Friday 8 March 2013

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்  -பாகம் 1

by Johnson Durai Mavadi on Sunday, February 24, 2013 at 6:34pm ·

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்
உன்னதப்பாட்டு முதலாம் அதிகாரத்தில் 2 முதல் 7 வரையுள்ள வசனங்களில்
உரையாடுபவள் மனவாட்டியானவள் அவற்றில் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள்,அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்த ஒருவருடைய சொற்களல்ல ,ஏனெனில் ,அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போல அழகும் சௌந்தரியமுமற்றவராயிருக்கிறார் (ஏசா53:2,3)
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
ஆனால் அவருடைய அழகைப் பார்க்கும்படி மணவாட்டியின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன . அவருடைய அன்பை நிறைவான விதத்தில் அனுபவிக்கும்படி ஏங்குகிறாள்
அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது. (உன் 1:2)
இது நம் ஆவிக்குரிய ஜீவியத்தின் வளர்ச்சியின் ஒரு தனிப்பட்ட நிலவரத்தைக் குறிப்பாக வெளிப்படுத்துவதாயிருக்கிறது.தே
வனுடைய அன்பின் உரையாடல்களையும் ,அவருடைய சமுகத்தின் வெளிப்படுத்தல்களையும் நம் புலன்களால் கண்டுணரத்தக்க விதத்தில்
நாம் அவைகளைப்பெறவேண்டும் என்ற வாஞ்சையைத் தேவனே நமக்கு உரிமையாக அளிப்பதை இந்த அனுபவம் நமக்கு தருகிறது போலுள்ளது.
முன்பு ஒருபோதும் மனவாட்டி இவ்விதம் இருக்கவில்லை.ஒருகாலத்தில்
சமுதாயத்திலுள்ள பல்வேறு கூட்டங்களோடும், மற்ற அலுவல்களிலும் அவள் திருப்தியடைந்தவளாய் இருந்தாள்.ஆனால் இப்போது அவளுக்கு அவைகள்முன்னொருகாலத்தில்இருந்த்
துபோல்இருக்கவேமுடியாது.
மணவாட்டி தன் ஆண்டவரை நேசிப்பதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.
அவரைத் தவிர வேறந்த சமுதாய நட்புறவும் அவளைத் திருப்திப்படுத்த முடியாது. அவரில்லாமல் அவளுக்கு வேறெந்த வகையிலும் திருப்தியில்லை.இப்போது அவரில் அவளிருக்கும் சந்தோஷம் ,இப்பூமியில்
பரலோகத்தை அனுபவிப்பதைப் போன்றதே. அவள் எப்போதும் அவருடைய
சமுகத்தை வாஞ்சித்து அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அன்பு எப்பொதும் ஒரே நிலையிலிருக்கமுடியாது ஒன்று குன்றி போக வேண்டும்
அல்லது வளரவேண்டும் .நம்முடைய இருதயங்களில் நியாயமற்ற தவறான
பயங்கள் இருப்பினும் ,தெய்வீக அன்பு நிச்சியமாகவே வெற்றி சிறக்கும்
----தொடரும் மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின் ஐக்கியம்
http://www.facebook.com/johnson.duraimavadi

No comments:

Post a Comment