உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன்னை பெரியவனாக்குவேன், உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்….
இந்த "உன்னை" என்பது யார்?
நானா?
"நான், எனக்கு" என்று நம்புவேனானால் எந்த அடிப்படையில் இந்த வசனத்தை எனக்கு நான் சொந்தமாக்கிக் கொள்ளுகிறேன்?
1. அந்த வசனங்கள் எழுதப்பட்டிருக்கும் வேதத்தை வாசிப்பதாலா?
2. பிரசங்கிக்கப்படும் இடத்தில் அமர்ந்து பிரசங்கம் கேட்பதாலா?
3. வசனப்பலகையை விலைகொடுத்து வாங்கி என் வீட்டில் மாட்டிவைத்திருப்பதாலா?
4. நான் என்னை கிறிஸ்தவன் என்றும் இரட்சிக்கப்பட்டவன் என்றும் நம்பிக்கொண்டிருப்பதாலா?
5. இந்த வசனத்தை எனக்கு உரிமையாக்கிக் கொள்ளுமளவுக்கு ஏதாகிலும் ஒன்றை சாதித்து விட்டேன் என்ற உணர்வினாலா?
6. நான் என்னை ஆசீர்வதிக்கும்படி அனுதினமும் ஜெபிப்பதாலா? அல்லது எனக்காக பலர் ஜெபிப்பதாலா?
7. யாராவது என் தலையில் கைவைத்து தீர்க்கதரிசனமாக இந்த வசனங்களை சொன்னதாலா?
8. கிறிஸ்தவப் பெற்றோருக்கு பிள்ளையாய் பிறந்ததாலா?
9. ஒரு பிரபல சபையில் Church Fund அல்லது தசமபாகம் கொடுத்து அங்கத்தினராய் இருப்பதாலா?
10. திருமுழுக்கு, திடப்படுத்தல் போன்ற சில கடமைகளை செய்துமுடித்து விட்டேன் என்பதாலா?
11. எனது வாழ்க்கைத்துணை நல்ல ஆவிக்குரியவளாய்/
12. ஏற்கனவே கர்த்தரிடம் சில நன்மைகளைப் பெற்றிருக்கிறேன் என்ற உறுதியினாலா?
உண்மையில் சிந்தித்துப்பார்க்கிறேன், எந்த அடிப்படையில் வேதத்தின் ஆசீர்வாத வசனங்களை "எனக்கு" சொந்தமாக்கிக் கொள்ளுகிறேன்?
நான் யார்?
என் பிறப்பா? வளர்ப்பா? சபையா? சடங்கா? கிரியையா? நம்பிக்கையா? எது எனக்கு இந்த ஆசீர்வாதங்களை எனக்கு சொந்தமாக்கியது?
நான் பெயரளவில் கிறிஸ்தவன் என்பதையும், சில சபைச் சடங்குகளில் பங்கு கொள்கிறேன் என்பதையும் தவிர எனக்கும் கிறிஸ்துவுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
"நான் ஏன் உன்னை ஆசீர்வதிக்க வேண்டும்? அல்லது ஏன் உன்னைப் பரலோகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்? ஒரு நியாயமான காரணத்தைச் சொல்" என்று ஆண்டவர் கேட்டால் அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் என்னிடம் இருக்கிறதா?
அல்லது
நரகாக்கினைக்கு காத்திருக்கும் இலட்சக்கணக்கான ஆத்துமாக்களைக் காட்டி "நான் ஏன் அவர்கள் போகும் இடத்துக்கு உன்னையும் அனுப்பக்கூடாது ? ஒரு நியாயமான காரணத்தைச் சொல் என்று ஆண்டவர் கேட்டால் அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் என்னிடம் இருக்கிறதா?
சிந்தித்துப் பார்க்கிறேன்…இன்றே சுயபரிசோதனை செய்துகொண்டால் என்றோ நடக்கப்போகும் அக்கினிப்பரீட்சைக்கு தப்பிக்கொள்ளலாம்...
No comments:
Post a Comment