Tuesday, 14 January 2014

ஒரு ஆவிக்குறிய கிறிஸ்தவன் சினிமா பார்ப்பது சரியா?தவறா?

ஒரு ஆவிக்குறிய கிறிஸ்தவன் சினிமா பார்ப்பது  சரியா?தவறா?

(கிறிஸ்துவினால் உண்டான ஆவியின் பிரமாணத்தின்படி நடக்கிறவர்கள் சினிமாப் பார்க்கும்படி நடத்தப்படுவார்களா? ஆவிக்குரியவர்கள் சகலவற்ரையும் ஆராய்ந்து அறிவார்கள்:அதில் எதை ஏற்றுக்கொள்ளவேண்டியது,எதை விடவேண்டியது என்பதை கூறி ஆவியானவரே நம்மை வழிநடத்துகிறார்.ஆனால் ஆவியானவருக்கு செவிகொடுக்காமல் நடக்கும் சுயநீதிக்கரர்களும் கிறிஸ்தவர்களிடத்தில் உண்டு அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எச்சரிப்பு தியானச்செய்தி அடங்கும் )

ஆயிரக்கணக்கான ஆண்களையும்,பெண்களையும்,வாலிபரையும்,சிறுபிள்ளைகளையும் தன்வசப்படுத்தித் தியேட்டரில் அல்லது டிவியில் கவர்ந்துக்கொண்டு அங்கே அவர்கள் கண்கள் அசையாதப்படி வெள்ளித்திரையையே பார்த்துக்கொண்டிருக்கும்படி அவர்களை வசீகரம் செய்வது சினிமாவே!

   இன்று இந்த சினிமாவைப் பார்ப்பது தவறு அல்ல என்பவர்கள் சில நூதான அறிவில் பேசுவார்கள் அவர்கள் கூறுவார்கள்; “இவற்றால் நாங்கள் அசுத்தப்படுவதில்லை எங்கள் இருதயம் சுத்தமாக இருக்கிறது மற்றும் இதைப் பார்க்காதே அதைப் பார்க்காதே! என்று நியாயப்பிரமாணம் போல் கட்டுப்படுத்தாதீர்கள்” என்று கூறுகிறார்கள் தேவஜனமே வஞ்சகத்துக்கு விலகிதான் ஓடவேண்டும் ஆனால் சிலர் அதில் மல்லுக்கட்டுகிறார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு நான் கூறுவது உங்களால் சினிமாவைப் பார்க்காமல் இருக்கமுடியுமா? உங்களால் ஒருவருடம் சினிமா பார்க்காமல் இருப்பேன் என்று தீர்மானம் எடுத்துப்பாருங்கள் .ஆனால் உங்கள் மனதில் அவைப் போராடிக்கொண்டே இருக்கும் இதிலிருந்து தாங்கள் அறிந்துக்கொள்ளலாம் தாங்கள் சினிமாவிற்கு அடிமைப்பட்டிருப்பதை அறிந்துக்கொள்லாம்.நியாயப்பிரமாணத்தின்படி நடக்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது எப்போதும் மீறத்தான் செய்வீர்கள் ஆனால் தேவனே இந்தப் பாவத்தில் இருந்து விடுபட எனக்கு கிருபைத்தாரும் என்று உங்கள் இயலாமையை அறிவித்து உங்களைத்தாழ்துவீர்கள் என்றால் தேவன் உங்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்துவிடுவிப்பதை அறிந்து மகிழ்ந்து துள்ளுவீர்கள்.நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது அது உங்களை கிறிஸ்துவினடத்தில் வழிநடத்தி நீங்கள் உங்கள் இயலாமையை அவரிடம் கூறும்படியும்,உங்களை தாழ்த்தி சரீரத்தையும்,சித்தத்தையும் அவருக்கு கொடுத்து அர்பணிக்கும்படி நடத்துகிறது.

   சினிமாப் படங்கள் தீவிர உணச்சியைத் தூண்டும்படியாகவும், கண்களையும் மனதையும் போஷித்து அவர்கள் இருதயத்தை இச்சைக்குரிய சிற்றின்பங்களாலும்,பொல்லாத ஆசைகளைத்தூண்டுகிற பிம்மங்களால் நிரப்புகிறதே அதன் நோக்கமாய் இருக்கிறது,மற்றும் பலவிதமான கண்ணின் இச்சைகள்,மாம்சத்தின் இச்சைகள்,ஜீவனத்தின் பெருமை இவற்றை திருப்தி செய்யும்படியாகவே காட்சிகள் நன்றாக ஆராய்ந்து திட்டமிட்டு எடிட்டிங் செய்யப்பட்டு அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அநேகமாக எல்லா நடிகர் நடிகைகள் அனைவருமே மோசமான நடத்தையுடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே!.அவர்கள் அப்படிப்பட்ட மன எழிச்சிகளையும்,காம கோப உணர்ச்சிகளைத் தூண்டும்படியாக நடிப்பு என்பதை அறியாதப்படி உண்மைப்போல் மனுசனின் நினைவலைகளை உண்டாக்கும்படி பாவனைசெய்து நடிக்கிறார்கள்.இதை மறுப்போர் எவரும் உண்டா என்பது எனது நியாயமான கேள்வி சிலர் அப்படி இருப்பதை நாம் பார்க்காமல் நல்ல கருத்துள்ளப் சினிமாவைப் பார்க்கலாம் என்பார்கள் இப்படிப்பட்டவர்களிடம் நான் கேட்கும் கேள்வி அப்படி கருத்துள்ள சினிமா என்கிறீர்களே அவற்றில் ஆபாசம் இல்லையா?,இன்னும் சில சினிமாவில் நிர்வாணம்,முத்தக்காட்சிகள் என்ற ஒரு எதிர்ப்பார்ப்புடனும்,படுக்கைக் காட்சிகள்  மற்றும் கொலையுணர்ச்சிகள் ,தியொழுக்கங்களான நடத்தைகள் இவைகள் இடம்பெறவில்லையா? சரி அப்படி ஒன்றுமே இல்லையென்று வைத்துக்கொண்டாலும் சுயநீதியை சார்ந்திருக்கும்படி செய்யும் சம்பவங்கள் அதில் இடம் பெறவில்லையா? எப்படி நியாயப்படுத்தினாலும் சினிமா ஒரு மாயை உண்மைப் போல் மனிதனை வஞ்சிக்கும் என்பது ஆவிக்குரியவன் அதை அறிந்திருக்கிறான்.

  நண்பனே! நீ ஆவிக்குரியவன் என்கிற கருத்தில் உன்னோடு இடைப்படுகிறேன்,நீ மாம்சத்தில் வாழ்கிறவன் என்றால் நீ சினிமா அப்படி ஒன்றும் தவறல்ல என்பாய்! ஒன்று மட்டும் நிச்சயம் வசனமே நம்மை நியாந்தீர்க்கும் என்பதை மறக்கவேண்டாம்.

  கர்த்தருடைய வருகையில் குற்றமற்றவனாக காணப்பட விரும்பும் ஒரு உண்மையான விசுவாசி கடந்துப்போகும் இவ்வுலக மாயையிலே களிகூறும்படி மறுபடியும் பிறக்காத ஆண்கள் பெண்கள் நடிக்கும் அசுத்தமான காட்சிகளைக் கண்டு ரசிப்பானோ?

  “சுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமாக இருக்கும் “ என ஒருவேளை சிலர் கூறலாம் .சரி சினிமாவில் காண்பிக்கப்படும் அனைத்துமே சுத்தமானவை தூய்மையானவை என்றுதான் விவாதத்துக்கு வைத்துக்கொள்வோமே இவையெல்லாம் சுத்தமாயும் தூய்மையாகவும் இருக்குமாயின் நாம் தொடக்கூடாது என்றும் விலகி ஓடவேண்டும் என்றுக்கூறிய கட்டளையிடப்பட்டிருக்கும் அசுத்தமானவை எவை என்று கேள்வி உடனடியாக எழும்புகிறது .சரி சுத்தமும் ,தூய்மை என்ற இக்காரியங்களைப் பரலோகில் நாம் கானமுடியுமா? ; “கற்புள்ளவைகள் எதுவோ அதையே சிந்தித்துக்கொண்டிருங்கள்”(பிலி4:8) என அப் பவுல் கூறும்போது,கற்புள்ளவைகள் பட்டியலில் இம்மாதிரியான சிற்றின்ப சம்பந்தமான தீவிர உணர்ச்சியை தூண்டக்குடிய சினிமா காட்சிகளை அவர் சேர்த்திருக்கிறாரா?

  சினிமாக்களில் சில சமயங்களில் சில நல்ல ஆவிக்குரியப் படங்கள் வருகின்றன என சிலர் கூறுகிறார்கள் . அவைகள் எவ்வளவாய் ஆவிக்குரியவை என நாம் கேட்கலாமா? அதில் நடிக்கும் நடிகையர் யார்? அவர்கள் உண்மையாக மனந்திரும்பினவர்களா? மனந்திரும்பியவர்கள் பாவியை ரட்சிப்புக்கு வழிநடத்தும் ஆவிக்குரிய பயனுள்ள காட்சிகளைத் தயாரிப்பது சாத்தியமானதே! அவற்றில் எந்த்தவிதமான மாம்ச இச்சைக்குரிய காட்சிகளைச் சேர்க்கமாட்டார்கள் .ஆனால் உலகில் உள்ள சினிமா தியேட்டர்கள் ஒருபோதும்  ஜனங்களை இரட்சிப்புக்கு நடத்தக்கூடிய திரைப்படங்களை ஏற்றுக்கொள்ளாது.அப்படிச் செய்தால் அநேக நெயர்களை இழந்துபோக வேண்டியதாகும்.

                கடைசியாக நண்பர்களே நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்று உங்களோடே பேசுகிறேன் எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது.நீங்கள் உண்மையில் தேவனோடு ஐக்கியத்தை வாஞ்சிப்பீர்கள் என்றால் இப்படிப்பட்ட காலத்தை வீனாக்காதீர்கள்,மற்றும் நீங்கள் எதற்கும் அடிமைப்படமாட்டேன் என்றால் உங்களோடுக்கூட சினிமாவிற்கு வரும் நண்பர்களுக்கு நீங்கள் ஏன் இடறலாய் இருக்கிறீற்கள்,அவர்கள் மனந்திரும்பாதபடிக்கு உங்கள் நடத்தைகள் அவர்களை பிரகாசிக்க வைக்காதப்படி கிறிஸ்துவின் வாசனையை நீங்கள் கொடுக்காதபடிக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே இப்படிதான் உலக வேசம் போடுகிறவர்கள் என்ற தவறான அபிப்பிராயத்தை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பது நிச்சயம்.உங்களால் சினிமா தவறல்ல என்று கூறுவீர்கள் என்றால் நீங்கள் இன்னும் கிறிஸ்து இயேசுவினால் உண்டான ஆவியின் பிரமாணத்தின்படி நடக்கும் வாழ்கையை நீங்கள் அனுபவிக்கவில்லை என்பதே நிச்சயமான உண்மை.

No comments:

Post a Comment