Sunday, 12 January 2014


கடத்தப்படும் குழந்தைகளை மீட்க நாம் என்ன செய்தோம்
இந்திய அரசியல் வாதிகளே! உன் கவனம் எங்கே!
காவல்துறையே உன் அலட்சத்திற்கு முடிவில்லையா!
நீதித்துறையே குழந்தையை கடத்துகிறவனுக்கு உன்னால் ஏன் மரணதண்டனை விதிக்கமுடிவதில்லை ஏன் ஏன் ஏன்?

மேல் நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கே மரணத் தண்டனைக் கொடுக்கும் போது சிறு குழந்தைகளைக் கடத்தும் கும்பலுக்கோ நம் நாட்டில் அதிகப் பட்சம் 5 முதல் 7 ஆண்டுத் தண்டனை
நீதி சமுகமே கேள்! கோயிலில் நகை திருடியதுக்காய் போலிஸில் மாட்டிக்கொண்டவன் அவனை அடித்துக் கேட்கும் போது அவன் எங்கே எல்லாம் இதுவரை திருடினான் என்று கேட்கிறார்கள்.அவன் மேல் எல்லா வழக்குகளையும் போடுகிறார்கள்.ஆனால் குழந்தையை கடத்தினவன் ஒருவழக்கில் மாத்திரம் சம்பத்தப்பட்டவன் போல் கேஸ் பைல் பண்ணுகிறார்கள் அதுவும் பணம் கைமாறும்போது கேஸ் ஒன்றுமில்லாமல் போகிறது இப்படி எத்தனை நம் பாரதத்தில் அநீதி நடக்கிறது.

குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைப் பற்றி இந்த சமுகம் கொஞ்சம் கூட கவலைக் கொள்வதில்லை. பாசம் என்பது என்னவென்பது அவரவர் வீட்டில் உள்ள குழந்தைகள் காணாமல் போகும் போதுதான் புரியும் அந்த வேதனை! அன்னை சோனியாவே உங்கள் மகன் பிரியங்கா குழந்தையாய் இருக்கும் போது எவ்வளவு கொஞ்சி குழாவி பாசமாய் வளர்த்திருப்பீர்கள் அந்த குழந்தை அப்போது விபச்சார புரோக்கர்களால் கடத்தப்பட்டு விபச்சார விடுதியில் இருப்பதும் அவளை மீட்கமுடியாததையும் கேள்விப்படும் நீங்கள் இப்படி சாதரணமாய் இருக்கமுடியுமோ!ஆனால் நீங்கள் இன்று உங்கள் வீட்டில் அப்படி நடக்கவில்லை என்பதால் அதன் வலி தெரியாமல் போயும் போய் ஓரிணச்சேர்கையை நம் பாரத சட்டம் தடுக்கிறதே என்று அந்த சட்டத்தை மாற்ற மசோதாக்கல் பாராளும் மன்றத்தில் நிறைவேற்ற அக்கறைக்கொள்கிறீர் இதிலிருந்து தெரிகிறது உங்கள் வேதனை!எப்படிப்பட்டது.உணர்வடைவீர்களா! உங்கள் மகளைப்போல் எத்தனையோ பிள்ளைகள் விபச்சாரபுரோக்கர்களால் கடத்தப்பட்டு அனுதினமும் விபச்சார விடுதியில் செத்துக்கொண்டும் பெற்றோரை பிரிந்த வேதனையும் என் வாழ்கை இப்படி சூனியமாகிவிட்டதே என்று புலம்பும் அடிமைப் பெண்களை விடுவிக்க முன்வருவீர்களா!
ஜீ கே வாசன் அவர்களே உங்கள் கவலை அரசியலைப் பற்றி உங்களுக்கு வயிற்றுவலி வந்தால்தான் மற்றவர்களும் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்றுப் புரியும்.இன்றும் இப்படி அநேகர் உண்டு கேன்சரில் பாதிக்கப்பட்டவர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவும்படி தொண்டு நிறுவணங்களை நிறுவி அப்படிப்பட்டவர்களுக்காய் நல்லதுச் செய்ய போராடுகிறார்கள்.ஆனால் தாங்களோ எந்த வேதனையும் அறியவில்லை அதன் விளைவாக உங்கள் கவலையை எடுத்துக்கொள்கிறோம் .ஆனால் உங்கள் பேரக்குழந்தைக்கு இப்படி ஒரு நிலமை வந்தால் எப்படி துடிதுடித்துப் போவீர்கள் ஆகையால் உணர்வடையுங்கள் பச்சிளம் குழந்தைகளுக்காய் குரல் கொடுங்கள்!.
அய்யா எஸ் எம் அவர்களே கொஞ்சம் உங்கள் பக்கத்தில் அழும் குழந்தையின் சத்தம் உங்கள் காதில் விழவில்லையா? விபச்சார விடுதியில் அலறும் இளம்பெண் சத்தம் உங்கள் காதில் விலவில்லையா? ஏன் இந்த அசட்டுத்தனம் கடத்தும் சமுக விரோதி நம் பாரதத்தில் நெட் ஒர்க் வைத்து காவல் துறைக் கண்ணில் மீளகாபொடிப் போட்டு குழந்தைகளைக் கடத்துகிறார்களே!இது உங்கள் கண்ணில் படவில்லையா? பத்துமாசம் சுமந்த தாய் கோமாவில் இருப்பது தங்கள் செவியில் ஏறவில்லையா? உணர்வடையுங்கள் உங்கள் பேரக்குழந்தைக்கு இப்படி நேரிட்டால் சும்மா இருப்பீர்களோ! எத்தனைப் போலிஸ்டேசன் போன் பறந்திருக்கும் ஏன் மீடியாக்கூட பரபரப்பாய் இருப்பார்கள். பாராளும் மன்றத்தில் வரை சத்தம் எழும்புமே! ஐயா! உணர்வடையுங்கள் சிறு குழந்தைக்காய் போராட முன் வாருங்கள்!
ஐயா வருங்கால! பிரதமரே! தாங்கள் கவலைப்படுவதை நான் குறை கூறவில்லை ஆனால் உங்கள் பக்கத்தில் நடக்கும் கொள்ளை கொள்ளையாய் குழந்தைகள் கடத்தும் சம்பவம் கவனத்தில் வராதது எனக்கு வேதனை அளிக்கிறது. ஒருவேளை தாங்கள் தங்களுடைய  பிள்ளைகளுக்கு நடந்தால் எப்படி இருக்கும் யோசியுங்கள் உணர்வடையுங்கள் ஆதரவற்ற பெற்றோருகளுக்கும் அடிமையின் நுகத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்க நீங்கள் முன் வருவீர்களா! சட்டத்தை கடுமையாக்கி கடத்தும் கயவனுக்கு மரணதண்டனை என்று சட்டத்தை திருத்துங்கள்,இந்த கயவர்களுக்கு சப்போட் பிடிக்கும் காவல்துறையினர் எவராக இருந்தாலும் அவர்களையும் தூக்கில் போடுங்கள் அப்போதுதான் காவல் துறையில் இருக்கும் களங்கம் நீங்கும் செய்வீர்களா! அப்படி செய்யாவிட்டால் எல்லா குழந்தைகளின் பாவம் உங்களை சும்மாவிடாது என்று எச்சரிக்கிறேன்

ஐயா தாங்கள் ஊழலுக்கு என்று வாயைதிறக்கும் அதே நேரத்தில் உங்கள் நாட்டில் அநியாயமாய் நடக்கும் காரியம் ஏன் தெரியாமல் போனது!.உங்கள் கட்சி பொதுவாய் சேர்ந்து குழந்தைகளைக் கடத்தும் கயவர்களுக்கு தூக்குத் தண்டையும்,விபச்சார விடுதியில் இருக்கும் பிள்ளைகளை காப்பாற்ற குரல் கொடுங்கள் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் உங்கள் கண்முன்னே உங்கள் உறவினர்களுக்கு நடந்தால் என்ன கூறுவீர்களோ அதை உணர்ந்து இப்போதே முடிவு எடுங்கள்.
ஐயா நான் கூறும் காரியம் முக்கியப் பிரச்சனையாய் உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்!.உங்கள் நேர்மையான பேச்சு எனக்குத் தெரியும் அதேசமயம் உங்கள் பேத்தி பேரன்களுக்காய் வீதிக்கு வந்து போராட முன் வாருங்கள் .சட்டத்தை மாற்ற குரல் கொடுங்கள் .பரிதாமமாய் இருக்கும் சமுகத்துக்கு உதவ முன் வாருங்கள்.ஒரு குழந்தை மீட்கப்பட்டால் அதன் சந்தோசத்தை அந்த குழந்தையையும்,அதன் பெற்றோர்களையும் பார்த்தால் உங்களுக்குப் புரியும் இத்தனை நாள் இதற்காய் போராடவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு வரும் உணர்வடையுங்கள் ,ஏமாற்றமும்,வேதனையில் இருக்கும் பேற்றோருக்காகவும் ,கடத்தப்பட்டு பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்காகவும் முன் வாருங்கள்
எத்தையோ அடாதடியாய் மாற்றம் கொண்டுவருவதில் தாங்கள் பெயர் போனவர்கள் இங்கே கண்ணிரோடு இருக்கும் பெற்றோர்களையும்,கயவர்களால் கொடுமைப்படுத்தப்படும் குழந்தைகளையும் உங்கள் மனகண்ணில் கொண்டுவாருங்கள் உங்கள் மாநிலத்திலாவது இப்படி நடக்கும் சம்பவத்தை உங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாதா? எங்கள் வேதனை உங்கள் முன் கொண்டு வருகிறோம் ஆனால் இக்காலத்தில் நீங்கள் உதவவில்லை என்றால் அந்த பாவம் உங்களை சும்மாவிடாது ஒருதாயின் வேதனையை தாங்கள் அசட்டை செய்யமாட்டீர்கள் என்று உங்கள் முன் கோரிக்கை வைக்கிறோம்.

ஏய் சமுகமே நீயும் இதற்குக் காரணம்.நம் பிள்ளை இல்லை அடுத்தவர்கள் பிள்ளைதானே என்ற உணர்வு இருந்தால் உனக்கு வரும் சாபம் கொடியதாய் இருக்கும் என்பதை மறக்காதே! நீ வீதிக்கு வராததால் வீதி வீதியாய் மாபியாக் கும்பல் வலைவிரித்து குழந்தைகளைக் கடத்துகிறது.நீ வீதிக்கு வா! போராடு உன் குழந்தைக்கு நேரிட்டதுப்போல் என்னி நீ போராடினால் வெற்றி உன்பக்கம்தான்

கிறிஸ்தவ சமுகமே! கேள் இரக்கத்துக்கு பேர் போனவர்களே! உங்களுக்கு மற்றவர்கள் படும் வேதனை ஏன் கண்ணுக்குத் தெரியாமல் போனது.நீ உனக்காய் வாழ்ந்ததே இன்று அநாதையாய் பிள்ளைகள் ரோட்டோரத்திலும் கடத்தப்பட்டு கண்கள் பிடுங்கப்பட்டு பிச்சையெடுக்கவைக்கப்படுகிறார்கள்,மற்றும் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு புதருக்குள் உடல் வீசப்படுகிறதே! அது உண்ணால்தான் இரக்கமற்ற கிறிஸ்தவர்களே கேள் அவர்கள் சிறுமைப்பட்ட ஜனத்தின் கூக்குரலுக்கு உன் செவியை அடைத்தால் கட்டாயம் நீ உன் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவர் கேட்கமாட்டார்! உணர்வடையுங்கள்!

ஏய் மீடியாக்களே! கொலைக் குற்றத்தையும்,பாலியல் பற்றியே செய்திப் போடுவதில் கில்லாடிகள் நீங்கள் இங்கே நடக்கும் அநீதி உன் காதில் விழுந்தும் அசட்டை செய்துவிட்டாய் அதன் விளைவே இன்று காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது கொஞ்சமாவது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும்,கடத்தப்பட்ட குழந்தைகளுக்காய் நீங்கள் ஓரணியில் நிற்க தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறேன்
பேஸ் புக் போன்ற சமூக இணையதளங்களில் சிக்கும் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படம் பிடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவங்களும் 
பேஸ் புக், டுவி்ட்டர் போன்ற சமூக இணையதளங்கள் தற்போது இளம் தலைமுறையினர் இடையே வேகமாக பரவி வருகிறது. உலகில் எங்கோ இருக்கும் நபருடன் நட்பு கொள்ள உதவும் சமூக இணையதளங்கள், பல நன்மைகளை ஏற்பட்டாலும், சில தீமைகளும் ஏற்பட தான் செய்கிறது
இதிலும் இளம் சிறுமியர் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும்1,80,000பேர் காணாமல் போகிறார்கள் இதில் 60 சதவிகிதம் சிறுமியர் பாலியல்
தொழில் மற்றும் ஆபாச படம் எடுக்கும் நபர்களிடம் சிக்கி கொள்வது தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் ஏஜென்ட்களிடம் இருந்து தப்பிய  சிறுமிகள் மிகவும் குறைவே அவர்களைக் கடத்திய கும்பல்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுகிறார்கள் 30 சதவிகிதம் பேர் பிச்சை எடுக்கும்படி கடத்தப்படுகிறார்கள் ஒரு மணி நேரத்தில் 20 பேர் கானாமல் போகிறார்கள் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது.

2007ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும்புரோக்கர்களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள்.
இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் இதுபோன்ற மையம் இல்லை.

2007-
க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. இம்மையத்துக்கு போலீஸ் எஸ்.பி.க்கு இணையான பதவி வகிக்கும் ஒரு அதிகாரி தலைமை வகிப்பார்.
இந்த மையத்தால் மட்டும் ஆள் கடத்தலைத் தடுக்க முடியாது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.
“”
ஆள் கடத்தல் என்பது சாதாரண குற்றமல்ல. நாடு முழுவதும் ரெüடிகள், தாதாக்கள் உதவியுடன் மாஃபியா கும்பல் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றன. இதனால் ஒரு நாளைக்கு மட்டும் அவர்கள் ரூ.25 கோடி அளவுக்கு சம்பாதிக்கிறார்கள்.
கடத்தப்படும் சிறுவர்கள் சிலர் ஓரினச் சேர்க்கை தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். சிறுமிகள், ரூ.75 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் நடத்துவோருக்கு 4 மாத ஒப்பந்தத்தில் விற்கப்படுகிறார்கள். பாலியல் தொழில் நடத்துவோர் சிறுமிகள் மூலம் ரூ.4 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
ஆந்திரத்தில் இருந்து ஒராண்டுக்கு முன் புணேவுக்கு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவர் கடைசியில் எய்ட்ஸ் நோயால் அண்மையில் இறந்துவிட்டார்என்றார் ஆந்திரத்தின் ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர்.
எனவே, இச் சம்பவங்களை கருத்தில் கொண்டு ஆள் கடத்தலை தடுக்கவும், மாஃபியா கும்பலை ஒடுக்கவும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுவதாலும் பெற்றோர்கள் கோவில் ,ரெயிவே ஸ்டேசன்,திருவிழாக்களில் இருக்கும் போதும் உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதும் குழந்தைகள் மேல் அக்கறியில்லாமல் இருப்பதால் அநேக வேதனைக்கு காரணமாகிறது மற்றும்
சிலர் வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றனர் அதற்கான காரனங்கள் காதல்விவகாரத்தில் நிறைய இளம் பெண்களும், மாணவிகளும் வீட்டை விட்டுவெளியேறுகின்றனர்.
இது, கவலையளிப்பதாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில்பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அது போல, டீன் ஏஜ் சிறுவர்,சிறுமிகள் சிறிய விஷயத்துக்கு எல்லாம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறுகின்றனர். தேர்வில் பெயில் ஆவது, குறைந்த மார்க் எடுப்பது,படிக்காமல் விளையாடுவது போன்றவற்றை பெற்றோர்கள் கண்டித்தால் வீட்டிலிருந்துஓடி விடுகின்றனர். குழந்தைகள் செய்வது தவறு என்பதை பெற்றோர்கள் பக்குவமாகபேசி, புரிய வைக்க வேண்டும். அன்பாகவும், அரவணைப்பாகவும் கூறினால்பிரச்னைகள் பாதியாக குறையும்.வீட்டில் பிள்ளைகள் கவனிக்காததால்,விரக்தியடையும் முதியோர்கள், வீட்டை விட்டு வெளியேறி மனம்போன போக்கில்சென்று விடுகின்றனர்.பெற்றோர்களை இது போல தவிக்க விடுவது குற்றமாகும்.இது, தர்மமும் கிடையாது. வயதான பெற்றோரை பராமரிப்பது தங்களது கடமை என பிள்ளைகள் நினைக்க வேண்டும் .இதை வாசிக்கும் இந்தியனே நீ சுயநலமாய் உனக்காய் வாயை திறந்தாய் இன்றுவரை ஆதனால் வந்த விளைவே! தனிமரம் என்ற கொள்கையால் கொள்ளையர்களிடம் சீரலிந்துவிட்டோம் வேண்டாம் இந்த சுயநலப்போக்கு வீதிக்கு வா! பாதிக்கப்பட்டவர்களுக்காய் போராட இன்றே முடிவெடு! ஏய் சமுதாயமே குடிதண்ணிர்காய் போராடினாயே! விலைவசிக்காய் போராடினாயே இன்று நான் உனக்கு கூறுகிறேன் பச்சிளம் குழந்தைக்காய் வீதிக்கு வா! என்று உன் பாதம் தொட்டு கூக்குரல் இடுகிறேன்.
     இப்படிக்கு--------1 comment:

  1. நீங்கள் உண்மையில் ஜனங்கள் மேல் அக்கரைச் செலுத்துவீர்கள் என்றால் இங்கே நாண் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் ஆங்காங்கே கடத்தப்படும் குழந்தைகளுக்காய் பிள்ளையை இழந்த பெற்றோருக்காய் போராட வீதிக்கு வாருங்கள்! நம் நாட்டில் நடக்கும் கொலையின் மொத்த எண்ணிக்கையை விட குழந்தைகள் கடத்தப்படும் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இதை மீடியாக்கள் மூடி மறைத்துவிடுகிண்றன,மற்றும் காவல்துறை அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.அரசியல் வாதிகளோ தங்களைப் பற்றியே கவலைப்படுகின்றனர் தயவு செய்து கடத்தல்காரர்களைப் பிடித்து அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும்படியாக சட்டங்கள் ஜனங்களைக் கடத்தி விபச்சாரவிடுதிக்கோ அல்லது பிச்சையெடுக்கவோ கடத்தினது நிறுபிக்கப்படும் பட்சத்தில் இந்த சட்டம் அமுல்படுத்தப் தயவுசெய்து பிள்ளைகளை இழந்தப் பெற்றோருக்காகவும், கடத்தப்பட்ட குழந்தைகளுக்காகவும் போராடுங்கள்

    ReplyDelete