Monday 13 May 2013


...என் பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங்கீதம் 23:5)-சகொ.விஜெய்

கத்தோலிக்க வாக்குத்தத்தம்:
புனித நற்கருணை எனும் திருச்சடங்கினால் உண்டாகும் மகிழ்ச்சியால் உன் பாத்திரத்தை நிரப்புவார்.

புராட்டஸ்டண்ட் வாக்குத்தத்தம்:
உங்கள் பாத்திரத்தை ஆசீர்வாதத்தினால் நிரம்பிவழியச் செய்வார்.

பெந்தேகொஸ்தே வாக்குத்தத்தம்:
உன் பாத்திரத்தை அபிஷேக அக்கினியால் நிரம்பிவழியும்படி செய்வார்:

கிருபை பிரசங்கியாரின் வாக்குத்தத்தம்:
உன் பாத்திரத்தை கிருபையாலும் தயவாலும் நிரப்புவார்

செழிப்பு பிரசங்கியாரின் வாக்குத்தத்தம்:
உங்கள் கல்லாப்பெட்டியை கரன்சி நோட்டுகளால் நிரம்பிவழியும்படி செய்வார்

தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பரிசுத்த ஆவியானவர் துணையோடு தியானம் செய்து கற்றுக்கொள்ளாமல் அவிசுவாசத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் மனிதர்களையும் அவர்கள் உண்டாக்கிய Denomination-களையும் சார்ந்துகொண்டால் இதுதான் கதி! மிக எளிமையான இந்த வசனமே இவர்களிடம் சிக்கி இந்தப் பாடுபடுமானால் முழுவேதாகமத்தின் கதி???!!

வேதத்தைக் கற்றுக்கொள்ள மனிதர்களை சார்ந்து கொள்ளுபவர்களுக்கு ஐயோ! ஐயோ!! ஐயோ!!!

அங்கே எரியும் அக்கினி என்ன?

Burning-Bush
எகிப்திய காளவாயில் அடிமைகள் அபயமிடும் போதெல்லாம்
ஆண்டவருடைய ஓரேப்புகளின் முட்செடிகள் அனல்பற்றி எரியுமாம்!
இதோ! இந்தமுறை அழைப்பு உனக்குத்தான்…
வளையாத பாபிலோனிய பார்வோன்களை வளைக்கும்
வலுவான வேலையிருக்காம்!
வரலாறுகளை வரைந்த வலுக்கரங்களூக்கு
சொந்தக்காரர் “போ” என அனுப்புகிறார்!
இந்தப் படபடக்கும் அக்கினி இன்னும் என்ன சொல்லுகிறது?…
“இவ்வுலகில் காருக்கும், தேருக்கும், சீருக்கும், பேருக்கும்
பின்னால் போகிறவர்கள் தன்வழியே போகட்டும்…
இயேசுவின் அடிமை நீ தனிவழியே போ!
உயர்வு உயர்வு என அலைகிறவர்கள்
மேடுகளைத் தேடிப் போகட்டும்
உன்னதரின் சீடன் நீ ஆடுகளைத் தேடிப்போ!
கோடீசுவரக் குதிரைகள் தம் குருமார்களை
கோபுரங்களில் குடிவைத்துக் கொள்ளட்டும்
கோவேறுக் கழுதை நீ,
கோமகனை சேரிகளுக்குள்ளே சுமந்து போ!
பணந்தின்னிக் கழுகுகள் பல – திரு
மண்டலங்களைக் கட்டி ஆளட்டும்
கேரீத்தின் காகம் நீ,
பசித்த பாலகரின் வயிறுகளை போஷிக்கப்போ!
நசல்கொண்ட ஆட்டைக் கண்டு
நரிசேயர்கள் விலகிப் போகட்டும்
நல்ல சமாரியன் சந்ததி நீ – காயம் கட்ட
புசல் போல விரைந்து போ!
ஆராதனை வீரர்கள் தங்கள்
ஆல்ப வியாபாரங்களில் திளைக்கட்டும்
ஆபேலின் வம்சம் நீ,
இரத்த சாட்சிபலியாகப் புறப்பட்டுப் போ!
திருப்பணி வழியாக திரவியங்கள் தேடுவோர்
திரைகடல்கள் மீதிலே திசைகெட்டு ஓடட்டும் – நாசரேத்தூர்
தச்சன் கட்டிய படகு நீ
திக்கற்றவன் திரிந்தலையும் திசைகளைத் தேடிப்போ!
அரியாசனங்கள் பட்டத்தோடு அழைக்கையில் ‘ச்சீ’யென உதறித்தள்ளு
ஆண்டவர் திட்டத்தோடு அனுப்பும்போதோ ஆபிரகாம்போல கிளம்பிவிடு!
தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் தேடிவந்தாலும் புறக்கணி!
தேற்றுவாரற்ற விதவைகளின் துளி கண்ணீரையும் புறக்கணிக்காதே!
சிகரந்தொட்ட ஆத்துமாக்களின் புகழ்ச்சிகளுக்கு கணக்கு வைக்காதே!
சிறுமைப்பட்ட ஆத்துமாக்களின் விசும்பலைக்கூட கணக்கில் வை!”
இனி மறுபேச்சு ஏது ஆண்டவரே!…
திக்கெட்டையும் படைத்த தானைத் தலைவன் துணையிருக்க – இனி
திக்குவாய்களுக்காக தயக்கம் இல்லை – இந்தமுறை சாட்சிக்கு
கோலும் வேண்டாம், குஷ்டமும் வேண்டாம்,
பாம்பும் வேண்டாம், படையும் வேண்டாம் ஆண்டவரே!
“போ” என்ற உம் வார்த்தை மாத்திரமே போதும்…
-வாட்ச்மென்

அது எலியாவின் பாணி, இது கேயாசிகளின் பாணி!

nithi
தேவன் வேதத்தில் ஊழியத்துக்கான, ஊழியர்களுக்கான தேவைகளை சந்தித்த விதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன:
 1. மீன் வாயில் வெள்ளிப்பணம் (மத்தேயு 17:25-27)
2. காகம் மற்றும் சாறிபாத் விதவையையும் கொண்டு எலியாவை போஷித்தது (1 இராஜா 17)
இதுபோன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட பல உதாரணங்களைச் சொல்லலாம். அது பழைய காலம், இது சபையின் காலம் என்கிறீர்களா? இதே சபையின் காலத்தை சேர்ந்த ஜார்ஜ் முல்லர் போன்ற அருமையான  ஊழியர்களின் தேவைகள் சந்திக்கபட்டதும் அற்புதங்கள் மூலமாகத்தான். அதே பலத்த கரங்களும் ஓங்கிய புயங்களையும் உடைய தேவன்தான் இன்றும் தமது உத்தம ஊழியர்களை போஷிகிறார். தேவன் ஒருவரிடம் காட்டிய அற்புதத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்லை. காரணம் அவருடைய வழிகள் ஆராய்ந்து முடியாதவைகள். அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்.
ஆனால் இக்காலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்வதாய் சொல்லிக்கொள்ளும் அநேகர் மேற்கண்ட படத்திலுள்ள கேவலமான மார்கெட்டிங் முறையை பின்பற்றுகின்றனர். தங்களுக்கு காணிக்கை கொடுப்போரை எழுப்பினதுபோலவும் இருக்கும், தேவன்தான் தங்கள் தேவைகளை சந்திக்கிறார் என்று காட்டிக்கொள்வது போலவும் இருக்கும். தேவன் எழுப்புவதாக வாக்குப் பண்ணியிருந்தால் தேவனே அவர்களை கொண்டுவந்து சேர்ப்பாரல்லவா?  அதை ஏன் பத்திரிக்கையில் விளம்பரம் பண்ணவேண்டும்?
மேற்கண்ட ஊழியத்தின் மீதோ ஊழியக்காரர்கள் மீதோ எங்களுக்கு எந்த தனிப்பட்ட கோபமோ பகையோ இல்லை. அவர்களை அல்ல அவர்கள் ஊழியம் செய்யும் முறையையே தேவவசனத்தின்படி விமர்ச்சிக்கிறோம். இவர்கள் மட்டும் இப்படி செய்யவில்லை இதே டெக்கினிக்கை பயன்படுத்தி பணம் பார்ப்பவர்கள் அநேகர். எனவே கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக இந்த விளம்பரத்தை உதாரணமாக வைத்து இக்கட்டுரையை வரைந்திருக்கிறோம்.
இத்திட்டத்தில் இணைந்தால் பலத்த பாதுகாப்பு, செழிப்பு மற்றும் ஜெப விண்ணப்பத்துக்கு பதில் போன்ற ஆசீர்வாதங்களைத் தருவதாக தேவனே கட்டளையிட்டாராம்!  இப்படி தேவனையும் இந்த மோசடித் திட்டத்தில்  பார்ட்னராக சேர்த்திருக்கிறார்கள். யாருக்காவது மேற்கண்ட ஆசீர்வாதங்கள் கிடைக்காமல் போனால் அவர்கள் இயேசுவைத்தானே தூஷிப்பார்கள்!
தன்னை யாரைக்கொண்டு, எப்படி போஷிக்கப் போகிறேன் என்பதை தேவன் எலியாவுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனால் எலியா எப்படி நடந்துகொண்டார் என்பதை தியானித்துப்பாருங்கள்.
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்  (1 இரா 17:9)
எலியா அந்த விதவையை எப்படி சந்திக்கிறார் பாருங்கள்:   அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு…(1 இரா 17:10)
எலியா சாறிபாத் ஊருக்குப் போய் ஒலிமுக வாசலில் நின்று:
“என்னை போஷிக்கும்படி இந்த ஊரில் உள்ள ஒரு விதவைக்கு கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாராம். யார் அந்த விதவை? இருதயத்தில் ஏவப்பட்டவர்கள் முன்வாருங்கள்!” என்று கூவவில்லை. 
எலியா ஒலிமுகவாசலுக்கு வந்ததும் அந்த விதவை அந்த இடத்தில் விறகுபொறுக்கிக் கொண்டிருந்ததும் தேவநடத்துதல். ஆனால் அவர்கள் இருவரையும் பொறுத்தவரை அது தானாக நடைபெற்ற நிகழ்வு. ஆனால் அதுதான் அற்புதம்!!…தேவன் தனது ஊழியர்களை யாரிடமும் கையேந்திக்கொண்டிருக்கவும், வயிற்றுக்காக அபயமிடவும் அனுமதிக்கமாட்டார்.
அதிலும் எலியா அந்தப் பெண்ணிடம் முதலிலேயே நேரடியாக அப்பம் கேட்கவில்லை,  1இரா 17: 10-ஆம் வசனத்தில் முதலில் தண்ணீர் கேட்கிறார். அவர் தண்ணீர் கொண்டுவர சம்மதித்து கிளம்பிப்போனதும். இவள்தான் தேவன் சொன்ன அந்த விதவை என்று மனதில் நிச்சயித்துக்கொண்டு பின்னரே தண்ணீர் கொண்டுவரக் கிளம்பிய அவளை நிறுத்தி அடுத்த வசனத்தில்  அப்பமும் கொண்டுவரும்படி சொல்லுகிறார், எலியா எல்லோரிடமும் போய் தனது தேவையை சொல்லி யெகோவா தேவனை இழிவுபடுத்தவில்லை. தேவனுடைய ஸ்தானாதிபதி என்ற தனது கவுரவத்துக்கும் தனது எஜமானின்  மகிமைக்கும் பங்கம் வராமல் எல்லா இடங்களிலும் ஞானமாக நடந்துகொண்டார்.
மேலும் இத்திட்டத்தில் இணைந்தால் தேவன் பலத்த பாதுகாப்பை (இசட் பிரிவு ?!!) கொடுப்பாராம். அப்படியானால் மற்ற விசுவாசிகளுக்கு சாதாரணமான பாதுகாப்பா? இந்தத் திட்டத்தில் இணையும் விசுவாசிகளுக்கு செழிப்பு மற்றவர்களுக்கு பற்றாக்குறையா? இது பட்சபாதம் இல்லையா? இத்திட்டத்தில் இணைபவர்களுடைய ஜெபவிண்ணப்பங்கள் மட்டும் உடனடியாக பரிசீலிக்கப்படுமாம். அப்படியானால் இந்த 100 ரூபாய் தேவனுக்கு தரும் பரிதானமா? ஒரு 100 ரூபாய்க்காக தேவனை எப்படி மட்டுப்படுத்துகிறார்கள் பாருங்கள்!

உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. (உபாகமம் 10:17 )

இவர்கள் மாதந்தோறும் 100 ரூபாய் தரக்கூடிய பங்குதாரர்களை எழுப்புவேன் என்று தேவன் சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய். அநேகர்  இந்தத் திட்டத்தில் இணைந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள் என்பதும் பொய். “இது 10 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சோப்” என்று சொல்லுவது போன்றது. இந்தியாவில் உள்ள 120 கோடிப்பேரில் அந்த 10 கோடிப்பேர் யார் என்று யாரும் ஆராய்ச்சிசெய்து பார்க்கப்போவதில்லை. இத்திடத்தில் இணைந்தால் பலத்த பாதுகாப்பு, செழிப்பு, ஜெபத்துக்கு பதில் போன்ற ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று சொல்வதும் பொய். மேற்கண்ட ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டவர்களுக்கு, என்னென்ன கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களுக்கு கிடைக்கும் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. அந்தக் காரியங்களை அறிந்து கொள்ள நீங்கள் பரிசுத்த ஆவியானவர் உதவியோடு வேதத்தை தியானிக்க வேண்டும்.  ஒருபோதும் இது போன்ற பத்திரிக்கை விளம்பரங்களை வாசித்து ஏமாந்து போகாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக விளம்பரத்தின் கடைசி பத்தியில் சொல்லியிருக்கும் “நாங்களும் எங்கள் குழுவினரும் தினந்தோறும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்” என்பதையும் நம்பாதீர்கள். அவர்கள் ஜெபிப்பது ஒருவேளை உண்மையாய் இருக்கலாம். ஆனால் உங்கள் தேவைகளுக்காகவும் அதைவிட முக்கியமாக உங்களை சுற்றியுள்ளவர்களின் தேவைக்காகவும் பிரதானமாக ஆவிக்குரிய தேவைகளுக்காக நீங்களே ஜெபியுங்கள். அடுத்தவர்களை ஒருபோதும் சார்ந்து இருக்காதீர்கள். பணம் கொடுத்தவர்களுக்கு மாத்திரமே ஜெபிப்பேன் என்பது மோசமான முன்னுதாரணம். அப்படி விளம்பரப்படுத்துபவர்களிடம் காசைக் கொடுத்து ஜெபத்தை விலைக்கு வாங்குவது அதைவிட மோசமான முன்னுதாரணம். உங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்யலாம் ஜெபத்தை அவுட்சோர்ஸ் செய்யாதீர்கள். 
கடைசியாக ஊழியர்களுக்கு ஒரு காரியத்தை தெரிவிக்க விரும்புகிறோம். தேவ ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனுக்கு மகிமையையோ அல்லது கனவீனத்தையோ கொண்டுவரும் என்பதை மறக்கக்கூடாது. காணிக்கை பெறுவது தவறல்ல. வேதம் அதை அனுமதிக்கிறது. ஆனால் நாம் தேவனைத்தான் சார்ந்துகொள்ள வேண்டுமே தவிர இதுபோன்ற மலிவான மார்க்கெட்டிங் யுத்திகளை அல்ல. இதுபோன்ற மனுஷீக யுத்திகளை கையாண்டு தேவனை கனவீனம் செய்வதை விட நாம் வேலைசெய்துகொண்டே ஊழியம் செய்யலாம். நமது பெலன் எவ்வளவோ அவ்வளவு மட்டும் உண்மையாய் உத்தமமாய் செய்வது நல்லது. தேவனுடைய இராஜ்ஜியம் நம்மை மட்டும் நம்பி இல்லை. அவரால் எந்த மனிதனையும் பிரகாசிப்பித்து பயன்படுத்த முடியும். தேவன் நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே! என்றுதான் சொல்லுகிறரே தவிர  “நிறைய சாதித்த ஊழியனே!” என்று சொல்லவில்லை.
கீழ்க்கண்ட பவுலின் முன்மாதிரியைப் சிந்தித்துப் பாருங்கள்:
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் (ஒரு நல்ல முன்மாதிரியை) உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். (அப் 20:32-3)
-வாட்ச்மென்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KWVSAD6ZDJM

தேவனை எப்படி தொழுதுகொள்ளுவது?


அன்பான சகோதர சகோதரிகளே! ஒரு குறிப்பிட்ட வேத ஆராய்ச்சிக்காக உங்கள் உதவி தேவைப்படுகிறது. தங்கள் பதில்களை கமெண்ட் பகுதியில் எழுதலாம் அல்லது எனது man.of.god25@gmail.com என்ற எனது மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவின் மையமாகத் திகழ்வதும், ஒரு விசுவாசி எப்படி தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இயேசுவே சொன்னதும்தான் கீழ்க்கண்ட வேதபகுதி:
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:23, 24).
எங்கள் கேள்வி இதுதான்:
  1. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதல் என்றால் என்ன?
  2. நீங்கள் எப்படி அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறீர்கள்?
  3. உங்கள் சபையில் இதுபற்றி என்ன போதிக்கிறார்கள்?

படுகுழிக்குள் தள்ளும் போலி கிருபை


கிறிஸ்தவத்துக்கும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள மாபெரும் வேற்றுமை என்னவென்றால் அது “கிருபையால் உண்டாகும் தேவநீதி” என்ற அடிப்படை சத்தியமே ஆகும். கிருபையின்றி சபையில்லை, நம்மை அழைத்த சுவிசேஷம் “கிருபையின் சுவிசேஷம்” (அப் 20:24), நாம் பெற்றிருக்கும் ஆவி “கிருபையின் ஆவி” (எபி 10:29).
கிருபையைப் பற்றிக்கொள்ளாமல் சுயநீதியைப் பற்றிக்கொண்டதுதான் இன்றைய திருச்சபையின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். இந்த வஞ்சகம் இன்று நேற்றல்ல முதல் நூற்றாண்டிலேயே சபையை கவிழ்க்கப் பார்த்தது. சபையை கிருபையிலிருந்து மீண்டும் நியாயப்பிரமாணத்துக்குள் இழுத்துவர சத்துரு எடுத்த முயற்சிகளையும் அதை எதிர்த்து ஆதி அப்போஸ்தலர்கள் கடுமையாகப் போராடியதையும் நாம் வேதத்தின் வாயிலாக அறிவோம். காரணம் கிருபையை இழந்துவிட்டால் சபைக்கு எதிர்காலமில்லை. குறைவுள்ள நியாயப்பிரமாணம் செய்யும் ஒரே (நல்ல) வேலை நம்மை கிருபையினிடத்தில் நடத்துவது (கலாத்தியர் 3:24 ). கிருபையோ, நாம் அதில் நிலைத்திருக்கும்போது நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான பூரண புருஷராய் மாற்றுகிறது. இதுவே தேவனுடைய பரியூரண திட்டம்.
நியாயப்பிரமாணத்தை ஒழுங்காக பின்பற்றியவனுக்குத்தான் கிருபையின் மேன்மை தெரியும். ஆனால் அன்றைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டு நியாயப்பிரமாணத்தை புரட்டி போதித்ததால்தான் அன்று கிறிஸ்துவை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை, அவரை சிலுவையிலும் அறைந்தார்கள். கிருபைக்குள் நடத்தாத நியாயபிரமாண போதகம் எப்படி வஞ்சகமானதோ அப்படியே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றாத கிருபையின் உபதேசமும் வஞ்சனையானது.
கிருபைக்கு நேராய் நடத்தாத நியாயப்பிரமாண போதகம் மனிதனை மார்க்கவெறிக்குள்ளும், மூடத்தனத்துக்குள்ளும் வழிநடத்துவதைப்போல. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றாத (போலியான) கிருபையின் உபதேசமும் மனிதனை “அறிவின் பெருமைக்குள்ளும், ஆணவத்துக்குள்ளும், துணிகரமான பாவங்களுக்குள்ளும்” நடத்தும். சபையை கிருபைக்குள் வழிநடத்தாமல் பிரமாணத்துக்குள் நடத்துவது எத்துணை ஆபத்தானதோ, அத்துணை ஆபத்தானது சபையை இந்த “ஆபத்தான (போலி) கிருபையின் உபதேசத்துக்குள்” நடத்துவதுமாகும்.
இன்று இந்த புரட்டு உபதேசம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட பிரசங்கியாரின் உபதேசத்தை ஆராய்வோம். இந்த போதகர் மீது எங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் கிருபையால் உண்டாகும் நீதியைக் குறித்து பல சில இடங்களில் மிக நேர்த்தியாகவும் சரியாகவும் பேசியிருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாய் பார்த்தால் இந்த (போலி) கிருபை உபதேசம் ஒரு குவளை பாலில் ஒரு துளி ஆலகால விஷம் போன்றது. அந்த விஷம் என்னவென்றால் சத்தியத்தின் ஒருபக்கத்தை மட்டும் காட்டி ஜனங்களை வஞ்சிப்பது, தேவன் அவருடைய தயவை மட்டும் நோக்கிப்பார்க்கச் சொல்லவில்லை அப்படிப்பார்த்தால் அதை பாவம் செய்வதற்கான லைசன்சாக எடுத்துக்கொள்வோம், அல்லது அவரது கண்டிப்பை மட்டும் நோக்கிப்பார்க்கச் சொல்லவில்லை அப்படிச் செய்தால் குற்றமனசாட்சியிலேயே தேவசமூகத்தை விட்டே ஆதாமைப்போல ஓடிவிடுவோம்
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார் (ரோமர் 11:22 )
இந்த செய்தி யூடியூப் தளத்தில் காணக்கிடைப்பதால் இதைப் பயன்படுத்தி இந்தப் போதகத்தில் இருக்கும் பிழைகளை வெளிக்கொணர்கிறோம். இந்தப் போதகர் சார்பிலிருந்து மறுப்பு தெரிவித்து விளக்கம் தரப்படுமானால் அது வரவேற்கப்படுகிறது.

ஏட்டிக்குப் போட்டி


ஏட்டிக்குப் போட்டி


வாட்ச்மென்
ஆவிக்குரிய நிலையில் திருப்தியடையாது முன்னேறவும் (எபி 6:12, எபே 4:11), உலகப் பொருளிலோ உள்ளதில் திருப்தியாயிருக்கும் படியாகவும் (1தீமோ6:6-12) வேதம் போதிக்கிறது. ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய நிலைமையில் ஏக திருப்தியாகவும், உலகப் பொருளிலோ சற்றும் திருப்தியடையாமல் தா,தா எனும் அட்டையின் குமாரத்திகளைப் போல (நீதி 30:15) திறந்த வாயுடன் வானத்தின் பலகணிகள் திறக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
 இயேசு மனிதர்களை நேசித்தார், பொருட்களைப் பயன்படுத்தினார் நாமோ பொருட்களை நேசிக்கிறோம், மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.
 இயேசு சாத்தானுக்கு ராஜசிங்கமாகவும், மனிதர்கள் தனது தாடியை இழுத்து கன்னத்தில் அறைந்தபோது ஆட்டுக்குட்டியாகவும் அமைதிகாத்தார். நாமோ மனிதர்களிடம் சிங்கமாக சீறுகிறோம், சாத்தானிடமோ அவன் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சாதுவான ஆட்டுக்குட்டியாக இருக்கிறோம்.
 ”என் வீடு பாழாய்க் கிடக்கிறது நீங்களோ அவனவன் தன் தன் வீட்டுக்கு ஓடிப் போகிறீர்களே” என்று ஆண்டவர் அங்கலாய்த்த காலத்தில் (ஆகாய் 1:4,9) ஒருவனும் ஆலயம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றோ கட்டிடங்கள் தேவையில்லை, நீங்களே அந்த ஆலயம் என்ற பிறகு ஐக்கியத்தில் ஆர்வம் காட்டாது மாய்ந்து மாய்ந்து ஆலயக் கட்டிடங்களைக் கட்டுகிறோம்
 என்னை தசம பாகத்தில் வஞ்சிக்கிறீர்களே! (மல் 3:8) என்று கர்த்தர் கர்ஜிக்கும் அளவுக்கு கஞ்சமகா பிரபுக்களாக அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் இருந்தார்கள். தசமபாகக் காலமெல்லாம் ஒழிந்து புதிய உடன்படிக்கை பூத்தபின் தசமபாகத்தை தூசுதட்டிஇன்று இயேசுவைப் போதிப்பதைவிட தசமபாகத்தைப் பற்றி அதிகமாக போதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 இயேசு மதவாதிகளை தூரத்தில் நிறுத்தி வைத்தார். பாவிகளோடு நெருங்கிப் பழகினார். சீஷர்களை உருவாக்கினார். நாமோபாவிகளை தூரத்தில் நிறுத்தி வைத்து விட்டோம், பரிசேயர்களிடம் பிரசங்கபீடங்களைக் கொடுத்துவிட்டோம், இரட்டிப்பான நரகத்தின் மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
 முதல் நூற்றாண்டில் சபை உலகத்துக்குள் போய் உலகைப் பாதித்தது. இன்று உலகம் சபைக்குள் வந்து சபையை பாதிக்கிறது.
 இயேசு தேவசித்தம் செய்வதே போஜனம் என்றார் (யோவா 4:34). நாமோ போஜனத்துக்காகத்தான் தேவனையே தேடுகிறோம்.(யோவா 6:27).
 ஆதிஅப்போஸ்தலர் பொருளாதாரத்தில் தரித்திரர், ஆவிக்குரிய ஐசுவரியவான்கள் நாமோ பொருளாதாரத்தில் ஐசுவரியவான்கள் ஆவிக்குரிய தரித்திரர்.
 இயேசு சரீர சுகத்தைப் பற்றி ஒரு போதனையும் செய்யவில்லை ஆனால் எண்ணிறைந்த சுகமளிக்கும் அற்புதங்களைச் செய்தார். நாமோ வாய்கிழிய அற்புத சுகத்தைப் பற்றி பிரசங்கிக்கிறோம், காரியத்திலோ பூஜ்ஜியம்!
 ஆவியானவர் சந்நிதியில் அப்போஸ்தலர் பிரித்தெடுக்கப்பட்டது அன்று (அப் 13:2), அரசியல்வாதிகள் முன்னிலையில் திருமண்டலத் தேர்தல்கள் நடக்கின்றன இன்று.
 தேவன் யுத்ததில் சிறந்த குதிரையாக நம்மை நிறுத்த விரும்புகிறார் (சக 10:3). நாமோ தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகமாய் மாறிப்போனோம்.(எரே 2:23). அவர் நம்மை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினார்; நாமோ அவருக்கு காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனோம் (எரே 2:21)
 அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் புதிய ஏற்பாட்டு வாழ்க்கைக்காக ஏங்கினார்கள் (பேதுரு 1:10-12). இன்றைய புதிய ஏற்பாட்டுக்காரர்கள் கட்டடங்களை மகிமைப்படுத்துவது, பண்டிகைகளை ஆசரிப்பது, தசமபாகம், பொருளாதார ஆசீர்வாதம், பிரமாணத்துவம் என்று பழைய ஏற்பாட்டுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 இயேசு பாவிகளோடு வாழ்ந்தாலும் பாவத்தை வெறுத்தார், நாமோ பாவிகளை வெறுத்தாலும் பாவத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 அன்று சபையை சம்பாதிக்க பணத்தைப் பயன்படுத்தினார்கள். இன்று பணத்தை சம்பாதிக்க சபையைப் பயன்படுத்துகிறார்கள்.
 எல்லாம் தலைகீழ், எதிலும் முரட்டாட்டம்…இதுவே நம் இன்றைய கிறிஸ்தவம். ”முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது (1 சாமு 15:23).” தேவன் வெறுப்பவறையெல்லாம் விரும்புகிறோம். தேவன் விரும்புபவற்றையெல்லாம் அசட்டை செய்கிறோம். ஒன்றைத் தவிர…
 ஒன்றே ஒன்றைத் தவிர…
 தேவன் நாம் பரலோகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். நமக்கும் அதே ஆசை நிறைய இருக்கிறது. ஆம், எப்படியேனும் கடைசியில் பரலோகம் மட்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம். சேர்ந்துவிடுவோம் என்றும் நம்புகிறோம்.
 பிரியமானவர்களே! ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். இதுவும் நம்முடைய சொந்தக் கதை சோகக் கதை போலவேதானிருக்கும் (1 கொரி 10:11)
 எகிப்து எனும் இரும்புக் காளவாயிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை கிருபையாக இரட்சித்து தேவன் அழைத்து வந்தார். அவர்களோ வழியில் முரட்டாட்டம் பண்ணினார்கள், வனாந்திரத்திலேயே அழிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவனும் வாக்குப்பண்ணப்பட்ட  கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. கீழ்படிந்த யோசுவாவும் காலேபும் மாத்திரம் பிரவேசித்தார்கள். அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது (ரோமர் 11:11) சுபாவக்கிளைகள் ஒலிவமரத்திலிருந்து முறித்துப் போடப்பட்டது. காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நம்மை எடுத்து கிருபையாக ஒலிவமரத்தோடு ஒட்டவைத்தார். ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, ஆனால் தேவன் மாறாதவர்.
 ”சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.(ரோமர் 11:21,22).”
 ஆம், தேவனோடு நாம் விளையாட முடியாது. அவரது நீடிய இரக்கத்தை நாம் ஏமாளித்தனம் என்று எண்ணக் கூடாது. நமக்கு நமது அனலுமற்ற குளிருமற்ற மதரீதியான கிறிஸ்தவத்தை விட்டு வெளியே வர மனதில்லையானால் தேவன் நம்மைக் கடந்து செல்ல தயங்க மாட்டார்.
 ஜலப் பிரளயத்தில் முழு உலகமும் அழிக்கப்பட்டாலும் நோவா உட்பட 8 பேரை மீதம் வைத்திருந்தார். வனாந்திரத்தில் கலகம் பண்ணின இஸ்ரவேலர் முழுவதும் அழிக்கப்பட்டார்கள், அவர்கள் சந்ததியாரும் , யோசுவாவும் காலேபும் மீந்திருந்தார்கள்.  யெசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் அழித்துப் போட்டாலும் பாகாலின் பாதங்களை முத்தமிடாத 7000 பேரை மீதம் வைத்திருந்தார்.  ஹிட்லர் போன்ற கொடூரர்களால் யூதர்கள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டாலும் 1948-இல் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை உருவாக்குவதற்கென்று ஒரு கூட்ட யூதர்களை தேவன் மீதம் வைத்திருந்தார்.
 அதுபோலவே இன்று உலகம் முழுவதிலும் கிறிஸ்தவம் வியாபார மயமாக்கப்பட்டாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவபக்தியின் வேஷம் தரித்து அதின் பலனை மறுதலிப்பவர்களாக இருந்தாலும். சபைகள் எங்கிலும் வஞ்சகம் தலைவிரித்து ஆடினாலும். எல்லாம் சாத்தானின் கைக்குள் அடங்கிவிட்டதுபோல தோன்றினாலும்…பரவாயில்லை. தாம் எச்சரித்தபடியே இயேசு அவர்களை வாந்திபண்ணிப் போடத்தான் போகிறார் (வெளி 3:16)
 ஆனாலும், தேவன் ஒரு சிறு கூட்ட ஜனத்தை சபைப் பாகுபாடின்றி ஆயத்தப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இவர்கள் தேவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பவர்கள். தன்னை நேசிப்பது போல தன் சகோதரனை நேசிப்பவர்கள். கிறிஸ்துவுக்காக தன்னை விற்றுப் போட்டவர்கள். பாபிலோனின் பணக்கறை படியாதவர்கள். கும்பலோடு போகாமல் கும்பலுக்கு எதிர்பட்டுப் போகிறவர்கள். மதரீதியான கிறிஸ்தவமே இவர்களது முதல் எதிரி. வேத வசனத்தைத் தவிர வேறு எதனுடனும் யாருடனும் ஒத்துப் போகமாட்டார்கள்.  உலகத்தோடும் மாம்சத்தோடும் பிசாசோடும் வெறிகொண்டு மோதுபவர்கள். இவர்களைக் கொண்டுதான் இந்தக் கடைசி காலத்தில் ஒரு மாற்றத்தை தேவன் ஏற்படுத்தப் போகிறார்,
 இதோ ஒரு ட்ரில்லியன் டாலர் கேள்வி….
 அந்தக் கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்கிறோமா??????

Tuesday 7 May 2013

அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்! - சகரியா பூணன்

அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்! - சகரியா பூணன்
நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும், வேற்றுமை நிழலும் இல்லை" என யாக்கோபு 1:17 -ல் கூறுவதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.

தேவன் ஒருபோதும் தவறு செய்வதேயில்லை! அவர் ஒன்றை கொடுத்தால் அது "பூரணவரமாய்த்தான்" (Perfect Gift)) எப்போதும் இருக்கும். இந்த அவருடைய குணாதிசயங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும், அதில் அவர் மாறுவதில்லை என யாக்கோபு கூறினார். ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் தேவன் சபைக்கு "அந்நியபாஷை பேசும் வரத்தை" (Tongues) அளித்தபோது, தான் சபைக்கு செய்திருக்கும் செயலை நன்கு அறிந்திருந்திருந்தார்."இப்படி இந்த வரத்தைத் தந்துவிட்டோமே! "என சிந்தித்து அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை! ஆம், அவர் என்றென்றும் மாறாதவராகவே இருக்கிறார். ஆகவே, அந்நியபாஷைவரம் திட்டமும் தெளிவுமான "பூரணமான வரமேயாகும்!".

இந்தவரத்தின் பின்னணியில், அதுவும் குறிப்பாக நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான குளறுபடிகள் இவ்வரத்தினிமித்தம் உண்டாகும் என்பது தேவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், சபை தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த வரம் மிக தேவையானது என்பதையும் தேவன் அறிந்திருந்தார்.

பிரதான சத்தியங்களாகிய திரித்துவம், கிறிஸ்துவின் தெய்வத்தன்மை, கிறிஸ்துவின் மனிததன்மை, பரிசுத்தாவியின் ஆள்தன்மை... போன்ற சத்தியங்கள் கிறிஸ்துவ சரித்திரத்தில் பலவிதத்தில் எதிர்க்கப்பட்டு குளறுபடிகளைச் சந்தித்திருக்கிறது. ஆகவே, தேவன் தந்த வரமாகிய "நவ நாவுகளும்" (Tongues)குளறுபடியாகிருப்பது, எந்த ஆச்சரியத்தையும் நமக்குத் தந்துவிட நாம் அனுமதிக்கவே கூடாது.

இது போன்ற எல்லா உபதேச சத்தியங்களிலும், அவைகளை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதே மிக முக்கியமானதாகும். ஆகவே," அந்நியபாஷை பேசுவதைக்குறித்து" இதுவரை நீங்கள் கொண்டிருந்த மனப்பான்மையை சற்று தள்ளி வைத்துவிட்டு, இதைக்குறித்து வேதாகமம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தையும் மிகுந்த கவனமாய் இப்போது பார்க்கக்கடவோம்.

சத்தியம் எண்:-1

மாற்கு 16:17 - ஆம் வசனத்தில் இயேசு கூறும்போது, "விசுவசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என கூறினார்.

இவ் வசனத்தில் இயேசு குறிப்பிட்டது என்னவென்றால், "சில அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால்- (Those who have belived ) நடைபெறும்" என்பதுதான். இவ்வாறு நடைபெறும் பிசாசுகளைத் துரத்துதல், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குதல் போன்ற அடையாளங்களில் நவமானபாஷைகளை (New Tongues) பேசுவதும் ஒன்றாகும். இங்கு இயேசு குறிப்பிடும்போது, இந்த எல்லா அடையாளங்களும் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் - (Every Believer) நடைபெறும் எனக் கூறவேயில்லை. அதற்கு மாறாக, இந்த அடையாளங்கள் "விசுவாசிக்கிறவர்களால்" நடைபெறும் என்றே கூறினார்.

ஆகவே,இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா வரங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அதேப்போல், ஒவ்வொரு சபையும் இந்த எல்லா வரங்களையும் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமில்லை. ஆனால், இந்த வரங்கள் யாவும் "உலகம் தழுவிய" முழு சபையிலும் காணப்படும் என்பது உறுதி! எந்த வரத்தை யாருக்கு தரவேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார்.

சத்தியம் எண்:- 2

அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்... எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து.. நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள்" என அப்போஸ்தலர்கள் நடபடிகள் 2:4,7,11 -ஆம் வசனங்களில் காண்கிறோம்.

முதல் தடவையாய் விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவர்கள் "எல்லோரும்" (All) நவமான பாஷைகளைப் பேசினார்கள். இங்கு குறிப்பிடப்பட்ட நவமான பாஷைகள்- (New Tongues) அதைக்கேட்ட மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வெவ்வேறு மொழிகளாகவே (Languages) இருந்தது. ஆகவே, இந்த இடத்தில் "வியாக்கியானம் செய்யும் வரம்" அவசியமாய் இருக்கவில்லை.

நான்காம் வசனத்தில் "அவர்களெல்லோரும்... வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்" என குறிப்பிடப் பட்டிருப்பதைப் பாருங்கள். அதாவது "அவர்கள்தான்" அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்... பரிசுத்த ஆவியானவர் அல்ல! ஆம், பரிசுத்த ஆவி அவர்களுடைய நாக்குகளைப் பிடித்து அசைக்கவில்லை! அதற்கு மாறாக, ஆவியானவர் வரத்தைத் தந்தருள... "அவர்கள்" வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.

எந்த வரத்திலும், "தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை" பரிசுத்த ஆவியானவர் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வதேயில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆவியின் கனியானது "சுய அடக்கமே (Self Control) (கலாத்தியர் 5:23) ஆகும். தமிழில் இச்சையடக்கம் எனக் கூறப்பட்டிருப்பது ஆங்கிலத்தில் "சுய அடக்கம்" என்றே கூறப்பட்டுள்ளது. பிசாசின் ஆவி பிடித்த ஜனங்கள் மாத்திரமே தங்கள் சுய-அடக்கத்தை இழக்கிறார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்களோ, யாரைக்காட்டிலும் தங்களை அடக்கியாளுவதற்கு அதிக திறன் பெற்றிருப்பார்கள். " தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது" என்றே வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 14:32).

சத்தியம் எண்:- 3

"அவர்கள் பல பாஷைகளைப் (Tongues) பேசி தேவனைப் புகழ்ந்தார்கள்" என அப்போஸ்தலர்கள் 10:46 -ல் வாசிக்கிறோம்.

கொர்நெலியு வீட்டில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஶேகத்தைப் பெற்றார்கள். இவர்கள் மனந்திரும்பிய அதே சமயத்தில் பரிசுத்த ஆவியின் அபிஶேகத்தையும் பெற்று விட்டார்கள். இவர்கள் தாங்கள் பெற்ற அந்நிய பாஷையினால் (Tongues) தேவனைத் துதித்து புகழ்ந்தார்கள் என்று காண்கிறோம். அதாவது, அன்று பெந்தேகொஸ்தே நாளில் அபிஶேகம் பெற்ற நிகழ்ச்சியைப் போல் "ஜனங்களிடத்தில் அந்நியபாஷையினால் பேசவில்லை" என்பதைக் கவனியுங்கள்!

சத்தியம் எண் :- 4

"பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்போழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்" என வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 19:6 ).4

பவுல் எபேசு விசுவாசிகளின் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கினார். இங்கு குறிப்பிடப்பட்ட அந்நியபாஷை "தீர்க்கதரிசனம் சொல்லுவதாய்" இருப்பதை நாம் காண்கிறோம

(மேற்கண்ட அப்போஸ்தலர் நடபடிகளின் சம்பவங்களில் கீழ்காணும் உண்மைகளை நாம் கவனிப்பது நல்லது).

(1) அப்போஸ்தலர் 2 -ஆம் அதிகாரத்தில், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் 10 -ஆம் அதிகாரத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுவிட்டார்கள்!
(2) அப்போஸ்தலர் 2 -ஆம், 10 -ஆம் அதிகாரங்களில் யாரும் கைகளை வைக்காமலே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு,இப்படிதான் பெற வேண்டுமென்ற ஓர் நிலையான வரையறை எதுவும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்போ அல்லது பின்போ; கைகளை வைத்தோ அல்லது வைக்காமலோ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(3) அப்போஸ்தலர் 8:16-18 வசனங்களில் சமாரியா சீஶர்கள் பரிசுத்தஆவியைக் பெற்றுக்கொண்டபோது,அந்நிய பாஷையைப் பேசியதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவ்வாறு பரிசுத்தஆவி தந்தருளப்படுவதை மாயவித்தைக்காரனான சீமோன் கண்டான் என வாசிக்கிறோம். அப்படி அவன் ‘எதைக் கண்டான்’ என்பதை வேதம் குறிப்பிடவில்லை. ஆனால், தான் கண்ட ஒன்று, தானும் அந்த வரத்தைப் பேதுருவைப்போல பெறவேண்டுமென்ற ஆவலை அவனுக்குள் தூண்டியது என நாம் காண்கிறோம், அவ்வளவுதான்!

சத்தியம் எண்:- 5

"ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது" என 1 கொரிந்தியர் 12: 7,8,10 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.

இவ் வசனங்களில், "’அவனவனுடைய பிரயோஜனம்" என்பது ஆங்கிலத்தில் COMMON GOOD "பொது நன்மை" என்றே கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அந்நியபாஷைவரம் "சபையின் நன்மைக்காகத்" தரப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருளாகும். கொரிந்தியர்களுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். இன்றும் ஆவியானவரால் தரப்படும் அந்நியபாஷை வரம் "சபையின் பொது நன்மைக்காகவே" தரப்படுகிறது.

சத்தியம் எண் :-6
"இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" என 1 கொரிந்தியர் 12:11- ல் வாசிக்கிறோம். அந்நியபாஷை வரம் உட்பட்ட ஒவ்வொரு வரத்தையும் யார் யாருக்குத் தர வேண்டுமென்பதை ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே, யார் யாருக்கு எந்தெந்த வரத்தைக் கொடுக்க வேண்டுமென்பதை நாம் ஆவியானவருக்கு ஒருபோதும் கட்டளையிட முடியவே முடியாது.

சத்தியம் எண் :- 7

"தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என 1 கொரிந்தியர் 12:28 -ல் வாசிக்கிறோம். ஆகவே, குறிப்பிட்ட தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சபையில் அந்நியபாஷை பேசும் வரத்தை தேவனே ஏற்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, நாம் தேவனுக்கு எதிர்த்து நிற்காதபடி, இந்த வரத்தையும் நாம் ஒருபோதும் எதிர்த்து நிற்கவே கூடாது. நம்மை விட தேவனுக்கு அதிக ஞானம் உண்டு என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!!

சத்தியம் எண் :-8

"எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷை பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? என 1 கொரிந்தியர் 12:30 - ல் வாசிக்கிறோம். இந்த வசனம் கூறுகிறபடி, எல்லா விசுவாசிகளுக்கும் குணமாக்கும் வரங்கள் தரப்படாதது போலவே, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசுவதுமில்லை!.

ஆகவே, பரிசுத்த ஜீவியத்திற்கோ அல்லது அவருடைய ஊழியத்திற்கோ "அந்நியபாஷையை" ஓர் அத்தியாவசியமான வரமாக தேவன் கருதவில்லை என்பதை இந்த வசனம் வெளிப்படையாக நமக்கு கூறுகிறது. அதற்கு மாறாக, இதை முக்கியமான வரமாக தேவன் கருதியிருந்தால் இந்த வரத்தை தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுத்திருப்பார்!.

சத்தியம் எண்:- 9

"நான் மனுஶர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைதாளம் போலவும் இருப்பேன்" என 1 கொரிந்தியர் 13:1 -ல் வாசிக்கிறோம்.

அன்பில்லாமல் அந்நியபாஷை பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! அந்நியபாஷை பேசுபவர்களிடத்தில் காணப்படும் பெருமையும், அந்நியபாஷை பேசாதவர்களை இவர்கள் தாழ்வாக காணும் மனப்பான்மையும்.. இவர்களின் அன்பின் தாழ்ச்சியையே காட்டுகிறது. பேரோசை கொண்ட வெண்கல சப்ததிற்கு நாம் காதைப் பொத்திக் கொள்வதைப் போலவே, தேவனும் இவ்வித அன்பற்ற விசுவாசிகள் பேசும் அந்நியபாஷை சப்ததிற்கு தன் காதைப் பொத்திக் கொள்கிறார்!!

சத்தியம் எண்;- 10

"தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம்" என 1 கொரிந்தியர் 13:8-10 வசனங்களில் வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் வருகையில் நிறைவானது வரும்போது, அந்நியபாஷை பேசவேண்டிய அவசியமேயிருக்காது. பரலோகத்தில் வேத அறிவும், தீர்க்கதரிசனமும் எவ்வாறு தேவையில்லையோ அதைப் போலவே "அந்நிய பாஷையும்" தேவையாய் இருக்காது! ஆகவே, இந்த பூமியில் நிலவும் குறைவான நிலைமைக்காக, அந்நியபாஷை தற்காலிகமாகத் தரப்பட்ட ஓர் வரமேயாகும். இந்த அந்நியபாஷை வரம் ஏன் இயேசுவிற்கு ஒருபோதும் தேவையாயிருக்கவில்லை என்பதற்கு இந்த வசனமே தெளிவான பதில் அளிக்கிறது. அவருடைய மனம் நிறைவான பரிசுத்தம் கொண்டதாயும், அவருடைய ஜீவியம் பிதாவோடு நிறைவான ஐக்கியம் கொண்டதாயும் எல்லா நேரங்களிலும் இருந்தபடியால்... குறைவான சூழலுக்குத் தேவையான அந்நியபாஷை இயேசுவிற்குத் தேவையற்றதாயிருந்தது!

சத்தியம் எண்:- 11

"அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியால், அவன் மனுஶரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:2 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.

இங்கு குறிப்பிடபட்ட அந்நியபாஷை வரம், பெந்தெகோஸ்தே நாளில் வெளிப்பட்ட வரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது என்பதை வெளிப்படையாகவே காண்கிறோம். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் அந்நியபாஷையில் ஜனங்களிடத்தில் பேசினார்கள், அதை அவர்கள் விளங்கி கொண்டார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்ட அந்நியபாஷைவரமோ, மனுஶரிடத்தில் பேசுவதாயிராமல் தேவனிடத்தில் பேசுவதாயிருக்கிறது. இவ்வாறு தேவனிடத்தில் அவன் பேசுகிறபடியால், அவன் என்ன பேசுகிறான் என்பதை ஒருவனும் அறிந்து கொள்ள முடியாது!

சத்தியம் என்:- 12

"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:4 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒரு விசுவாசி ஆவிகுரியதன்மையில் ஸ்திரப்படுவதற்கு அந்நியபாஷை வரம் அவனுக்கு உதவுகிறது.

சத்தியம் எண்:-13

"நீங்களெல்லாரும் அந்நியபாஷைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்.... சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? என பவுல் 1 கொரிந்தியர் 14:5,6 வசனங்களில் வினவினார். எல்லாரும் அந்நியபாஷை பேசும்படியே பவுல் விரும்பினார்! அதாவது, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையே இந்த வசனம் மீண்டும் நமக்கு உறுதிப்படுத்தபடுகிறது!

இதே போன்ற விருப்பத்தை 1 கொரிந்தியர் 7:7 -ல் பவுல் குறிப்பிடும்போது "எல்லா மனுஶரும் என்னைப்போலவேயிருக்க (திருமணமாகாதிருக்க) விரும்புகிறேன்" எனக் கூறினார். இவ்வாறு திருமணமாகாமல் தனித்திருப்பதிலுள்ள சில நன்மைகளைப் பவுல் கண்டிருந்தார். அதேப்போல், அந்நியபாஷை பேசுவதாலுண்டாகும் நன்மைகளையும் பவுல் கண்டிருந்தார். ஆனால், தேவன் தன்னுடைய சர்வ ஞானத்தின்படி சில விசுவாசிகளுக்கு மட்டுமே "திருமணமாகாமல் தனித்திருக்கும்வரத்தைத்" தந்ததுபோல்.... "அந்நியபாஷை பேசும் வரத்தையும்" இவ்விதமே சில விசுவாசிகளுக்கே தேவன் தந்திருக்கிறார் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

எல்லா விசுவாசிகளும் "பிரம்மச்சாரியாய்" இருக்கும்படி எதிர்பார்ப்பது எவ்வளவு மதியீனமோ, அதேபோல, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசும்படி எதிர்ப்பார்ப்பதும் மதியீனமேயாகும்!

சபைகூட்டங்களில் தீர்க்கதரிசனம் சொல்லுவதே அதிக பயனுள்ளதாயிருக்கும். தீர்க்கதரிசனம் சொல்லுவதென்பது, ஒருவன் தேவனுடைய வார்த்தையின் மூலமாய் பிறருக்கு "பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகப் பேசுவதேயாகும்" (1 கொரிந்தியர் 14:3). இருப்பினும் சபையில் பேசப்படும் அந்நியபாஷை, வியாக்கியானம் செய்யப்பட்டால், அதுவும் தீர்க்கதரிசனத்தைப் போலவே சபைக்கு பக்திவிருத்தியுண்டாக்கும் என பவுல் கூறினார்.

சத்தியம் எண்:- 14

"நீங்கள் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் (நீங்கள் பேசிய அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்லப்படாவிட்டால்) பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்" என 1 கொரிந்தியர் 16:9,13 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம். எனவே, சபைக் கூட்டங்களில் பயன்படுத்தும் "அந்நியபாஷைகள்" கண்டிப்பாய் வியாக்கியானம் செய்யப்படவேண்டும்!

சத்தியம் எண்:- 15

"நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். இப்படியிருக்க, செய்ய வேண்டுவதென்ன, நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன், நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்" என 1 கொரிந்தியர் 14: 14,15 -ஆம் வசனங்களில் வசிக்கிறோம்.

ஒருவன் அந்நியபாஷையில் ஜெபிக்கும்போது, அவன் என்ன ஜெபிக்கிறான் என்பதை மற்றவன் அறிந்துகொள்ள முடியாது. அவ்வாறிருப்பினும், ஒருவன் தன் சொந்த பாஷையில் எந்தளவிற்கு கருத்தோடு ஜெபிக்கிறானோ அல்லது பாடுகிறானோ... அந்தளவிற்கு ஆவியோடு (அந்நியபாஷையில்) ஜெபிக்கவும், பாடவும் வேண்டுமென பவுல் உணர்ந்தார்!

சத்தியம் எண்:- 16

"உங்களெல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளைப் பேசுகிறேன். இதற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்" என 1 கொரிந்தியர் 14:18 -ல் வாசிக்கிறோம். தான் பெற்ற இந்த வரத்திற்காக பவுல் தேவனுக்கு நன்றியுள்ளவராயிருந்தார். ஆகவே, இந்த வரம் எவ்வளவாய் பவுலுக்கு உதவியிருக்கிறது என்பதைத் தெளிவாய் நாம் காண்கிறோம்.

சத்தியம் எண்:- 17

அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே அதிக விருப்பமாயிருக்கும்" என 1 கொரிந்தியர் 14;19 -ல் வாசிக்கிறோம். சபைக் கூட்டத்தில், நமக்குத் தெரிந்த பாஷையில் பேசுவதே எப்போதும் நல்லது!

சத்தியம் எண்:- 18

"அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது" என 1 கொரிந்தியர் 14:22 -ல் வாசிக்கிறோம். அன்று பெந்தெகோஸ்தே நாளைப்போலவே- இன்றும், அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கே ஓர் அடையாளமாக இருக்கிறது.

சத்தியம் எண்;- 19

"ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என 1 கொரிந்தியர் 14:23 -ல் வாசிக்கிறோம். ஆகவே, சபைக்கூட்டத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து அந்நியபாஷை பேசுவது பைத்தியகாரத்தனமேயாகும்! ஏனெனில், இவர்கள் என்ன பேசுகிறார்களென ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது!! (சபையில் ஜனங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து தனிதனியாய் அந்நியபாஷை பேசுவதையே இந்த வசனம் தவறு என சுட்டிக் காட்டுகிறது. ஆனால், அதற்கு மாறாக, எல்லோரும் அந்நியபாஷையில் ஜெபித்துக் கொண்டிருப்பதை இந்த வசனம் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஏனெனில், அறிந்த பாஷையில் ஒருவர் ஜெபிப்பதைக்கூட நாம் கவனிப்பதில்லையே!)

சத்தியம் எண்:- 20

"நீங்கள் கூடிவந்திருக்கும் போது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷை பேசுகிறான், ஒருவன் இரகசியங்களை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாக செய்யப்படக்கடவது.யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்று பேர்மட்டில் அடங்கவும். அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும்,ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்" என 1 கொரிந்தியர் 14:26,27 -ல் வாசிக்கிறோம்.

இவ்வசனம் கூறுகிறபடி, நாம் சபை கூடிவரும் போது இரண்டு அல்லது முன்று பேருக்கு மேல் அந்நியபாஷை பேசக்கூடாது. மேலும், அவ்வாறு இரண்டு பேர் அல்லது மூன்று பேர் பேசினால், "ஒவ்வொரு அந்நியபாஷையும் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்!" வியாக்கியானம் செய்வதென்பது "மொழிபெயர்ப்பிற்கு" ஒப்பானது அல்ல. மொழிப்பெயர்ப்பு "வார்த்தைக்கு வார்த்தை " அப்படியே எடுத்து சொல்வதாகும். ஆனால் வியாக்கியானமோ, "ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் அடங்கியிருக்கும் சிந்தைகளை" வெளிப்படுத்துவதேயாகும்.

சத்தியம் எண்:-21

"இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைப் பண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும், செய்யப்படக்கடவது" என 1 கொரிந்தியர் 14:39,40 -ல் வாசிக்கிறோம்.

இந்த வாக்கியங்களை "முடிவுரையாக" பவுல் எழுதியிருப்பதை நாம் காண முடிகிறது. இவ்வசனம் நமக்கு எச்சரிக்கிறபடி அந்நியபாஷை பேசும் வரத்தை அப்பியாசப்படுத்துகிறவர்களை நாம் ஒரு போதும் தடை செய்யக்கூடாது. ஆனால், நீங்கள் வரத்தை விரும்பினால், அந்நியபாஷை வரத்தைவிட தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையே நாடுங்கள் என வேதம் நமக்கு ஆலோசனையாகக் கூறுகிறது. அந்நியபாஷை பேசுவதில் உண்மையும்.... போலியும்!

அந்நியபாஷை வரத்தின் பிண்ணனியில், நம் கண்களுக்குப் புலப்படாத "ஓரளவு" இரகசியம் இருக்கத்தான் செய்கிறது. இன்று இந்தவரத்தைப் பெற்றிருப்பவர்கள் நேர்மையுள்ளவர்களாயிருந்தால், இந்த உண்மையை அவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். வேதம் கூறுகிறபடி நாம் எல்லாவற்றையும் அறிந்திட முடியாது! நாம் யாவரும் குறைவாய்த்தான் அறிந்திருக்கிறோம் (1 கொரிந்தியர் 13:12 ). கடந்த 25 - ஆண்டுகளாய் அந்நியபாஷை பேசும் நான், இந்த வரத்தைக்குறித்து என் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டதைக் கூறவிரும்புகிறேன்:

ஒருநபர் அந்நியபாஷை பேசும்போது, அவருடைய ஆவி (இருதயம்) ஏதோ பாஷைகளை நேரடியாக இருதயத்திலிருந்து தன் வாய்மூலம் பேசுவதையே அறிகிறோம். அதாவது, இவ்வாறு பேசுவதுஅவருடைய மனதைத்தள்ளி வைத்து விட்டுப் பேசுவதாகவேயிருக்கிறது. இதனிமித்தமாய் அவன் தன் இருதயத்திலிருக்கிற யாவற்றையும் தேவனிடத்தில் ஊற்றி கொட்டிவிடுகிறான்! அது அவனுடைய மகிழ்ச்சியின் பெருக்கமாகவோ அல்லது துக்கத்தினாலோ அல்லது மனச் சோர்வினாலோ ஏற்பட்ட பாரமாகவோ இருக்கலாம்!! இதன் மூலமாய், அவனுடைய இருதயத்திலிருந்த பாரமான அழுத்தம் அவனை விட்டுப் போய்விடுகிறது. இவ்வாறகவே அவன் பக்திவிருத்தியடைகிறான். நாம் ஏற்கனவே அப்போஸ்தலர் 2:4 -ல் கண்டதுப்போல் ஒருவன் அந்நியபாஷை பேசும் போது, அந்த நபர்தான் பேசுகிறாரேயல்லாமல் பரிசுத்தாவியானவர் பேசுவதில்லை! ஒருவன் எப்படி தனக்குத் தெரிந்த பாஷையைப் பேசுவதற்கு வார்த்தைகளை அமைக்கிறானோ, அதைப்போலவே அந்நியபாஷை பேசும் விசுவாசியும் வார்த்தைகளைக் கூட்டிச் சேர்த்துப் பேசுகிறான்.

இங்குள்ள ஒரே வித்தியாசம் யாதெனில், அந்நியபாஷை பேசுபவர் தனக்குத் தெரிந்த பாஷையை பேசாததினால்,ஆண்டவர் மீது தன் முழுகவனத்தையும் வைத்து, தன் மனதை (ஆஐசூனு) உதறிவிட்டு தன் இருதயத்திலிருந்து நேரடியாக வார்த்தைகளைத் தன் வாயின் மூலமாக பேசுகிறார்.

அவ்வாறு அவன் பேசுவதின் அர்த்தம் அவனுக்குப் புரியாவிட்டாலும், தன்னுடைய இருதயத்திலுள்ள ஏக்கங்களையும் பாரங்களையும் தேவன் இச்சமயத்தில் அறிந்துகொண்டார் என்பதை நன்றாக உணர்ந்திருப்பான்.

நெஞ்சத்தில் பாரம் உண்டாகும் சமயமெல்லாம், அந்தச் சுமையை நாம் மேற்கண்டதுபோல் தேவனிடத்தில் இறக்கி வைப்பது ஒரு விசுவாசிக்கு மிகுந்த பெலனுள்ள நேரமாகும்! குறிப்பாக, ஒரு விசுவாசியின் மனம் (MIND) தன்னுடைய சொந்த பாஷையில் ஜெபிப்பதற்கு களைப்படைந்திருக்கும் சமயமே, அந்நியபாஷையின் ஜெபம் அவனுக்கு மிகுந்த ஆறுதலாயிருக்கிறது. இது எவ்வாறு கிரியை செய்கிறது என்பதை நம்மால் விளக்கமுடியாவிட்டாலும், அந்தக் கிரியையை நாம் உணர முடியும்.!

இப்போது வியாக்கியான வரத்தைக் குறித்துப் பார்ப்போம். நாம் ஏற்கனவே கண்டது போல் அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தல், தீர்க்கத்தரிசனம் சொல்லுவதற்கு சமமாகும். ஆகவே ஏற்கனவே தீர்க்க தரிசன வரம் பெற்ற ஒருவனுக்கு, ஆவியானவர் இந்த வரத்தையும் சேர்த்துத் தருவதைப் பொதுவாக காண்கிறோம். ஒரு சபைக் கூட்டத்தில், யாரேனும் ஒருவர் அந்நியபாஷை பேசும்போது, தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒருவர் (அது அநேகமாக மூப்பர்களில் ஒருவராக இருக்கக் கூடும்), அவர் தேவனுடைய வெளிச்சத்தில் உண்மையாக நடந்து வருபவராயிருந்தால், அந்த அந்நியபாஷை தேவனிடமிருந்து புறப்பட்ட மெய்யான தொன்றாயிருக்கும் பட்சத்தில், அதைக்குறித்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் தன் மனதில் பளிச்சிடுவதை அந்த மூப்பர் காண்பார்! உடனே அவர், அவ்வேளையில் தான் பெற்ற எண்ணங்களை தன் சொந்த பாஷையினால் பேசி வெளிப்படுத்துவார்! ஏனெனில் இது ஓர் மொழி பெயர்ப்பாயில்லாமல் வியாக்கியானமாகவேயிருக்கிறது!

இவ்வேளையில், வியாக்கியான வரத்தைப் பெற்ற இன்னொரு மூப்பர் இதே அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தால், அதுவும் முதல் வியாக்கியானத்திற்கு ஒப்பானதாகவே இருக்கும்! சபையிலுள்ள இரண்டு மூப்பர்கள் தேவனோடு கொண்ட தொடர்பில் அனல் கொண்டவர்களாயிருந்தால் இவ்வாறு சம்பவிப்பதை நாம் காணலாம்!!

உண்டாகும் எந்த வெளிச்சமும் வேதத்தில் எழுதப்பட்ட சத்தியங்களுக்கு ஒருபோதும் முரணாயிருக்காது. எல்லா உண்மையான தீர்க்கதரிசனங்களும் வேத வாக்கியங்களுக்கு ஒத்திருப்பதைப் போலவே, உண்மையான எல்லா வியாக்கியானமும் வேதவசனத்திற்கு ஒத்ததாகவேயிருக்கும்!

ஆவிக்குரிய வரங்களைக் குறித்து மாறுபாடான கருத்துகளைக் கொண்ட சிலர் கீழ் கண்ட கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்: "ஒரு கூட்டத்தில் நடந்த அந்நியபாஷை வியாக்கியானத்தை ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்து, இதே வரத்தைப் பெற்ற வேறொரு இடத்திலுள்ள நபரைக்கொண்டு வியாக்கியானம் செய்யச் சொன்னால், அந்த வியாக்கியானம் முதலில் வியாக்கியானம் செய்ததற்கு ஒப்பாகவே இருக்குமா?" இந்தக் கேள்விக்கு விடையாதெனில் "வியாக்கியானம் செய்த இரண்டு நபர்களும் ஒரே விதமாக கர்த்தரின் சிந்தையைக் கொண்டிருந்தால், அவர்களின் வியாக்கியானம் ஒரே செய்தியாகத்தான் இருக்கும்"என்பதேயாகும். ஆனால் இவர்களின் வியாக்கியானம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருந்தால், கர்த்தரின் சிந்தையைப் பூரணமாக அறிந்து கொள்வதற்கு, வியாக்கியானம் செய்த ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ தங்கள் ஆண்டவரோடு பூரணமான தொடர்பு கொண்டவர்களாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது ஒன்றும் நுதனமான பெரிய காரியம் அல்ல! ஏனெனில், ஆண்டவரின் சிந்தையை பூரணமாக அறிந்துகொள்ளும் அளவிற்கு இந்த உலகிலுள்ள எந்த விசுவாசியும் அவரோடு அனல்கொண்ட பூரண தொடர்புடையவர்களாக இல்லை என்பதே யாகும்!!

இந்த உண்மையை, கீழ்காணும் உதாரணம் உங்கள் சந்தேகத்தை முற்றிலும் அகற்றி நிரூபித்துக்காட்டும் என நம்புகிறேன்: ஒரு கூட்டத்தில் நீங்கள் செய்தி தர வேண்டியதிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்! அவ்வேளையில் ஒரு குறிப்பிட்ட செய்தி உங்கள் இருதயத்தை நிரப்ப...... நீங்களும், அக்கூட்டத்திற்கு அந்தச் செய்தியே கர்த்தருடைய பாரம் என ஊர்ஜிதம் செய்கிறீர்கள்! ஆனால் திடீரென்று ஏற்பட்ட சூழ்நிலையினால், உங்களால் அந்தக் கூட்டத்திற்குச் செல்லமுடியாமல் வேறொருவர் அங்கு செய்தி கொடுத்துவிட்டார்!. இங்கு துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், அந்த சகோதரன் வேறொரு வேத வாக்கியத்தை வைத்தே அங்கு பேசியிருந்தாலும், உங்கள் இருதயத்திலிருந்த "அதே செய்தியைத்தான்" பிரசங்கித்திருக்க வேண்டும்! அவ்விதமாய் அந்த சகோதரன் பேசியிருக்கவில்லை என்றால், "உங்களில் ஒருவர்" கர்த்தருடைய மனதைப் பூரணமாய் அறிந்து கொள்ளும் இடத்தில் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே, விசுவாசிகள் தங்கள் சொந்த பாஷையில் செய்தி கொடுக்கும் இந்தப் பரீட்சையில்கூட தோல்வியடைவதை நாம் காண்கிறோமே! ஆகவேதான், ஒரு தீர்க்கதரிசியின் செய்தியைக்கூட நிதானித்து சோதிக்கும்படி வேதம் நமக்குப் போதிக்கிறது (1 கொரிந்தியர் 14:29 ). இதைப் போலவே, அந்நியபாஷையின் எல்லா செய்திகளையும் அதின் வியாக்கியானங்களையும் நாம் நிதானித்து சோதித்து பார்க்க வேண்டும். இங்கு நாம் எதை நிதானித்து சோதிக்க வேண்டும்? கூட்டத்தில் பேசப்பட்ட தீர்க்கதரிசனமோ, அந்நியபாஷைகளோ அல்லது வியாக்கியானங்களோ "வேதத்தின்படியும்" "கர்த்தரிடத்திலிருந்தும்" உண்டானதுதானா? இல்லையா? என்பதை என்னுடைய ஆவி, பரிசுத்தாவியோடு இணைந்து சாட்சி கொடுக்க வேண்டும்!

1 யோவான் 4:1- ஆம் வசனத்தில், "எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள்" என்ற எச்சரிக்கையை நாம் காண்கிறோம். ஆகவே, அந்நியபாஷைகளையோ அல்லது வியாக்கியானங்களையோ கூட்டங்களில் நாம் எப்போதெல்லாம் கேட்கிறோமோ, அப்போதெல்லாம் அவைகளை நம்முடைய ஆவியின் சாட்சியோடு சோதித்துப் பார்க்க வேண்டும்! அனேக சமயங்களில், நாம் கேட்கும் "எழுச்சிமிகு இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்நியபாஷைகள்" அநேகமாய் தேவனிடமிருந்து வராததாயிருக்ககூடும். ஏதோ சில காரணத்தினிமித்தம், ஒரு தீர்க்கதரிசனத்தை அல்லது அந்நியபாஷையை அல்லது வியாக்கியானத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையுமேகூட ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய ஆவியில் ஒரு விதமான தயக்கம் ஏற்பட்டால், அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் உதறித் தள்ளுவதற்கு நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!

இவ்வாறு இல்லாமல், "இயற்கைக்கு அப்பாற்பட்ட எழுச்சியான யாவற்றையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டதின்" விளைவுதான், நாம் வாழும் இந்த நூற்றாண்டு கிறிஸ்தவ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏராளமான குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கிறது! அதுமாத்திரமல்லாமல், ஆண்டவருடைய நாமம் சொல்லி முடியா அளவிற்கு கனவீனமடைந்துமுள்ளது!

அப்போஸ்தலர் நடபடிகளின் காலத்தில் அந்நியபாஷை பேசிய எல்லாத்தருணங்களிலும் நாம் கண்ட, கீழ்க்காணும் உண்மைகளை எப்போதும் மனதில் வைத்திருப்பது நல்லது:

1. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம்,வலுக்கட்டாயமாயில்லாமல் "தானாகவே" (SPONTANEOUS) பேசினார்கள்.
2. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம், ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் (ALL) பேசினார்கள்.
3. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம், எவ்வாறு அந்நியபாஷை பேச வேண்டுமென்ற பயிற்சியோ அல்லது வற்புறுத்தலோ அல்லது வேறு எந்தக் குறிப்புகளோ அவர்களுக்குத் தரப்படவில்லை!

ஆனால் இன்று,அநேக இடங்களில் மேற்கண்ட குணாதிசயங்களில் ஒன்றுகூட காணப்படுவதில்லை. எங்கெல்லாம் அந்நியபாஷைவரம் எந்தப் பயிற்சியுமில்லாமல் தானாகவே பேசப்படுகிறதோ, அதுவே "உண்மையானதாயிருக்கக்கூடும்" என நாம் முடிவு செய்யலாம்.

இன்றைய நாள்வரை நான் கேட்ட"அந்நியபாஷையில் "மிகவும் அற்பமான சதவீதமே "உண்மையானது"என என்னுடைய ஆவி சாட்சி கொடுத்திருக்கிறது! மற்ற அனைத்தும், இந்த வரத்தை அப்படியே"காப்பியடிக்க" முயற்சித்ததாகவே நான் உணருகிறேன். தங்கள் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கோ அல்லது அவர்களை கவர்ச்சிப்பதற்கோ இந்த வரத்தை காப்பியடிக்கவே ஜனங்கள் உந்தப்படுகிறார்கள்!! இன்னும் கணிசமான சதவீதத்தினரின் அந்நியபாஷை "சாத்தானின் ஆவியிலிருந்து" உருவானதாயிருக்கக் கூடுமென்று கூட நான் கருதியிருக்கிறேன்! இவ்வித என்னுடைய கண்ணோட்டம், பல தேசங்களில் நான் கண்ட அநேக ஜனங்களின் வாழ்க்கையிலுள்ள கனியையும் அவர்களின் முடிவையும் ஆதாரமாய்க் கொண்டவைகளேயாகும்!

இன்றைய அநேக சபைகளில், அந்நியபாஷை பேசி... அந்நியபாஷையில் பாடும்நிகழ்ச்சிகள் "காட்சி அரங்கேற்றமாகவே" இருப்பதை நாம் காண்கிறோம். இவ்வித காட்சி அரங்கேற்றத்தில் பரவசமடைவது" சிறுகுழந்தைகளின்" குணாதிசயமேயாகும்!

நாம் வாழும் இக்காலத்தில், விசுவாசிகளிடம் அதிகபட்சமான பொருளாதார லாபத்தைச் சுரண்டுபவர்கள் "அந்நியபாஷை பேசுகிறோம்" என தங்களை மேன்மை பாராட்டும் பிரசங்கிகளும், பாஸ்டர்களுமே என்பதை நாம் அனைவருமே நன்கு அறிந்திருக்கிறோம்! இந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள அனேக "மார்க்க கண்மூடிகள்" (CULTS), இந்த அந்நியபாஷை பேசும் குழுவினரிடமிருந்தே உருவெடுத்திருக்கிறார்கள்!

ஆகவே, விசுவாசிகளாகிய உங்கள் யாவருக்கும் நான் கூறும் புத்திமதியாதெனில்:

"அந்நியபாஷை பேசுதல் மற்றும் சுகமளிக்கும் வரங்களை எந்த சபையிலெல்லாம் முக்கியத்துவப் படுத்துகிறார்களோ, அந்த சபைகளை விட்டு வெளியே வந்துவிடுங்கள்! ஏனெனில், இது போன்ற சபையினர் அபாயகரமான எதிர்முனைக்குச் செல்வது மாத்திரமல்லாமல், இங்குள்ள தலைவர்கள் ஆவிக்குரிய சிந்தை கொண்டவர்களாயும் இருப்பதில்லை. இவர்களுக்குப்பதிலாய், எந்த சபை பரிசுத்தத்தையும், சீஶர்களை உருவாக்குவதையும் முக்கியப்படுத்தி... அதோடு, உண்மையான அந்நியபாஷை பேசும் வரத்தை ஏற்றுக்கொண்டு... உங்கள் பணத்தை இச்சிக்காமலும், உங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைக்க விரும்பாமலும் இருக்கிறதோ, அந்த சபையோடு ஐக்கியப்படுவதற்கே நாடுங்கள்". காரியத்தின் கடைத்தொகையாய் "அந்நியபாஷைக் குறித்த" முடிவான ஆலோசனைகளைக் கேளுங்கள்:

"தேவன் உங்களுக்கு அந்நியபாஷை கொடுத்திருந்தால், அதைப் பெற்றுக்கொண்டு அப்பியாசியுங்கள். நீங்கள் தேவனோடு தனித்திருக்கும் போது, குறிப்பாக உங்கள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும் போதோ அல்லது உங்கள் இருதயம் பற்பல சோர்வினால் பாரமடையும் போதோ, இருதயத்திலிருந்து தேவனிடத்தில் அந்நியபாஷையினால் பேசுங்கள்! இவ்வாறு பேசும்படியான வரம் உங்களிடத்தில் இல்லையென்றால், அதைக்குறித்து சஞ்சலம் அடையாதிருங்கள். கர்த்தரிடத்திலிருந்து இந்த வரத்தை பெறுவதற்கு எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருங்கள். இந்த வரத்திற்கு விரோதமாகவோ அல்லது எப்படியும் இதைப்பெற்று விட வேண்டுமென்ற வேகத்திலோ ஒருபோதும் செயல்படாதிருங்கள். எப்படியும் பெறவேண்டும் என்ற பதட்டம் இல்லாத பட்சத்தில் இந்த வரத்தை நீங்கள் பெற வேண்டுமென தேவன் விரும்பினால், அவர் அதை நிச்சயம் உங்களுக்கு தருவார். மேலும் கிறிஸ்துவ உலகிலே நீங்கள் காண்கிற அல்லது கேட்கிற எதையும் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது என அப்படியே நம்பிவிடாதிருங்கள். ஒவ்வொன்றையும் சோதித்துப் பாருங்கள்.தேவன் உங்களுக்குத் தந்த பகுத்தறிவையும், ஐம்புலங்களையும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு அந்நியபாஷை வரம் இல்லையென்றால், அதைப் பெற்றிருப்பவர்களைவிட நீங்கள் தாழ்வானவர்கள் என எண்ணாதிருங்கள். இந்த வரத்தை நீங்கள் பெற்றவராயிருந்தால், இந்த இல்லாதவர்களைக் காட்டிலும், உங்களை உயர்வாகவும் அல்லது ஆவிக்குரியவர்களாயும் எண்ணாதிருங்கள். பவுலும், கொரிந்திய கிறிஸ்தவர்களும் அந்நியபாஷை பேசினார்கள். ஆனால், பவுலோ ஆவிக்குரிய வல்லவராயிருந்தார்! கொரிந்தியக் கிறிஸ்தவர்களோ மாம்ஶீகமாய் இருந்தார்கள்!!

இங்கு அதிக முக்கியத்துவம் எது?

நம் யாவருக்குமே இங்கு அதிக முக்கியத்துவமாய் இருக்க வேண்டியது "பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்பி இருப்பதே" ஆகும். பரிசுத்த ஆவி அபிஶேகத்தின் அடையாளம் "வல்லமை"(POWER) மாத்திரமேயாகும்! அந்நியபாஷை பேசுவது அல்ல!!(அப்போஸ்தலர் 1:8 ). நாம் எவ்வாறு நம்முடைய பாவ மன்னிப்பை நம்முடைய சொந்த தகுதியின்படியல்லாமல், கிறிஸ்துவின் தகுதியின்படி விசுவாசத்தினால் பெற்றோமோ, அதைப் போலவே பரிசுத்த ஆவியையும் விசுவாசத்தினாலேயே நாம் பெறவேண்டும் (யோவான் 7:37-39). அதாவது, பரிசுத்த ஆவியின் வரத்தை அல்லது பரிசை (GIFT) நம்முடைய உபவாசத்தினாலோ அல்லது நீடிய ஜெபத்தினாலோஅல்லது வேறெந்த கிரியையினாலோ பெற முடியாது. ஏனெனில், அவர் நமக்கு ஒரு பரிசாகவே இருக்கிறார்!(அப்போஸ்தலர் 2:38).

பசியுள்ள தன்மகனுக்கு இவ்வுலகத்தின் எந்தத் தகப்பனும் உடனடியாக உணவு தருவதைப் போலவே, தன்னிடத்தில் கேட்பவர்களுக்கு உடனடியாகப் பரிசுத்தாவியைத் தருகிறார் என்பதையறிந்து, தேவனிடம் பரிசுத்தாவியைக் கேட்டு உடனடியாக விசுவாசத்தில் பெற்றுக் கொண்டு, அவருடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தவர்களாய் நாம் கடந்துசெல்ல வேண்டும் (லூக்கா 11:13 ). நாம் பரிசுத்தாவியைப் பெற்றதைக் குறித்த நிச்சயமில்லாதிருந்தால், அந்த நிச்சயத்தை தேவன் நமக்குத் தரும்படி ஜெபித்தால்.. அந்த நிச்சயத்தை நமக்கு தேவன் தர ஒரு போதும் மறுக்கவே மாட்டார்!

இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ....ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லிமுடியாத நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஶர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B. சிம்ஸன், வில்லியம்பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை! ஆனால், அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்! ஆம், இவைகள்தான் அவர்கள் வாழ்வின் "மையமாய்" இருந்தது... மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!

இந்த உத்தம தேவமனிதர்களின் நல்ல மாதிரியையே நாமும் பின்பற்றினால், நாம் ஒரு போதும் தவறாய் சென்றுவிடவே மாட்டோம்.

கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!!

இதுவே மெய்யான சத்தியம் - சகரியா

இதுவே மெய்யான சத்தியம் - சகரியா
1. தீமையைப்பற்றிய மெய்யான சத்தியம் 
சகல ஞானத்தினாலும் நன்மையினாலும் நிறைந்த தேவன் சிருஷ்டித்த இவ்வுலகில், எவ்வாறு தீமை தோன்றியது? ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் வியாதியும், தரித்திரமும், வருத்தமும், துன்பமும் நிறைந்திருப்பதற்கு காரணமென்ன? இந்நிலையில் உள்ள நமக்கு உதவி செய்ய தேவன் ஆர்வமற்று இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாய் ஓர் பதில் தேவையாயிருக்கிறது.
பரிசுத்த வேதாகமம் இந்த பதிலை நமக்குத்தருகிறது! இந்த பதிலை நாம் காண்பதற்கு முன்பாக, தேவனைப்பற்றிய சில உண்மைகளில் நாம் தெளிவடைவது நல்லது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனமே, "ஆதியிலே தேவன்..." என்றே துவங்குகிறது (ஆதி.1:1) தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ள ௬௬ புத்தகங்களில் ஆதியாகமமே முதல் புத்தகம்! நீங்கள் வாசிக்கும் இச்சிறிய புத்தகத்தில், அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் வேதப்புத்தகத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளே ஆகும்.
பரிசுத்த வேதாகமம் தேவனைக் குறித்த உண்மையை, அவர் எப்படி நித்திய காலத்திற்கு முன்பாகவே இருக்கிறார் என்பதை விளக்கிக்கூற முற்படாமல், அதை ‘அப்படியே ஏற்றுக்கொள்ளும்’ உண்மையாகவே மிக எளிதாய் நமக்குச் சொல்லுகிறது.
மானிடராகிய நம்மிடம் தனிப்பட்ட விதத்தில் உறவு கொள்ள விரும்பும் ஒருவராகவே வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. மனுஶீக ஆள்த்துவங்களைப் போலவே தேவனும் ஓர் மானிடனைப் போல் இருப்பார் என நாம் ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் ஆவியாயிருக்கிறார்; எல்லா விதத்திலும் அவர் முடிவற்ற தன்மை கொண்டவர்; குணாதிசயத்தில் எக்காலத்தும் மாறாதவர்! அவர், சர்வ வல்லமை கொண்டவர்; சர்வமும் அறிந்தவர்; அளவிற்கடங்கா ஞானம் நிறைந்தவர்; எல்லாயில்லா அன்பு நிறைந்தவர்; எல்லையில்லா தூய்மை நிறைந்தவர்!!
தேவனின் எல்லையில்லா அன்பில் சுயநலம் என்பது முற்றிலுமாய் இல்லவே இல்லை. ஆகவேதான் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஶத்தையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்திட விரும்புகிறார். இதற்காகவே அவர் ஜீவராசிகளை சிருஶ்டித்தார். அந்த சிருஷ்ப்பில் எல்லாவற்றிற்கும் முதலாக, அவர் இலட்சக்கணக்கான தூதர்களை சிருஷ்டித்து, தன்னுடைய சந்தோஷதையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.
இவ்வாறு தோன்றிய தூதர்கள் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும்படி தேவன் ஒரு தூதனை சிருஷத்தார். அவனுடைய பெயர் லூசிபர்!
தேவன் சிருஶ்டித்த வான மண்டல கிரகங்கள் அல்லது மரங்களைப் போல் அல்லாமல், லூசிபருக்கு மற்ற தூதர்களுக்கு "சுயாதீன- சித்தத்தைக்" கொடுத்து தேவன் சிருஶ்டித்தார். இந்த சுயாதீனத்தைப் பெற்ற தூதர்கள் அதைக்கொண்டு தேவனுக்குக் கீழ்படியவோ அல்லது கீழ்படியாமல் இருப்பதற்கோ தாங்களாகவே தெரிந்துகொள்ள முடியும்.
ஒருவன் ‘குணாதிசயம்’ கொண்டவனாக இருப்பதற்கு "சுயாதீன சித்தம்" என்ற தன்மை முதலாவது அடிப்படைத் தேவையாகும். கிரகங்களோ அல்லது மரங்களோ நன்மைசெய்யவும் முடியாது, தீமைசெய்யவும் முடியாது. ஏனென்றால் அவைகளுக்குத் தாங்களாகவே தெரிந்துக்கொள்ளும் சுயதீனம் இல்லாமல் சிருஶ்டிக்கப்பட்டபடியால், இவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்படியே கீழ்படிந்துவிடுகின்றன. இதன் நிமித்தமே இவைகள் தேவனுடைய புத்திரர்களாகவும் இருந்திட முடியாது.
மனிதனையோ தேவன் தன்னுடைய சாயலில் சிருஶ்டித்தார். இதுவே நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்குரிய சாத்தியத்தை நமக்கு வழிவகுக்கிறது. நாம் குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நமக்குள் இருக்கும் மனசாட்சியின் சத்தம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் பொழுதெல்லாம், இம்மனசாட்சியின் சத்தம் நம்மை உணர்த்துவிக்கிறதாயிருக்கிறது.
"சுயதீன சித்தம்" "மனசாட்சி" ஆகிய இந்த இரண்டையும் உடையவர்களாகவே தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.
இவ்வொப்பற்ற தன்மை கொண்ட தூதர்களுக்குத்தான் லூசிபர் தலைவனாயிருந்தான். ஆனால் இவன் வெகு சீக்கிரத்தில் நல்லதற்ற லட்சியங்களையும் கொண்டிடத் துவங்கினான். இவ்வாறு இங்கிருந்து தான் இவ்வையகத்தில் தீமை முதலாவதாகத் தோன்றியது!
லூசிபரின் சிந்தைகள் நல்லதற்றதாக மாத்திரமல்லாமல், அவைகள் பெருமையின் சிந்தைகளாகவும், முரட்டாட்டத்தின் சிந்தைகளாகவும், அதிருப்தி கொண்ட சிந்தைகளாகவும் இருந்தது.
தீமை முதலாவதாக இருதயத்தில் தோன்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ளக் கடவோம். ஆரம்ப நிலையில் வெளித்தோற்றமான எவ்வித செயலும் நடைப்பெறவில்லை. அவ்விதமே இன்றும் தீமையானது இருதயத்தில் இருந்தே முளைத்தெழும்புகிறது. இவ்வுலகத்திற்கு தீமையைக் கொண்டுவந்த முதல் பாவம் "பெருமை" என்பதையும் நாம் நினைவிற்கொள்வோமாக!
இந்நிலையில் லூசிபரை தன் உடனடி சமூகத்தை விட்டு கீழே தேவன் தள்ளினார். அக்கணமே இந்த லூசிபர் "சாத்தான்" என அழைக்கப்பட்டான்!
லூசிபரையும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த தூதர்களையும் தேவன் கீழே தள்ளினார். வீழ்ச்சியடைந்த இந்த தூதர்களே "பெல்லாத ஆவிகள்" அல்லது "பிசாசுகள்" ஆவார்கள். இப்பொல்லாத ஆவிகளே இன்று ஜனங்களை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன!
ஒருவேளை இப்புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் கூட பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்கள் மீது மாந்திரீகமான செய்வினை ஏவுதல் செய்திருக்கலாம். அவ்வாறு இருந்தால், உங்களுக்கென பரிசுத்த வேதாகமம் ஓர் நற்செய்தியை வைத்திருக்கிறது. இப்பொல்லாத ஆவிகளின் தொந்தரவிலிருந்து சம்பூரணமான விடுதலையை நீங்கள் நிரந்தரமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இப்புத்தகத்தை கவனமாய் வாசியுங்கள். இவ்வாறு இப்புத்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்கும் வேளையில், தேவன் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.
இத்தருணத்தில் சிலர், "இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" எனற கேள்வியை கேட்கக்கூடும்.
தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்து இருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதியாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்.
அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவும் செய்கிறார்!
காரியம் இவ்வாறு இருப்பதால், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இருக்கிறது. இதுவே பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்கும் செய்தியாகும்!
இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன்மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து திரும்பும்படிச் செய்கிறார். இவ்வாறாகவே ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!
ஆகவேதான், தேவன் இவ்வுலகத்தில் உள்ள எல்லா தீமைகளையும் மிக எளிதில் அகற்றிவிடக் கூடுமென்றாலும், அவர் அவ்விதமாய் செய்யவில்லை! ஏனென்றால் இத்தீமைகளின் மூலமாகவே தேவன் தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கிறார்!!
2. பாவத்தைப் பற்றிய மெய்யான சத்தியம் 
ஒரு மிருகம் எவைகளைக் குறித்து ஆர்வமாய் இருக்கும்? உணவு, உறக்கம், காமதிருப்தி.... அவ்வளவுதான்! இவைகளில் மாத்திரமே ஒரு மானிடனும் ஆர்வம் கொண்டிருந்தால், அவனும் மிருகங்களின் தரத்திற்கு இறங்கி வந்துவிட்டான் என்றே நாம் சொல்லலாம். ஆனால், மனிதன் மிருகங்களைப்போல் இருப்பதற்காக தேவன் அவனை சிருஶ்டிக்கவில்லை. நாம் அவரைப்போல் சீரிய பண்புகளும், நேர்மையுள்ளமும், நற்குணங்களும், சுயகட்டுப்பாடும் கொண்டவர்களும் இருப்பதற்கு நம்மை சிருஶ்டித்தாரே அல்லாமல்.... மிருக உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல!!
நாம் மிருகங்களைவிட அறிவுக்கூர்மையும் கல்வி கற்றவர்களாயும் இருப்பதினிமித்தம் மிருகங்களைக் காட்டிலும் நம்மை மேலானவர்களாகக் கருதிவிட முடியாது! ஏனெனில் புத்திக்கூர்மையான கல்வி கற்ற மனிதர்கள், இன்னமும் பேராசைக்கும், சுயநலத்திற்கும், காம இச்சைக்கும், கோபத்திற்கும் அடிமையாகத்தான் இருக்கின்றார்கள்!!
நம் மனதைக் காட்டிலும் ஆழமான ஒரு பகுதி நமக்குள் அடங்கி இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஆவி! நம்முடைய ‘ஆவியே’ தேவனைக் குறித்த உணர்வை நமக்குத் தருகிறது. இந்த உணர்வு எந்த ஒரு மிருகத்திற்கும் இல்லை.
சுயதீனமாய் தெரிந்துக்கொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுதந்திரத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும். இவ்வாறு இருந்த போதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்!!
தேவன் சிருஷ்டித்த முதல் மனுஶனும் மனுஶியும் ஆதாம் என்றும் ஏவாள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஶ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமாய் இருப்பகற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.
முதல் மனுஷனையும் மனுஷியையும் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களை அவர் ஒரு தோட்டத்தில் வைத்து, ஒரே ஒரு மரத்தின் கனியைத் தவிர எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என தேவன் கூறினார். இதுவே அவர்களுக்குத் தரப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் பரீட்சையாக இருந்தது! இவ்வளவு மிக எளிய கீழ்ப்படிதலின் பரீட்சையில் ஆதாமும், ஏவாளும் தோல்வி அடைந்தார்கள்! எப்படியெனில், சாத்தான் அவர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "நீங்கள் இவ்விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளில் தேவனைப்போல் ஆகிவிடலாம்" எனக் கூறி சோதித்தான். அவ்வேளையில் ஆதாமும் ஏவாளும் சந்தித்த சோதனை, "ஏதோ ஒரு மரத்தின் கனியை புசிப்பதுதானே!" என்ற மிக எளிய சாதாரண விஷயமாய் இருக்காமல், "அவர்கள் விரும்பினால் தேவனைப்போல் மாறிவிடலாம்" என்பதான விபரீதமாய் இருந்தது!
ஒரு காலத்தில் ‘சாத்தான்’ இதுபோன்ற விருப்பத்தையே கொண்டிருந்தான். அந்த விருப்பத்தைத்தான் அவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விஷம் பாய்ச்சிவிட்டான். இவர்கள் தேவனுக்குக் கீழ்படியாமல் போனதால், அன்று சாத்தான் அடைந்த அதே கதியை அடைந்தார்கள். ஆம், இவர்களும் தேவனுடைய சமூகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்!
மேற்சொல்லப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் நாம் தெளிவாக வாசித்தறியலாம்.
மனுவர்க்கத்திற்குள் எவ்வாறு பாவம் தோன்றியது என்பதை இப்போது நாம் தெளிவாக வாசித்தறியலாம்.
தேவனுக்கு மேலாக, நமக்கானவைகளையும் சிருஶ்டிக்கப்பட்டவைகளையும் தெரிந்துகொள்வதே எல்லாப் பாவத்திற்கும் வேராய் இருக்கிறது. அதாவது, தேவனுடைய வழிக்குப் பதிலாக நம் சொந்த வழியைத் தெரிந்துகொள்வதும், தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக நம்மை நாமே பிரியப்படுத்துவதுமாகும்!
விபச்சாரம் அல்லது கொலை அல்லது திருடுதல் போன்றவைகளைச் செய்வது மாத்திரம் பாவமாகாது. ஆம், பாவத்தின் சரியான விளக்கம் "நாம் நம்முடைய சொந்த வழியை விரும்புவதேயாகும்." பாவம் துவங்குவதை ஒரு சிறு பிள்ளையின் முரட்டாட்டத்திலிருந்து நாம் காண்கிறோம். அந்தப் பிள்ளை வளரும்போது தன் சொந்த வழியில் செல்லவே தீர்மானித்து... தான் விரும்பியதையெல்லாம் மற்ற பிள்ளைகளிடமிருந்து பறிக்கவும் சண்டையிடவும் செய்கிறது!!
பாவம் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் ஊடுறுவப் பாய்ந்திருக்கிறது. இப்பாவத்தை மார்க்க அனுசாரங்களைப் போன்ற உபவாசம் மற்றும் ஜெபங்களின் மூலமோ அல்லது புனிதயாத்திரையின் மூலமோ அல்லது சுயக்கட்டுப்பாட்டின் மூலமோ போக்கிவிட ஒருக்காலமும் முடியாது! தேவன் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்!!
ஆனால், "பாவம் இத்தனை தீமையானது" என நாம் உணரும்வரை தேவன் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. யாரெல்லாம் தங்களை நீதிமான்களாகக் கருதுகிறார்களோ அவர்களைத் தான் இரட்சிக்க முடியாது என்ற உண்மையை இயேசு தெளிவுபடுத்தினார். தாங்கள் நோயாளிகள் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ஒரு மருத்துவரிடம் செல்லுவார்கள். இதற்கொப்பாக "நாம் பாவிகள்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதே நம்முடைய முதல் தேவையாயும் இருக்கிறது.
நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், நாம் அனைவருமே பாவிகள்தான். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களை நம்முடைய சிந்தையிலும், வார்த்தையிலும், செயலிலும், மனநோக்கங்களிலும் மீறி பாவம் செய்திருக்கிறோம். ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த தரத்திலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டோம்.
எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் பாவம் கொடியதாகும். ஒரே ஒரு வித்தியாசமாக இருப்பதெல்லாம் பாவம் நம்முடைய "ஆத்துமாவிற்கு" அழிவைத் தருகிறபடியால் அந்த அழிவை வெளிப்படையாய் காணமுடிவதில்லை, அவ்வளவுதான்! பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் எய்ட்ஸ் நோயின் விளைவுகளைக் காட்டிலும் மோசமானதாகும். அது நம் ஜீவியத்தை நாசம் செய்து இப்பூமியில் நம்மை மகிழ்ச்சியற்றவர்களாகச் செய்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படாத பட்சத்தில் பாவம் நம்மை முடிவில் நித்தியத்திலும் அழித்துவிடுகிறது!
3. மனசாட்சியைப் பற்றிய மெய்யான சத்தியம் 
நாம் யாவரும் ஓர் மனசாட்சியுடன் சிருஶ்டிக்கப்பட்டிருக்கிறோம். நாம் குணாதிசயம் படைத்தவர்கள் என்பதை இந்த மனசாட்சிதான் நம்மை எப்போதும் நினைவுறுத்துவதாய் இருக்கிறது. இந்த மனசாட்சி நமக்குள் தேவனுடைய சத்தமாய் இருந்து, "நம் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொருப்பாளிகள்" எனப் பேசுகிறது. ஆகவே, நாம் வாழ்ந்த முழு ஜீவியத்தைக் குறித்தும் ஒருநாளில் நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தே தீர வேண்டும்!
மனசாட்சி ஏதுமில்லாத மிருகங்களைப் போல் நாம் இல்லை. அவைகள் குணாதிசயம் கொண்டவைகளாய் இராதபடியால் யாதொன்றைக்குறித்தும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவைகளுக்கு எல்லாமுமாய் இருக்கிறது. அவைகள் மரித்தவுடன் மரணமே அவைகளுக்கு முற்றுப் புள்ளியாய் முடிகிறது. ஆனால் நமக்கோ இதுப்போன்ற நிலை இல்லை. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஶ்டிக்கப்பட்டு ஓர் நித்தியவாசியாய் இருக்கிறான்.
நமக்கு கடைசிநாளின் நியாயந்தீர்ப்பு என ஒன்று இருக்கிறது. அச்சமயம் நம் வாழ்வில் நாம் செய்த பேசிய, சிந்தித்த யாவும் நம் நினைவிற்கு மீண்டுமாய் கொண்டுவரப்படும். அன்று நம் முழு ஜீவியமும் தேவனால் கணக்கு பார்க்கப்படும். பின்பு அவர் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தம்முடைய பரிசுத்த பிரமாணங்களின் தரத்தின்படி நம்மை நியாயந்தீர்ப்பார் அவ்வேளையில் நம் ஒவ்வொரு சிந்தை, வார்த்தை மற்றும் செயலுக்காகவும் தேவனிடம் பதில் சொல்லியாகவேண்டும்!
"ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஶனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என வேதாகமம் கூறுகிறது (எபி 9:௨௭).
‘மனசாட்சி’ தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் "வலி" என்ற வரத்திற்கு ஒப்பாகும். நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது!
குஷ்டரோகிகளிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானதொன்று என்னவெனில் அவர்களுக்கு வலி இல்லாது இருப்பதுதான். குஶ்டரோகம் நரம்புகளைக் கொன்றுவலிக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அழித்துவிடுகிறது. ஒரு குஶ்டரோகியின் பாதத்தில் ஒரு ஆணி குத்தினால்கூட அதை அவன் பல நாட்கள் அறியாதிருப்பான். ஆனால் அவனுடைய பாதமோ சீழ் பிடித்துவிடும். "வலி என்ற ஆசிர்வாதம்" அவனிடம் இல்லாததே காரணமாகும்.
இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது. நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் போதும், பாவசிந்தனை கொள்ளும்போதும், அல்லது பாவத்தை செய்த பின்பும் இந்த மனசாட்சி நம்மை எச்சரிக்கிறது. இந்த எச்சரிப்புகளை நாம் அலட்சியம் செய்யவோ அல்லது அதை மீறியோ நடந்தால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் நமக்குள் இருக்கும் பாவ உணர்வை கொன்றுவிடுவோம். இதுபோன்ற வாழ்க்கையின் முடிவு, நித்திய நித்திய காலமாய் தேவனால் தண்டிக்கப்படுவதே ஆகும்.
இயேசு இந்த மனசாட்சியை "கண்ணிற்கு" ஒப்பிட்டார் (லூக்கா ௧௧:௩௪-௩௬). நம் கண்ணில் ஒரு சிறிய தூசி விழுந்தாலும், கண் உறுத்தல் உண்டாகி அத் தூசியை நம் கண்ணிலிருந்து நாம் அகற்றும்வரை நம்முடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிடுகிறது. இக்கண்ணிற்கு ஒப்பாகவே நம் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய பாவங்கள் தேவனால் மாத்திரமே மன்னிக்கப்பட்டு கழுவப்பட முடியும். நாம் ஏற்கனவே நம் மனசாட்சியில் சுமந்து கொண்டிருக்கும் குற்ற உணர்வை அகற்றுவதற்கு அது ஒன்றே வழியாகும்.
ஆனால், இந்தப் பாவமன்னிப்பு இன்று அநேகர் எண்ணுவதுபோல் மலிவானதொன்றல்ல!
4. மன்னிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம் 
நம்முடைய பாவங்களை தேவன் எவ்வாறு மன்னித்திட முடியும்?
தேவன் நீதிபரராயிருக்கிறபடியால், ஒரு மனிதனை மன்னிப்பதற்கு அவனுடைய பாவங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட அவரால் முடியாது! பாவம் எவ்வகையிலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் அவர் அன்புள்ள தேவனாயும் இருக்கின்றபடியால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்!!
எல்லா மதங்களுமே நாம் நல்லவர்களாயும், அன்புள்ளவர்களாயும், உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் படி போதிக்கின்றன. ஆனால் "அவை அனைத்தும்" நம்முடைய பாவங்களுக்குரிய மன்னிப்பைப் பெற்ற பிறகு நாம் வாழும் வாழ்க்கையே ஆகும்.
தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அதற்கென அவர் ஏதாகிலும் செய்யவேண்டியதாய் இருந்தது. உலகத்தை சிருஶ்டிக்கும்போது தேவன் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசினார், உடனே உலகம் தோன்றியது! ஆனால் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசி நம்முடைய பாவங்களை மன்னித்திட அவரால் முடியவில்லை!!
ஆம், தேவன் நம்மைப் போன்ற மனிதனாக வேண்டியதிருந்தது. நாம் மானிடர்களாய் சந்திக்கும் சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் ஊடாய்ச் சென்று அவர் வாழ வேண்டியதிருந்தது. மேலும், நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன் மீது சுமந்து நம்முடைய இடத்தில் ஓர் பலியாக அவர் மரிக்க வேண்டியதிருந்தது!!
நம்முடைய பாவங்களுக்கான தண்டனை, துன்பமோ அல்லது வியாதியோ அல்லது வறுமையோ அல்லது இவ்வுலகத்தில் வந்து தாழ்ந்த சமுதாயத்தில் பிறப்பதோ அல்லது இதுபோன்ற வேறெதுவுமோ இல்லை! நித்திய மரணமே அத்தண்டனை ஆகும்!! இந்த மரணம் தேவனை விட்டு நிரந்தரமாய் பிரிந்திருப்பதற்கு ஒப்பாகும். சரீர மரணத்தின் மூலம் நம் சரீரத்தைவிட்டு நாம் பிரிவதைப் போலவே, ஆவிகுரிய மரணத்தின் மூலம் சர்வ ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனைவிட்டு பிரிவதாயிருக்கிறது!
இனிவரும் எதிர்காலத்தில் நீங்கள் செய்திடப்போகும் நற்கிரியைகள், கடந்த காலத்தில் நீங்கள் செய்த தீமைகளை ஒருபோதும் நிவர்த்தி செய்யவே முடியாது! நாம் எப்படியாவது தேவனுடைய சமூகத்தை அடைவதற்கு ஒரு வழிகூட இல்லை. ஆம், நாம் ஓர் நம்பிக்கையற்ற இழப்பையே அடைந்துவிட்டோம்!
ஆனால் தேவன் தம்முடைய மிகுந்த அன்பினிமித்தம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.
பாவத்திற்காய் நித்திய தண்டனை அடைவதிலிருந்து மனுவர்க்கத்தை இரட்சிப்பதற்காக பிதாவாகிய தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிசுத்தாவியின் வல்லமையினால், ஒரு கன்னியின் மூலமாய் தன்னுடைய குமாரன் ஒரு பாலகனாய் பிறக்கும்படி, சுமார் ௨000 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகிற்கு அனுப்பினார். அவருக்கு இயேசுகிறிஸ்து எனப் பெயர் தரப்பட்டது. இவர் மானிடர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையினாலும் சோதிக்கப்பட்டு, தன் பிள்ளைப் பருவத்திலிருந்து புருஶ பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்தார். அவர் சந்தித்த எல்லா சோதனைகளிலும் வெற்றி சிறந்தார்! ஆம், அவர் ஒரு போதும் பாவம் செய்யவே இல்லை!!
தன் குமாரனகிய இயேசுகிறிஸ்து ௩௩-வயதாய் இருக்கையில் பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு ஒரு சிலுவையில் அறையப்படுவதற்கு பிதாவாகிய தேவன் அனுமதித்தார். அந்த சிலுவையின்மேல் அவர் நமக்காக சாபமாகி, மானிடர்களின் பாவ தண்டனையைத் தன்மீது ஏற்றுக்கொண்டார். இங்குதான் தேவனுடைய ஒப்பற்ற அன்பை நாம் காண்கிறோம்!
இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்ததை சிந்தி சிலுவையில் மரித்தபோது, நம்முடைய பாவங்களுக்கான நீதியின் தண்டத்தொகை முழுவதுமாய் செலுத்தப்பட்டுவிட்டது. ஆம், நீதியின் தேவை சரிக்கட்டப்பட்டு விட்டது!
சிலுவையில் இயேசுகிறிஸ்து புரிந்த தியாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்பதற்காக அவர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார் என்பதும், இந்தப் பூமியில் தேவனுடைய ஒரே ஒரு மானிட அவதாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான் என்பதும் இரண்டு உண்மைகளால் நிரூபணமாகிறது.
1.உலகத்தின் பாவங்களுக்காக மரித்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே!
2.மரணத்திற்கு பின்பு மீண்டும் உயிருடன் எழுந்து இனி ஒரு போதும் மரிக்காதவராய் இருக்கும் ஒரே ஒருவர், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே! இதன் மூலமாய், அவர் மனிதனின் மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தை ஜெயித்துவிட்டார் என்பதை நிரூபித்தார்!! 
உயிர்த்தெழுந்து, இப்பூமியில் ௪0 நாட்களுக்குப்பிறகு, இன்று அவர் இருக்கும் பரலோகத்திற்கு இயேசு திரும்பச் சென்றார். அவ்வாறு திரும்பிச்செல்லும்போது, இவ்வுலகத்தை நியாயம் தீர்த்து அதை நீதியாலும் சமாதானத்தாலும் ஆளுகை செய்வதற்கு ஒருநாளில் மீண்டும் திரும்ப வருவேன் எனவும் வாக்குரைத்தார்.
அவர் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக, தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் வழங்கும் பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது எத்தனை அவசியமாய் இருக்கிறது!!
5. மனந்திரும்புதலைப் பற்றிய மெய்யான சத்தியம்
நமக்கு வரவேண்டிய பாவதண்டனையை அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் தேவனிடமிருந்து இந்தப் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாதவரை நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதன் தண்டனையிலிருந்து விடுதலையாக முடியாது!
இவ்வாறு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் தேவன் உங்களுக்காக சம்பாதித்ததை நீங்கள் பெறவேண்டுமென்றால், நீங்கள் முதலாவது உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டும். இதன் உண்மையான பொருள் யாதெனில், நீங்கள் அறிந்திருக்கிற ஒவ்வொரு பாவத்தையும் விட்டுத் திரும்புவதற்கு மெய்யான விருப்பம் கொள்வதேயாகும்.
உங்கள் தீய பழக்கங்களை விட்டுவிடுவதற்குரிய பெலன் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். இந்த இடத்திலும் தேவன் உங்கள் பெலவீனத்தை நன்கு அறிந்திருக்கிறார். அதற்குரிய பெலன் உங்களுக்கு இருக்கும் என அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்த்து கேட்பதெல்லாம், "இப்பழக்கங்களையெல்லாம் விட்டுவிடுவதற்கு உனக்கு மனதுண்டோ?" என்ற கேள்வி மாத்திரமே. நீங்கள் மெய்யாகவே ஒவ்வொரு பாவ வழிகளையும் விட்டுவிடுவதற்கு விரும்புவதை தேவன் காணும்போது, நீங்கள் எவ்வளவுதான் எண்ணற்ற தீய பழக்கங்களால் இன்றுவரை தோல்வி அடைந்தவர்களாய் இருந்தாலும், நீங்கள் இருக்கிற வண்ணமாகவே உங்களை அவர் ஏற்றுக்கொள்வார்!!
இது எத்தனை ஆச்சரியமான நற்செய்தி என்பதை எண்ணிப்பாருங்கள்!
நீங்கள் மெய்யாகவே உங்கள் பாவ வழிகளை விட்டுவிடுவதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா என்பதற்கு, நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்புரவாகி சரிசெய்திட விரும்பும் "விருப்பமே" தெளிவான நிரூபணமாகும்.
உதாரணமாய், யாரிடமிருந்தாவது நீங்கள் பணத்தைத் திருடியிருந்தால், அப்பணத்திற்குரிய தொகையை நீங்கள் சேர்த்தவுடன் அதை உடனே திரும்பச் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! நீங்கள் யாரையாவது உங்கள் வார்த்தையினால் மனம் புண்படச்செய்து, அது இப்போது உங்கள் "நினைவிற்கு வந்தால்" நீங்கள் பேசிய வார்த்தைக்காக அவரிடம் நேரடியாகச் சென்றோ அல்லது கடிதம் எழுதியோ மன்னிப்பு கேட்பதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! இதுப்போன்ற செயல்களின் மூலமாகவே தேவன் நம்முடைய உண்மையையும், தாழ்மையையும் சோதித்து அறிகிறார்.
உண்மையான மனந்திரும்புதலை, "விக்கிரகங்களை விட்டு தேவனிடதிற்கு மனந்திரும்புதல் எனப்பரிசுத்த வேதாகமம் அழைக்கிறது (௧தெச. 1: 1-9).
சிருஶ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஶ்டிகருக்கு மேலாய் உயர்த்துவதே விக்கரக ஆராதனையாகும். அது பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.
மரத்தினாலோ அல்லது கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்பட்டவைகளும் விக்கிரகங்களே ஆகும். இவ்வாறு மனிதன் சிருஶ்டித்த ஒன்று, அவர்கள் ஆராதிக்கும் தேவனாய் மாறுகிறது! அண்டசராசரத்தையும் சிருஶ்டித்த சிருஶ்டிகரை ஒரு தொலை நோக்கு சாயலாகக்கூட எந்த மனிதனும் தன் கரங்களால் வடிவமைத்திட முடியாது!
எனவே மனந்திரும்புதல், எத்தகைய விக்கிரக ஆராதனையிலிருந்தும் திரும்புவதை உள்ளடக்கியதாய் இருக்கிறது. உண்மையான மனந்திரும்புதல், சிருஶ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஶ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன்.
இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்கவேண்டும்!
மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!
திருமண கட்டுக்கோப்பிற்குப் புறம்பே கொள்ளும் எவ்வித பாலிய உறவுகளும் பாவமே ஆகும். ஆகவே, நம்முடைய எல்லா பாலியத்தின் பாவங்களுக்காக மனந்திரும்பவும், அதைவிட்டு விட்டு தேவனிடம் உண்மையான மனதோடு ஒப்புரவாக வேண்டியதும் மிக அவசியமாக இருக்கிறது!
நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம்யாதெனில், பிறரை மன்னிக்க முடியாதசுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!
ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஶருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:௧௫) என உறுதியாகக் கூறினார்.
எவ்வளவு பெரிய அல்லது கொடிய பாவமாயிருந்தாலும் எல்லாப் பாவங்களையும் தேவன் மன்னித்திடமுடியும். ஆனால் நாம் மாத்திரம் அவைகளிலிருந்து மனந்திரும்பியிருக்க வேண்டும்!
6. விசுவாசத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்
"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என வேதாகமம் கூறுகிறது (எபேசியர் 2:8)
நமக்கு உதவியையும் ஆசீர்வாதங்களையும் தரும்படி நம்மை நோக்கி நீட்டும் தேவகரமே கிருபையாகும். தேவனுடைய கரத்தில் இருக்கும் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி நம்முடைய கரத்தை உயர்த்துவதே விசுவாசமாகும்!
தேவன் நல்லவர் என்றும் அவர் உங்களை அளவுக்கடங்காது அன்பு கூறுகிறாரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தன்னுடைய குமாரனாகிய ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு அனுப்பினார் என்றும், மரித்து மூன்று நாட்களுக்குப் பின் தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்றும், அவர் பரலோகத்தில் இன்றும் ஜீவிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்ஙனம் நீங்கள் விசுவாசித்தால் தேவன் உங்களுக்கு வழங்கும் பாவமன்னிப்பை இப்போதே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!
நீங்கள் இப்போதே முழங்கால் படியிட்டு உங்கள் கண்களை மூடி கீழ்கண்ட வாக்கியங்களை தேவனிடத்தில் கூறுங்கள்:
"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் ஒரு பாவி. நான் மெய்யாகவே என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் திரும்ப விரும்புகிறேன். நீர் என்னுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்து மரணத்திலிருந்து உயிரோடு எழும்பி இன்றும் உயிரோடு இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னுடைய இருதயத்திற்குள்ளும் ஜீவியத்திற்குள்ளும் தயவாய் வந்து, என் முழு வாழ்க்கைக்கும் இன்றிலிருந்து நீரே ஆண்டவராய் இருந்தருளும். வேறு எல்லா தேவர்களையும் நான் விட்டு விட்டு இப்போதிருந்து உம்மை மாத்திரமே நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன், ஆமென்."
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகையில், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றார் (யோவான் 6;௩௭).
சற்று முன்பு ஜெபித்த ஜெபத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உண்மையாய் ஜெபித்தீர்களா?
அப்படியானால் நீங்கள் மெய்யாகவே அவரிடத்தில் வந்துவிட்டீர்கள். இவ்வேளையில், அவர் உங்களைப் புறம்பே தள்ளவில்லை என்ற நிச்சயத்தை நீங்கள் அடைந்திட முடியும். ஆம், அவர் உங்களை ஏற்றுக்கொண்டார்! அவரிடத்தில் கிட்டிச்சேரும் உங்கள் பகுதியை நீங்கள் செய்து முடிக்கும்போது, உங்களை ஏற்றுக்கொள்ளும் தம்முடைய பகுதியை தேவன் செய்துவிட்டார் என்ற நிச்சயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!!
நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்களா அல்லது இல்லையா எனபதை அறிவதற்கு உங்கள் உணர்வுகளைச் சார்ந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிகள் நம் சரீரத்திற்கடுத்த காரியங்களுக்கு உரியதாகும். ஆனால் ஆவிகுரிய விஶயங்களுக்கு உணர்ச்சிகள் அதிக வஞ்சகம் நிறைந்ததாகும். நாம் உணர்ச்சிகளை நம்புவதென்பது, ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை மணலின்மீது போடுவதற்கொப்பாகும். நாமோ நம்முடைய நம்பிக்கையை அல்லது விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதே வைத்திட வேண்டும். இதுவே ஒரு கன்மலையின்மேல் கட்டுவதற்கொப்பாகும்!
நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட்டீர்கள் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன், இந்த மாற்றத்தை மற்றவர்களுக்கும் நீங்கள் அறிக்கை செய்யவேண்டும். இருதயத்தில் நீங்கள் விசுவாசிக்கிறவைகளை நாவினால் அறிக்கை செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது. உங்கள் நண்பரிடத்திலும், உறவினரிடத்திலும், "கிறிஸ்து என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார்! இப்போது என்னுடைய வாழ்க்கைக்கு அவர் ஒருவரே ஆண்டவர்!!" எனக் கூற வேண்டும்.
இதற்குப் பின்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவை "ஞானஸ்நானத்தின்" மூலமாகவும் அறிக்கை செய்யவேண்டும். நீங்கள் கிறிஸ்துவிடம் உங்கள் இருதயத்தையும், ஜீவியத்தையும் அர்ப்பணித்திட தீர்மானித்த பின்பு துரிதமாய் நீங்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஞானஸ்நானம் ஒரு மார்க்க சடங்காச்சாரம் அல்ல! அது தேவனுக்கும் மனுஶர்களுக்கும் தூதர்களுக்கும் சாத்தானுக்கும் முன்பாக, "நான் இப்போது இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தம்!" என பகிரங்கமாய் சாட்சி கொடுப்பதாகும்.
ஞானஸ்நானத்தில், இன்னொரு கிறிஸ்தவர், உங்களை முழுவதுமாய் தண்ணீருக்குள் (ஒரு ஆறு அல்லது ஒரு நீர்த்தொட்டியில்) பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினாலே மூழ்கவைத்து, உங்களை மீண்டும் தண்ணீரிலிருந்து தூக்கிவிடுவார். இந்த மிகச் சாதாரண செயலின் மூலமாக, பழைய மனிதனாய் வாழ்ந்த நீங்கள் மரித்துவிட்டீர்கள், என்ற உண்மையை சாட்சி பகருகின்றீர்கள்! இந்த பழைய மனிதனை, நீங்கள் ஒரு அடையாளமாக தண்ணீருக்குள் மூழ்க வைத்ததன் மூலமாய் "அடக்கம்" செய்துவிட்டீர்கள். தண்ணீரிலிருந்து மீண்டும் வெளியே வந்த நீங்கள், "இன்றிலிருந்து நான் ஓர் புதிய மனிதன் (அதாவது, ஆவிக்குரிய கூற்றின்படி மரித்து மீண்டும் எழுந்தவன்!). புதிய மனிதனாகிவிட்ட நான் இனி தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி வாழ விரும்புகிறேன்" என உங்கள் நிலையை ஒப்புதல் செய்கிறீர்கள்.
ஆம், நீங்கள் ஒரு பரலோக பிரஜையாகவும், ஒர் தேவப்பிள்ளையாகவும் மாறிவிட்டீர்கள்!!
7. இரட்சிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்
"இயேசு" என்ற நாமத்திற்கு "இரட்சகர்" என அர்த்தமாம். அவர் ஜனங்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கும்படியாக இந்த பூமிக்கு வந்தபடியால்தான், இந்த நாமத்தை உடையவராய் இருந்தார்.
இரட்சிப்பு மன்னிப்பைக் காட்டிலும் மேலானதாகும்!
இந்த வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். என்னுடைய வீட்டிற்கு வெளியே உள்ள சாலை பழுது பார்க்கப்பட்டு ஒரு ஆழமான குழியை அங்கே வெட்டி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சிறு பையனைப் பார்த்து,"சாலையில் உள்ள குழியின் அருகே நீ போகக்கூடாது. ஏனென்றால் நீ அதில் தவறி விழுந்து விடக்கூடும்" என எச்சரித்துக் கூறுகிறேன். ஆனால் அவனோ என்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் குழியின் அருகே சென்று அதை எட்டிப் பார்க்கிறான்! இப்போது அவன் கால் சறுக்கி குழிக்குள் விழுந்துவிட்டான்!! பத்து அடி ஆழமுள்ள அக்குழியிலிருந்து உதவிக்காக என்னை நோக்கி கூக்குரலிட்டுக் கூப்பிடுகிறான். உதவி செய்வதற்காக நான் குழியின் அருகே வந்தவுடன் அவன் என்னைப் பார்த்து, "அப்பா, உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்!" எனக் கூறுகிறான். நான் அவனைப் பார்த்து, "பரவாயில்லை மகனே, நான் உன்னை மன்னித்துவிட்டேன், குட்பை!" எனக் கூறிவிட்டு திரும்பச் சென்றுவிட்டால் நான் அவனுக்கு என்ன செய்திருக்கிறேன்? ஆம், நான் அவனை மன்னித்துவிட்டேன், அவ்வளவுதான். ஆனால் நானோ அவனைக் காப்பாற்றவில்லை! இரட்சிப்பில், மன்னிப்பைக் காட்டிலும் மேலானவை அடங்கியிருக்கிறது. நான் என் மகனை அவன் விழுந்த குழியிலிருந்து தூக்கி எடுப்பதும் இந்த இரட்சிப்பிற்குள் அடங்கியிருக்கிறது!!
நமக்கும் இவ்வாறு செய்வதற்காகவே இயேசு வந்தார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தால் மட்டும் போதாது! நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை அவர் இரட்சிக்கவும் வேண்டும்!!
இரட்சிப்பை நாம் "கடந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம்" என முக்கால அனுபவமாய் அனுபவித்திட வேண்டும். முதலாவதாக, நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதற்கடுத்து பாவத்தின் வலிமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதன் பின்பு முடிவாக, நாம் பரலோகம் செல்லும் போது பாவ சமூகத்தைவிட்டே இரட்சிக்கப்பட்டுவிடுவோம்!
இரட்சிப்பின் முதல் பகுதி பாவங்களிலிருந்து மன்னிக்கப்படும் கிரியைச் செய்கிறது. இதன் மூலம் நம் கடந்தகால குற்றங்கள் நம்மை விட்டு நீங்கிவிடுகின்றன.
ஆனால் இது மாத்திரம் போதாது. இனிவரும் காலத்திலிருந்து ஓர் உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவனிடத்திலிருந்து இன்னமும் உதவி தேவையாயிருக்கிறது. இதற்காகவே தேவன் தம்முடைய "வல்லமையை" நமக்குத் தருகிறார்!!
தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் மூலதனமாயிருப்பது, "தேவனுடைய வார்த்தையே" ஆகும். நாம் சோதனைகளை ஜெயிப்பதற்கு வேதப்புத்தகம் ஓர் வலிமையான ஆயுதமாய் நமக்கு உதவுகிறது. இதனிமித்தமே நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனத்தை வாசிக்கும் பழக்கத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதனிமித்தம் தேவன் நம்மோடு தம் வார்த்தையின் மூலமாய் பேசி, அன்றாட நம் ஜீவியத்தின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு நம்மைப் பெலப்படுத்துகிறார்.
தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மூலதனமாயிருப்பது, நமக்குள் வந்து வாசமாயிருக்கும் "பரிசுத்தாவியாகிய தேவனே" ஆவார். நம்முடன் தினமும் பேசவும், வாழ்க்கைப் போராட்டங்களுக்குரிய பெலனைத் தரவும், கிறிஸ்துவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றும் சீஷர்களாய் வாழ்வதற்கு உதவி செய்யவும், பரிசுத்தாவியானவர் நமக்குள் நிரந்தரமாய் வாழ விரும்புகிறார். எனவேதான், பரிசுத்தாவி நம்மைத் தொடர்ச்சியாய் நிரப்பும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!!
ஆண்டவராகிய இயேசு இதைகுறித்து கூறுகையில் "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்றார் (லூக்கா ௧௧:௧௩).
தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மூலதனமாய் இருப்பது, "ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களோடு கொண்டிடும் ஐக்கியமாகும்."
இருப்பினும் இந்த இடத்தில் நாம் சற்று கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் தங்களைக் "கிறிஸ்தவர்கள்" என அழைத்துக்கொள்ளும் எல்லோரும் உண்மைக்கிறிஸ்துவர்களாய் இருப்பதில்லை. இவ்வாறு பெயரளவில் மாத்திரம் கிறிஸ்துவர்களாய் இருப்பவர்களை நாம் தவிர்த்துவிடல் வேண்டும்! நாமோ, அனுபவபூர்வமான கிறிஸ்துவர்களாய் மாறி, இயேசுகிறிஸ்துவைத் தங்கள் அனுதின வாழ்வில் பின்பற்ற வாஞ்சிப்பவர்களோடு மாத்திரமே ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!
கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறுகிறபடியால், " பரத்திலிருந்து பிறந்தவர்கள்" என வேதாகமம் நம்மை கூறுகிறது. இப்போது தேவன் நம்முடைய தகப்பனாய் இருக்கிறார்! எந்த உலகத் தகப்பனைப் போலவே , இப்பூமியில் நமது ஆவிக்குரியதும் சரீரத்திற்குரியதுமான எல்லாத் தேவைகளையும் நமக்குத் தருவதற்கு தேவனும் ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார்.
சர்வ வல்லமையுள்ள தேவனிடம் நாம் பேசுவதும், நம்முடைய ஆவியில் தேவன் பேசுவதுமாகிய "ஜெபிக்கும் சிலாக்கியம்" ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும்.
இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மெளனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைக்கோ, பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் தனக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் தேவையான யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்க முடியும்!
இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்கள் என்றால், இதுப்போன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த இனிமேலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" விரட்டி எறியப்படமுடியும்!
’தேவனுக்குக் கீழ்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக்கோபு :7)என்றே வேதம் கூறுகிறது!
தன்னுடைய பிள்ளைகளின் இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாடுகளும் பிரச்சனைகளும் இருக்காது என தேவன் வாக்குத் தரவேயில்லை! எந்த மானிடனையும் போலவே பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார்! ஆனால் நாமோ இவ்வித பாடுகளின் மூலமாய் தேவனை மென்மேலும் நெருங்கி அறிந்து கொள்கிறோம். பாடுகளின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தேவனுடைய அற்புதமான உதவியை நாம் ருசிக்கிறபடியால், அவரை அறிந்துகொள்ளுகிற அறிவு நம்மில் வளருகிறது!
8. நித்தியத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்
தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகள் அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்!
2000 வருடங்களுக்கு முன்பு, ஆண்டவராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு ஏறிச் சென்றபோது, தான் மீண்டும் இப்பூமிக்குத் திரும்ப வருவதாக வாக்குரைத்தார். இதைதான் "கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" என வேதம் அழைக்கிறது. இந்நிகழ்ச்சியே இவ்வுலக சரித்திரத்தில் இனி நடைபெறப் போகும் மாபெரும் நிகழ்ச்சியாகும்! கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வரும்போது, நம் முழு ஜீவியத்திற்குரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உணர்ந்திருக்கவேண்டும்!!
"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும் என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிக்காமல், பரலோக ஞானமுள்ளவர்கள் நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள் நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மாத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்.
"ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஶருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"(எபிரெயர் 9:௨௭).
எதிர்காலத்தில், சீக்கிரத்தில் ஒருநாள், இப்பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைகுரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்கும்படி, மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்கள். என்பதே உயிர்த்தெழுதல் ஆகும்! இருப்பினும், இரண்டு வகையான உயிர்த்தெழுதல் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.
முதல் உயிர்த்தெழுதல், தாங்கள் இப்பூமியில் இருக்கும்போது கிறிஸ்துவினிடத்தில் திரும்பி, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய நீதிமான்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!
இரண்டாம் உயித்தெழுதல், கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலே மரித்தவர்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!!
ஒரு மனிதன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பாமலும் தன்னுடைய பாவமன்னிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்காமலும் மரித்தால், ஒரு நாளில் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக அவன் நியாயம் தீர்க்கப்படுவான்! பின்பு அவன் நித்திய நித்திய காலமாய் ஓர் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அந்த இடம் அவனுக்கு ஓர் முடிவே இல்லாத தண்டனையாய் இருக்கும். இதுவே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுபோருக்கு நித்திய காலமாய் நிகழப்போகும் பயங்கர எதிர்காலமாகும்!
இதற்கு மாறாக, தங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை அறிக்கை செய்து விட்டுவிட்டு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாய் தேவன் வழங்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்கள், பரலோகத்தின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பார்கள்! அங்கே அவர்கள் தேவனோடும், இயேசுகிறிஸ்துவோடும் நித்திய காலமாய் வாசம் செய்வார்கள்!!
நாம் இந்த உலகத்தை விட்டு எப்போது மரிப்போம் என நம்மில் ஒருவரும் கூறிவிட முடியாது. நாம் வாழும் இந்த நாட்களில் ஒருநாள் இப்பூமியில் நம்முடைய கடைசிநாளாய் இருக்கப்போகிறது! அந்த நாள் வருவதற்கு முன்பாக..... உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்தையும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்ற உறுதியையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்!!