Tuesday, 14 January 2014

உலகத்தின் ஆசைகளை வெறுத்துத் தள்ளுவோம்

விசுவாச வீரனாக நாம் மோசேயை எடுத்துக்கொள்ளலாம்,மோசே தேவனுக்காய் வெறுத்துவிட்ட மூன்று காரியங்கள் சாதாரணமானவைகள் அல்ல;அவை உலகப்பிரகாரமாக ஒருவன் பெற்று அனுபவிக்கக்கூடிய அனைத்திலும் சிறந்தவையும் கிடைப்பதற்கு அறிதானவைகள் ஆகும்.முதலாவது மிகச்சிறந்தபதவி  எகிப்தின் பார்வோன் இரண்டாவது எகிப்தின் ஆடம்பர சிற்றின்பங்கள்,மூன்றாவது எகிப்தின் பொக்கீசங்கள் இவற்றை அவன் தேவனுக்காய் வெறுத்து தன் சகோதர்களோடு துன்பத்தை தெரிந்துக்கொண்டான் (எபி11:24,25) பிற்காலத்திலே அவன் இஸ்ரவேல் ஜனத்துக்கு மேய்ப்பனாகவும்,அவர்களுக்காய் பரிந்துப்பேசும் உத்தமனாகவும் விளங்கமுடிந்தது. கூறப்போனால் இந்த உலகிலே துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துக்கொண்டான்.

                               யாரும் துன்பம் அனுபவிப்பதை தெரிந்துக்கொள்ளமாட்டார்கள்; ‘எனக்கு இப்போதிருக்கிற துன்பங்களே போதும்;இதற்கு மேல் எனக்கு பாடுகள் வேண்டாம் என்று மனிதர்கள் கூறுவதை நாம் பார்க்கலாம்.இயற்கையாகவே நாம் பாடுகளைத் தவிர்க்கும்படியாகவே பிரயாசப்படுகிறோம்.இன்னல்கள் நிறைந்த ஓர் இடத்தில் நாம் வைக்கப்பட்டிருப்போமாகில் அவ்விடத்திலிருந்து தப்புவிக்கவே நாம் வாஞ்சிப்போம்.துன்பங்களை விரும்பி தெரிந்துக்கொள்ளும் நபர்களை கான்பது மிக அரிதானவிசயம். பொதுவாக மனிதர்கள் கஷ்டம் வரும்போது முறுமுறுக்கின்றார்கள் அல்லது தைரியத்தை இழந்து சோர்ந்துப்போகின்றனர்.ஆனால் அப்.பவுலைப்போல “கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு வரும் பெலவீனங்களிலும்,நிந்தைகளிலும்,இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் 2 கொரி12:10 என்று கூறுபவர்கள் வெகு சிலர்தான் உண்டு.

                     அரண்மணையில் வளர்க்கப்பட்ட ஒருவன் சுகபோகங்களை உதறித்தள்ளிவிட்டு துன்பங்களை அனுபவிக்க வருவது முடியாத காரியம். பளைய ஏற்பாடு விசுவாச வீரன் மோசே இவ்விதமாய் துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்துக்கொண்டானால் புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் நாம் எவ்வளவு துன்பம் அனுபவிப்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். 

அருமையானவர்களே நீங்கள் பாடுகள் வரும்போது முறுமுறுக்கவேண்டாம்.கர்த்தருக்காய் பாடுபடும் அனுபவத்தை விட்டு ஓடும்படி பிரயாசப்படவேண்டாம்.நம்முடைய பாடுகளை நம்முடைய நிழலுக்கு ஒப்பிடலாம்.நம் நிழல் நமக்கு பின்னாக விழும்போது அவற்றிற்கு தப்பிக்க எவ்வளவு தூரம் ஓடினாலும் அவை நம் பின்னாகத்தான் இருக்கும்.ஆனால் நாம் கர்த்தருக்காய் துன்பம் அனுபவிக்கத் தெரிந்துக்கொள்ளும்போது அது நமக்கு இனிமையானதாக மாறிவிடும்.

                  நாம் பரலோகத்திற்குச் சென்று நமக்காய் வைக்கப்பட்டிருக்கும் மகிமையான கிரீடங்களையும் மகிமையையும் பார்க்கும் போது அந்த மேன்மையான பிரதிபலனைப் பார்க்கும் போது ஆ வென்று வியந்து நான் கிறிஸ்துவுக்காய் சகித்த கொஞ்சப் பாடுகளுக்காக இவ்வளவு அதிகமான மகிமை எனக்கு கிடைக்கும் என்று அப்போதே அறிந்துருப்பேனென்றால் ,அவருக்காய் இன்னும் அதிகமாக பாடுபட என்னை ஒப்புக்கொடுத்திருப்பேனே! என்று கூறக்கூடியவர்களாகத்தான் இருப்போம்.

                ஆனால் சிலர் கர்த்தாவே நான் சகிக்கும் இந்த பாடுகள் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று புலம்புகிண்றார்கள்.அருமையான நண்பர்களே நாம் மோசேயைப்போல கர்த்தருக்காய் துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துக்கொள்வேம். 

யோவான் 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல
யோவான் 17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள்உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

நம் தேவன் சொந்த தகப்பனாக நம்மோடு இருக்கிறார் ,அவர் கண்களுக்கு நாம் மறைவாய்  நாம் ஒருபோதும் இருப்பதில்லை. 

விசுவாசமாய் ஜீவிப்பது என்பது ஒரு இரகசிமாகும்

விசுவாசமாய் ஜீவிப்பது என்பது ஒரு இரகசிமாகும்.தங்கள் தேவைகள் அனைத்திற்கும்,தங்களுடைய மிகச்சிறிய தேவைகளுக்காகங்கூட தேவனை நோக்கிப் பார்ப்பவர்களே விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள் .அவர்கள் மரித்தாலும் எல்லாராலும் பேசப்ப்டுகிறவர்களாய் இருப்பார்கள்.
   நாம் வேதத்தில் அநேகர் மரித்தாலும் பேசப்படுகின்றனர் என்று உதாரணத்திற்கு நாம் ஆபேலைப் பார்க்கலாம் இன்று ஆபேல்  என்னப் பேசிக்கொண்டிறுக்கிறான் என்று நாம் சிலவற்றை ஆவியில் உணர்வோம்.அவன் “நான் விசுவாசத்தினால் ஜீவித்தேன் ,விசுவாசத்திற்காகவே மரித்தேன் .என் ஜீவியமும்,காணிக்கையும் தேவனுடைய பார்வையில் செம்மையாக இருந்தது.அவர் என் ஜீவியத்தைக் குறித்தும்,அவரோடுள்ள ஐக்கியத்தைக் குறித்தும் நல்ல சாட்சி கொடுத்தார்.நானோ இந்த உலகத்தில் ஜீவிக்கும் காலத்தில் விசுவாச ஜீவியம் செய்வதற்கு பின்பற்றத் தக்கவிதத்தில் ஒருவரும் இல்லாதிருந்தப்போதும் நான் விசுவாசத்தில் பிழைத்தும் ,விசுவாசத்திலே மரித்தேன் .என்பதையே அவன் மரித்தும் பேசப்படுகிறான்.

  ஆகையால் சகோரர்களே! உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்,உங்களுக்குள் இருக்கும் நல்ல மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள்,வேத வசனத்தின்படி நாம் ஆராய்ந்தால் விசுவாசம் என்பது உலகமாகிய சமுத்திரத்தைக் கடக்கும்படி நாம் யாத்திரை செய்யும் கப்பலாகும்,இங்கே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதான் மாலுமியாய் இருக்கிறார்.

     “நல் மனசாட்சியை சிலர் தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள் 1திமோ1:19 இதில் எழுதப்பட்டப்படி இன்று அநேகர் நல்மனசாட்சியை தள்ளினவர்களாய் எப்போழுதும் வெறுப்புடன் கானப்படுகின்றனர் இதனால் மற்றவர்கள் மேல் பகையுனர்ச்சியுடனும் ,பொறாமையுணர்வுடனும் கானப்படுகின்றனர்.நாம் நல் மனசாட்சியை இழந்துப்போனால் நம்முடைய யாத்திரையில் கப்பல் செதமுண்டாகும் மற்றும் நாம் பரம கானானைச் சென்றடைய முடியாது. ஆகையால் நாம் நம்முடைய விசுவாசத்தை நல்ல மனச்சா     ட்சியால் காத்துக்கொள்ளவேண்டும்
இதில் நல் மனசாட்சி என்பது எந்நேரமும் தேவனோடு ஐக்கியத்தில் இருந்து அதற்கு எவ்விதத்திலும் தடைவராதபடி நம்முடைய மனசாட்சி அவரோடு ஒன்றியிருப்பதை குறிக்கும். “ விசுவாச ஜீவியத்தை நாம் சுத்த மனசாட்சியிலே காத்துக்கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும்1திமோ3:9. 

   நாம் செய்த ஏதாவது ஒரு பாவம் மன்னிக்கப்படவில்லையென்றால் நம்மில் நல் மனசாட்சி இருக்காது.அப்படியே மகா பரிசுத்த விசுவாசத்திலும் ஜீவிக்கமுடியாது.ஆகையால் நம்முடைய ஜீவியத்தை சுத்தமாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும் நாம் விசுவாசமுடையவர்களாய் இருப்போமாகில் மரணம் கூட நாம் பேசுவதை தடை செய்யமுடியாது. பிசாசும் தடை செய்யமுடியாது.விசுவாசத்தைக் காத்துக்கொள்ள நாம் கர்த்தரை முழுவதுமாய் சார்ந்து பற்ரிக்கொள்லவேண்டும் விசுவாசத்தை துவக்கினவர் அதை அந்த நாள் முதல் முடிவு வரைக் காத்துக்கொள்வார் .ஆகயால் நாம் விசுவாசத்தை காத்துக்கொள்ள நாம் அவரை சார்ந்துக்கொள்வதைத் தவிர வேற வழியேதும் இல்லை.
  நீங்கள் மரிக்கும்போது நீங்கள் விட்டுச்செல்லும் முன்மாதிரி ஜீவியம் பின்னால் வரும் தலமுறையினருடன் கட்டாயம் விசுவாசம் என்கிற மொழியினால் பேசும்.

பூமிக்குரிய ஐசுவரியத்தைப் பற்றிக்கொள்ளும் ஜனங்களுக்கு வரும் தீமைகள்

இன்று தேவ ஜனங்களை பூமிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் மாற்றும்படி அவர்கள் மேல் சாத்தான் பிரயோகிக்கும் பயங்கரமான வசீகர சக்திகளில் பிதானமானது பூமிக்குரிய ஐசுவரியங்களே!.
       இதை அவர்கள் பற்றிக்கொள்ளும்போது அது அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் பாதித்து அவர்கள் தேவனை விட்டு விலகி,பரலோகத்திற்கு தங்கள் முதுகைக் காட்டும்படி செய்கிறது.பூமிக்குரிய ஐசுவரியங்கள் அவர்கள் வீடுகளில் நூழையும்போதுஅவர்கள் பரலோகத்தை மறந்து,பரலோக ஐசுவரியத்தையும் ,சுதந்திரத்தையும் அசட்டைபண்ணி,இனி வரும் உலகத்தின் பலன்களை அவமதித்து ,தங்களுக்காகவும் தங்கள் இரட்சிப்புக்காகவும் கல்வாரியில் மரிக்கும்படியாக தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பிய தேவனுக்கு அந்நியராய் மாறிவிடுகின்றனர்.அவர்கள் பூமிக்குரிய சிற்றின்பங்களைக் காட்டிலும் மேன்மையானது ஒன்றுமில்லை என்றும் ,இவ்வுலக வாழ்கைக்கு அப்பால் வேற எதுவும் இல்லை என்று தங்கள்  கிரியைகள் மூலமாய் வெளிப்படுத்துவார்கள் .மற்றும் சபைக்கூடுகை வரும்போது பரலோகத்திற்காய் வாழவில்லையே என்கிற சிறு உணர்த்துதல்கூட இருதயத்தில் இல்லாது உலக காரியத்தினுக்காய் தன்னுடைய சிந்தனைகளை மனதில் நிறப்பி வைத்திருப்பார்கள்.இவ்விதமாய் இவர்கள் வஞ்சிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் உணர்வற்றிருப்பார்கள்.
  சிலர் இதை அனுபவிக்கிற விசயத்தில் சலுகையாக அநேக நூதான காரியங்களை விவரிப்பார்கள். தேவன் தான் என்னை ஆசிர்வதித்தார் இன்று நான் அதிக பணக்காரர்கள் வரிசையில் இருப்பதற்கு அவரே காரனம் என்று நன்றி கூறுவதை நாம் பார்க்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் நாம் கணக்கு கொடுக்கவேண்டுமே என்பதை மறந்தவர்களாய் இருப்பார்கள் .உண்மையில் தேவன் தரும் உலக ஐசுவரியம் மற்ற சிறுமைப்பட்டவர்களுக்கு பயன் படவேண்டும் அதற்காகவே தேவன் சிலருக்கு நல்ல பதவியும் ,செல்வத்தையும் கொடுக்கிரார் .ஆனால் சிலர் அந்த பணத்தை தன்னுடையதுப்போல் என்னிக்கொண்டு ஜீவனம் பண்ணுவார்கள் மற்றும் இவர்கள் பணம் சேர்ப்பதிலும்,சொத்து வாங்குவதிலும்,பொண் அபரணங்களை  வாங்குவதிலும் ஆவலோடு அதில் இச்சையுள்ளவர்களாய் இருப்பார்கள்.
பூமிக்குரிய ஐசுவரியத்தைப் பற்றிக்கொள்ளும் ஜனங்களுக்கு வரும் தீமைகள்:-

1)இது இருதயத்தின் கலங்கமற்றத் தன்மையை அழித்துவிடும்(நீதி28:20)
2)நித்திய பிரதிபலனைக் கொள்ளையிடுகிறது (லூக்6:24;16:25)
3)ஆழமான ஒரு அர்பணிப்பு ஜீவித்திலும்,ஊழியத்திலும் பிரவேசிக்க அது தடை செய்கிறது.(லூக்18:23)
4)சோதனையிலும் கண்ணியிலும் மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில் விழச் செய்கிறது.(1தீமோ6:9)
5) அது கேட்டிலும் அழிவிலும் மூழ்கடித்துவிடுகிறது.(1தீமோ6:9)
6)பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.1தீமோ6:10)
7) அது தேவ அன்பிலிருந்தும் விசுவாசத்திலிருந்தும் தேவன் மேலுள்ள நம்பிக்கையிலிருந்தும் துண்டித்துவிடுகிறது.(மத்13:22;1தீமோ6:10;சங்52:7)
8)ஐசுவரியம் பெருகினால் வேதனைப் பெருகும்(1தீமோ6:10)
9)இறுமாப்புள்ள சிந்தையுள்ளவர்களாகவும் மேட்டிமையுள்ள இருதயமுடையவர்களாகவும்,சுயத்தின் மேல் சார்ந்திருக்கிறவர்களாகவும் மாற்றுகிறது.(1தீமோ6:17;எசே28:5)
10)தங்கள் ஆழமான அறிவை இழக்கும்படிச் செய்து மற்றும் தங்களுடையப் பார்வையிலே ஞானவான்களாக்குகிறது.(நீதி18:11)
11)இது சமாதானம் ,இளைப்பாறுதல்,தூக்கம் போன்ற யாவற்றையும் அபகரித்துக்கொண்டு,ஆவிக்குரியக் காரியங்களில் ஒருமிக்கக் கருத்தைச் செலுத்தமுடியாதப்படிக்கு சிந்தையைக் கலக்கி விடுகிறது.இருதயத்தில் அன்பு,நம்பிக்கை,மகிமை ஆகியவற்றை அற்றுப்போகச் செய்கிறது.(பிர5:12,13)
12)மற்றவர்கள் மேல் அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அடங்கா ஆசையை இது உண்டாக்குகிறது.(நீதி:22:7)
13)இது கடினமுள்ளவர்களாகவும் கர்வம் நிறைந்தவர்களாகவும் இருக்கத் தூண்டுகிறது.(நீதி18:23)
14)இது கொடுமையால் நிறைந்தவர்களாக்குகிறது(மீகா6:12)
15)இது தேவனுடைய ராஜ்யத்திற்கு அந்நியாக்கிவிடுகிறது.ஐசுவரியவான்கள் பரலோகத்தில் பிரவேசிப்பது அரிதென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறினார்.(மத்19:23)
16) மனதுருக்கத்தின் ஆவிக்குப் பதிலாக மற்றவர்களை ஒடுக்குகிற ஆவியுடையவர்களாவதற்கு இது தூண்டிவிடுகிறது.(லூக்16:21;யாக் 2:6)
17) இது அவரவர் தங்கள் ஜீவியத்தில் எவ்வித நோக்கமற்றவர்களாயிருந்து தங்கள் வழிகளில் வாடிப் போகும்படி செய்கிறது.(யாக்1:11)
18)பரிசுத்தவான்களைக் குறித்துத் தீதாய்ப் பேசவும்,நீதிமான்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து அவர்களைக் கொலை செய்யவும் இது துணிகரங்கொள்ளும்படி செய்கிறது (யாக்:5:6)
19) இது உல்லாசமாய் வாழ்வதற்கு தூண்டி தேவனுடைய ஜனத்தோடு துன்பத்தை அனுபவிக்கும் தனி சிலாக்கியத்தை வாஞ்சிக்காதப்படி அசட்டைசெய்யவைக்கிறது (யாக்5:5;எபி.11:25)
20) அழகை மிகுதிப்படுத்துவதற்காக விலையுயர்ந்ததும், மற்றவர்களைக் கவரத்தக்கதும்,மிக மெல்லியதும்,மயக்கத்தக்கதுமான வஸ்திரங்களை அணிந்துக்கொள்ள வேண்டும் என்ற மனதைத் தூண்டும்படி செய்து சோதனைகளுக்குள் சிக்கவைக்கிறது (லூக்16:19)
21) இது ஏழைகள் மீதும் பசியாயிருக்கிறவர்கள் மீதும் உள்ள மனதுருக்கத்தை எடுத்துப்போட்டு போஜனப்பிரியராக்கிவிடுகிறது.(லூக்16:21)
22) பாதுகாப்புக்காகத் தேவனுடைய வல்லமையில் சார்ந்துக்கொள்வதற்குப் பதிலாக அது தீவினையைச் சார்ந்துக்கொள்ளத் தூண்டுகிறது.(சங் 52:7)
23)இது மாயையை நோக்கி நம்மை ஓடும்படி செய்கிற ஒரு பேய்த்தனமான சக்தியாகும்.இது ஒருவனை எவ்வித குறிக்கோளும் நோக்கமும் அற்றவனாக,இளைப்படையாமல் பிரயாசப்பட்டு உழைக்கச் செய்கிறது.(பிர 4:8)
24) இது அவபக்தியை அல்லது துன்மார்க்கத்தைப் பெருகச்செய்கிறது(சங் 73:12)
25) மரணத்திற்குப் பின் இது தொடர்ந்து வருவதில்லை (பிர 4:8)
26)இது நிச்சயமாகவே ஏதாவது ஒருநாள் தேவனை விட்டு வழுவி விழுந்து போகும்படிச் செய்யும் (நீதி 11:28)
27) இது தேவனுக்கு விரோதமாய்க் கலகம் பண்னச் செய்கிறது (நெகே9:25,26)
28) ஐயுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாக்கும்படி சேகரித்து வைக்கப்படுகிறது.(பிர 5:13)
29)இந்த உலக ஜீவியத்தின் முடிவில் நரகத்தில் அவியாத அக்கினியின்  வேதனைக்குள் இது எறிந்துப்போடும் (லூக்16:24)
30) இது மிகப்பெரிய வஞ்சனையுள்ளதாகும் “ கழுகைப்போலச் சிரகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு,ஆகாயமார்க்கமாய்ப் பறந்துப்போம்” (நீதி23:5),இது ஒருபோதும் திருப்தியாக்குகிறதில்லை (பிர5:10).

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்- பாகம் 5என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல
நான் இருக்கவேண்டியதென்ன? ( உன்1:7)

    மணவாட்டி தன் கர்த்தரோடு இருதயத்தில் கொண்டிருக்கும் ஐக்கியத்தின் இனிமையைக்  குறிக்கும் மெய்யான அடையாளத்தை இங்கு நாம் காண்கிறோம். நல்ல மேய்ப்பனோடு அவள் ஒன்றாயிருக்கிறாள்.அவளுடைய இயற்கையாகவே மந்தையின் மேச்சலைத் தானாக நாடிச் செல்கிறது; ஆனால் அவள் தன் ஆத்தும நேசரின் காலடிச்சுவடுகளில் தன் பாதங்களை வைத்து நடந்துச் செல்ல வாஞ்சிக்கிறாள் ,தனிமையாக பிரயாசப்படவோ,அல்லது மற்ற தோழர்களோடிருக்கவோ அவளுக்கு விருப்பமில்லை.

   அவள் தன் சொந்த தோட்டத்தைக் காவல் செய்யத் துவங்கும் போது .மந்தையைக் குறித்தும் கவலைப்படத் துவங்குகிராள். அவருடைய ஆடுகளை மேய்ப்பதின் மூலமாகவும்.அவருடைய ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பதின் மூலமாகவும் அவள் தன் ஆண்டவர் மேல் உள்ள அன்பை தெரிவிக்க விரும்புகிறாள்.(யோவா21:15-17).அவருடைய சமுகத்தைத் தான் இழந்துவிட நேரிடுமோ என்று அவள் பயப்படத் தேவையில்லை. அவள் தான் அலைந்து திரிகிறவளைப்போல-முக்கடிட்டுக்கொண்டிருக்கிறேன்’  பிரித்துவிடப்பட்டவளாய் இருக்கிறேன் என்று இனி சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை.உடன் ஊழியருடன் ஐக்கியமாய் இருக்க விரும்புகிறாள் இங்கு மற்ற மேய்ப்பர்களுடன் அவள் ஒரு ஐக்கியத்திற்குள் வருகிறாள் ஆனால் அதினிமித்தமாக கர்த்தருடைய உழிக்காரருடன் சேர்ந்து அவர்கள் ஐக்கியத்தில் ஜீவிப்பதும் ஆண்டவரின் சமுகத்தில் ஜீவிப்பதும் ஒன்றே என அவள் தவறான அபிப்பிராயம் கொள்ளமாட்டாள்

 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.(உன்1:8)

   ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,
     இது 7ம் வசனத்தில் மணவாட்டி கூறும் வார்த்தைகளுக்கு எருசலேன்மின் குமாரத்திகள் கொடுக்கும் மறுமொழியாகும்.
    அவர்கள் அவளை ‘ஸ்திரிகளில் ரூபவதியே’ என்று அழைக்கிறார்கள். கர்த்தருடைய அழகை அவளில் கண்டிருக்கிறார்கள். இப்போது அவள்தன் எஜமானின் பிரகாசமுடைய சாயலுடையவளாய் இருக்கிறாள்.அவள் கர்த்தர் மேல் கொண்டுள்ள அன்பு அவளை ஸ்திரிகளின் ரூபதியாக மாற்றியிருக்கிரது.இப்போது அவள் மந்தையின் காலடிகளைத்தொடர்ந்துப் போகிறாள். மற்ற தேவனுடைய பிள்ளைகளுடன் ஐக்கியமாய் இருந்து கர்த்தரைப் பின்பற்றுகிறாள். பெந்தேகோஸ்தே நாளில் வசனத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றவர்கள்.  “அப்போஸ்தல உபதேசத்திலும்,அந்நியோந்நியத்திலும்,……உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” (அப் 2:42).
  ஒருகாலத்தில் அவள் அந்தக்காரத்துடன் ஐக்கியமாய் இருந்தாள்,ஆனால் இப்பொழுதோ அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறாள். “அவர் ஒளியில் இருக்கிறதுப்போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1யோவா1:7) அப். பவுல் ,தனக்கு அளிக்கப்பட்ட கிருபையை மற்ற அப்போஸ்தலர் கண்டபோது அந்நுயோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக தனக்கு அவர்கள் வலதுகை கொடுத்ததாகக் கூறுகிறார்.(கலா2:9)

    “மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு”
   அப்போஸ்தல உபதேசங்களினால் நாம் புதிய ஆத்துமாக்களைப் போசிக்கவேண்டும் , “இவைகளை நீ சகோதரருக்குப் போதித்து வந்தால் ,விசுவாசத்துக்கூரிய வார்த்தைகளிலூம் நீ அனுசரித்த நற்போதகத்திலும் தேரினவனாவாய்” (1தீமோ4:6) ,நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் நாம் அலங்கரிக்கவேண்டும் (தீத்து2:9),இளம் விசுவாசிகள் வளரும்படியாக அவர்கள் திருவசனமாகியப் பாலினால் போசிக்கப்படவேண்டும்.(1பேது2:3) .கர்த்தருடைய மந்தையைப் பராமரிக்கும் வேலையை மற்ற மேய்ப்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போது ,அவள் தன் அருகில் பிரதான மேய்ப்பன் இருப்பதை அவள் உணர்வாள்,அவர் அதை அங்கிகரித்ததற்கான அறிகுறிகளைக் கண்டு மகிழ்வாள். அவள் செய்வது கர்த்தராகிய இயேசுவுடன் கூடச்சேர்ந்து செய்யூம் சேவையாகவும்,கர்த்தராகிய இயேசுவுக்கு செய்யும் சேவையாகவுமிருக்கும். நாம் கர்த்தரில் கொண்டிருக்கும் அன்பு அவருடைய ஆடுகளை நாம் மேய்ப்பது மாத்திரமல்ல அவற்றிற்காய் நாம் கவலைப்பட்டு அவற்றை நாம் விசாரிப்பதிலும்கூட வெளிப்படுத்தப்பட்டுகிறது. நாம் அதைக் கர்த்தருக்கே செய்வதில்தான் நம் அன்பு வெளிப்படுகிறது. “ மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் (மத்25:40) என கர்த்தராகிய இயேசு கூறியிருக்கிறார்.
  8ம் வசனத்தில் காணப்படும் எருசலேமின் குமாரத்திகளுடைய மறுமொழியைக்காட்டிலும் 9,11 மணவாளனின் சத்தம் மிக இனிமையாக தொனிக்கிறது. மணவாளன்தாமே இப்போது திருவாய் மொழிகிறார். அவருடைய இருதயத்தின் ஜீவனுள்ள கனி அதாவது அவரோடுள்ள ஒருமைப்பாடு அல்லது ஐக்கியம்  இப்போது சந்தோசத்தின் சொற்களாக அவருடைய அன்பில் இருந்து வெளிப்படச் செய்கிறது 9ம் வசனத்தில் மணவாட்டியைப் புகழ்ந்துரைக்கும் வார்த்தைகள் மனதில் பதியத்தக்க விசேஷமான அழகு வாய்ந்தவையாயிருக்கிண்றன.

 தொடரும் ---------மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின்ஐக்கியம்

நண்பர்களே நீங்கள் ஒன்றுப்பட்டு கடத்தப்படும் குழந்தைகளுக்காய் குரல் கொடுங்கள்

தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.]
போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக (?!) நடக்கும் 3-வது மிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் "குழந்தைகள் கடத்தல்'' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.
அதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.
நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.
பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம், சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.
இதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது "தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.
ஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன? அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள்? என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.
"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? குறிப்பாக குழந்தைகளுக்கு.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
இதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.
அதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
குழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை "குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.
இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.
எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.
தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம். நன்றி தினமனி.

ஒரு ஆவிக்குறிய கிறிஸ்தவன் சினிமா பார்ப்பது சரியா?தவறா?

ஒரு ஆவிக்குறிய கிறிஸ்தவன் சினிமா பார்ப்பது  சரியா?தவறா?

(கிறிஸ்துவினால் உண்டான ஆவியின் பிரமாணத்தின்படி நடக்கிறவர்கள் சினிமாப் பார்க்கும்படி நடத்தப்படுவார்களா? ஆவிக்குரியவர்கள் சகலவற்ரையும் ஆராய்ந்து அறிவார்கள்:அதில் எதை ஏற்றுக்கொள்ளவேண்டியது,எதை விடவேண்டியது என்பதை கூறி ஆவியானவரே நம்மை வழிநடத்துகிறார்.ஆனால் ஆவியானவருக்கு செவிகொடுக்காமல் நடக்கும் சுயநீதிக்கரர்களும் கிறிஸ்தவர்களிடத்தில் உண்டு அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எச்சரிப்பு தியானச்செய்தி அடங்கும் )

ஆயிரக்கணக்கான ஆண்களையும்,பெண்களையும்,வாலிபரையும்,சிறுபிள்ளைகளையும் தன்வசப்படுத்தித் தியேட்டரில் அல்லது டிவியில் கவர்ந்துக்கொண்டு அங்கே அவர்கள் கண்கள் அசையாதப்படி வெள்ளித்திரையையே பார்த்துக்கொண்டிருக்கும்படி அவர்களை வசீகரம் செய்வது சினிமாவே!

   இன்று இந்த சினிமாவைப் பார்ப்பது தவறு அல்ல என்பவர்கள் சில நூதான அறிவில் பேசுவார்கள் அவர்கள் கூறுவார்கள்; “இவற்றால் நாங்கள் அசுத்தப்படுவதில்லை எங்கள் இருதயம் சுத்தமாக இருக்கிறது மற்றும் இதைப் பார்க்காதே அதைப் பார்க்காதே! என்று நியாயப்பிரமாணம் போல் கட்டுப்படுத்தாதீர்கள்” என்று கூறுகிறார்கள் தேவஜனமே வஞ்சகத்துக்கு விலகிதான் ஓடவேண்டும் ஆனால் சிலர் அதில் மல்லுக்கட்டுகிறார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு நான் கூறுவது உங்களால் சினிமாவைப் பார்க்காமல் இருக்கமுடியுமா? உங்களால் ஒருவருடம் சினிமா பார்க்காமல் இருப்பேன் என்று தீர்மானம் எடுத்துப்பாருங்கள் .ஆனால் உங்கள் மனதில் அவைப் போராடிக்கொண்டே இருக்கும் இதிலிருந்து தாங்கள் அறிந்துக்கொள்ளலாம் தாங்கள் சினிமாவிற்கு அடிமைப்பட்டிருப்பதை அறிந்துக்கொள்லாம்.நியாயப்பிரமாணத்தின்படி நடக்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது எப்போதும் மீறத்தான் செய்வீர்கள் ஆனால் தேவனே இந்தப் பாவத்தில் இருந்து விடுபட எனக்கு கிருபைத்தாரும் என்று உங்கள் இயலாமையை அறிவித்து உங்களைத்தாழ்துவீர்கள் என்றால் தேவன் உங்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்துவிடுவிப்பதை அறிந்து மகிழ்ந்து துள்ளுவீர்கள்.நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது அது உங்களை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தி நீங்கள் உங்கள் இயலாமையை அவரிடம் கூறும்படியும்,உங்களை தாழ்த்தி சரீரத்தையும்,சித்தத்தையும் அவருக்கு கொடுத்து அர்பணிக்கும்படி நடத்துகிறது.

   சினிமாப் படங்கள் தீவிர உணச்சியைத் தூண்டும்படியாகவும், கண்களையும் மனதையும் போஷித்து அவர்கள் இருதயத்தை இச்சைக்குரிய சிற்றின்பங்களாலும்,பொல்லாத ஆசைகளைத்தூண்டுகிற பிம்மங்களால் நிரப்புகிறதே அதன் நோக்கமாய் இருக்கிறது,மற்றும் பலவிதமான கண்ணின் இச்சைகள்,மாம்சத்தின் இச்சைகள்,ஜீவனத்தின் பெருமை இவற்றை திருப்தி செய்யும்படியாகவே காட்சிகள் நன்றாக ஆராய்ந்து திட்டமிட்டு எடிட்டிங் செய்யப்பட்டு அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அநேகமாக எல்லா நடிகர் நடிகைகள் அனைவருமே மோசமான நடத்தையுடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே!.அவர்கள் அப்படிப்பட்ட மன எழிச்சிகளையும்,காம கோப உணர்ச்சிகளைத் தூண்டும்படியாக நடிப்பு என்பதை அறியாதப்படி உண்மைப்போல் மனுசனின் நினைவலைகளை உண்டாக்கும்படி பாவனைசெய்து நடிக்கிறார்கள்.இதை மறுப்போர் எவரும் உண்டா என்பது எனது நியாயமான கேள்வி சிலர் அப்படி இருப்பதை நாம் பார்க்காமல் நல்ல கருத்துள்ளப் சினிமாவைப் பார்க்கலாம் என்பார்கள் இப்படிப்பட்டவர்களிடம் நான் கேட்கும் கேள்வி அப்படி கருத்துள்ள சினிமா என்கிறீர்களே அவற்றில் ஆபாசம் இல்லையா?,இன்னும் சில சினிமாவில் நிர்வாணம்,முத்தக்காட்சிகள் என்ற ஒரு எதிர்ப்பார்ப்புடனும்,படுக்கைக் காட்சிகள்  மற்றும் கொலையுணர்ச்சிகள் ,தியொழுக்கங்களான நடத்தைகள் இவைகள் இடம்பெறவில்லையா? சரி அப்படி ஒன்றுமே இல்லையென்று வைத்துக்கொண்டாலும் சுயநீதியை சார்ந்திருக்கும்படி செய்யும் சம்பவங்கள் அதில் இடம் பெறவில்லையா? எப்படி நியாயப்படுத்தினாலும் சினிமா ஒரு மாயை உண்மைப் போல் மனிதனை வஞ்சிக்கும் என்பது ஆவிக்குரியவன் அதை அறிந்திருக்கிறான்.

  நண்பனே! நீ ஆவிக்குரியவன் என்கிற கருத்தில் உன்னோடு இடைப்படுகிறேன்,நீ மாம்சத்தில் வாழ்கிறவன் என்றால் நீ சினிமா அப்படி ஒன்றும் தவறல்ல என்பாய்! ஒன்று மட்டும் நிச்சயம் வசனமே நம்மை நியாந்தீர்க்கும் என்பதை மறக்கவேண்டாம்.

  கர்த்தருடைய வருகையில் குற்றமற்றவனாக காணப்பட விரும்பும் ஒரு உண்மையான விசுவாசி கடந்துப்போகும் இவ்வுலக மாயையிலே களிகூறும்படி மறுபடியும் பிறக்காத ஆண்கள் பெண்கள் நடிக்கும் அசுத்தமான காட்சிகளைக் கண்டு ரசிப்பானோ?

  “சுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமாக இருக்கும் “ என ஒருவேளை சிலர் கூறலாம் .சரி சினிமாவில் காண்பிக்கப்படும் அனைத்துமே சுத்தமானவை தூய்மையானவை என்றுதான் விவாதத்துக்கு வைத்துக்கொள்வோமே இவையெல்லாம் சுத்தமாயும் தூய்மையாகவும் இருக்குமாயின் நாம் தொடக்கூடாது என்றும் விலகி ஓடவேண்டும் என்றுக்கூறிய கட்டளையிடப்பட்டிருக்கும் அசுத்தமானவை எவை என்று கேள்வி உடனடியாக எழும்புகிறது .சரி சுத்தமும் ,தூய்மை என்ற இக்காரியங்களைப் பரலோகில் நாம் கானமுடியுமா? ; “கற்புள்ளவைகள் எதுவோ அதையே சிந்தித்துக்கொண்டிருங்கள்”(பிலி4:8) என அப் பவுல் கூறும்போது,கற்புள்ளவைகள் பட்டியலில் இம்மாதிரியான சிற்றின்ப சம்பந்தமான தீவிர உணர்ச்சியை தூண்டக்குடிய சினிமா காட்சிகளை அவர் சேர்த்திருக்கிறாரா?

  சினிமாக்களில் சில சமயங்களில் சில நல்ல ஆவிக்குரியப் படங்கள் வருகின்றன என சிலர் கூறுகிறார்கள் . அவைகள் எவ்வளவாய் ஆவிக்குரியவை என நாம் கேட்கலாமா? அதில் நடிக்கும் நடிகையர் யார்? அவர்கள் உண்மையாக மனந்திரும்பினவர்களா? மனந்திரும்பியவர்கள் பாவியை ரட்சிப்புக்கு வழிநடத்தும் ஆவிக்குரிய பயனுள்ள காட்சிகளைத் தயாரிப்பது சாத்தியமானதே! அவற்றில் எந்த்தவிதமான மாம்ச இச்சைக்குரிய காட்சிகளைச் சேர்க்கமாட்டார்கள் .ஆனால் உலகில் உள்ள சினிமா தியேட்டர்கள் ஒருபோதும்  ஜனங்களை இரட்சிப்புக்கு நடத்தக்கூடிய திரைப்படங்களை ஏற்றுக்கொள்ளாது.அப்படிச் செய்தால் அநேக நெயர்களை இழந்துபோக வேண்டியதாகும்.

                கடைசியாக நண்பர்களே நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்று உங்களோடே பேசுகிறேன் எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது.நீங்கள் உண்மையில் தேவனோடு ஐக்கியத்தை வாஞ்சிப்பீர்கள் என்றால் இப்படிப்பட்ட காலத்தை வீனாக்காதீர்கள்,மற்றும் நீங்கள் எதற்கும் அடிமைப்படமாட்டேன் என்றால் உங்களோடுக்கூட சினிமாவிற்கு வரும் நண்பர்களுக்கு நீங்கள் ஏன் இடறலாய் இருக்கிறீற்கள்,அவர்கள் மனந்திரும்பாதபடிக்கு உங்கள் நடத்தைகள் அவர்களை பிரகாசிக்க வைக்காதப்படி கிறிஸ்துவின் வாசனையை நீங்கள் கொடுக்காதபடிக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே இப்படிதான் உலக வேசம் போடுகிறவர்கள் என்ற தவறான அபிப்பிராயத்தை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பது நிச்சயம்.உங்களால் சினிமா தவறல்ல என்று கூறுவீர்கள் என்றால் நீங்கள் இன்னும் கிறிஸ்து இயேசுவினால் உண்டான ஆவியின் பிரமாணத்தின்படி நடக்கும் வாழ்கையை நீங்கள் அனுபவிக்கவில்லை என்பதே நிச்சயமான உண்மை.

Sunday, 12 January 2014


கடத்தப்படும் குழந்தைகளை மீட்க நாம் என்ன செய்தோம்
இந்திய அரசியல் வாதிகளே! உன் கவனம் எங்கே!
காவல்துறையே உன் அலட்சத்திற்கு முடிவில்லையா!
நீதித்துறையே குழந்தையை கடத்துகிறவனுக்கு உன்னால் ஏன் மரணதண்டனை விதிக்கமுடிவதில்லை ஏன் ஏன் ஏன்?

மேல் நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கே மரணத் தண்டனைக் கொடுக்கும் போது சிறு குழந்தைகளைக் கடத்தும் கும்பலுக்கோ நம் நாட்டில் அதிகப் பட்சம் 5 முதல் 7 ஆண்டுத் தண்டனை
நீதி சமுகமே கேள்! கோயிலில் நகை திருடியதுக்காய் போலிஸில் மாட்டிக்கொண்டவன் அவனை அடித்துக் கேட்கும் போது அவன் எங்கே எல்லாம் இதுவரை திருடினான் என்று கேட்கிறார்கள்.அவன் மேல் எல்லா வழக்குகளையும் போடுகிறார்கள்.ஆனால் குழந்தையை கடத்தினவன் ஒருவழக்கில் மாத்திரம் சம்பத்தப்பட்டவன் போல் கேஸ் பைல் பண்ணுகிறார்கள் அதுவும் பணம் கைமாறும்போது கேஸ் ஒன்றுமில்லாமல் போகிறது இப்படி எத்தனை நம் பாரதத்தில் அநீதி நடக்கிறது.

குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைப் பற்றி இந்த சமுகம் கொஞ்சம் கூட கவலைக் கொள்வதில்லை. பாசம் என்பது என்னவென்பது அவரவர் வீட்டில் உள்ள குழந்தைகள் காணாமல் போகும் போதுதான் புரியும் அந்த வேதனை! அன்னை சோனியாவே உங்கள் மகன் பிரியங்கா குழந்தையாய் இருக்கும் போது எவ்வளவு கொஞ்சி குழாவி பாசமாய் வளர்த்திருப்பீர்கள் அந்த குழந்தை அப்போது விபச்சார புரோக்கர்களால் கடத்தப்பட்டு விபச்சார விடுதியில் இருப்பதும் அவளை மீட்கமுடியாததையும் கேள்விப்படும் நீங்கள் இப்படி சாதரணமாய் இருக்கமுடியுமோ!ஆனால் நீங்கள் இன்று உங்கள் வீட்டில் அப்படி நடக்கவில்லை என்பதால் அதன் வலி தெரியாமல் போயும் போய் ஓரிணச்சேர்கையை நம் பாரத சட்டம் தடுக்கிறதே என்று அந்த சட்டத்தை மாற்ற மசோதாக்கல் பாராளும் மன்றத்தில் நிறைவேற்ற அக்கறைக்கொள்கிறீர் இதிலிருந்து தெரிகிறது உங்கள் வேதனை!எப்படிப்பட்டது.உணர்வடைவீர்களா! உங்கள் மகளைப்போல் எத்தனையோ பிள்ளைகள் விபச்சாரபுரோக்கர்களால் கடத்தப்பட்டு அனுதினமும் விபச்சார விடுதியில் செத்துக்கொண்டும் பெற்றோரை பிரிந்த வேதனையும் என் வாழ்கை இப்படி சூனியமாகிவிட்டதே என்று புலம்பும் அடிமைப் பெண்களை விடுவிக்க முன்வருவீர்களா!
ஜீ கே வாசன் அவர்களே உங்கள் கவலை அரசியலைப் பற்றி உங்களுக்கு வயிற்றுவலி வந்தால்தான் மற்றவர்களும் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்றுப் புரியும்.இன்றும் இப்படி அநேகர் உண்டு கேன்சரில் பாதிக்கப்பட்டவர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவும்படி தொண்டு நிறுவணங்களை நிறுவி அப்படிப்பட்டவர்களுக்காய் நல்லதுச் செய்ய போராடுகிறார்கள்.ஆனால் தாங்களோ எந்த வேதனையும் அறியவில்லை அதன் விளைவாக உங்கள் கவலையை எடுத்துக்கொள்கிறோம் .ஆனால் உங்கள் பேரக்குழந்தைக்கு இப்படி ஒரு நிலமை வந்தால் எப்படி துடிதுடித்துப் போவீர்கள் ஆகையால் உணர்வடையுங்கள் பச்சிளம் குழந்தைகளுக்காய் குரல் கொடுங்கள்!.
அய்யா எஸ் எம் அவர்களே கொஞ்சம் உங்கள் பக்கத்தில் அழும் குழந்தையின் சத்தம் உங்கள் காதில் விழவில்லையா? விபச்சார விடுதியில் அலறும் இளம்பெண் சத்தம் உங்கள் காதில் விலவில்லையா? ஏன் இந்த அசட்டுத்தனம் கடத்தும் சமுக விரோதி நம் பாரதத்தில் நெட் ஒர்க் வைத்து காவல் துறைக் கண்ணில் மீளகாபொடிப் போட்டு குழந்தைகளைக் கடத்துகிறார்களே!இது உங்கள் கண்ணில் படவில்லையா? பத்துமாசம் சுமந்த தாய் கோமாவில் இருப்பது தங்கள் செவியில் ஏறவில்லையா? உணர்வடையுங்கள் உங்கள் பேரக்குழந்தைக்கு இப்படி நேரிட்டால் சும்மா இருப்பீர்களோ! எத்தனைப் போலிஸ்டேசன் போன் பறந்திருக்கும் ஏன் மீடியாக்கூட பரபரப்பாய் இருப்பார்கள். பாராளும் மன்றத்தில் வரை சத்தம் எழும்புமே! ஐயா! உணர்வடையுங்கள் சிறு குழந்தைக்காய் போராட முன் வாருங்கள்!
ஐயா வருங்கால! பிரதமரே! தாங்கள் கவலைப்படுவதை நான் குறை கூறவில்லை ஆனால் உங்கள் பக்கத்தில் நடக்கும் கொள்ளை கொள்ளையாய் குழந்தைகள் கடத்தும் சம்பவம் கவனத்தில் வராதது எனக்கு வேதனை அளிக்கிறது. ஒருவேளை தாங்கள் தங்களுடைய  பிள்ளைகளுக்கு நடந்தால் எப்படி இருக்கும் யோசியுங்கள் உணர்வடையுங்கள் ஆதரவற்ற பெற்றோருகளுக்கும் அடிமையின் நுகத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்க நீங்கள் முன் வருவீர்களா! சட்டத்தை கடுமையாக்கி கடத்தும் கயவனுக்கு மரணதண்டனை என்று சட்டத்தை திருத்துங்கள்,இந்த கயவர்களுக்கு சப்போட் பிடிக்கும் காவல்துறையினர் எவராக இருந்தாலும் அவர்களையும் தூக்கில் போடுங்கள் அப்போதுதான் காவல் துறையில் இருக்கும் களங்கம் நீங்கும் செய்வீர்களா! அப்படி செய்யாவிட்டால் எல்லா குழந்தைகளின் பாவம் உங்களை சும்மாவிடாது என்று எச்சரிக்கிறேன்

ஐயா தாங்கள் ஊழலுக்கு என்று வாயைதிறக்கும் அதே நேரத்தில் உங்கள் நாட்டில் அநியாயமாய் நடக்கும் காரியம் ஏன் தெரியாமல் போனது!.உங்கள் கட்சி பொதுவாய் சேர்ந்து குழந்தைகளைக் கடத்தும் கயவர்களுக்கு தூக்குத் தண்டையும்,விபச்சார விடுதியில் இருக்கும் பிள்ளைகளை காப்பாற்ற குரல் கொடுங்கள் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் உங்கள் கண்முன்னே உங்கள் உறவினர்களுக்கு நடந்தால் என்ன கூறுவீர்களோ அதை உணர்ந்து இப்போதே முடிவு எடுங்கள்.
ஐயா நான் கூறும் காரியம் முக்கியப் பிரச்சனையாய் உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்!.உங்கள் நேர்மையான பேச்சு எனக்குத் தெரியும் அதேசமயம் உங்கள் பேத்தி பேரன்களுக்காய் வீதிக்கு வந்து போராட முன் வாருங்கள் .சட்டத்தை மாற்ற குரல் கொடுங்கள் .பரிதாமமாய் இருக்கும் சமுகத்துக்கு உதவ முன் வாருங்கள்.ஒரு குழந்தை மீட்கப்பட்டால் அதன் சந்தோசத்தை அந்த குழந்தையையும்,அதன் பெற்றோர்களையும் பார்த்தால் உங்களுக்குப் புரியும் இத்தனை நாள் இதற்காய் போராடவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு வரும் உணர்வடையுங்கள் ,ஏமாற்றமும்,வேதனையில் இருக்கும் பேற்றோருக்காகவும் ,கடத்தப்பட்டு பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்காகவும் முன் வாருங்கள்
எத்தையோ அடாதடியாய் மாற்றம் கொண்டுவருவதில் தாங்கள் பெயர் போனவர்கள் இங்கே கண்ணிரோடு இருக்கும் பெற்றோர்களையும்,கயவர்களால் கொடுமைப்படுத்தப்படும் குழந்தைகளையும் உங்கள் மனகண்ணில் கொண்டுவாருங்கள் உங்கள் மாநிலத்திலாவது இப்படி நடக்கும் சம்பவத்தை உங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாதா? எங்கள் வேதனை உங்கள் முன் கொண்டு வருகிறோம் ஆனால் இக்காலத்தில் நீங்கள் உதவவில்லை என்றால் அந்த பாவம் உங்களை சும்மாவிடாது ஒருதாயின் வேதனையை தாங்கள் அசட்டை செய்யமாட்டீர்கள் என்று உங்கள் முன் கோரிக்கை வைக்கிறோம்.

ஏய் சமுகமே நீயும் இதற்குக் காரணம்.நம் பிள்ளை இல்லை அடுத்தவர்கள் பிள்ளைதானே என்ற உணர்வு இருந்தால் உனக்கு வரும் சாபம் கொடியதாய் இருக்கும் என்பதை மறக்காதே! நீ வீதிக்கு வராததால் வீதி வீதியாய் மாபியாக் கும்பல் வலைவிரித்து குழந்தைகளைக் கடத்துகிறது.நீ வீதிக்கு வா! போராடு உன் குழந்தைக்கு நேரிட்டதுப்போல் என்னி நீ போராடினால் வெற்றி உன்பக்கம்தான்

கிறிஸ்தவ சமுகமே! கேள் இரக்கத்துக்கு பேர் போனவர்களே! உங்களுக்கு மற்றவர்கள் படும் வேதனை ஏன் கண்ணுக்குத் தெரியாமல் போனது.நீ உனக்காய் வாழ்ந்ததே இன்று அநாதையாய் பிள்ளைகள் ரோட்டோரத்திலும் கடத்தப்பட்டு கண்கள் பிடுங்கப்பட்டு பிச்சையெடுக்கவைக்கப்படுகிறார்கள்,மற்றும் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு புதருக்குள் உடல் வீசப்படுகிறதே! அது உண்ணால்தான் இரக்கமற்ற கிறிஸ்தவர்களே கேள் அவர்கள் சிறுமைப்பட்ட ஜனத்தின் கூக்குரலுக்கு உன் செவியை அடைத்தால் கட்டாயம் நீ உன் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவர் கேட்கமாட்டார்! உணர்வடையுங்கள்!

ஏய் மீடியாக்களே! கொலைக் குற்றத்தையும்,பாலியல் பற்றியே செய்திப் போடுவதில் கில்லாடிகள் நீங்கள் இங்கே நடக்கும் அநீதி உன் காதில் விழுந்தும் அசட்டை செய்துவிட்டாய் அதன் விளைவே இன்று காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது கொஞ்சமாவது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும்,கடத்தப்பட்ட குழந்தைகளுக்காய் நீங்கள் ஓரணியில் நிற்க தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறேன்
பேஸ் புக் போன்ற சமூக இணையதளங்களில் சிக்கும் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படம் பிடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவங்களும் 
பேஸ் புக், டுவி்ட்டர் போன்ற சமூக இணையதளங்கள் தற்போது இளம் தலைமுறையினர் இடையே வேகமாக பரவி வருகிறது. உலகில் எங்கோ இருக்கும் நபருடன் நட்பு கொள்ள உதவும் சமூக இணையதளங்கள், பல நன்மைகளை ஏற்பட்டாலும், சில தீமைகளும் ஏற்பட தான் செய்கிறது
இதிலும் இளம் சிறுமியர் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும்1,80,000பேர் காணாமல் போகிறார்கள் இதில் 60 சதவிகிதம் சிறுமியர் பாலியல்
தொழில் மற்றும் ஆபாச படம் எடுக்கும் நபர்களிடம் சிக்கி கொள்வது தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் ஏஜென்ட்களிடம் இருந்து தப்பிய  சிறுமிகள் மிகவும் குறைவே அவர்களைக் கடத்திய கும்பல்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுகிறார்கள் 30 சதவிகிதம் பேர் பிச்சை எடுக்கும்படி கடத்தப்படுகிறார்கள் ஒரு மணி நேரத்தில் 20 பேர் கானாமல் போகிறார்கள் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது.

2007ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும்புரோக்கர்களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள்.
இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் இதுபோன்ற மையம் இல்லை.

2007-
க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. இம்மையத்துக்கு போலீஸ் எஸ்.பி.க்கு இணையான பதவி வகிக்கும் ஒரு அதிகாரி தலைமை வகிப்பார்.
இந்த மையத்தால் மட்டும் ஆள் கடத்தலைத் தடுக்க முடியாது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.
“”
ஆள் கடத்தல் என்பது சாதாரண குற்றமல்ல. நாடு முழுவதும் ரெüடிகள், தாதாக்கள் உதவியுடன் மாஃபியா கும்பல் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றன. இதனால் ஒரு நாளைக்கு மட்டும் அவர்கள் ரூ.25 கோடி அளவுக்கு சம்பாதிக்கிறார்கள்.
கடத்தப்படும் சிறுவர்கள் சிலர் ஓரினச் சேர்க்கை தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். சிறுமிகள், ரூ.75 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் நடத்துவோருக்கு 4 மாத ஒப்பந்தத்தில் விற்கப்படுகிறார்கள். பாலியல் தொழில் நடத்துவோர் சிறுமிகள் மூலம் ரூ.4 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
ஆந்திரத்தில் இருந்து ஒராண்டுக்கு முன் புணேவுக்கு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவர் கடைசியில் எய்ட்ஸ் நோயால் அண்மையில் இறந்துவிட்டார்என்றார் ஆந்திரத்தின் ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர்.
எனவே, இச் சம்பவங்களை கருத்தில் கொண்டு ஆள் கடத்தலை தடுக்கவும், மாஃபியா கும்பலை ஒடுக்கவும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுவதாலும் பெற்றோர்கள் கோவில் ,ரெயிவே ஸ்டேசன்,திருவிழாக்களில் இருக்கும் போதும் உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதும் குழந்தைகள் மேல் அக்கறியில்லாமல் இருப்பதால் அநேக வேதனைக்கு காரணமாகிறது மற்றும்
சிலர் வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றனர் அதற்கான காரனங்கள் காதல்விவகாரத்தில் நிறைய இளம் பெண்களும், மாணவிகளும் வீட்டை விட்டுவெளியேறுகின்றனர்.
இது, கவலையளிப்பதாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில்பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அது போல, டீன் ஏஜ் சிறுவர்,சிறுமிகள் சிறிய விஷயத்துக்கு எல்லாம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறுகின்றனர். தேர்வில் பெயில் ஆவது, குறைந்த மார்க் எடுப்பது,படிக்காமல் விளையாடுவது போன்றவற்றை பெற்றோர்கள் கண்டித்தால் வீட்டிலிருந்துஓடி விடுகின்றனர். குழந்தைகள் செய்வது தவறு என்பதை பெற்றோர்கள் பக்குவமாகபேசி, புரிய வைக்க வேண்டும். அன்பாகவும், அரவணைப்பாகவும் கூறினால்பிரச்னைகள் பாதியாக குறையும்.வீட்டில் பிள்ளைகள் கவனிக்காததால்,விரக்தியடையும் முதியோர்கள், வீட்டை விட்டு வெளியேறி மனம்போன போக்கில்சென்று விடுகின்றனர்.பெற்றோர்களை இது போல தவிக்க விடுவது குற்றமாகும்.இது, தர்மமும் கிடையாது. வயதான பெற்றோரை பராமரிப்பது தங்களது கடமை என பிள்ளைகள் நினைக்க வேண்டும் .இதை வாசிக்கும் இந்தியனே நீ சுயநலமாய் உனக்காய் வாயை திறந்தாய் இன்றுவரை ஆதனால் வந்த விளைவே! தனிமரம் என்ற கொள்கையால் கொள்ளையர்களிடம் சீரலிந்துவிட்டோம் வேண்டாம் இந்த சுயநலப்போக்கு வீதிக்கு வா! பாதிக்கப்பட்டவர்களுக்காய் போராட இன்றே முடிவெடு! ஏய் சமுதாயமே குடிதண்ணிர்காய் போராடினாயே! விலைவசிக்காய் போராடினாயே இன்று நான் உனக்கு கூறுகிறேன் பச்சிளம் குழந்தைக்காய் வீதிக்கு வா! என்று உன் பாதம் தொட்டு கூக்குரல் இடுகிறேன்.
     இப்படிக்கு--------