Thursday, 14 March 2013

தேவ ஊழியன் ஜனங்களை சீடர்களாக்குவதில் கவனம் வைக்கவேண்டும்


தேவ ஊழியன் ஜனங்களை சீடர்களாக்குவதில் கவனம் வைக்கவேண்டும் சீடர்களின் தன்மைகள் 1.நான் இந்த உலகத்தான் அல்ல என்பதை உனர்ந்து,உலகத்தில் உள்ள மாயையான செயலில் இச்சை கொள்ளாமல் அதை வெறுத்து பரலோகத்தை தன் சொந்த வீடாகவும் அதற்கு ஏற்றப்படி தன்னை அற்பனித்தல்
2.தன்னுடைய சுய ஆசைஅல்லது சுயவிருப்பத்தை நிறைவேற்றாமல் தேவனுக்குப் பிரியாமானதை செய்யும் படி தன்னை தேவனுக்கு அடிமையாய் ஒப்புக்கொடுத்து எப்பொழுதும் சுயத்தை சாகடித்து தேவசித்தம் செய்தல்.
3.தேவனுக்காய் பாடுகளை  பொருமையாய் சகித்து தேவதிட்டத்தை நிறைவேற்ற தன்னை கிறிஸ்துவின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கிறவன்.
4.தேவனை நேசிக்கும் காரியத்தில் முதன்மை தேவனுக்கு செலுத்தி வாழ்பவன்.உலகத்தையும்,அதிலுள்ளவகளையும் நேசியாதவனாய் இருப்பது.
இந்த அர்பனத்திற்கு கொண்டுவந்து சீடனானவன் சத்தியத்தையும்,
கிருபையையும் உடையவனாய் சீடனானவன் முதிர்சியை பூரணத்துவத்தை அடையும் படி அல்லது கிரிஸ்துவின் சாயலின் நிறைவை அடையும்படிக்கு
நடக்கையில் தாழ்மையுள்ளவனாய் எப்போதும் கிருபையை  பெற்று
சத்தியமாகிய தேவனுடைய சாயலை(கனி) வெளிப்படுத்தும் படி சத்தியத்திற்கு கீழ்படிந்து கனிகொடுக்கவேண்டும் இந்த நடைமுறைக்கான சத்தியம் சபையில் பேசப்படவேண்டும்.தேவன் நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாய் மாற்ற முன்குறித்திருக்கிறார் (ரோ8:29)
இந்த மறுரூபமாக்கும் கிரியை இரட்சிப்பில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நடக்கிறது.(2கொரி5:17) இந்த குரிப்பிட்ட நோக்கத்திற்காக தமது ராஜியத்தை வடிவமைக்கிறார். அதில் நாம் அநேக உபத்திரவங்கள்,சோதனைகள்,பாடுகள்மூலம் நம்முடைய விசுவாசம் பரிட்சிக்கப்பட்டு அது சுத்தமான பொன்னாகஅல்லது உறைந்த பனிக்கட்டியாக நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாய் மாற்றுகிறது
    ம்னிதன் சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உள்ள தேவசாயலை மறுபடியும் திரும்ப்பெறவேண்டும் என்ற தேவனுடைய நோக்கமும், மனிதன் தேவனுடன் விட்டுவிட்ட அல்லது இழந்துபோன ஐக்கியத்தை மறுபடியும்பெற்றுக்கொள்ள
இரட்சிப்பின் கிரியை விசுவாசித்து ஆவியானவருக்கு கிழ்படியவும் ஜன்ங்களுக்குப் போதிக்கவேண்டும்.தேவனோடு உறவாடும் தன்மைக்கு ஜன்ங்கள் வழிநட்த்தப்படவேண்டும்.
நாம் ஆதி சிருஷ்டிப்பின் சாயலுக்கு மாற்றப்படும்போது இரண்டுகாரியம் நடக்கிறது. 1..தேவனோடு தடையில்லாத ஆழமான உறவில் நடக்கமுடியும்
இதுதான் எப்பொழுதும்  தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவம்.பாவம்தான் தேவ உறவை குலைத்துப்போட்ட்து,அந்த பாவம் நீக்கப்பட்ட்தால் இன்னும் அதிகமான உறவைப்பெற திறனைப்பெறுகிறோம்.தேவனில்இளைப்பாறுதலான அனுபவம்.
           2.தேவன் நமக்காக நோக்கம் கொண்டிருக்கும் இட்த்துக்கும் அவருடைய அனாதி திட்ட்த்துக்கும் நாம் கொண்டுபோகப்படுவோம்.
மறுரூபமாக்கப்படுத்தல் என்றால் நம் சிந்தனைகள்,விருப்பங்கள்,செயல்கள் இன்னும் அதிகமாய் இயேசுகிறிஸ்துவைப்போலாக்கும் என்பதுதான் சிறந்த பொருள்.
நம்முடைய சொந்த பலத்தினால் தேவனுக்காய் கிரியை செய்ய முடிக்க முடியாது.எரோ13:25
தேவஅவியானவர் மற்றும் அவருடைய சத்திய வல்லமையால்தான் முடியும்
(ரோ8:29)
தேவனோடு நடக்கையில் தொடர்ந்து முன்னேறவேண்டும் அதற்கு எதிர்த்து தன் சுயத்தின் படி நடந்த்தால் நாம் தேவனை எதிர்கிறவர்களாய் இருப்போம்.
உலக சினேகம் தேவனுக்கு விரோதமான பகை அப்படி எதிர்க்கும் அல்லது முரட்டாட்டம் செய்யும் போது பயங்கரமான நியாயதீர்ப்பை சந்திக்கவேண்டியத்திருக்கும்.(யாக்1:21-25 நீதி29:1 எபி3:8-11)
உன்மையான எழுப்புதல் திரள்கூட்ட்த்தை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை சீசத்துவத்தில் தேர்ச்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சபை என்பது சீசத்துவத்தின் நடைமுறை பயிற்சியில் உள்ளவர்களைக் குறிக்கிறது. திரள்கூட்டம் மனிதனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு வரலாம் தேவனுடைய சீடன் என்கிற தகுதி இல்லாத எவரும் சபையாகமுடியாது.ராஜ்ஜியத்தின் சுவிசேசம் சீடனாய் இருக்கிறவனுக்கே விளங்கும் ,திரள்கூட்ட்த்திற்கு இவை புரியாத புதிராய் இருக்கும், சீடனானவன்தான் சோதனையில் கனிகொடுக்க முடியும் .கிறிஸ்துவின் சாயலில் மறுரூபமாக்கப்படுவதே கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் பிதாவின் சித்தம் ஆகும்.பலவீனாமானவன் தான் மனுசன் இந்த பலவீனத்தில்தான் பரிசுத்த ஆவியின் பெலன் வல்லமையாய் கிரியை செய்யமுடியும் ஆகையால் நம்முடைய சுயமுயர்சியை விட்டுவிட்டு தன் பெலவீனத்தை தேவனிட்த்தில் ஒப்புக்கொள்ளவேண்டும் அப்போதுதான் தேவ ஆவியானவர் முழுவதுமாய் நம்மில் பெலன் செய்வார்.(2கொரி12:8-10)
இந்த மேன்மையான திட்ட்த்திற்குள்ளாய் ஒருவனை கொண்டுசெல்ல அவன் முதலில் தாழ்மையுள்ளவனாய் இருக்கவேண்டும் அப்போதுதான் கிருபை அவனில் கிரியை செய்யும்.
அந்த தாழ்மையின் தன்மை என்ன?
1.பெலவீனத்தை ஒத்துக்கொள்ளுதல்
2.பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்து அவரை முற்றிலும் சார்ந்த்திருத்தல்
3..நித்திய காரியங்களை நம்மூலமாய் நிரைவேற்ற பரிசுத்த ஆவியானவரை தன்னில் முழு ஆளுகை செய்ய அனுமதிப்பது இது நமது சொந்த சக்தியால் அல்ல பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் மாற்றப்படும் வாழ்கையை குறிக்கும்.
4.மற்றவர்கள் பார்வையில் நாம் முக்கியமானவர்கள் போல் காணப்படவேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருப்பது.
தாழ்மையுள்ள மக்களால்தான் தேவன் தன்னுடைய திட்ட்த்தை சரியானபடி நிறைவேற்றமுடியும் அவர்களையே தேவன் அதிகம் விரும்புகிறார்.அவர்கள்தான் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றால் மாத்திரம் போதாது அவருக்கு தன்னை அடிமையாய் ஒப்புக்கொடுத்து அவர் நம்மில் கிரியைசெய்ய அனுமதிக்கும்போதுதான் தேவனுடைய சாயல் என்ற பூரனத்துவமும்,நித்திய நோக்கமும் சாத்தியமாகும்.
ஊழியம் பலவிதங்களில் செய்யலாம் ஆனால் தேவ திட்ட்த்திற்கு நேராய் செய்யவேண்டுமானால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் ஆளுகையில்லாமல் செய்யமுடியாது.
சத்தியத்திற்கு செவிகொடுக்க ஒருவனை நாம் எச்சரிக்கலாம் தேவனுடைய வல்லமை இல்லாமல் அது செல்லும் பட்சத்தில் ஒரு கிரியையும் கானமுடியாது. சத்தியத்தை அறிந்தால் மாத்திரம் போதாது அந்த சத்தியம் உன்னில் கிரியை செய்ய உன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கும் போதுதான் தேவனுடைய கிருபை உன்னை சந்தித்து சத்தியம் கிரியை செய்யமுடியும்.
இந்த நாட்களில் வேஅறிவில் முதிர்சிப்பெற்று சத்தியத்திற்கு நேராய் வழிநட்த்தும்படி எச்சரிக்கிறவர்கள் அநேகர் செய்யும் தவறு தன்னில் அந்த சத்தியம் கிறியை செய்ய தாழ்மை இல்லாதிருந்து கிடைத்த கிருபையை
இழந்து பெலனற்றவர்களாய் முடங்கி  சத்தியம் எனக்கு தேரியும் என்று மாம்சத்தில் பெருமை கொண்டு பொது இட்த்தில் மற்றவர்களின் பாவத்தை தூற்றுகிறவர்களாய் பரியாசக்கார்ராய் மாறிவிடுகிரார்கள். அவர்கள் தன் சொந்த ஜீவியத்தில் கிருபையை இழந்து மற்றவர்கள் முன்னால் கிரியையில் பாவத்தை வெளிப்படுத்தாமல் தனக்குள் ஒரு பாவசிந்தனையால் பீடிக்கப்பட்டு அந்தரங்கத்தில் தேவசிந்தனையை இழந்து கனி இல்லாதவர்களாய் மாறிவிடுகினறனர் .நான் உன்னைவிட நீதிமான் என்கிற பரிசேயனுடைய தன்மையில் வந்துவிடுவதால் தேவனுடைய கிருபை இல்லாமல் இருதயத்தில் பெலவீனர்களாகி பாவம்  கிரியைசெய்யும்படி
விட்டுவிடுகிறார்கள்.இது மிக கொடுரமானது .ஆகையால் எந்த ஒருவனும் தாழ்மையை இல்லை என்றால் கிருபை கிருபையை இழந்துவிடுவோம் என்கிற ஜாக்கிரதை உடையவனாய் இருந்து.எப்போது ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது அவசியம்.

No comments:

Post a Comment