Tuesday 26 March 2013


இயேசுகிறிஸ்து தேவகுமாரனாயிருந்தும் அடிமை ரூபமெடுத்து மனுஷ சாயலாகி நம்மைப்போல எல்லா விதத்திலும் சோதிக்கபட்டபடியால்; நம்முடைய வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்தவராய் நமக்கு எப்போதும் உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார். பூமியில் வாழ்ந்தவரை அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் (அப் 10:38)

அவர் விட்டுச்சென்ற நற்கிரியையை தொடரும்படி பூமியில் திருச்சபையாகிய நம்மையும் விட்டுச்சென்றிருக்கிறார். அவர் நம்முடைய வேதனைகளை உணர்ந்தவராய் இருப்பது போலவே நாமும் நாம் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், அவர்கள் வலியையும் உணர்ந்தவர்களாய் இருக்கிறோமா? ""Always put yourself in others' shoes" என்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு போய் ஜெபம்பண்ணி, கைதட்டி, பாட்டுப்பாடி ஆராதனை செய்து அதில் ஒரு போலி திருப்தியடைந்து விட்டு மறுபடியும் திங்கட்கிழமை அலுவலகங்களுக்குப் போய் வழக்கம்போல ஏ.சி அறையில் உட்கார்ந்து பொட்டிதட்டும் வேலையை தொடர்கிறோம். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையா?

அநாதையாய் வாழும் பிள்ளைகளின் மன உளைச்சல்கள் தெரியுமா? போரும், கலவரங்களும் விட்டுச்செல்லும் ஆறாக்காயங்களை உணர்ந்திருக்கிறோமா? தீண்டாமை வன்கொடுமை மனதில் ஏற்படுத்தும் ரணம் தெரியுமா? பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு மரணத்துக்காக ஏங்கும் முதியவர்களின் புலம்பல்களை காதுகொடுத்துக் கேட்டிருக்கிறோமா? குடிகாரக் கணவன் சம்பாதிக்கும் சிறு பணத்தையும் "அரசாங்கத்தின் டாஸ்மாக்கில்" கொடுத்துவிட்டுவர பசியுடன் உணவுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இருக்கும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு ஏழைத்தாய் படும் அவஸ்தைகள் புரியுமா?

இயற்கை பொய்த்துவிட்டதால் இருளடைந்த எதிர்காலத்தை சந்திக்க இயலாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் கண்ணீர், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கணவன் பலநாட்களாகியும் திரும்பாததால் பதைபதைக்கும் மனைவியின் பரிதவிப்பு, படிக்க ஆசையிருந்தும் படிக்க வசதியின்றி வேலைக்கு அனுப்பபடும் குழந்தையின் ஏக்கம் இதில் எதை உணர்ந்திருக்கிறோம்?

இயேசு; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத் 22:39) என்றார். அடுத்தவனின் துன்பத்தின் நாம் நம்மை வைத்துப்பார்த்து உணராமல் அவனிடத்தில் அன்புகூறுவது எப்படி?

இயேசுவை அறிந்தவரோ, அறியாதவரோ ஆனால் அடுத்தவனின் துயரத்தை அறிந்தவராய் நல்ல சமாரியன் தொனியில் பேசும் இந்த வாலிபரின் பேச்சைப் இந்தக் காணொளியில் பாருங்கள்!

உலக இரட்சகரை அறிந்தவர்கள் என்று மார்தட்டும் நாமோ, சுய முன்னேற்றத்தையும், செழிப்பையும், வெற்றுப் பரவசத்தையும் முன்னிறுத்தும் ஒரு கனியற்ற, கனலற்ற, சுரணையற்ற கிறிஸ்தவ மதத்தின், சபையின் அங்கத்தினராக இருந்து கொண்டிருப்பதும் தொடர்ந்து நிர்விசாரமாய் இருப்பதும் அவமானம், வெட்கக்கேடு!

ஆமோஸ் 6:1 சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு….ஐயோ!
thiru makkal.flv
தம்பி......கொஞ்சம் கூட பிசிறாதா, தெளிவான , உறுதியான.......உன் பேச்சு.....மனசாட்சி இருப்பவனை நிச்சயம் உலுக்கும்....இதுவரை 50 க்கும் மேற்பட்டோருடன் இதைப் பகிர்ந்திருக்கிறேன்........நேர ம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்து கொண்டிருக்கிறேன்....வாழ்க பல்லாண்டு......தமிழே உயிரே வணக்கம்....

No comments:

Post a Comment