தமிழ்நாட்டை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் என்று
கூறிக்கொள்வது நல்லதுதான் ஆனால் ஏன் பரலோகத்துக்கு ஆயத்தமாகுங்கள் என்று
கூறி கிரியையால் அனைவரையும் தேவனுக்கு எதிராய் திருப்புவது ஏன்?உலகத்தை
நேசிக்க கற்றுகொடுக்க மனிதனுக்கு தேவையில்லை அதை அவன் உலகத்தில் பிறக்கும்
போதே பற்றி பிடித்து அதை அனுபவிக்க ஆசைபடுகிறான் .உலகத்தை வெறுத்து
நித்தியத்தை நேசிக்க ஏன் கற்றுகொடுப்பதில்லை.கர்த்தர் உனக்கு இந்த பூமியில்
ஐசுவரியவானாய் மாற்றுவார் என்று ஏழை விசுவாசியை வஞ்சிப்பதும்,ஐசுரியவானைப்பார்த ்து
நீங்கள்தான் சபைக்கு தூன், இன்னும் உங்கள் பிஸ்னஸ் ஆசிர்வதிக்கபடும் தேவனை
விசுவாசியுங்கள் உங்களுக்கு கஷ்டத்தை தேவன் அனுமதிப்பதில்லை,நீங்கள்
தேவனுக்கு கொடுப்பதால் தேவனுக்குப் பிரியாமானவர்கள் என்றும் புகழ்ந்து
அவர்கள் உண்மையற்ற ஜிவியத்தை கானாது இருந்து வஞ்சிப்பதும் ஏன்? கிறிஸ்தவனே
சிந்தித்துப் பார்!.தேவனுடைய சத்தியம் வீதியிலே சத்தமிடுகிறது,உணர்வார்
ஒருவரும் இல்லை .மனவாட்டி சபைக்காய் தேவன் கதறுகிறார் .தேவனுடைய சத்தம்
உங்களுக்கு கேடகவில்லையா? சத்தியத்திர்காய் பாடுகள் அனுபவிக்க
ஊக்கபடுத்தாமல் ,ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அது போக வேண்டும் என தேவனிடம்
ஜெபிக்க தூண்டுகிறீர்களே அதன் நிமித்தம் தேவனுக்கு கனிகொடுக்கும் படி வந்த
அந்த கஷ்டத்தை வெறுத்து தன்னை தான் பெருமை என்னி தேவனிடம் முறையிட
கற்றுக்கொடுப்பது ஏன்? சோதனையில் நல்ல கனிகொடாமல் கொட்ட கனிகொடுக்க ஊக்கம்
கொடுப்பது ஏன்? ஆபிரகாம் பெற்ற உலக ஆசிர்வாதம் எல்லாம் உங்களுக்குதான்
எனக்கூறி உலகத்தை பற்றிபிடிக்க வழிகாட்டுவது ஏன்?ஆபிரகாமின் பிரதிஸ்டையான
நான் இந்த உலகத்துக்குப் பரதேசி என்ற தன்மையை மறந்து ஆசிவாதத்தை மாத்திரம்
எடுத்துக்கொள்கிறீர்களே!.இன்னும ்
கொஞ்ச நாளில் என் தேவனின் நீயாயதீர்ப்பு உங்கள் மத்தியில்
தொடங்கபோகிறது,உங்கள் பரியாசமும் ,உங்கள் சுகபோக வாழ்கைக்கும் முடிவு
வரப்போகிறது.ஏழையை வெறுத்து உதாசினப்படுத்தின ஊழியர்களே! உங்களுக்கு அது
இக்கட்டுக்காலம்,நீங்கள் புலம்புவீர்கள்.தேவனுக்காய் பாடுகள்
அனுபவித்து,உலகத்தை நேசியாமலும்,அதனால் வந்த உபத்திரவத்தை சந்தோசமாய்
அனுபவித்து தேவனுக்காய் காத்துக்கொண்டு இருக்கும் ஜனத்துக்கு அந்தநாள்
இன்பநாள் அநியாயத்தைக்கண்டு இருதயத்தில் வாதிக்கபடும் நண்பர்களே! தேவ
நீதிக்காய் ஏங்கினவர்களே! சந்தோசப்பட்டு களிகூறுங்கள் ! இதோ நியாயதீர்ப்பு
சபையில் வெகு சீக்கிறத்தில் வரப்போகுது
No comments:
Post a Comment