Friday 8 March 2013

சுயத்திற்கு மரித்தல்! - சகரியா பூணன்

by John Sundar Raj on Wednesday, June 15, 2011 at 10:41pm ·
‘சுயம்’ சிலுவையில் அறையப்படட்டும்!
மீண்டும் எழுந்திடாமல் மாயட்டும்
கிறிஸ்து மாத்திரமே என்னில் ஆளட்டும்!
பிறருக்காகவே நான் வாழட்டும்!!

சுயத்திற்கு மரித்தல்!

1. நீங்கள் மறக்கப்பட்டு, அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிடப்படும் சமயங்களில்..... ஏற்பட்ட அவமானங்களுக்காகச் சற்றேனும் மனம் புண்படாமல் "கிறிஸ்துவுக்காய் பாடுபட நானும் தகுதி பெற்றேனே!" என்ற மகிழ்ச்சியில் மாத்திரம் நீங்கள் நிலைத்திருந்தால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

2. உங்கள் நன்மை தீமையாகப் பேசப்பட்டு, உங்கள் விருப்பங்கள் மறுக்கப்பட்டு, உங்கள் கருத்துக்கள் பகடி செய்யப்படும் சமயங்களில்.....உள்ளத்தில் கோபப்படாமல், நியாயத்தை தட்டிக்கேட்க முயற்சிக்காமல், அன்பார்ந்த மெளனத்தோடு நீங்கள் பொறுமையாயிருந்தால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

3. எந்த ஒழுங்கின்மையையும், காலந்தாழ்த்தி வருதலையும், வீண்விரயங்களையும், ஆவிக்குரிய உணர்வற்ற செயல்களையும்..... ‘இயேசுவைப்போலவே’ நீங்களும் அன்பு கலந்த பொறுமையுடன் சகித்துக் கொண்டால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

4. என் பெயரை குறிப்பிட வேண்டும், என் செயல்கள் பேசப்பட வேண்டும் போன்ற விருப்பம் துளிகூட இல்லாமல்..... இன்னமும், "அறியப்படாதவனாகவே" இருந்துவிட மெய்யான விருப்பத்தை நீங்கள் பெற்றிருந்தால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

5. தேவசித்தத்தின்படியான எவ்வித உணவானாலும், உடையானாலும், சீதோஷண நிலையானாலும், சமுதாயமானாலும், தனிமையானாலும் அவைகளில் நீங்கள் மனநிறைவு கொண்டிருந்த்தால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

6. தேவை மிகுந்த இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் இருக்கும் போது, உங்கள் சகோதரனின் தேவைகள் சந்திக்கப்பட்டு ஐசுவரிய மடைவதைக் காணும்போது.....சிறிதேனும் பொறாமை உணர்வு கொள்ளாமல், தேவனிடம் கேள்வி கேட்காமல், சகோதரனோடு சேர்ந்து உங்களால் களிகூர முடியுமென்றால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!

7. உங்களைவிட குறைவான ஒருவரின் புத்திமதியையும், கடிந்து கொள்ளுதலையும்.... இருதயத்தில் எவ்வித எதிர்ப்பும் கோபமும் கொள்ளாமல், அவைகளை உள்ளத்தில் மாத்திரமல்லாமல் வெளியரங்கமாயும் நீங்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்,
அதுவே சுயத்திற்கு மரித்தல்!
"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9:23)

No comments:

Post a Comment