Friday 8 March 2013

கற்பனைகளின் படி நடப்பதே அன்பு.

by Rose of Sharon- சாரோனின் ரோஜா on Sunday, July 3, 2011 at 9:28am ·
1 கொரிந்தியர் 13:1-
1.நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்
 மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும்.
அருமையான விசுவாசிகளே ….. ஞானஸ்நானம் எடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்று ஜெபம் பண்ண ஆரம்பித்தால் வாய் நிறைய அந்திய பாஷைகளை பேசுகிற என் அன்பு  சகோதர சகோதரிகளே….. வேதம் சொல்லுகிறது நீ மனுஷ பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் உனக்குள் அன்பில்லை என்றால்…நீ ஓசையிடுகிற கைத்தாளம் போல் தான் இருப்பாய் என்று…. அதற்காக நீ அந்நிய பாஷையில் பேசுவது துவறு என்று சொல்லவில்லை…ஆனால் வாய் நிறைய அந்நிய பாஷை பேசுவதால் மட்டும் நீ பரலோகம் போகலாம் என்று நினைத்தால்…அது உன்னுடைய தவறு.

2.நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
நான் தினமும் தேவனோடு சஞ்சரிக்கிறேன் ,தினமும் இரண்டு மூன்று மணி நேரம் ஜெபம் செய்கிறேன்,வேதம் வாசிக்கிறேன், அவரோடு தேவ இரகசியங்களை பகிர்ந்து கொள்கிறேன்.   எனக்கு தீர்க்க தரிசன வரம் இருக்கிறது…..நான் சொல்லுகின்ற தீர்க்க தரிசனங்கள் நிறைவேறுகின்றது.தேவனுடைய நாமத்தினால் இவற்றையெல்லாம் நான் செய்கிறேன்.ஆகவே பரலோகத்தில் எனக்கு இடமுண்டு என்றும் நினைத்து விடாதே.
எபிரெயர் 10:38 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். என்று சொன்னபடி அசைக்கமுடியாத விசுவாசம் உனக்கு இருந்தாலும் அந்த விசுவாசம் மட்டும் உன்னை பரலோகத்தில் கொண்டு சேர்க்காது,ஏனென்றால் யாக்கோபு 2 : 20  வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?என்றும்
மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்.அன்பு உனக்கு இல்லை என்றால் நீ ஒன்றும் இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
அப்போஸ்தலர் 8 ஆம் அதிகாரத்தை நாம் படித்தோமானால் அங்கே சமாரியாவில் உள்ள ஒரு பட்டனத்திலே சீமோன் எனும் மாய வித்தை காரன் இருந்தான் அவன் இயேசு கிறிஸ்துவைப்பற்றி பிலிப்பு பிரசங்கிப்பதை கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானமும் எடுத்து பிலப்புவை பற்றிக்கொண்டான் என்று 8 : 13 ல் வாசிக்கிறோம்.
( 13. அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். )
ஆனாலும் பேதுரு அந்த இடத்துக்கு வந்த போது அவனை பார்த்து அவனுடைய கிறியையின் நமித்தமாக அவனை கடிந்து கொள்வதை 8 : 22,23 வசனங்களில் பார்க்கலாம்.                                       (  22. ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள் ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
 23. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.  )
ஆகவே நான் ஞானஸ்நானம் எடுத்த விட்டேன் இனி என்னுடைய கடமை எல்லாம் முடிந்துவிட்டது ஆகவே நான் பரலோகம் செல்ல முடியும் என்பதும் சாத்தியமற்றது என்பது வேத வசனங்கள் மூலம் எங்களுக்கு தெளிவாகிறது.
மத்தேயு 7 : 22 - 23
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை@ அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
நீ அவருடைய நாமத்தை கொண்டு தீர்க்க தரிசனம் உரைக்கலாம் பிசாசுகளை துரத்தலாம், அநேக அற்புத அடையாளங்களை கூட நடப்பித்து காட்டலாம்.ஆனாலும் அது பூரணம் அல்ல  அன்பின் கிரியைகள் உன்னிடத்தில் இல்லையென்றால் , இயேசு கிறிஸ்து அவருடைய வருகையில் உன்னை பார்த்து அக்கிரம காரனே என்று தான் சொல்லப்போகிறார்.
                                                                ஆகவே நான் ஞானஸ்நானம் எடுத்து எந்த விதமான ஆவியின் வரங்களை உடையவனாய் இருந்தாலும், தீர்க்க தரிசனம் சொல்லலாம் , அந்நிய பாஷையில் பேசலாம் , ஜெபித்து நோய்களை குணமாக்கலாம்,பிசாசகளை துரத்தலாம், தேவனுடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களை நான் செய்தாலும் எனக்குள் அன்பு காணப்படாவிடின்..எனது பிரயாசம் முழுவதும் வீணாயிருக்கும்.என்று வேதம் எங்களுக்கு தெளிவாக எடுத்து கூறுகிறது.( இப்படிப்பட்ட காரியங்களும் அவசியம் ஆனால் அது  முழுமையல்ல )

ஏன் வேதத்திலே அன்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அன்பு என்றால் என்ன ? அதன் கிரியைகள் என்ன ?
2 யோவான் 1 : 6 சொல்லுகிறது அவருடைய கற்பனைகளின் படி நடப்பதே அன்பு.
1 யோவான் 4 : 8 சொல்லுகிறது அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வசனங்களிலும் நாம் சிந்திக்க வேண்டிய ஆலமான சத்தியங்கள் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.தேவன் நமக்கு கொடுத்த கற்பனைகள் 10 ஆகும்.இப்பொழுது பலர் சொல்லலாம் அவர் கொடுத்தது 10 கற்பனைகள் மட்டுமல்ல பழைய ஏற்பாட்டிலே அவர் ஏறாலமான கற்பனைகளை மோசே மூலம் கொடுத்திருக்கிறார் என்று.உண்மை ஆனால் தேவன் தமது விரலினாலேயே எழுதிக்கொடுத்த பிறதான கற்பனை இந்த 10 கற்பனையாகும்.
உபாகமம் 4 : 13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
உபாகமம் 5 : 22. இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார், அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
யாத்ராகமம் 31 : 18   சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
யாத்ராகமம் 32 : 16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
அகவே இந்த 10 கற்பனை தான் எல்லாவற்றிலும் பிரதானமானது ,இது தான் நாம் தேவனோடு செய்யும் உடன்படிக்கையின் பிரமானமுமாகும்;.
கற்பனைக்கும் அன்புக்கும் என்ன சப்பந்தம். ( கற்பனைகளின் படி நடப்பதே அன்பு. )
அப்படியானால் கற்பனை என்ன சொல்லுகிறது ?
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
    (யாத்ராகமம்; 20:3) ( உபாகமம் 5:7 )
2. ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு          
     உண்டாக்கவேண்டாம்; (யாத்ராகமம் 20 : 4 ); ( உபாகமம் 5 : 8 )
 3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
       (யாத்ராகமம் 20 : 7 ) ( உபாகமம் 5 : 11 )
4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
      (யாத்ராகமம்; 20 : 8 ) ( உபாகமம் 5 : 12 )
மேலே குறிப்பட்டுள்ள இந்த நான்கு கற்பனைகளும் தேவன் கொடுத்த 10 கற்பனைகளில் முதல் நான்கு கற்பனைகளுமாகும்.இது ஒரு மனிதன் தேவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அல்லது ஒரு மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் உள்ள அன்பை வெளிக்காட்டகிறது.இந்த நான்கு கற்பனையையும் தான் புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரதானமான முதல் கற்பனையாக கொடுத்தார்.
மத்தேயு 22 : 37   இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.
மாற்கு - 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. ( லூக்கா-10:27 )
உபாகமம் 6 : 5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
என்று அந்த நான்கு கற்பனைகளையும் சேர்த்தே ஒரே கற்பனையாக கொடுத்தார்.

5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
     ( யாத்ராகமம் 20 : 12 ) ( உபாகமம் 5:16 )
6. கொலை செய்யாதிருப்பாயாக.( யாத்ராகமம் 20 : 13 ) ( உபாகமம் 5 : 17 )
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.( யாத்ராகமம்; 20 : 14 ) ( உபாகமம் 5 : 18 )
8. களவு செய்யாதிருப்பாயாக.( யாத்ராகமம் 20 : 15 ) ( உபாகமம் 5 : 19 )
9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.
     ( யாத்ராகமம் 20 : 16 ) ( உபாகமம் 5 : 20 )
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
      ( யாத்ராகமம் 20 : 17 ) ( உபாகமம் 5 : 21 )
இங்கு குறிப்பிட்டுள்ள 5-10 வரையான 6 கற்பனைகளும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமையை அல்லது இரு மனிதருக்கிடையில் இருக்க வேண்டிய அன்பை வெளிக்காட்டுகிறது.இந்த கற்பனையை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
மத்தேயு 22:39 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
மாற்கு 12:31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். ( லூக்கா-10:27 )
என்று அந்த ஆறு கற்பனைகளையும் இரண்டாவது ஒரே கற்பனையாக கொடுத்தார்.
இவ்வாறு ஆதியிலே தேவன் தமது விரலினால் எழுதிக்கொடுத்த கற்பனைனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுருக்கமாக இரண்டு பிரதானமான கற்பனையாக கொடுத்து. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
மாற்கு12 : 31 ………….இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
மத்தேயு 22:40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

இந்த 10 கற்பனைகளில் ஒவ்வொன்றிலும் அன்பைத்தான் வெளிக்காட்டகிறது.இந்த அன்பின் கட்டளைகளை புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து இன்னும் ஆழமாக வலியுருத்துவதை கூட நாம் பார்க்கலாம். (மத்தேயு 5:21 இலிருந்து)
மாறாக இந்த நியாயபிரமானம் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழுகின்ற எமக்கு இல்லை நாம் கிருபையின் காலத்தில் வாழ்கிறோம் என்ற போதனை வேதத்துக்கு விரோதமான கள்ளப்போதனையாகும். நாம் கிருபையின் காலத்தில் தான் வாழ்கிறோம்.ஆனாலும் என்னை நான் தாழ்த்தி இந்த கற்பனைகளுக்கு நான் கீழ்படிந்தாலேயன்றி எனக்கு பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்பது சத்தியம்.
வெளி 22 : 14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
ஆகவே தான்
  2 யோவான் 1 : 6 இல் சொல்லுகிறது அவருடைய கற்பனைகளின் படி நடப்பதே அன்பு.என்று.
அந்த அன்பின் கட்டளைகள் இருக்கின்ற இடத்திலேயே தேவன் வாசம்பண்ணுகிறார்.

அந்த கட்டளைகளுக்கு கீழ்படிவதே அன்பு..

No comments:

Post a Comment