Saturday, 9 March 2013

தேவ ஜனமே! உணராமல் வஞ்சகத்திலே இருப்பதை அறியாயோ! உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
நீங்கள் இச்சித்த அழிந்து போற வாழ்வுக்காய் உபவாசிக்கிறீர்கள்”சிற்றின்பமே வாழ்கையென்று சேற்றினிலே புரளும்படி காத்திருக்கிறீர்கள்.பாதாளமா பின்னர் பார்த்துக்கொள்ளளாம் என்று மற்றவர்கள் கெட்டுப்போனாலும் சரி என் சுகவாழ்வுக்கு தடை வரகூடாது என்று துனிகரமாய் பொல்லாப்புக்கு அஞ்சாமல் அக்கிறமம் செய்து சுகஜீவியத்தில் புரண்டு பெருமையும் இருமாப்பாய் நடக்கிறாயே!தேவனுக்கு பத்தில் ஒன்று கொடுத்தால் போதும் ஆசிர்வாதம் கொட்டும் பின்ன ஏன் பரிசுத்தமாய் நடக்க வேண்டும் என்று இருதயத்தில் எண்ணிக்கொள்கிறாய்! உன் தேவன் நீதிபரர் என்பதை மறந்து போகும் அளவுக்கு உனக்கு சபையில் ராஜமரியாதை,சபைக்கு வரும்போது தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் தாழ்த்தி தேவனை உன் உல்லாச வாழ்வுக்கு துனைபோகும்படி வேண்டிக்கொள்கிறாய்! உன் மாய்மாலத்தை அவர் அறியாரோ! உன் அட்டுழியத்தைப் பார்த்து உன் பிதாவான சாத்தான் உன்னை ஆசிர்வதிக்கிறான்.நீயோ தேவன் என்னை ஆசீர்வதிக்கிறார் என்று பெருமையோடு சபையில் சாட்சி சொல்லுகிறாய் .நீ எப்படிசீர்கெட்டு நடந்தாலும் பரவாயில்லை தேவனை விசுவாசித்தாலே போதும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் என்று கூறும் ஆட்டுத்தோல் போர்த்தின ஊழியக்காரன் பேச்சை கேட்கிறாயே! அக்கிறமமான உன் ஜெபம் தேவனுக்கு அருவருப்பு அவர் அதற்கு செவிகொடுப்பதில்லை என்பதை உணராதுப்போனாய்!
செவிட்டுவீரியன் பாம்பான ஊழியனே!உன் குட்டிகளையே தின்று ஏப்பம்விடுகிறாயே!ஆவியானவர் சத்தத்தை அசட்டைப்பண்னி எத்தனை நாள் ஏமாற்றுவாய்!
சத்தியத்தை கூறி பரலோகத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்தாமல் உலக ஆசிவாதத்தை தேட வழிகாட்டின பிலேயாமின் புத்திரனே! உணரமாட்டாயோ! எப்பொழுதும் உலக ஆசிவாதத்தையே பேசி ஜனங்களை ஆத்துமாவில் பெலவீணர்களாக்கி மாம்சத்தில் பலவானாக்கிணாயே!
விசுவாசத்தை பெருக்க வழிவகுக்காமல் நீங்கள் 1000 ருபாய் கொடுத்தால் தேவன் பலமடங்கு உனக்கு கொடுப்பார் என்று கூறியே காலத்தை கழிக்கிறாய்.நீயும் பரலோகத்திற்கு போவதில்லை மற்றவர்களையும் போகவிட்டாத படி த்டுக்கிறாயே! மதிகெட்டு இருப்பதை அறியாமல் இருக்கும் ஜனமே விழித்துக்கொள்ள மாட்டாயோ!உன் பிதாக்கள் தேவனுக்காய் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தபோதும் தைரியமாய் தேவனுக்காய் தன் உயிரை துச்சமாய் என்னி இரத்த சாட்சியாய் மரித்தார்களே! அப்படிப்பட்ட நிலமை உன்னை நோக்கி வந்தால் நீ என்ன செய்வாய் .நீயோ தேவனை மறுதலித்து எதிரியான சாத்தானை சாஷ்டாங்காமாய் விழுந்து வணங்குவது நிச்சயமே!
தேவனுடைய அன்புக்கு முன்னால் உலகத்தில் லாபமான அனைத்தும் எனக்கு நஷ்டம் என்றுக்கூறி உலக சந்தோசத்தை உதறி தேவனுக்காய் பாடுபடுதலை தெரிந்து கொண்ட பவுலும்,பார்வோனின் புத்திரன் என்ற அரண்மணை வாழ்க்கையை உதறி தேவனுக்காய் தன் சகோதர்களோடு பாடுபட தெரிந்துக்கொண்ட மோசே இவர்களைப் பார் ஊழியக்காரனே! தன் சபை மக்களுக்காய் கிறிஸ்து உங்களில் உருவாகும் அளவும் கர்ப்பவேதணை படுகிறேன் என்ற பவுலைப்போல் வாழமாட்டாயோ! கிறிஸ்து ஒருவனில் இருந்து நற்கிரியை செய்யும் படியான சத்தியத்தை மறைத்துவிட்டாய் ,சுயத்தை சாடடித்து கிறிஸ்து உன்னில் ஜீவிக்கும் சத்தியத்தை ஜனங்களுக்கு மறைத்துவிட்டாயே!ஜனங்களோ சுயத்தின் படி தேவனுக்காய் வாழ முயற்சி செய்து தோற்று போனவுடன் சோர்ந்து தேவன் எனக்கு உதவி செய்வதில்லை என்று முறுமுறுத்துக்கொண்டு தேவனை விட சாத்தான் பெரியவனாய் எண்ணும் அளவும் மதிகெட்டுப்போனார்கள் .தேவனுக்காய் வாழதுடித்தவனும் பரிதாபமாய் வஞ்சிக்கப்பட்டான் ஐயோ! கிறிஸ்துவைப் பற்றின உண்மையிலிருந்து விலகிப்போகத்தக்க ஏவாளின் மனது வஞ்சிக்கப்பட்டது போல் என் சகோதரன் வஞ்சிக்கபடுகிறானே! ஊழியக்காரனே அவ்ன் இரத்தப்பலிக்கு நீதான் காரனம் போக்கு சொல்ல இடமில்லை.சாத்தானே! நீ ஆர்பரிப்பாயோ! என் தேவன் அவருடைய ஓங்கிய புயத்தோடு வருவார் என் சகோதர சகோதரிகளை மீட்டெடுக்க வருவார் .சாத்தானே!உனக்கு அக்கினிகடலே உன் வீடு உனக்கய் ஊழியம் செய்த தீர்க்கதரிசியும்,போதகனும் உன்னோடே பாதாளத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அலறுவார்கள்.தேவ ஊழியனே! மனந்திரும்பு ,தேவ ஜனமே! மனந்திரும்பு

No comments:

Post a Comment