Friday 8 March 2013

கள்ள ஊழியர்களை தேவன் அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க பயன்படுத்துகிறாரா?

by Fruits Of False Prophets on Wednesday, June 8, 2011 at 2:09am ·
கள்ள ஊழியர்களையும் வைத்து தேவன் அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க பயன்படுத்துகிறார் என்று பலர் இன்னைக்கு நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் கள்ள ஊழியர்களைக்குறித்து எச்சரிக்காமல் அமைதியாக இருக்கவேண்டி அடவைசும் பண்ணுகிறார்கள்.  பலர் கடுங்கோபத்தோடு இந்த கள்ள ஊழியர்களுக்கு விரோதமாக பேசாதே என்றும் கடிந்துகொள்கின்றனர்.

இது அவர்களின் அறியாமையே! அவர்களின் அறியாமைக்காக மிகவும் வருத்தப்படுகின்றேன்.!!!

 செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த பயன்படுத்தபடுகின்ற டேங்கர் லாரியில் அவர்கள் வீட்டிற்கு குடிதண்ணீர் சப்னை செய்தால் அதை குடிப்பார்களா? அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்ணீரை குடிக்க கொடுப்பார்களா?

அப்படியே அவர்கள் அந்த தண்ணீரைதான் குடிப்பேன் என்று அடம்பிடித்து குடித்தாலும் அவர்களுக்கு நோய் வராமல் தப்பதான் முடியுமா?

ஆவிக்குறிய காரியத்திலும் இதே நிலைதான் நண்பர்களே. நச்சு கலந்த தண்ணீரை பருகாதே என்று எச்சரிப்பதில் தவரேதுமில்லையே!

கடவுள் அப்படி செய்கின்றார் (நச்சு கலந்த தண்ணீரை குடிக்ககொடுக்கிறார்) என்று அவர்கள்  நினைப்பதும், கடவுளும் அப்படி செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதும் எந்த வகையில் நியாயம்?

நஞ்சு எப்படி உட்கொள்கிறவர்களை கொன்று கல்லறைக்குள் தள்ளுமோ அதேபோன்று கள்ள ஊழியர்களின் கள்ள உபதேசமும் (Slow Poison) அதை பின்பற்றுகிறவர்களை நரகத்தில் தள்ளிவிடுமே!

கள்ளப்போதகங்களுக்கு மயங்குகிறவர்களை மதுவுக்கு மயங்குகிறவர்களுக்கு ஒப்பிடலாம். ஏனென்றால் அதிலே அவ்வளவு கிக் இருக்கிறது.  (அந்த கிக் கொங்ச நேரம் மாத்திரமே நீடிக்கும்! ஏனென்றால் அது உலகத்திற்குறிய கிக்தானே! நித்தியத்திற்குறியதல்லவே!).  அதன் முடிவைக்குறித்து சிந்திக்கிறவனே பாக்யவான்.

(நீதி 23:31-32) மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே, அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

சபிப்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு, என்னதான் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்து தீர்க்கதரிசனம் உரைத்தாலும், முடிவிலே பணம் வாங்கியதற்கான விசுவாசத்தைகாட்டி தன்னுடைய சுயருபத்தை வெளிப்படுத்திவிட்டானே பிலேயாம் !

எண்ணாகமம் 24:25 ம் வசனத்துக்கும் எண்ணாகமம் 25:1 ம் வசனத்துக்கும் இடையில் பிலேயாம் பணத்தை வாங்கிக்கொண்டு மிக அசிங்கமான காரியத்தை செய்து முடித்துவிட்டான். இதைக்குறித்து வேதம் நம்மை எச்சரிக்கிறதே!

வெளி-2:14 ... வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

தேவன் இப்படிப்பட்ட கள்ள ஊழியர்களை  'யூதா-1:11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் .... பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி...'    என்று பிலேயாமுக்குதானே ஒப்பிடுகின்றார்.

நண்பர் சில்சாம் அவர்கள் சொன்ன கருத்து ஞாபகத்திற்கு வருகிறது ' நமக்கு ஊழியர்களைக் குற்றம் சொல்லுவது பொழுது போக்கல்ல;அது வேதனை நிறைந்த அறுவை சிகிச்சை .... '

இப்படிப்பட்ட காரியங்களை எச்சரிக்காமல் அடக்கிக்கொள்ள முடியவில்லையே!

No comments:

Post a Comment