Friday, 8 March 2013

யெகோவாவின் சாட்சிகளிடம் சில கேள்விகளும் அவர்கள் பதில்களும்...

by Peter Samuel S on Thursday, September 22, 2011 at 12:29pm ·
 • யெகோவாவின் சாட்சிகளிடம் நான் கேட்ட சில கேள்விகள்:

  நண்பரே தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா, தாங்கள் விரும்பினால் நேரடியான பதில் மட்டும் கூறுங்கள்: முடிந்தால் ஆம் அல்லது அல்ல என்று கூற முடியுமா...?
  1) இயேசுவை தெய்வமாக தொழலாமா?
  2) இயேசு மாமிசத்தில் உயிர்த்தெழுந்தாரா? (அவர் பூமியில் வாழ்ந்த காயப்பட்ட அதே சரீரத்தோடு....இல்லையென்றால் அந்த சரீரம் என்ன ஆனதென்று விளக்கலாம்)
  3) இயேசு மிகாவேல் தூதனாக இருந்தவரா?
  4) மூன்றாம் கேள்விக்கு இல்லை என்பது உங்கள் பதிலானால் வேறு ஏதாவது சிருஷ்டிக்கப்பட்டவரா?
  5) நரகம் என்பது என்ன? அக்கினி கடல் என்பது என்ன?
  6) அக்கினி கடலில் யார் யார் பங்கடைவார்கள்?
  7) பிசாசிற்கு மட்டுமே இறுதித் தண்டனையா?
  8) உலகில் நடக்கும் தீமைக்கெல்லாம் யார் காரணம்: பிசாசா, தேவனா?
  இன்னும் சில கேள்விகள் உண்டு, இதற்கு உங்கள் பதிலைக் கண்டபின் கேட்கிறேன். தங்களோடு எனக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் வைராக்கியமும் இல்லை நண்பரே18 minutes ago · Like

 • Peter Samuel S அதற்கு அவரது பதில்கள்:

  1) ஆம்!!!
  2) ஆவியில் உயிப்பிக்கப்பட்டார். ஏனென்றால் இரத்தமும் மாம்சமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதிலையே என்று பைபிள் சொல்கிறது. அப்படியிருக்க கிறிஸ்து மட்டும் எப்படி மாம்ச நிலையில் பரலோகம் சென்றிருக்க முடியும்.
  3) இயேசு தேவனின் முதற்பேறான குமாரன் என்றல்லவா பைபிள் சொல்கிறது!
  4) தூதர்கள் மூன்று பகுதிகளாக இருக்கின்றனர்! அதாவது கேருபீன்கள், சேராபீன்கள், மற்றும் பிரதான தூதர். வெளிப்படுத்தலில் பார்க்கும் போது பிரதான தூதன் தான், பூமிக்கு முடிவைக் கொண்டு வரப்போவதாகவும் இந்தச் சாத்தானிய ஒழுங்குமுறையைத் துடைத்தழிக்கப்போவதாகவும் பைபிள் சொல்கிறது. அதே பைபிள் தான் பிரதான தூதனின் பெயர் ‘மிகாவேல்’ என்றும் குறிப்பிடுகின்றது. இது ஏனென்றால், பூமிக்கு முடிவைக் கொண்டு வரப்போவது இயேசு என்று நமக்குத் தெரியும். அப்படியென்றால் அவர்தான் பிரதான தூதனின் இடத்தில் இருக்கின்றார். அவர் வகிக்கும் முக்கிய ஸ்தானத்தையே ‘மிகாவேல்’ என்று சொல்லப்படுகின்றது. உயிர்தெழுந்த இயேசுவுக்கு சகலத்தின் மேலும், துரைத்தனங்கள் மேலும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருகின்றதே. ஆகவே, மற்று ஆவி சிருஷ்டிகளான தூதர்கள் மேலும் இவருக்கு அதிகாரக் கொடுக்கப்பட்டதினாலேயே இவர் பிரதான தூதனாக வருகின்றார். அதைத் தவிர இவர் ஒரு தூதன் அல்லர்!!!
  5) நரகம் மற்றும் அக்கினிக் கடல் என்பது வாதனையையே குறிப்பிடுகின்றது. பைபிளின் மூலப் பதிப்பில் பார்க்கும் போது, அக்கினிக் கடல் என்ற இடத்தில் எபிரெய மற்றும் கிரேக்க மொழியில் ‘கெஹென்னா’ என்று எழுதப்பட்டிருக்கின்றது. ‘கெஹென்னா’ என்பது பூர்வக் கால எருசலேம் ஆலயத்தில் வெளியே குப்பைகளைக் கொட்டுவதற்கும் பலிகளின் மீதியை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஓர் பெரியக் குழி.அதில் எப்போதும் நெருப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்; கந்தகத்தைக் கொட்டுவர். ஓரு காகிதத்தைப் போட்டால் உள்ளே போய்ச்சேரும் முன்னே, அஃது இல்லாமற் போய்விடும். ஆகவே, அந்தப்படியே பாவிகளும் அநீதிமான்களும் எரிகிற அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வேதம் போதிக்கின்றது. அஃது ஒரு பொருள் முற்றிலுமாக அழிக்கப்படுவதைக் குறிக்கின்றது. தேவன் அன்பாகவே இருக்கின்றார்; அவர் யாரையும் அக்கினியில் போட்டு வாதிப்பதில்லை. தேவன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பாரபட்சமின்றி மழையை வருஷிக்கப் பண்ணுகிறாரே!!!
  6) இல்லை!! அவனோடு சேர்ந்த அனைவருக்குமே.
  7)யாக்கோபு 1:13 மற்றும் யோபு 34:10-12-ஐ பாருங்கள். தேவன் காரியங்களை அனுமதிக்கின்றாரே தவிர அவர் காரணம் அல்ல. அனைத்து காரியங்களுக்கும் பிசாசை மட்டுமே காரணம் காட்ட முடியாது! தேவன் தெளிந்த புத்தியைக் கொடுத்திருக்கின்றாரே!!!18 minutes ago · Like

 • Peter Samuel S மேலும் நான் தொடர்ந்து கேட்டது:

  1) நல்லது
  2) அப்படியானால் மாமிச சரீரம் என்னவாயிற்று? (நேரடியான விளக்கம் please....)
  3) ஒரே பேறான குமாரன் என்றால் என்ன?
  அ) என்னைக் கண்டவன் பிதாவைக் காண்கிறான்...
  ஆ) பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம்
  இ) அந்த வார்த்தை தேவனாயிருந்தது
  ஈ) தேவனுடைய தற்சுரூபமும்
  இவைகளை மூல பாஷையை அழைக்காமல் விளக்கமுடியுமா? (சாமானியருக்கு புரியும்வகையில்)
  4) பிரதான தூதனின் சத்தம் என்றுதான் வேதம் சொல்கிறது... பிரதான தூதனே வருவார் என்று சொல்லவில்லை...
  5) நித்திய காலமாய் வாதிக்கப்படுவார்கள் என்று வேதத்தில் எங்காவது வாசித்த ஞாபகம் உள்ளதா..?
  6) நல்லது...
  7) நல்லது...
  8) ஆவி, ஆத்துமா, சரீரம் ... சிறுகுறிப்பு please....17 minutes ago · Like

 • Peter Samuel S அதற்கு அவரது பதில் கேள்வி:

  மோசேயின் சரீரம் என்னவானது சகோதரரே? (மோசேயின் மரணமும் இயேசுவின் மரணமும் ஒன்று என்பதுபோல....!!!! இதுதான் இவர்கள்.....!!!!!!)13 minutes ago · Like

 • Peter Samuel S அதற்கு என் பதில்:

  தேவன் அவனை அடக்கம் செய்தார் என்று வேதம் கூறுகிறது நண்பரே...
  ஏனோக்கு, எலியா நேரடியாக தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என வேதம் கூறுகிறது....
  இயேசு மாமிசத்தில் மரித்து, மாமிசத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது நண்பரே.... வேதத்தை மாத்திரம் மறுபடியும் மறுபடியும் தெளிவாக வாசித்துப்பாருங்களேன்....12 minutes ago · Like

 • Peter Samuel S அந்த யெகோவாவின் சாட்சி மேலும் தொடர்கிறார்:

  அன்புள்ள சகோதரரே;
  “கிறிஸ்து மாம்சத்தில் கொலையுண்டு ஆவியில் உயிர்த்தெழுப்பப்பட்டார்” என்று வேதம் நேரடியான பதிலைத் தருகிறது; அதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. தங்கள் பைபிளில் 1 பேதுரு 3:18 –ஐ பாருங்கள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை வாசித்து ஒவ்வொரு காரியத்திற்கும் உள்ள தொடர்பினை ஆராய வேண்டும். ஒரேவொரு வசனத்தை எடுத்துக் கொண்டு பேசக்கூடாது நண்பரே!
  கிறிஸ்து தேவனாலே உயிர்ப்பிக்கப்பட்டு ‘பூலோகத்திலும் வானத்திலும்’ எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார்.
  1. எபிரெயர் 7:26
  2. 1 தீமோ 6:14-16
  3. பிலிப்பியர் 2:9-11
  4. அப்போஸ்தலர் 2:34 ; 3:15 ; 5:30
  5. 1 கொரி 15:27
  6. ரோமர் 4:24 ; 10:9
  அவர் உயிர்த்தெழுந்த பிறகு 40 நாள்களுக்கு தம்முடைய சீஷர்களுக்கு அவர் காட்சி அளித்தார் பல்வேறு விதமாக. எப்படி தூதர்கள் பைபிள் காலங்களில் மற்றவர்களுக்குக் காட்சி அளித்தார்களோ அவ்வாறே இயேசுவும் காட்சி அளித்தார். பரலோக சிருஷ்டிகள் அனைத்துக்கும் மாம்ச உடலோடு ஆவிநிலை உடலும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆதலால், நோவாவின் காலத்தில் மனுஷ ஸ்திரீகள் மிகுந்த சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு தேவ தூதர்கள் மனித உடலில் பூமிக்கு இறங்கி பெண் கொண்டார்கள் என்று வேதம் படம்பிடித்துக் காட்டுகின்றது. மீண்டும் ஜலப்பிரளயத்தின்போது அவர்கள் தங்களின் பூமிக்குரிய சரீரத்தை இங்கேயே கழற்றி விட்டு ஆவி நிலையில் பரலோகத்திற்கு ஏறினார்கள் என்றும் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பைபிள் தெளிவாகக் காட்டுகிறது இயேசுவும் அவ்வாறே ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டு, மாம்சத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு காரட்சியளித்து, ஆவியில் பரலோகத்திற்குச் சென்றிருக்கிறார். பல இடங்களில் பைபிளில் தூதர்கள் மாம்சத்தில் பூமிக்கு வந்து ஜனங்களை வழிநடத்தியிருக்கின்றனர். உதாரணத்திற்கு, லோத்து மற்றும் குடும்பத்தினரைக் கைகளைப் பிடித்து அந்தத் தூதன் சோதோம் கொமோரா வெளியே கொண்டு வந்ததாய் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதன் பிறகு, அந்தத் தூதன் நிச்சயம் பரலோகத்திற்குப் போயிருக்க வேண்டும்! அப்படியென்றால் அந்தத் தூதருடைய உடல் எங்கே?????????????
  பரலோகவாசிகளுக்கு மட்டுமே தேவன் கொடுத்த ஒரு அமைப்பு அது.
  வாசியுங்கள்:-
  1. மத்தேயு 28:8-10 ; 16:20
  2. லூக்கா 24:13-32 ; 36-43
  3. யோவான் 20:14-29
  4. ஆதியாகமம் 18:1-3
  5. யோசுவா 5:13-15
  6. நியாயாதிபதிகள் 6:11-12 ; 13:3,1312 minutes ago · Like

 • Peter Samuel S அவருக்கு நான் அளித்த பதில்:

  பிள்ளைகள் மாமிசத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருப்பதனால் இயேசுவும் மாமிச்த்தையும் இரத்தத்தையும் உடையவராய், கன்னி வயிற்றில் பிறந்து, மாமிசத்தில் வளர்ந்து, மாமிசத்தில் பாடுபட்டு மரித்தார். அவர் உயிர்த்தெழுந்ததற்கு திறந்திருக்கும் அவரது கல்லறையே சாட்சி... அவரது சரீரம் வைக்கப்பட்ட இடத்தில் அது இல்லை என்பதே ஆதாரம்.
  தூதர்கள் பூமியில் பிறந்து வளர்ந்ததாக வேதத்தில் எங்கும் காணப்படவில்லை...
  சும்மா வேதத்தை நம் இஷ்டத்திற்கு வளைக்கக்கூடாது நண்பரே... அவர் ஆவியில் உயிர்தார்.... என்று கூறுகிறீர்களே, வேதத்தில் யாக்கோபின் ஆவி உயிர்தது என்று கூட ஒரு வசனம் உள்ளது... இரண்டும் ஒன்றாக முடியுமா...? அதன் அர்த்தம் என்ன என்று சிந்தித்தீர்களா..?
  மேலும் 1 பேதுரு 3:18, அவர் மாமிசத்தில் கொலையுண்டு ஆவியில் உயித்தார் என்பது அவர் சரீரத்தில் உயிர்த்தெழுமுன் மரித்தவுடன் நடந்ததாக விளக்கும் சம்பவம். மூன்று நாளைக்குப் பின் தான் அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்... இதைக்கூட விளங்கிக்கொள்ளாமல் வியாக்கியானம் செய்கிறீர்களே நண்பரே.....
  இயேசுவின் உயிர்தெழுதலை சாதரண மனிதனின் மரணத்திற்கு ஒப்பாக்கி, ஐஸ்வர்யவான், லாசரு மரணத்திற்கு ஒப்பாக்கிவிட்டீர்களே.... எல்லா மனிதருக்கும் ஐஸ்வர்யவான், லாசரு மரணத்திற்கு ஒப்பான ஒரு ஆவியில் உயிர்த்தல் உண்டே... அப்படி இயேசுவை இவர்களுக்கு சமமாக்குவதின்மூலம் இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கிறீர்கள். இது கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு பொய்மையல்லவா.... வேதத்தை ஆராய்கிற யாவரும் கிறிஸ்தவராகிவிட முடியாது நண்பரே.... இயேசுவை தெய்வமல்ல என்று நிலைநாட்ட பல மதத்தவரும் வேதத்தை ஆராய்கிறார்கள்.
  கிறிஸ்தவம் என்பது ஆராய்ச்சி அல்ல நண்பரே.... அது அனுபவம்.....11 minutes ago · Like

 • Peter Samuel S சகோதரர்களே: இவர்கள் ஒரே கொள்கையுடையவர்கள் அல்ல... இவர்களில் சிலர் இயேசுவின் வருகை நடந்துவிட்டது என்பார்கள். சிலர் இனிமேல்தான் என்பார்கள். ஒரு சாரார் சாத்தானைத்தவிர யாருக்கும் ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்பார்கள். சிலர் பிசாசோடு சிலர் முழுவதும் அழிக்கப்படுவர் (கவனிக்கவும்: நித்திய ஆக்கினையை எல்லோருமே மறுப்பர்) என சாதிப்பர். மட்டுமல்ல இவர்களுக்குள் மேலும் பல பிரிவினைகளும் உண்டு. ஆனால் இவர்கள் இயேசுவை தொழத்தக்கவர் அல்ல என சாதிப்பதிலும், அவரது மாமிச உயிர்த்தெழுதலை மறுப்பதிலும், ஒன்றுபடுகிறார்கள். மேலும் நரகம் என்று நித்திய ஆக்கினை ஒன்று இல்லை என இவர்கள் அனைவரும் ஏகோபித்து கூறுவர். இவர்களை இனம் கண்டுகொள்வது எளிது. எப்படியெனில் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தையும் பாபிலோனிய வேசி சபை என்பார்கள். இவர்களைத் தவிர மற்ற அனைவரும் (காந்திஜி முதல் ஹிட்லர் வரை) ஆயிரம் வருட அரசாட்சியில் உயிர்த்தெழுந்து பின் கற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுவர் என்பர். நியாயத்தீர்ப்பு என்பதே கற்றுக்கொடுத்தல் என்பர்....
  இவர்களை எந்தவிதத்திலும் யாராலும் மாற்றவே இயலாது. காரணம் இவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு அவனால் மற்றவர்களை வஞ்சிப்பதற்கெனவே அபிஷேகிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  புதிதாக இரட்சிக்கப்பட்டு, எந்த வேத அறிவும் இல்லாத மக்கள் கூட இயேசுவை தங்கள் வாழ்வில் ருசித்து அனுபவித்திருப்பார்கள். இவர்கள் அந்த அனுபவங்களையெல்லாம் கிண்டல் செய்பவர்கள்.

  கிறிஸ்தவ மக்கள் இவர்களிடம் கொஞ்சம் கவனமாயிருக்க வேண்டுகிறேன்....

No comments:

Post a Comment