோம். அப்படிப்போலவே நம்முடைய ஆண்டவருங்கூட விரும்புகிறார்.

             தம்முடைய அற்புதமான அன்பின் தூய்மையான நெருங்கிய உறவை ருசிக்கவும் அனுபவிக்கவும்  அவர்  முற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட தம்முடைய மணவாட்டியை தனிமையாக அழைத்துச் செல்லுகிறார்.தம்மோடுகூட ஐக்கியமாயிருக்க விரும்பும் யாவரோடுமுள்ள தொடர்பைக் காட்டிலும் தம்முடைய மணவாட்டியான சபையுடன் நெருங்கி உறவாட மணவாளன் அதிகமாய் விரும்புகிறார்.

            நம் மணவாளனுடன் நாம் கொள்ளும் இரகசியமான ஐக்கியத்தின் மூலம் நாம்  அவருக்குச் சந்தோஷத்தை அளிக்கிறோம். நாம் அவருடன் கூட தனிமையாயிருக்கும் போது அவர் களிகூருகிறார். அப்படிப்பட்ட நேரங்களில்தான் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். நாம் அவருடைய சமுகத்தின் மறைவில் முழங்காற்படியிடும் போது  நம்முடைய பெலவீனங்களும் தோழ்விகளும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு நாம் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தப்படுகிறோம். அதிகாலை நேரங்கள் கர்த்தராகிய இயேசுவுக்காக மாத்திரம் கொடுக்கப்படுவதைப் போன்று அதிக அதாயமாக செலவழிக்கப்படும் வழி வேறு இல்லை .இந்த நேரம் எவ்விதம் செலவழிக்கப்படுகிறது என்பதைக் குறித்து போதுமான கவனம் நாம் செலுத்துகிறோமா?

            நாம் தேவனிடத்தில் பிரச்சனைகளைக் கொண்டுவரும்போது ,அவருடைய பதில்களுக்காகக் காத்திராமல், நம்முடைய அறையை விட்டு நாம் வெளியே வரக்கூடாது. தேவனுக்கு முன்பாக மௌனமாகக் காத்திருப்பது நம்மை அநேக தவறுகளுக்கும் மனவேதனைக்கும் நீங்களாக்கிக் காத்துக்கொள்ளும் . மனவாட்டி ராஜாவைக் குறித்து ஒரு புதிய காரியத்தைக் கண்டுப்பிடிக்கிறாள் என நாம் கண்கிறோம்.
அவள் இப்பொழுது அவர் தன்னுடைய ராஜா என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாள்.

   நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்  :

மனவாட்டி,  மணவாளனுடய பிரசன்னத்தால் ஜீவிக்கும் போது அவள் அவருக்குள் களிகூர ஆரம்பிக்கிறாள். முந்தின வசனங்களில் அவள் ,அவருடைய நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது என்பதையும் அவருடைய நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாயிருக்கிறது என்பதையும் அறிந்து அவருடைய அன்பின் இனிமையையும் அவருடைய நாமத்தின் வல்லமையையும் கண்டிருக்கிறாள் என்று நாம் பார்த்தோம். ஆனால் இப்போது அவள் அவருக்குள் களிகூர ஆரம்பித்திருக்கிறாள்.
அவள் ,திராட்சரசத்தைப் பார்க்கிலும் -இவ்வுலகத்தின் சிற்றின்பங்களைப் பார்க்கிலும் அவருடைய நாமத்தை அதிகமாக நேசிக்கிறாள். மண்ணாலான அழிந்துபோகும் பொருட்களை மேன்மையாய்க் கருதுவதைக்காட்டிலும் இப்போது அவளவருடைய நாமத்தைப் பாராட்டுகிராள் .உத்தமர்கள் அவரை அவ்விதம் நேசிப்பதன் காரணத்தை அவள் கண்டுபிடித்திருக்கிறாள்.----- தொடரும் மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின் ஐக்கியம்
http://www.facebook.com/johnson.duraimavadi

No comments:

Post a Comment