Friday 8 March 2013

சத்தியம் சாராத ஆராதனை முறைகள்....

by Joshuas'army Srilanka on Friday, February 3, 2012 at 8:59pm ·
வேத வெளிச்சம் தேவனை விசுவாசிப்பவர்களிடம் இல்லாமல் போனதற்கு சத்தியம் சாராத வெறும் சத்தம் சார்ந்த ஆராதனை முறையும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். தேவனை ஆராதிப்பது என்பது இக்காலங்களில் மிகவும் எளிதான விடயங்களாகிவிட்டன! சில பாடல்களை உற்சாகமாக பாடி, கர்த்தருடைய நாமங்களை சரளமாக உச்சரித்து, ஆரவாரமான இசை பின்னணியில் உற்சாகமாக நம்மை ஈடுபடுத்திவிட்டால் தேவனை ஆராதித்துவிட்ட திருப்தி வந்துவிடுகிறது...

இக்கால ஆராதனை முரை ஒரு மேடை நிகழ்சியாக மாறிவிட்டது, ஏதோ ஒரு இடத்தில் கூடிவந்து பாடி துதித்து, பரவச உணர்வோடு ஜெபித்து ஒரு வித்தியாசமான மனக்களிப்பை பெற்றுவிட்டால் தேவனை நன்றாக ஆராதித்துவிட்டதாக எண்ணுகின்றோம், நாம் எப்படி வாழ்கின்றோம், எப்படிப்பட்ட குணங்களோடும் பண்புகளோடும் நடந்துகொள்கிறோம், நம்முடைய பரிசுத்த நிலை என்ன, அன்பு நிலை என்ன, உண்மை நிலை என்ன என்பவைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆரவாரமாக ஆராதித்துவிட்டால் தேவ நாமம் மகிமைபட்டுவிட்டதாக எண்ணுகிறோம்.

ஒரு முக்கிய வி.ஐ.பிக்கு முன்பாக, ஒரு பாடல் நிகழ்ச்சியையோ, கலை நிகழ்சியையோ, நடத்திக்காட்டி அவரை கனப்படுத்த விரும்புவதைபோல, இன்று சபை கூடுகைகளில் ஆராதனை வேளை என்பது நடத்திக்காட்டும் ஒரு நிகழ்ச்சி போல ஆகிவிட்டது..

புதிய ஏற்பாட்டின் உண்மையான ஆராதனை என்பது கிறிஸ்துவின் போதனையின்படி தெய்வீகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து அவரை கனப்படுத்துவதாகும்! கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒரு வாழ்கைதான் ஆராதனை! ஆனால் இன்று கிறிஸ்துவின் வழியில் நடக்காமலேயே ஆடல்,பாடல்,ஆரவாரம் நிறைந்த ஒரு ஆராதனை முறையை நடத்திவிட்டால் தேவனை ஆராதித்தவராக ஆகிவிடுகிறார். சாட்சி வாழ்கையாகிய முதுகெலும்பு இல்லாத ஆராதனை அனுபவம் வீணானது...
                                                                                                                 ரோமர் 12:1

No comments:

Post a Comment