Friday, 8 March 2013

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்- பாகம் 4

by Johnson Durai Mavadi on Thursday, March 7, 2013 at 4:58pm ·

 “எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் ,சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கருப்பாயிருந்தாலும் ,அழகாயிருக்கிறேன்”( உன்1:5).

கேதாரின் கூடாரங்கள்:-

   கேதார், ஆபிரகாமுக்கு ஆகார் பெற்ற இஸ்மவேலின் குமாரர்களில் ஒருவன் ஆவான்.அவனுடைய சந்ததியார் அரேபியன் தீபகற்பத்திற்கு பாபிலோனுக்கும் இடையேயுள்ள வனாந்திரத்தில் குடியேறினர்.இங்கு குறிப்பிட்டிருக்கும் கூடாரம் ஒரு குடிசை அல்லது வசிப்பிடமாகும்.இவ்வார்த்தை ஒரு மிருகத்தின் தோல் அல்லது ஆட்டுக்கடாத்தோல் எனவும் பொருள் படும். எனவே OHELஎன்னும் ஆண்பாலைக் குறிக்கும் எபிரெய பெயர்ச்சொல் ,எழுத்தின்படியே  கருமையான ஆட்டுமயிரினால் உண்டாக்கப்பட்ட ஒரு கூடாரத்தை குறிப்பாக 

நாடோடிகள்”

ஆதி4:20- ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்
ஆதி 13:5 -ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
ஆதி 18:6 -அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்
ஆதி:25:27- இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்

மேய்ப்பர்கள்” 

எரோ6:3-மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,

 “ஸ்திரீகள்”

ஆதி31:33-அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
நியா 4:17-சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

 “யுத்தவீரர்கள்”

1சாமு 17:54-தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.

முதலியோரும்,  “மந்தைகளும் ” (2நாளா 14:14,15) தங்கும் இடத்தைக்குறிக்கிறது.ஆவிக்குரிய பிரகாரமாக, இக்கூடாரம்ஐயோ.....கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்தது போதும்! சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்த்தது போதும்” (சங்120:5,6) என சங்கிதகாரன் கூறுவதைப்போல சமாதானத்தைப் பகைக்கிற ஒரு கூட்டத்தினரைக் குறிக்கிறது.

சாலொமோன் திரை:-

          சாலொமோன் எருசலேமில் தனக்கென்று கட்டிய அவனுடைய அரண்மனையிலோ தேவனுக்கென்று கட்டிய ஆலயத்திலோ இப்படிப்பட்ட திரையைப்பற்றி எங்கும் குறிப்படவில்லை .எனவே இந்த திரைகள் சாலொமோனுக்கு லீபனோன் வனத்திலிருக்கும் மாளிகைகளிருந்த திரைகளை குறிப்பதாயிருக்கலாம் இதற்கு அங்கும் இங்கு அசைந்தாடும் திரை எனப் பொருள்படும்

 “நான் கறுப்பாய்யிருந்தாலும் அழகாயிருக்கிறேன்”.
   
  சமாதானத்தைப் பகைக்கும் உலக ஜனங்களின் மத்தியில் இப்போது அவள் இருப்பினும் , தன் மணவாளனாகியா கர்த்தராகிய இயேசுவாகிய ராஜாதிராஜாவின் வீட்டில் அவரோடுகூட தங்கியிருப்பதின் மூலம்,தன் ஆவிக்குரிய அழகைப் பாதுகாத்துக்கொள்வதை இது  குறிக்கிறது. இதை முந்திய வசனத்தில் ‘ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்.(.வச.4) என்று கூறும் அவளுடைய வார்த்தைகள் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நான் கறுப்பாயிருக்கிறேன் எனறுப் பாராதேயுங்கள்: வெயில் என்மேற்பட்டது;எந்தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திரட்சைத்தோட்டங்களுக்குக் காவலாளியாக வைத்தார்கள்;என் சொந்த்த திராட்சைத்தோட்டத்தையோ நான்  காக்கவில்லை”(உன்1:6)

    இப்போது மணவாட்டி தன் நிலையை மெற்கண்டவாறு அறிக்கை செய்கிறாள். மற்ற எல்லாவற்றைக்காட்டிலும் அதிகமாய் இந்த நாட்களில் காணப்படும் ஒரு மிகப்பெரிய  ஆபத்திற்கு நேராய் நம் கவனம் இந்த இடத்தில் இழுக்கப்படுகிறது.முழுநேரமும் நாம் மும்முரமாய்  செய்யும் செயல்களும், சேவைகலில் காணப்படும் வைராக்கியமும், நாம் தேவனோடுள்ள ஐக்கியத்தை கவலையினமாய் விட்டுவிடும்படி நடத்தக்கூடும்.
அப்படிப்பட்ட கவலையீனம் நம்முடைய சேவையின் விலைமதிப்பைக் குறைய செய்வது மட்டுமல்ல ,ஒரு மேன்மையான சேவை செய்ய நம்மை வலிமையற்ரவர்களாக்கி விடும்.

மற்றவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து விழிப்பாய் இருந்துக்கொண்டு நம்முடைய ஆத்துமாவைக் குறித்துக் கவலையற்றிருப்போமென்றால் அல்லது நம்முடைய கண்ணிலிருக்கும் உத்திரத்தைப் பொருட்படுத்தாது நம்முடைய சகோதரனின் கண்னில் இருக்கும் துரும்பை எடுக்க வகைப்பார்ப்போமாயின், அடிக்கடி நம்முடைய சகோதருக்கு உதவி செய்ய வல்லமையற்றவர்களாய் இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைவோம்.

நம்முடைய ஆண்டவரும் கூட நம் நிமித்தம் அதிக ஏமாற்றம் அடைந்தவராய் இருப்பார்.நாம் கிரிஸ்துவில் ந்லைத்திராமல் இருக்கும்போது நம்மில் கானப்படும் கனிகள் எல்லாம் மாம்சத்தின் கனிகளாயிருக்குமேயன்றி ,ஆவியின் கனி இருக்காது என்பதை நாம் மறந்துப் போகவேண்டாம்.

நானே திராட்சைச்செடி ,நீங்கள் கொடிகள்.ஒருவன் என்னில் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக்கொடுப்பான் ;என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது”(யோவா15:5)

என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறார்.நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது ஆவியின் கனி நம்மில் வெளிப்படுத்தப்படும்.இங்கே மணவாட்டி தன் சொந்ததிராட்சைத் தோட்டத்தைக் காவல் செய்யாததைக் குறித்து மனஸ்தாபப்படுகிறாள்.தேவனோடுள்ள ஐக்கியத்தை கவலையீனமாய் விட்டுவிடுகிற பாவம் மன்னிக்கப்படலாம் இருப்பினும் காயங்கள் சுகமாக்கப்பட்டாலும் ,தலும்புகள் காணப்படுவதுபோல அதனால் உண்டான விளைவு நிரந்திரமாய்க் காணப்படும்
                              
                      -தொடரும் மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின் ஐக்கியம்
http://www.facebook.com/johnson.duraimavadi

No comments:

Post a Comment