Friday 8 March 2013

ஒளியில் நட ( 23.06.2011 )

by Jo Joshua on Thursday, June 23, 2011 at 2:30am ·
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் (யோ.12:46).


நடு இரவில் இருப்பதுபோல் இந்த உலகம் இருட்டில் இருக்கிறது. நம்பிக்கையினால் நாம் வெளிச்சம் உள்ளவர்களாய் இருக்கவும், மற்ற மக்களைச் சூழ்ந்திருக்கும் இருளில் நாம் இல்லாதிருக்கவும் இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.


எவனும் என்பது பரந்தகன்ற சொல். இது உங்களையும் என்னையும் குறிக்கிறது. நாம் இயேசுவை நம்பினால் மரண நிழலில் இருக்கமாட்டோம். ஒருநாளும் முடிவடையாத வெப்பம் பொருந்திய வெளிச்சத்தில் இருப்போம். இபபோதே நாம் அந்த வெளிச்சத்துக்கு வராமல் இருப்பது ஏன்?


சில வேளைகளில் மேகம் நம்மேல் நிழலிடலாம். ஆனால் நாம் இயேசுவை நம்பினால் நாம் இருளில் நிலைத்திருப்பதில்லை. நமக்குப் பகலில் இருப்பதுபோன்ற வெளிச்சம் அளிக்க அவர் வந்தார். அவர் வந்தது வீணாய்ப் போய்விடலாமா? நமக்கு நம்பிக்கை இருந்தால் சூரியவெளிச்சத்தைப் பெறும் சிறப்புரிமை உள்ளவர்கள் ஆவோம். அவ் வெளிச்சத்தைப் பெற்று அனுபவிப்போமாக. இயற்கையான ஒழுக்கச் சீர்கேடும், அறியாமையும், ஜயுறவும், மனக்கசப்பும், பாவமும், திகிலுமான இரவிலிருந்து நம்மை விடுவிக்கவே இயேசு வந்தார். சூரியன் உதித்தால் வெளிச்சமும் வெப்பமும் அளிக்காமற் போவதில்லை. அதைப்போலவே அவரும் வீணாக வரவில்லை என்பதை விசுவாசிகள் எல்லாரும் அறிவார்கள்.


அன்பான சகோதரனே, உன் சோர்வை உதறித் தள்ளு. இருளில் நிலைத்திராமல் வெளிச்சத்தில் நிலைத்திரு. உன் நம்பிக்கை, மகிழ்சி, பரலோகம் எல்லாம் இயேசுவில்தான். அவரை நோக்கிப் பார். அவரையே நோக்கிப் பார். சூரிய உதயத்தின்போது பறவைகளும் கிருபாசனத்தின்முன் தேவதூதர்களும் மகிழ்சி அடைவதுபோன்ற மகிழ்சியை நீயும் பெறுவாய்.

No comments:

Post a Comment