மாமிசமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று .....
by Balaji Lakshmipathi on Friday, November 9, 2012 at 11:01am ·
"மாமிசமான யாவர் மேலும் ஆவியை நிரப்புவேனென்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்."
மேலே கூறப்பட்டிருக்கும் வசனமானது இன்று ஜெபங்களிலும் ஜெபக்கூட்டங்களிலும் பல மாதிரியாக வியாக்கியானம் செய்ய படுகிறது ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்ன. நாம் வேதாகமத்தை புரட்டும் பொழுது ஒரு தேவனை பற்றியே அறிகிறோம் தேவன் எப்படி ஒருவரோ அப்படியே அவரது ஆவியும் ஒன்றே. பரிசுத்த ஆவியை எதற்கு மாமிசத்தின் மேல் ஊற்றுவதாக வாக்குத்தத்தம் பண்ணினார் .
ஆதியாகமத்தில் ஆதாமின் வீழ்ந்து போன சுபாவத்தை உணர்த்துவதே மாமிசம் எனப்படும் சரீரமாகும் அங்கு மனிதன் மாமிசத்தின் அடிமைக்குட்ப்படிருக்கிறான் என்று அறிகிறோம். மனிதன் தனது சுய பெலத்திநாளோ சுய சிந்தயிநாளோ சரீர பலவீனத்தை வீழ்த்த முடியாது.
கலாத்தியர் 5:17
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
ஆகவே இப்படி ஆவிக்கும் மாம்சதிர்க்கும் இடையிலே கடும் பனிப்போர் நிலவுகிறது. இதை ஜெயித்து மனிதன் வெளியே வர வழி இல்லையா என்றால் அதற்க்கு பதில் தான் ஆவியானவரின் கிரியை.
யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவானில் கர்த்தர் கூறுவது என்னவென்றால், உங்களுக்கு நான் வழி காட்டியது போல் ஆவியானவர் உங்களோடே இருந்து வழி காட்டுவார் என்கிறார். வழி காட்டுவது என்றால், எப்படி ஈரோடு போவது எப்படி மதுரை போவது என்று அல்ல, ஜீவ ஒளியில் நடக்க பாதை காட்டுவார். சரீர பெலத்திலே நடப்பது இருளிலே நடப்பதாய் உள்ளது, ஆவியின் பெலத்திலே நடப்பது ஜீவ ஒளியில் நடப்பதாய் உள்ளது. மனிதன் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசித்ததால் இருளிலே விழுந்தான், அங்கேயே கிடக்கிறான். அவன் ஆவியிலே நடக்க வேண்டுமென்றால் கர்த்தரை பின்பற்றி, அவரது வார்த்தையின் படியே நடக்க வேண்டும். அவன் ஆவியினால் நடக்க வேண்டும். இப்பொழுது எதற்கு ஆண்டவர் சரீரத்தின் மேல் தனது ஆவியை ஊற்றுவேனென்று கூறியது புரியும்.
மனிதன் ஜீவ ஒளியில் நடக்க ஊற்றப்படதே ஆவியானவர் தவிர, ஆட்டம் ஆடவும் கீழே உருளவும் ஊற்றபடுவது பரிசுத்த ஆவி அல்ல.
மேலும் ஆவியானவரின் உண்மையான சத்தியங்கள் தெளிவாய் விளக்கப்படும்
No comments:
Post a Comment