Friday 29 March 2013

சிலுவையைப்பற்றிய உபதேசம் by Johnson Durai Mavadi


இன்றைக்கும் அநேக குருடர்கள் இருக்கிறார்கள் உலக ஆசிர்வாதத்திற்காய் தேவனைதேடுகிறார்கள் ஆனால் உண்மையாய் தேடுவோர் மிக சிலரே!I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 3:19. அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்

உபாகமம் 4:34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

உபாகமம் 7:19 உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகியகர்த்தர் அப்படியே செய்வார்.

உபாகமம் 29:3 கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
சங்கீதம் 95:8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும்சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

நீதிமொழிகள் 27:21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
லூக்கா 8:13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

லூக்கா 22:28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
அப்போஸ்தலர் 20:19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.

I கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

யாக்கோபு 1:2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்புகர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

யாக்கோபு 1:4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
யாக்கோபு 1:13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

நீதிமொழிகள் 17:3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோகர்த்தர்.
I கொரிந்தியர் 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

எபிரெயர் 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

I பேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,


வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள்சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
சங்கீதம் 31:7 உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 119:67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.

சங்கீதம் 119:71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

சங்கீதம் 119:75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னைஉபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.


ஏசாயா 48:10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

மத்தேயு 24:9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.


யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.ரோமர் 5:3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

ரோமர் 5:4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


II கொரிந்தியர் 1:6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

II கொரிந்தியர் 1:8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

II கொரிந்தியர் 4:17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
II கொரிந்தியர் 6:4 மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

II கொரிந்தியர் 7:4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
எபேசியர் 3:13 ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.
I தெசலோனிக்கேயர் 1:6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

I தெசலோனிக்கேயர் 3:2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

I தெசலோனிக்கேயர் 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

I தெசலோனிக்கேயர் 3:4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

I தெசலோனிக்கேயர் 3:7 சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.

II தெசலோனிக்கேயர் 1:4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

II தெசலோனிக்கேயர் 1:6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

I தீமோத்தேயு 5:10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி,உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எபிரெயர் 10:32 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில்உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.

எபிரெயர் 10:33 நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

எபிரெயர் 11:37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;

யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

I பேதுரு 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.



உபாகமம் 13:3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர்உங்களைச் சோதிக்கிறார். 
யாக்கோபு 1:14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

I பேதுரு 1:6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

II பேதுரு 2:9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
வெளி 1:9 உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

வெளி 3:10 என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

ரோமர் 7:4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.

ரோமர் 7:5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
கலாத்தியர் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

எபேசியர் 5:9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

பிலிப்பியர் 1:10 தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின்கனிகளால் நிறைந்தவர்களாகி,

கொலோசெயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

தீத்து 3:14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.

எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

யாக்கோபு 3:18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

Tuesday 26 March 2013


 நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் இதுதான் தேவனுடைய தீர்மானமாய் இருக்கிறது.
அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
24. ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
25. இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். -பவுலைப்போல் சத்தியத்தின் வெளிப்பாட்டை அறிந்து வாழும் ஊழியர்களாய் இப்போது இருப்பதில்லையே!ஏன்
22. இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். -இப்படி பரிசுத்தஆவியானவருக்கு நாம் ஒரு ஆட்டைப்போல் கிழ்படிகிறோமா! என்றால் இல்லைதான் என்று சொல்லமுடியும்.இது எத்தனை முரட்டாட்டம்.எப்படி நம்மை அவர் வழிநடத்தமுடியும்.

ரோமர் 5:3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

ரோமர் 5:4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

-பவுல் உபத்திரவத்தில் மேன்மைபாராட்டியது போல் நம்மால் முடியுமா?இதற்குப்பதில் சத்தியத்தை அறிந்து அந்த சத்தியமாய் மாறவேண்டும் என்று என்னி தன்னை தாழ்த்தி சுயத்தை சாகஒப்புக்கொடுக்கும் போது இவை சாத்தியமே!
ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

II கொரிந்தியர் 1:4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

II கொரிந்தியர் 1:6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
II கொரிந்தியர் 1:8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

II கொரிந்தியர் 4:17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

II கொரிந்தியர் 6:3. இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

4. மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

5. அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,

6. கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

7. சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்

II கொரிந்தியர் 7:4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.

II கொரிந்தியர் 7:5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.


எபேசியர் 3:13 ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.

I தெசலோனிக்கேயர் 1:5. எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
I தெசலோனிக்கேயர் 3:2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

I தெசலோனிக்கேயர் 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

II தெசலோனிக்கேயர் 1:4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

II தெசலோனிக்கேயர் 1:6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.


எபிரெயர் 10:32 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.

எபிரெயர் 10:33 நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

எபிரெயர் 11:37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;

I பேதுரு 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

வெளி 1:9 உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.-யோவான்
,

இப்படி ஒரு ஊழியனே இன்றைக்குத்தேவை! அல்லவா!


நீங்கள் மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள். (The following are the verses that you can use while sharing the gospel of Salvation.
You may skip or quote more verses as you are led by the Holy Spirit for a given person.)



மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

லூக்கா 12:15 (Luke 12:15)
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23)
10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

மாற்கு 7:20-23 (Mark 7:20-23)
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21)
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

சங்கீதம் 10:4 (Psalms 10:4)
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5)
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)
6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.
12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்

ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறா

இயேசுகிறிஸ்து தேவகுமாரனாயிருந்தும் அடிமை ரூபமெடுத்து மனுஷ சாயலாகி நம்மைப்போல எல்லா விதத்திலும் சோதிக்கபட்டபடியால்; நம்முடைய வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்தவராய் நமக்கு எப்போதும் உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார். பூமியில் வாழ்ந்தவரை அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் (அப் 10:38)

அவர் விட்டுச்சென்ற நற்கிரியையை தொடரும்படி பூமியில் திருச்சபையாகிய நம்மையும் விட்டுச்சென்றிருக்கிறார். அவர் நம்முடைய வேதனைகளை உணர்ந்தவராய் இருப்பது போலவே நாமும் நாம் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், அவர்கள் வலியையும் உணர்ந்தவர்களாய் இருக்கிறோமா? ""Always put yourself in others' shoes" என்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு போய் ஜெபம்பண்ணி, கைதட்டி, பாட்டுப்பாடி ஆராதனை செய்து அதில் ஒரு போலி திருப்தியடைந்து விட்டு மறுபடியும் திங்கட்கிழமை அலுவலகங்களுக்குப் போய் வழக்கம்போல ஏ.சி அறையில் உட்கார்ந்து பொட்டிதட்டும் வேலையை தொடர்கிறோம். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையா?

அநாதையாய் வாழும் பிள்ளைகளின் மன உளைச்சல்கள் தெரியுமா? போரும், கலவரங்களும் விட்டுச்செல்லும் ஆறாக்காயங்களை உணர்ந்திருக்கிறோமா? தீண்டாமை வன்கொடுமை மனதில் ஏற்படுத்தும் ரணம் தெரியுமா? பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு மரணத்துக்காக ஏங்கும் முதியவர்களின் புலம்பல்களை காதுகொடுத்துக் கேட்டிருக்கிறோமா? குடிகாரக் கணவன் சம்பாதிக்கும் சிறு பணத்தையும் "அரசாங்கத்தின் டாஸ்மாக்கில்" கொடுத்துவிட்டுவர பசியுடன் உணவுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இருக்கும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு ஏழைத்தாய் படும் அவஸ்தைகள் புரியுமா?

இயற்கை பொய்த்துவிட்டதால் இருளடைந்த எதிர்காலத்தை சந்திக்க இயலாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் கண்ணீர், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கணவன் பலநாட்களாகியும் திரும்பாததால் பதைபதைக்கும் மனைவியின் பரிதவிப்பு, படிக்க ஆசையிருந்தும் படிக்க வசதியின்றி வேலைக்கு அனுப்பபடும் குழந்தையின் ஏக்கம் இதில் எதை உணர்ந்திருக்கிறோம்?

இயேசு; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத் 22:39) என்றார். அடுத்தவனின் துன்பத்தின் நாம் நம்மை வைத்துப்பார்த்து உணராமல் அவனிடத்தில் அன்புகூறுவது எப்படி?

இயேசுவை அறிந்தவரோ, அறியாதவரோ ஆனால் அடுத்தவனின் துயரத்தை அறிந்தவராய் நல்ல சமாரியன் தொனியில் பேசும் இந்த வாலிபரின் பேச்சைப் இந்தக் காணொளியில் பாருங்கள்!

உலக இரட்சகரை அறிந்தவர்கள் என்று மார்தட்டும் நாமோ, சுய முன்னேற்றத்தையும், செழிப்பையும், வெற்றுப் பரவசத்தையும் முன்னிறுத்தும் ஒரு கனியற்ற, கனலற்ற, சுரணையற்ற கிறிஸ்தவ மதத்தின், சபையின் அங்கத்தினராக இருந்து கொண்டிருப்பதும் தொடர்ந்து நிர்விசாரமாய் இருப்பதும் அவமானம், வெட்கக்கேடு!

ஆமோஸ் 6:1 சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு….ஐயோ!
thiru makkal.flv
தம்பி......கொஞ்சம் கூட பிசிறாதா, தெளிவான , உறுதியான.......உன் பேச்சு.....மனசாட்சி இருப்பவனை நிச்சயம் உலுக்கும்....இதுவரை 50 க்கும் மேற்பட்டோருடன் இதைப் பகிர்ந்திருக்கிறேன்........நேர ம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்து கொண்டிருக்கிறேன்....வாழ்க பல்லாண்டு......தமிழே உயிரே வணக்கம்....

Monday 25 March 2013


ராஜபக்சே என்ற மிருகம் செய்த திட்டமிட்ட இனஅழிப்பின் காரணமாக ஈழத்தில் இப்போது 89,000 விதவைகள், கொத்து குண்டுகளில் சிக்கி சிதறிய பச்சிளம் குழந்தைகள், கண்முன்னே நடந்த அவலங்களை தாங்கமுடியாமல் மனநோயாளியாய் போன பலர், உடலுறுப்புகளை இழந்து ஊனமாய் போன ஒரு பெருங்கூட்ட மக்கள். மருத்துவவசதி தடைசெய்யப்பட்டதால் உயிர் நீத்த அப்பாவிகள் பலர், குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா செத்துவிட்டார்களா என்ற உண்மை தெரியாது அலைமோதும் மக்கள் பலர், உலக நாடுகளுக்கு பயப்படாமல் போருக்கு பின்னும் தடையின்றி தொடரும் இனஅழிப்பு. இதுதான் இலங்கையின் இன்றைய நிலை!!!

உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் புகைப்பட, வீடியோ ஆவணங்கள் வந்தவண்ணம் உள்ளன, இதோ! ஒரு சின்னஞ்சிறுவனை சிதைத்த அரசபயங்கரவாதத்தை தோலுரிக்கும் புதிய தலைமுறையின் ஆவணப்படம். இதை பகிருங்கள்…உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!
பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரனின் மகன் ...


சகோதர சிநேகத்தில் நிலைத்திராதபோது குத்தாத மனசாட்சி சர்ச்சுக்குப் போகாவிட்டால் குத்துகிறதா?,
பிரசங்கங்களுக்கு கீழ்ப்படியாதபோது குத்தாத மனசாட்சி பிரசங்கம் கேட்காவிட்டால் குத்துகிறதா?,
வேதகட்டளைகளை மீறும்போது குத்தாத மனசாட்சி வேதபுத்தகத்தை வாசிக்காவிட்டால் குத்துகிறதா?,
சாதி, சபை பாகுபாட்டுக்கு குத்தாத மனசாட்சி திருவிருந்தில் பங்குபெறாவிட்டால் குத்துகிறதா?,
ஆவியானவரை துக்கப்படுத்தும்போது குத்தாத மனசாட்சி பாஸ்டரை துக்கப்படுத்தினால் குத்துகிறதா?,
தரித்திரரை புறக்கணிக்கும்போது குத்தாத மனசாட்சி தசமபாகம் கொடாவிட்டால் குத்துகிறதா?

ம்ம்ம்..அப்படியானால் அந்த மனசாட்சி ”வேறொரு சேனலுக்கு” டியூன் செய்யப்பட்டிருக்கிறது....
அந்த பிரபல சேனலுக்குப் பெயர் “(கிறிஸ்தவ) மதம்”
உலகின் அதிகபட்ச நேயர்களைக் கொண்டுள்ள பணக்கார சேனலான இதில் பரிசேயரும், பிசாசும் பங்குதாரர்கள்
இதன் நிகழ்ச்சிகளில் இயேசுகிறிஸ்து போல வேடமிட்டு நடிப்பது அந்திகிறிஸ்து.
இந்தச் சேனலில் ஆடலுக்கும், பாடலுக்கும், பரவசத்துக்கும், பொழுதுபோக்குக்கும், செண்டிமெண்டுக்கும் பஞ்சமேயில்லை.
இதில் ஒவ்வொரு ஞாயிறன்றும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி, யூத் ஸ்பெஷல், குழந்தைகள் நிகழ்ச்சி எல்லாம் உண்டு!
இதன் நேயர்களுக்கும், பங்காளர்களுக்கும் கடைசி நாளில் தங்கள் “ஜீவனை” அபராதமாக செலுத்தப்போவது உறுதி!

அபராதத்துக்குத் தப்ப உடனே சேனலை மாற்றுங்கள்...
வெகுசில நேயர்களையே கொண்டுள்ள ”இயேசு” என்ற பிரபலமில்லாத சேனலுக்கு!
  •  byசகோ. விஜய்

Thursday 21 March 2013

தேவஜனமே தமிழ் ஜனத்துக்கு நடந்த கொடுமையை கண்டு சாதாரனமாய் எடுப்பவர்களே!

by Johnson Durai Mavadi (Notes) on Thursday, March 21, 2013 at 7:32am
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.இங்கே அநியாயத்தை பார்த்து கண் சொருகி கொழுப்பு மிகுதியால் பேசும் சுகஜீவியே  கேள் ,உன் சொந்த பிள்ளையை உன் கண் எதிரே கற்பழித்து கொலை செய்யும் போது நீ அவர்களை மண்ணியும் என்று சொல்லுவாயா? உன் மனைவியை  உன் கண் எதிரே கற்பழித்து கொலை செய்யும் போது நீ அவர்களை மண்ணியும் என்று சொல்லுவாயா? உன் சிறுகுழந்தையை கொடுரமாய் சித்தரவதைசெய்து கொள்ளும் போது தேவனே இவர்களை மன்னியும் என்று சொல்லுவாயா? தேவனுடைய சிந்தையை அறியாதவனே ஒருசமயம் பவுல் கூட ஒருவன் தன் தப்பன் மனைவியை வைத்தவனை சரீர அழிவுக்காய் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தார் ஏன்? விபச்சாரம் செய்தவனுக்கே இப்படி என்றால் மிருகத்தை சாதாரனமாய் ம்,அன்னித்து விட்டுவிடு என்று சொல்ல உனக்கு என்னாதிகாரம் இருக்குது ? பாதிக்கப்பட்டவன் தான் மன்னிக்கவேண்டும் நீ அல்ல ,நீ செய்யவேண்டிய காரியம் அவனுக்காய் நீயாயம் செய்யும் படி குரல் கொடுத்து கூடுமானால் உன் ஜீவனைப்பாராமல் மிர்ருகத்தை எதிர்த்து சிறுமைப்பட்ட அந்த்த ஜனத்தை விடுவிக்க வகை பார்க்க வேண்டு இதை விட்டு விட்டு வாய்கிழிய வேத வசனத்தை எடுத்து புரட்டி துன்மார்க்கத்துக்கு சப்போட் பிடிக்கிறாய் ,நீயோ தேவனுடைய சிந்தையை அறியாதவன் என்பதை வெளிக்காட்டுகிறாய் உன் தனி அறையில் போய் உன் மனைவி பிள்ளை  எல்லோரும் கொடுரமாய் செத்துவிட்டால் அந்த நிலை எப்படி இருக்கொம் என்று யோசித்துப்பார் பின்பு இங்கே பேசு  . 1கொரி5: 1. உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.1கொரி5:5. அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
உபாகமம் 27:19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
நீதிமொழிகள் 23:10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
யோபு 30:25 துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
அப்படியானால் தேவ்ஜனமே தமிழ் ஜனத்துக்கு நடந்த அநியாயத்தை சாதாரனமாய் நீ எடுத்தாயானால் நீ துன்பப்டும்போது உன் நியாயங்கள் எடுபடாமல் போகும் நீ தேவனால் அசட்டைப்பன்னப்படுவாய் என்பது நிச்சயம் ஆகையால் உன் என்னத்தை மாற்றி உன் அறையில் போய் அந்த ஜனத்துக்காய் தேவனிடத்தில் அழுது புலம்பு இல்லாவிட்டால் நீ பேசின வார்த்தையே உன்னை நீயாயந்தீர்க்கும் .உன் சுகபோகத்தின் இளைப்பாறுதலால் இப்படி பேசினதால் அதே அநீதி உனக்கு சம்பவிக்கும் படி தேவன் இடங்கொடுத்தால் எப்படி இருக்கும்? பேதைகூட யோசிப்பான் இதற்கும் பின் உன் வார்த்தை இதற்கு மறுப்பு சொன்னால் உன்னை என்ன சொல்லுவது உன்னை நான் மூடன் என்று சொல்லவில்லை அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை ஆனால் உன்னைப்பார்த்து வேதம் சொல்லுது.
சங்கீதம் 92:6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

நீதிமொழிகள் 15:5 மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 18:2 மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

ஏசாயா 32:6 ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

உபாகமம் 25:1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

இலங்கையில் நடந்த கொடூரனைப்பார்த்து குற்றவாளி என்று சொல்

உபாகமம் 32:4 அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

ஆகையால் அவருடைய நீயாயத்துக்கு உகந்தவனாய் நடந்த்துக்கொண்டு பேசு

சங்கீதம் 68:5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
ஆகையால் அவரைப்போல் நீயும் நீதி செய்யும்படி இலங்கையில் உள்ள ஜனத்துக்காய் உன் வாயைத் திற

சங்கீதம் 72:4 ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

சங்கீதம் 76:8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,
ஏசாயா 3:14 கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
ஏசா58:1. சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
கிறிஸ்தவ ஜனமே! நீ உன் சுகபோகத்துக்காய் தேவனிடத்தில் அழுகிறாய் சிறுமைப்பபட்ட ஜனத்துக்கு அநீதி நடந்தால் அதை சாதாரனமாய் எடுத்து மற்றவனுக்கு உபதேசிக்கிறாய்,உன் சொந்த காரியத்திற்கு உபவாசிக்கிறாய் இதோ உனக்கு கொடுத்த கர்த்தருடைய வார்த்தையைக்கேள் 4. இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

எசா58:5. மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.8. அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

10. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.
இந்த வசனத்துக்கு நேராய் உன் ஜீவியம் இல்லாவிட்டால் ஆசிவாத்த வசனத்துக்கு எதிரான சாபம் உன்னைப்பிடிக்கும் அல்லவா?

எத்தனை கொடூரங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு

by Johnson Durai Mavadi (Notes) on Wednesday, March 20, 2013 at 8:28am
எத்தனை கொடூரங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தது அதுவும் தாய் தகப்பன் முன்னே இளம் பென்கள் இலங்கை மற்றும் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்டு குற்றுயிரானார்கள் இதுபோகாதென்று குழந்தைகள் ஆண்பிள்ளைகள் வருங்காலத்தில் புலியாய் மாறுவார்கள் என்று அவர்களை சுட்டுக்கொன்று எத்தனை கொடுரத்தை பார்த்தும் அவர்கள் உயிர் பிச்சை கேட்டு கூக்குரல் போட்டு கத்தியதை கேட்டும் அரசியல் நீதி பேசிக்கொண்டும் ஒரு நாட்டு பெரியமனிதன் சாவுக்காய் வக்காலத்து வாங்கி தமிழ் மக்கள் செத்தது சரியென்று கொஞ்சம் கூட ஈரக்கம் இன்றி பேசும் வாய்களைப் பார்க்கும் போது அவர்கள் வாயில் இரும்பை காய்த்து ஊற்றனும் போல் என் மாம்சம் வெறிகொள்கிறது.மற்றும் இத்தனைக்கொடுரங்களைப் பார்த்த கிறிஸ்தவ சபைகள் அதற்கு நாம் என்ன செய்யமுடியும் ஜெபிக்கதான் செய்யமுடியும் ஏதோ பாரம்பரிய ஜெபத்தை கொஞ்சம் கூட உயிரில்லாத ஜெபத்தை மெப்புக்காய் அரங்கேற்றியதைப்பார்க்கும்போது என் இதயம் அநேக கேள்வியை தேவனிடம் கேட்டது ,தேவனே சிறுமைப்பட்டவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களை காப்பாற்றுவீரே ஏன் இப்போது மவுனமாய் இருக்கிறீர் என்றேன் அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்த்தது ஏழைகளின்தேவன் தமது ஜனமாகிய ஏழைகளுக்காய் பழிவாங்க ஒரு யாகத்தை இப்பூமியில் நடத்துவார் அப்போது அவருடைய பிள்ளைகளாகிய உலகத்தின் அனைத்து சிறுமைப்பட்டவர்களுக்காய் பழிவாங்குவார் ஆனாலும் இந்த மாய்மாலகிறிஸ்தவர்களுக்கு என்ன தண்டனை என்று என் தேவனிடம் கேள்விக்கேட்டேன் அப்போது என் இதயத்தில் பதில் வந்தது இப்படிப்பட்ட உலக ஜீவிகளுக்கு தேவன் கொடுக்கும் தண்டனை நித்திய பாதாளம்தான் தன்னைப்போல் பிரரை நேசியாமல் சிறுமைப்பட்ட ஜனத்தின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக்க்கொள்கிறவன் கூக்குரல் இடுவார்கள் தேவன் காதை அடைத்துக்கொள்வார்.அவர்களுக்கு தேவன் தரும் தண்டைனை பெரியது.சங்9:12. இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.சங்76:7-9. நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,

வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது.




தேவஜனமே உன் இருதயத்தை அடைத்துக்கொண்டாய்*** சங் 82 :2-7எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

  பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.’***
உங்கள் அக்கிரமம் மிகுதியாய் போய்விட்டது.
தேவ ஜனமே திக்கற்ற பிள்ளைகள் உயிர் பிச்சை கேட்டு அலறும்போது உன் செவியை அடைத்து நிம்மதியாய் படுத்து தூங்கி எழுந்தாயே! உன் சுயநல ஜெபத்தைக்கொண்டு அதிகாலையில்தேவனைத் தேடும்போது திக்கற்ற பிள்ளைகள் கூக்குரல் உன் இருதயத்தில் உணர்த்தபடாதாவாறு உன் இருதயக்கண் இருண்டு போயிற்றே!பச்சிலம் குழந்தைகள் சரிரம் நாற்நாறாய் கிழிக்கப்பட்டு எறியப்பட்டதைப் பார்த்தும் உன் இதயம் சிம்மாசனத்தில் இருப்பது எப்படி? தேவஜனமே கேள் நீயாயதீர்ப்பு உன்னில் தொடங்கும் போது இவைகள் தான் உனக்கும் சம்பவிக்கும் தேவனிடத்தில் உதவிக்கேட்பாய் தேவனோ செவிசாய்ப்பதில்லை
நீதிமொழிகள் 17:5 ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
நீதிமொழிகள் 21:13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
சங்கீதம் 10:18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.
மல்கியா 3:5 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

தேவ ஜனமே! நீ அறிந்த தேவபக்தி என்ன?
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. என்று எழுதிருக்குதே! திக்கற்ற பிள்ளைகள் கூஇறலைக்கண்டு உன் வஸ்திரத்தை கிழித்து உபாவாசிக்கும் இந்த நேரத்தில் நீயோ கொட்டடித்து கைத்தட்டி தேவனை ஆறாதிக்கிறாய் உன் ஆராதைனையில் தேவன் மகிழ்வாரோ? சுயநலக்கார தேவஜனமே தேவன் உன்னைப்போல சுயநலக்காரர் அல்ல உன்னிடத்தில் அந்த இரத்தபலியைக்கேட்பார் நீ தப்புவதில்லை உன் முதலைக்கண்ணீர் அவரிடம் செல்லுபடியாகாது.

சங்94 1-7நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.

  கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

  விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

தேவஜனமே! மனந்திரும்பு உன் சுகபோகத்தை விட்டு வெளியே வா!

சங்94:8-10ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

 ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?

சங்94:16. துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
தேவஜனமே உன் பதில் என்ன?

இலங்கையில் பிணங்களுக்கு சமாதான ஊளையிட்ட ஓநாய்கள் !!!

by Lakshmipathi Balaji (Notes) on Sunday, March 17, 2013 at 6:50pm
சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்கிய கள்ளத்தீர்க்கதரிசிகள் -எரேமியா 6:14

கிறிஸ்துவின் நாமத்தில் இப்பதிவை தொடங்குகிறேன்.

கடந்து இரண்டு வாரங்களாக  இலங்கை பிரச்சனை தமிழகத்தில் பல மனங்களையும் சிந்தைகளையும் திருப்பி போட்டாலும் சில கேள்விகள் எழும்பி கொண்டேதான் இருந்தன. அக்கேள்விகள் பின்வருமாறு? பல பேர் என்னை உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களை செய்கிறாய் என்று கூறினர். ஆனால் இவைகள் உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்டவை அல்ல, தீவிரமாக ஆவியிலே த்யானித்து, உண்மைகளின் வெளிச்சத்தில் எழுத பட்டவைகளே. உண்மையின் தேவன் ஏசு கிறிஸ்துவே சாட்சி.

இலங்கையில் போர் நிறுத்தம்:

பல ஆண்டுகாலமாக நீடித்து கொண்டிருந்த, இலங்கையில் நடந்த போரானது மே மாதம் 2009 வருடம் சில முக்கிய நபர்களை கொல்லப்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டது . ராஜபக்சேவின் கூற்றுபடி இதன்பின் இலங்கையில் ஒருத்தரும் கொல்லப்படவில்லை என்றும் இலங்கை ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும் பரப்பபட்டது. இது பொய் என்பது உலகம் அறிந்தது.

கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்:

இது ஒரு பக்கம் இருக்க, பல தமிழ் மக்கள் போருக்கு பின்பும் அங்கு கொல்லப்பட்டதே இப்பொழுது இனபடுகொலையாகவும் போற்குற்றமாகவும் இலங்கை மீது வைக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கபட்ட முன்பும் பிறகும் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொன்று  புதைக்கப்பட்டனர் என்பது உலகறிந்தது.

இது உணர்ச்சிவயப்பட்டு எழுதிய ஒரு கட்டுரை அல்ல. அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரையும் அல்ல. விடுதலைப்புலிகளுக்கோ ஆயுதப்போராட்டத்துக்கோ ஆதரவான கட்டுரையும் அல்லவே அல்ல. இது போர் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைக் கண்டு மனம் நொறுங்கிப்போன ஒரு சராசரி கிறிஸ்தவனின் புலம்பல்.

நான் சிங்கப்பூரில் வேலை செய்த நாட்களில்  2009-இல் இலங்கையில் நடந்த போர் மற்றும் அதைத் தொடர்ந்த பயங்கர இனப்படுகொலை செய்திகளையும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பாதிக்கபட்ட காணொளிகளையும் கண்டு மனம் உடைந்து, தனிமையில் பலநாட்கள் பைத்தியக்காரன் போல அழுது, எங்கிருந்தாவது இந்த ஜனத்துக்கு ஆறுதல் வராதா என்று அங்கலாய்த்து, கடைசியில் அரசியல் தலைவர்களும், கட்சி சார்ந்த ஊடகங்களும் கழுத்தறுத்து எல்லாம் கைநழுவிப்போன பின்னர்  அன்று முதல் மனதில் கனன்று எரிந்து கொண்டிருந்த ஆற்றாமை நெருப்பை இன்று இக்கட்டுரையில் கொட்டித்தீர்க்கிறேன் அவ்வளவுதான்! அந்த நாட்களில் இன்று இருப்பதுபோல எனக்கு முகநூல், வலைப்பூ என்று எதுவும் எனக்குத் தெரியாது.


Image Courtesy: voteforeelam.blogspot.com

போர் உச்சகட்டத்தில் நடந்து வரலாறு காணாத மனித உரிமை மீறலும் இனப்படுகொலையும் நடந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் அலறிய வேளையில் தமிழகம் உட்பட உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் போராட்டத்தீ பற்றியெரிந்தது. சிலர் அங்கு போரை உடனே நிறுத்தி எஞ்சியிருக்கும் ஜனங்களையாவது காப்பாற்றவேண்டும் என்ற அவசர கோரிக்கையை அரசின் கவனத்தை ஈர்க்கும்படி முன்வைக்க வேண்டும் என்பதற்காக தங்களையே தீயிட்டு கொளுத்தி மடிந்தார்கள். அவர்களுள் முக்கியமாக எனது உயிரை ஆயுதமாக்கிப் போராடுங்கள் என்று தீக்குளித்த முத்துக்குமாரும் அவர் எழுதிய மரணசாசனமும் தமிழர் வரலாற்றில் நீங்காத இடம்பெற்றுவிட்டது.  இத்தனைக்கும் இவர் இலங்கைத்தமிழர் கூட இல்லை. ஆனால் தன் சக தமிழ் சகோதரனுக்காக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பு" என்ற வேதவார்த்தையை நினைப்பூட்டி எனக்கு சவால்விட்டது.


Image Courtesy: www.asianews.it

இது ஒருபக்கமிருக்க…நீதிமொழிகள் 30:18-இல் ஞானி சாலமோன் சொல்லுவாரல்லவா எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு என்று …என்னைப் பொறுத்தவரை அந்தச் சூழ்நிலையில் என்னை ஆச்சரியப்படுத்தியதும் அதிர்ச்சியடைய வைத்ததும் ஓன்றே ஒன்றுதான். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் தமிழ் வெகுஜனக் கிறிஸ்தவர்களும், பெரிய திருச்சபைகளும் புகழ்பெற்ற ஊழியக்காரர்களும் தங்களைச் சுற்றி எதுவுமே நடக்காதது போல தனது அனுதினவாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்ததுதான் எனக்கு தலைசுற்ற வைத்தது…எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிந்தது என்பது இன்றுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படியானால் "இன்றைய கிறிஸ்தவ சபை" என்ற கட்டமைப்பு எந்த மூலைக்கல்லின்மேல் கட்டப்பட்டிருக்கிறது என அதன் அடிப்படைமீதே சந்தேகத்தைப் பாய்ச்சிய ஆரம்பப்புள்ளிகளில் இதுவும் ஒன்று! எனக்கு தெரிந்த வட்டங்களிலெல்லாம் விசாரித்ததுவரை வெகு சில சபைகளிலேயே போர் நிறுத்தத்துக்காகவும் பாதிக்கபட்டவர்களுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கபட்டு இருந்திருக்கிறது. அதுவும் பாரம்பரியமாக…

அச்சூழ்நிலையில் சிங்கப்பூரில் கட்டிடவேலை மற்றும் கப்பல் துறைமுகத்தில் வேலைசெய்யும் தமிழக சகோதரர்களிடையே பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நொறுங்கிய மனதோடு இலங்கையின் நிலவரத்தை குறித்து சொல்லி அவர்களை ஜெபத்துக்குள் நடத்த தொடங்கியபோது ஒருவர் ஓடிவந்து என்னிடமிருந்த மைக்கை பிடுங்கி குழந்தைபோல அழத்தொடங்கினார். "நண்பர்களே அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பால்பவுடர் கூட செல்ல முடியாதபடி எல்லாம் தடைப்பட்டிருக்கிறதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.  பச்சிளம் குழந்தைகள் உணவின்றி மருந்தின்றி பசியாலும் குண்டடிபட்டும் சாகிறார்களே! நானும் பிள்ளைகளைப் பெற்றவன் என்னால் இந்த பாரத்தை தாங்கமுடியவில்லை! நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை அந்தக் கடவுளாவது கண்ணைத்திறக்கட்டும் " என்றெல்லாம் சொல்லி சத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார், யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் அவர் யாரென்று விசாரித்தபோது அன்றுதான் முதல்முறையாக ஒரு நண்பரால் அழைத்துவரப்பட்ட ஒரு இந்து சகோதரர் என்பது புரிந்தது.

போர்சூழலிலும் போர் முடிந்தபின்னும் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களும், ஊழியங்களும் அங்கே விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது உண்மைதான். ஆனால் வெகுஜன கிறிஸ்தவர்களின் மனநிலை என்ன? சபைத்தலைவர்கள் மற்றும் ஊழியக்காரர்களின் நிலைப்பாடு என்ன? என் கேள்வி இலங்கை இனப்படுகொலை பற்றி மாத்திரமல்ல, அது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளாக இருக்கட்டும், சுற்றுச்சூழல் பாதிப்பாக இருக்கட்டும், அரசுகளே சாராய வியாபாரிகளாக மாறி ஏழைக்குடிகளை கெடுக்கும் அவலமாகட்டும், ஜாதி வன்கொடுமைகளாகட்டும், தரித்திரர் ஒடுக்கப்படுவதாகட்டும்  இப்படி பொது விஷயத்தில் எதில் அக்கறை காட்டியிருக்கிறோம்? நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களுக்கெதிராக திருச்சபையாக என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்?

ஈழத்தில் பாதிக்கபட்ட மக்களைப்பற்றி பேச ஆரம்பித்தாலே "தம்பி! உனக்கு அங்கு நடக்கும் உண்மை நிலவரம் தெரியவில்லை, நீ இலங்கைக்கு போயிருக்கிறாயா? நான் ஊழியத்துக்கு பலமுறை போயிருக்கிறேன். உண்மையில் எல்லாப்பிரச்சனைகளுக்கும் இந்தப் புலிகள்தான் காரணம்! இலங்கை அரசு ரொம்ப நியாயமானது " என்ற போர்வையில் சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது புலிவெறுப்புக்கும் சிங்களப்பாசத்துக்கும் காரணம் என்ன என்பதையும், இவர்களது நதிமூலங்களையும் ஆராய்ந்து பார்த்தால் இவர்களது ஊழியத்துக்கோ, டிவி சேனலுக்கோ இலங்கையில் ஒரு அலுவலகம் இருக்கும். அல்லது இவர்களுக்கு சிங்களப் பாஸ்டர்களும், விசுவாசிகளும் நிறைய நண்பர்களாக இருப்பார்கள். அல்லது அடிக்கடி ஊழியத்தின் நிமித்தம் இலங்கை செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். அரசுக்கு எதிராகப் பேசும் வெளிநாட்டினருக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை அங்கு இருப்பதை நாம் யாவரும் உணர்ந்திருக்கிறோம். எனவே இவர்களது பயமும் நியாயமானதுதான். உங்களைத் தேடி "வெள்ளை வேன்" வராதபடி கர்த்தர்தாமே உங்களையும், உங்கள் இலங்கை அலுவலகத்தையும் காப்பாராக! ஆனால் உங்கள் பயத்தை நியாயப்படுத்த தவறான திரிக்கபட்ட தகவல்களைக் கூறாமல் இருக்கலாம். இலங்கை அரசு மற்றும் ராணுவம் இவற்றின் இலட்சணம் ஐ.நா வரை சந்தி சிரிப்பதை யாவரும் அறிவோம்.

யார் குற்றவாளி? என்ற ஆராய்ச்சிக்குள் நாம் இப்போது செல்லாதிருக்கலாம். "இது பயங்கவாதத்துக்கு எதிரான போர்!" என்று அவர்கள் சொல்வார்கள், "இது எம் மண்ணுக்கான விடுதலைக்கான போர்!" என்று இவர்கள் சொல்வார்கள். இது இன்று நேற்று பிரச்சனையல்ல, மிக நீண்ட நெடிய வரலாறுடையது. இதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை ஆராய்ச்சி செய்ய இந்த ஆவிக்குரிய தளம் உகந்ததல்ல. எமது நோக்கம் மண்ணுக்காக நடந்த யுத்தத்தில் சிக்கி மடிந்த நம் சொந்த மக்களுக்காக தமிழ் கிறிஸ்தவர்களாக, நல்ல சமாரியராக நாம் என்ன செய்தோம்? இந்தப் பிரச்சனை மாத்திரமல்ல தரித்திரரையும், திக்கற்றவர்களையும், ஒடுக்கபட்டவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் எந்தவொரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை ஆராய்வதே இக்கட்டுரை தொடரின் நோக்கம்.

மேற்கண்ட முன்னுரையை உள்வாங்கிக்கொண்டு கட்டுரையை தொடர்வது ஆசிரியரின் நோக்கம் குறித்த தேவையற்ற சந்தேகங்களை களைந்து கட்டுரையின் சாரத்தை புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

இனி என் இதயம் வெடித்துக் கிளம்பும் அங்கலாய்ப்பைக் கேளுங்கள்! இது பலநாட்கள் நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருந்தது!

உண்மையில் மதவாதிகளே கடவுளை விட்டு தூரம் நிற்கிறார்கள் என்பதற்கு இந்நூற்றாண்டின் கொடூர இனப்படுகொலை விஷயத்தில் so called ஆவிக்குரியவர்கள் இன்றுவரை சாதித்துவரும் கள்ள மவுனமே சாட்சி.

பரிசுத்தத்தையும், பரலோக நீதியையும் மொத்த குத்தகைக்கு எடுத்த லேவியர்களும் ஆசாரியர்களும் தொடை நடுங்கிக்கொண்டு ஒதுங்கி நிற்க, புறஜாதிகளென்றும் அவிசுவாசிகளென்றும் முத்திரை குத்தப்பட்ட சாமானியர்களே இன்று நல்லசமாரியர்களாய் நொறுக்கபட்டவனின் நீதிக்காக செருக்களம் காண்கிறார்கள்.

போர் நடந்த காலங்களில் “ஆயுதப்போராட்டம்” என்று சொல்லி புலிகள் மீது பழியைப் போட்டு மவுனம் காத்தார்கள், ஈரக்கொலையை நடுங்கவைக்கும் இனக்கொலை சான்றுகள் ஒன்றன்பின் வெளிவந்த பின்னும் அது கண்டு மனசாட்சியில் அக்கினி பற்றியெரிய உலக நாடுகளெல்லாம் வாயைத் திறந்து கதற ஆரம்பித்த பின்னும் திருச்சபைகள் மவுனத்தை தொடருவதேன்? அதுவும் தமிழ்திருச்சபைகள்?????

இப்பிரச்சனையை முதலில் கையிலெடுத்து களமிறங்கி இருந்திருக்க வேண்டியது யார்? ஐ.நாவா? அமெரிக்காவா? இந்தியாவா? அல்லது நீதிதேவனின் (ஏசாயா 30:18) பிள்ளைகள் என்று மார்தட்டிச்சொல்லும் கிறிஸ்தவ சபைகளா? திருச்சபைகள் இந்தப் பிரச்சனையை எப்படி கையாண்டிருக்க முடியும் சகோதரனே? என்று கேட்பவர்களுக்கு பதில் தொடர்ந்து என்னோடு கட்டுரைக்குள் கடந்து வாருங்கள்.


Image Courtesy: www.documentingreality.com

கடைசி யுத்தம் நடந்த போது பாலகர்களும் கர்ப்பிணிகளும் நோயாளிகளும் தங்கள் ஜீவனுக்காக அபயமிட்டபோது இங்கே நிர்விசாரிகள் ஆராதனை என்ற பெயரில் இசைக்கருவிகள் முழங்க கைகளைத் தட்டி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததும், பண்டிகை சந்தோஷங்களில் மூழ்கியிருந்ததும் (அது டிசம்பர், ஜனவரி மாதங்கள்) தங்கள் சொந்தப் பிரச்சனைகளுக்காக பரலோகக் கதவை தட்டிக்கொண்டும் இருந்தது உண்மையா இல்லையா?


Image Courtesy: www.srilankaguardian.org

பதுங்குகுழிக்குள்ளிருந்து பச்சிளம் பிள்ளைகள் அலறித்துடித்த கூக்குரலுக்கு தன் காதுகளைப் பொத்திக்கொண்டு தேவனுடைய வீட்டில் ஆராதனைகளுக்குள் மூழ்கிப்போன ஆவிக்குரியவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அவருடைய வீட்டிலிருந்து துவங்கும் நாளில் பட்சிக்கும் அக்கினியானவரின் பிரசன்னத்துக்குத் தப்ப அதே பதுங்குகுழிகளைத் தேடி ஓடவேண்டியதிருக்கும்.(நீதிமொழிகள் 21:13)

காரணம் என்னதெரியுமா? நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இருப்பது பாவம் என்று நீதிமொழிகள் 3:27 சொல்லுகிறது.

இதன் தொடர்ச்சியை வாசிக்க: http://alturl.com/xkje4

-சகோ.விஜய்

இக்கட்டுரையை வாசிப்பதற்கு முன்னால் தயவுசெய்து இக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு பின்னர் இதைத் தொடரவும். முதல் பாகம்:
http://alturl.com/wbggr

அந்நிய பாஷை பேசும்போது மாத்திரமல்ல...
அல்லேலூயா, ஆமென் போடும்போது மாத்திரமல்ல...
பிரசங்கம் பண்ணும்போது மாத்திரமல்ல...
திருவிருந்து வாங்கும்போது மாத்திரமல்ல...

 ஊமையனுக்காகவும், திக்கற்றவர்களாயிருக்கும் எல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற என்று நீதிமொழிகள் 31:8 சொல்லுகிறது. இது ஆவிக்குரியது மாத்திரமல்ல ஆண்டவரின் கட்டளையும்கூட.


Image Courtesy: static.guim.co.uk

நொடிக்கு ஒருமுறை இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் விசுவாசிகளிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். உங்கள் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். அங்கே நம் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்படுவதைக் கண்டும், மிருகங்களைப்போல வரிசையாக பிணங்கள் கிடத்தி வைத்திருப்பது கண்டும் முற்றாக நொறுங்கிப்போய் தேவசமூகத்தில் முடங்கிய முழங்கால்கள் எத்தனை? வீதியெங்கும் மூர்ச்சித்துக் கிடந்த மழலைகளுக்காய் நதியளவு கண்ணீர்விட்ட கண்கள் எத்தனை? மிச்சமிருந்த அப்பாவிகளின் ஜீவனுக்காக போர்நிறுத்தம் வேண்டி உணவை துறந்து உபவாசமிருந்த உணர்வுள்ள உள்ளங்கள் எத்தனை?  ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த சூழலில் சாதாரண மனிதனும் செய்யக்கூடிய இதில் ஒன்றைக்கூட செய்திருக்கவில்லையானால் நம்மை யாரேனும் "அட வெள்ளையடிக்கபட்ட கல்லறையே!" என்று அழைத்தால் அதில் ஏதேனும் தவறிருக்குமா?

 அடுத்ததாக சபைகளுக்கு இந்தக் கேள்வி: பாஸ்டருக்கு எறும்பு கடித்தால் கூட "சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்… (யோவேல் 2:15-17)என்று போஸ்டர் அடித்து உபவாசம், ஜெபம் என்று  எல்லோரையும் கலங்கடிக்கும் ஆவிக்குரிய சபைகள் சமகாலத்தில் வெகு அருகாமையில் சொந்த ஜனங்கள் இரத்தம் சிந்தியபோது செய்தது என்ன?

 2002-இல் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரபட்டபோது பொங்கிக்கொண்டு வந்த வீரமும் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த உபவாசங்களும் ஜெபங்களும், கண்டண அறிக்கைகளும், போராட்டங்களும் இலங்கையிலிருந்து அபயக்குரல் கேட்கும்போது எங்கே போனது?

 யுத்தம் வேறு , ஊழியத்துக்கு விரோதமான பிசாசின் அழுத்தம் வேறு என்று சொல்பவர்களுக்கு...

 மதமாற்றத் தடைச்சட்டம் சுவிசேஷத்துக்கும் சபைகளுக்கும் எதிரானது என்றால் மனித உயிர்கள் கொல்லப்படுவது சபைகளுக்கு ஆதரவானதா? போருக்கும், இனக்கலவரங்களுக்கும், பயங்கரவாதங்களுக்கும் மனித உயிர்களை பறிகொடுத்துவிட்டு கல்லறைகளுக்கா இயேசுவை அறிவிக்கப்போகிறோம்?

 கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை எதிர்த்து 72 மணிநேர உபவாசத்தில் எல்லோரும் ஒன்றுகூடியது நினைவிருக்கிறதா? ஜெபம்பண்ணி சிலகாலத்துக்குள் அச்சட்டம் அறவே நீக்கபட்ட பின்னர் அது ஜெபத்துக்கு தேவன் அளித்த பதில் என்று ஒன்றுசேர்ந்து எல்லோரும் கொண்டாடியது நினைவிருக்கிறதா? இப்போது சொல்லுங்கள் எது முக்கியம் ஊழியமா? மனித உயிரா?

 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத் 23:17) என அன்று இயேசு கேட்டது போல இன்று உங்களிடம் "ஆத்துமாக்களுக்கு செய்யும் ஊழியமா?" அல்லது "ஊழியத்தைக் கொள்ளும் ஆத்துமாக்களா?" எது முக்கியம் என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? தமிழருக்கு மாத்திரமல்ல, தெலுங்கருக்கும், மலையாளிக்கும், மார்வாடிக்கும். மராட்டியருக்கும் ஏன் சிங்களவருக்கும்கூட நாம் பாரபட்சமின்றி ஜெபிக்க வேண்டியவர்கள், அநியாயம் யாரால் யாருக்கு நடந்தாலும் அங்கே சபை தனது காலைப் பதித்தாகவேண்டும். ஏனென்றால் பரலோக அரசரின் பூலோக அலுவலகமே சபை! தேவன் தனது நீதியை பூமியில் செலுத்த விரும்பினால் அதை சபை மூலமாகவே செய்ய விரும்புகிறார்.

 கிறிஸ்தவ சபைகளுக்கு முன்மாதிரியான ஆதித்திருச்சபையினர் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டார்களா? நாம் எப்படி தலையிட முடியும் என்று கேட்பவர்களுக்கு…

 ஆதித்திருச்பையினர் சொற்ப எண்ணிக்கையுள்ளவர்கள். அரசாலும் மதத்தாலும் கொடூரமாய் நசுக்கபட்டவர்கள். இதைப் புரிந்துகொள்ள யூதர்களின் வரலாற்றைப் பாருங்கள்! யூதர்கள் அந்நியரிடம் அடிமைகளாய் நசுக்கப்பட்ட காலங்களும் உண்டு, அதே யூதர்கள் அந்நிய அரசர்கள் ஆண்ட காலத்திலேயே செல்வாக்குள்ளவர்களாய் கோலோச்சிய காலங்களும் உண்டு. யோசேப்பு, எஸ்தர், மொர்தேகாய், தானியேல், நெகேமியா என்று தேவசித்தத்தை அரசர்கள் மூலம் செயல்படுத்திய பலரை வரிசைப்படுத்தலாம். நசுக்கப்பட்டிருந்த காலங்களைக்குறித்து கர்த்தர் கேள்வி கேட்கமாட்டார். ஆனால் பெரும்பான்மை சக்தியாக பலம் பெற்று அதிகார மையங்களில் பேசும் அளவுக்கு பெலப்படும்போது சபை கர்த்தரின் குரலை அரசாங்கங்களிடம் எடுத்துச் செல்லவேண்டும், பரலோக நீதியைக்கொண்டு சமுதாயத்தை பாதித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் தேவனுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்.

 ஐரோப்பிய நாடாளுமன்றங்களை தேவமனிதர்களான ப்யூரிட்டன்கள்(puritans)ஆட்டிவைத்த சரித்திரங்களை வரலாற்றில் வாசித்துப்பாருங்கள். உடன்கட்டை ஏறும் வன்கொடுமையை எதிர்த்து வில்லியம் கேரி செய்த புரட்சியை எண்ணிப்பாருங்கள்! அதன்மூலம் கொடூர சாவுக்கு இரையாகாமல் பாதுகாக்கப்பட்ட விதவை உயிர்கள் எத்தனை! மாராப்பு அணியக்கூட உரிமை பறிக்கபட்ட  ஒடுக்கபட்ட பெண்களுக்காக போராடி சட்டங்களை மாற்றிய ரிங்கல் தோபேயை நினைவுகூறுங்கள்!



 இன்று தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சபைகள் ஒரு மாபெரும் சக்தி! ஆனால் ஏழைக்குடிகளை சீரழிக்கும் மதுபானத்தை நீங்களே விற்காதீர்கள் என்ற வேண்டுகோளை அரசாங்கத்துக்கு வைக்க இங்கே யாருக்கு துணிவிருக்கிறது?

 பெரும்பான்மை சக்தியாக இல்லாதிருக்கும் காலத்திலும் கூட கேட்டாலும் கேளாவிட்டாலும் தேவனுடைய குரல் தேசத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கவேண்டும்.



 தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள் (எரேமியா 22:29) என்ற எரேமியாக்களின் சத்தம் தொனித்துக்கொண்டே இருக்கவேண்டும். புத்திசொன்னால் கேட்டுக்கொள்ளும் தாவீதுகள் இருந்தாலும் சரி, புத்திசொன்னால் கழுத்தை வெட்டும் ஏரோதுகள் இருந்தாலும் சரி. தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய குரலை தேசத்தின் அதிபதிகளுக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.

 இலங்கையில் நடந்த இன அழிப்பையும் எஸ்தர் புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆபத்துதான். அன்று தேவஜனங்கள் உயிரை துச்சமாக மதித்து தங்கள் இனத்தைக் காப்பதற்காக துடிப்போடு போராடியபடியால் ஒரு மாபெரும் இன அழிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மொர்தேகாய் போன்ற சபைதலைவன் இன்று நமக்கு இல்லையே!

 இன்று எரிகிற வீட்டில் பிடுங்கும் ஆகான்களும், ஆமேன் அல்லேலுயாக்களுக்காக கூத்தாடும் ஆமான்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் தன் சொந்த ஜனத்தைக் காப்பாற்ற வஸ்திரத்தை கிழித்து சாம்பலில் உட்காரும் மொர்தேகாய்கள் இல்லை.ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலத்தில் தமிழகத்தில் மாபெரும் சிறுபான்மை ஓட்டுவங்கியுள்ள கிறிஸ்தவம், சிறுபான்மையினருக்கு சாதகமான அரசு இருந்தும் சிறு அழுத்தம்கூட கொடுக்க முன்வரவில்லை என்பது வரலாற்று உண்மை. வழக்கம்போல கத்தோலிக்கர்கள் மாத்திரமே களத்தில் இறங்கி போராடினார்கள். ஆவிக்குரிய சபைகளோ போதகர்களோ ஒன்றுசேரவும் இல்லை, வாய்திறக்கவும் இல்லை. இனி யாராவது தன்னை ஆவிக்குரிய தலைவன் என்று சொல்லிக்கொண்டு "திக்கற்றவர்களின் தேவன்" தந்த வேதத்தை கையில் பிடித்துக்கொண்டு பிரசங்கபீடங்களில் ஏறினால் அந்த பிரசங்கபீடங்கள் சொல்லும், …"ச்சீ! வெட்கக்கேடு!!"

 இஸ்ரவேலை இருப்புக்கோலால் ஆண்ட யெசேபேலுக்கு எதிராக களங்கண்ட எலியாக்களும், ஒழுக்கங்கெட்ட திருமணவாழ்க்கை வாழ்ந்த ஏரோதுகளை பிடித்து உலுக்கிய யோவான் ஸ்நானகன்களும் இன்று எங்கே? அந்தோ! இக்கால பேராயர்கள் பலரும், தீர்க்கதரிசிகளும் கொடுங்கோல் யெசபேல்களுக்கும், பலதார ஏரோதுகளுக்கும் அடிமைகளாக சரணடைந்துவிட்டார்கள்!கர்த்தாவே உமது வார்த்தைகளை கலப்பின்றி முழங்கும் துணிவுமிக்க தீர்க்கர்களை எழுப்பும்!!

 பெண்கள் மார்பகங்கள் அறுக்கபட்டு, பிறப்பு உறுப்புகள் சிதைக்கபட்டு, கர்ப்பிணிகளின் வயிறுகள் கிழிக்கபட்டு சிசுக்கள் பூட்ஸ் காலில் நசுக்கபட்டு அவர்கள் உதவிக்காக கதறும்போது இதெல்லாம் கடைசிகால அடையாளமென்றும் இயேசுவின் வருகைக்கான முன்னறிவிப்பு என்றும் பதில் சொல்வோமானால் நாளை நம் வீட்டுப் பெண்களுக்கு இதே கதி நேர்ந்து, நாம் உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் அபயமிடும்போது  நமக்கும் இதே பதிலே சொல்லப்படும். கிறிஸ்தவம் என்பது அடுத்தவனுக்கு நேரும் இன்னல்களைக் கண்டு வேதஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதல்ல, நம் ஜீவனைக்கொடுத்தேனும் அவனைக் காப்பாற்றுவது!

 இந்த கட்டுரை சபைகளையோ சபைத் தலைவர்களையோ இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. ஒரு குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறதா? அதன் புலன்கள் நன்கு வேலைசெய்கிறதா? என்று சோதித்துப்பார்ப்பார்கள். அது தூண்டப்படும்போது எப்படி நடந்துகொள்ளுகிறது என்பதைக்கொண்டே அதன் புலனுறுப்புகள் நன்றாக வேலைசெய்கிறதா என்று அறியப்படுகிறது. தமிழக சபைகளின் ஆவிக்குரிய புலன்கள் செத்துவிட்டது என்ற விஷயம் அது தன்னைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களுக்கு ஊமையாகவும், குருடாகவும், செவிடாகவும் மாறிப்போனதால் தெளிவாகிறது. அதுவும் சொந்த மொழிபேசும் இனம் வரலாறு காணாத இன்னலை சந்தித்தபோது காத்த மவுனத்தை வரலாறு மன்னிக்காது.

 கடைசியாக ஒரு தனிப்பட்ட விசுவாசியாகவும் சபையாகவும் இதுபோன்ற சூழலில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில்:

 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே (மத் 22:37-39)

 ஒரு சாதாரண, சாமானிய விசுவாசியாக நம்மை நாம் நேசிப்பதுபோல பாதிக்கபட்டவர்களை நேசிப்பதேயாகும். அவர்கள் படும் துன்பத்தை நாம் படும் துன்பம்போல உணர்ந்து அவர்களுக்காக ஜெபிப்பதும் முடிந்த உதவிகளை செய்வதுமாகும். அப்படிப்பட்ட களங்கமற்ற, மாசற்ற அன்பில் பிறக்கும் கண்ணீரும், ஜெபமும் பரலோக தேவனுடைய கரத்தை அசைக்க வல்லது. அப்படிப்பட்டதே ஆதிச்சபையாரின் அன்பு! அடுத்தவர் பிரச்சனையை கண்டும் காணாததுபோல செல்லும் கிறிஸ்தவன் முதல் கற்பனைக்கு கீழ்படுவதுபோல நடித்துக்கொண்டு இரண்டாம் கற்பனையை காலில் போட்டு மிதிக்கிறவனாவான். அப்படிப்பட்டவர்களே நல்ல சமாரியன் கதையில் வரும் லேவியரும், ஆசாரியருமாவார்கள்!

 அடுத்தவர் பிரச்சனைக்காக கதறியழும் சபையிலிருந்தே தேவனுடைய நீதியின் குரல் அந்த சபைத்தலைவர்கள் மூலமாக அதிபதிகளையும் சிங்காசனங்களையும் உலுக்கும். ஆம்! சபைத்தலைவர்கள் தேவராஜ்ஜியத்தின் நீதியை அதிபதிகளிடம் சற்றும் பயமின்றி ஒரே குரலில் எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும். அதுவே தேவன் அரசாளும் கிறிஸ்தவம்! மற்றெதெல்லாம் கிறிஸ்தவன் என்ற போர்வையில் இருந்தாலும் அது பாபிலோன்! பாபிலோன்! பாபிலோன்!

முற்றும்

சகோ.விஜய்