Friday 8 March 2013

துயரப்படுகிறவருக்கு ஆறுதல் அளிக்கப்படும் (15.07.2011)

by Jo Joshua on Friday, July 15, 2011 at 11:34am ·
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் அறுதலடைவார்கள் (மத்.5:4).


நாம் அழுகையின் பள்ளத்தாக்கைக் கடந்து சீயோனை அடைகிறோம். துயரப்படுதலும் ஆசீர்வதிக்கப்படுதலும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்று நாம் நிலைக்கலாம். ஆனால் எல்லையற்ற ஞானமுள்ள இரட்சகர் அவற்றை இந்த வசனத்தில் ஒன்றாகவே இணைத்துள்ளார். அவர் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக. நம்முடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும் துயரப்படுவதை ஆண்டவரால் அவருக்கு உண்மையானவர்கள் மேல் வைக்கப்பட்ட அடையாளமாகும். தாவீதின் வீட்டார் மேலாவது அல்லது வேறு எந்த வீட்டாரின் மேலாவது கிருபையின் ஆவி ஊற்றப்படும்போது, அவர்கள் துயரப்படுவார்கள். அரிய பொருள்கள் நீர் மூலம் நமக்குக்கிடைப்பதுபோல், பாவத்திற்கு துயரப்படுவதின்மூலம் நாம் சிறந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். துயரப்படுகிறவர் எதிர்காலத்தில் ஆசீர்வதிக்கப்படுவார் என்பதில்லை. அவர் இப்போதே ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிறார் என்று கிறிஸ்து அறிவிக்கிறார்.


பாவத்துக்காகத் துயரப்படுகிறவர்களைத் தூய ஆவியானவர் நிச்சயமாகவே ஆறுதல்படுத்துவார். இயேசுவின் இரத்தம் பூசப்படுவதாலும் தூய ஆவியானவரின் சுத்திகரிக்கும் ஆற்றலினாலும் அவர்கள் ஆறுதல்படுத்தப்படுவார்கள். மக்கள் கடவுளுக்கு விரோதமாக எவ்வளவு கலகம் செய்தாலும் அவர் தம்மை மகிமைப்படுத்துவார் என்னும் உறுதி அளிக்கப்பட்டிருப்பதால் அவர் பிள்ளைகள் தங்கள் நகரத்தினரின் மிகுந்த பாவங்களைக் குறித்தும் ஆறுதல்படுத்தப்படுவார்கள்;. சீக்கிரத்தில் பாவத்திலிருந்து விடுதலையடைந்து அவர்கள் ஆண்டவரின் மகிமையான பிரசன்னத்தில் நித்தியமாய் வாழ எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் ஆறதல்படுத்தப்படுவார்கள்.

No comments:

Post a Comment