Tuesday, 14 January 2014

திருப்தி செய்யப்படாத ஜிவியமும் அதற்கான பரிகாரமும்- பாகம் 5என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல
நான் இருக்கவேண்டியதென்ன? ( உன்1:7)

    மணவாட்டி தன் கர்த்தரோடு இருதயத்தில் கொண்டிருக்கும் ஐக்கியத்தின் இனிமையைக்  குறிக்கும் மெய்யான அடையாளத்தை இங்கு நாம் காண்கிறோம். நல்ல மேய்ப்பனோடு அவள் ஒன்றாயிருக்கிறாள்.அவளுடைய இயற்கையாகவே மந்தையின் மேச்சலைத் தானாக நாடிச் செல்கிறது; ஆனால் அவள் தன் ஆத்தும நேசரின் காலடிச்சுவடுகளில் தன் பாதங்களை வைத்து நடந்துச் செல்ல வாஞ்சிக்கிறாள் ,தனிமையாக பிரயாசப்படவோ,அல்லது மற்ற தோழர்களோடிருக்கவோ அவளுக்கு விருப்பமில்லை.

   அவள் தன் சொந்த தோட்டத்தைக் காவல் செய்யத் துவங்கும் போது .மந்தையைக் குறித்தும் கவலைப்படத் துவங்குகிராள். அவருடைய ஆடுகளை மேய்ப்பதின் மூலமாகவும்.அவருடைய ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பதின் மூலமாகவும் அவள் தன் ஆண்டவர் மேல் உள்ள அன்பை தெரிவிக்க விரும்புகிறாள்.(யோவா21:15-17).அவருடைய சமுகத்தைத் தான் இழந்துவிட நேரிடுமோ என்று அவள் பயப்படத் தேவையில்லை. அவள் தான் அலைந்து திரிகிறவளைப்போல-முக்கடிட்டுக்கொண்டிருக்கிறேன்’  பிரித்துவிடப்பட்டவளாய் இருக்கிறேன் என்று இனி சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை.உடன் ஊழியருடன் ஐக்கியமாய் இருக்க விரும்புகிறாள் இங்கு மற்ற மேய்ப்பர்களுடன் அவள் ஒரு ஐக்கியத்திற்குள் வருகிறாள் ஆனால் அதினிமித்தமாக கர்த்தருடைய உழிக்காரருடன் சேர்ந்து அவர்கள் ஐக்கியத்தில் ஜீவிப்பதும் ஆண்டவரின் சமுகத்தில் ஜீவிப்பதும் ஒன்றே என அவள் தவறான அபிப்பிராயம் கொள்ளமாட்டாள்

 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.(உன்1:8)

   ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,
     இது 7ம் வசனத்தில் மணவாட்டி கூறும் வார்த்தைகளுக்கு எருசலேன்மின் குமாரத்திகள் கொடுக்கும் மறுமொழியாகும்.
    அவர்கள் அவளை ‘ஸ்திரிகளில் ரூபவதியே’ என்று அழைக்கிறார்கள். கர்த்தருடைய அழகை அவளில் கண்டிருக்கிறார்கள். இப்போது அவள்தன் எஜமானின் பிரகாசமுடைய சாயலுடையவளாய் இருக்கிறாள்.அவள் கர்த்தர் மேல் கொண்டுள்ள அன்பு அவளை ஸ்திரிகளின் ரூபதியாக மாற்றியிருக்கிரது.இப்போது அவள் மந்தையின் காலடிகளைத்தொடர்ந்துப் போகிறாள். மற்ற தேவனுடைய பிள்ளைகளுடன் ஐக்கியமாய் இருந்து கர்த்தரைப் பின்பற்றுகிறாள். பெந்தேகோஸ்தே நாளில் வசனத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றவர்கள்.  “அப்போஸ்தல உபதேசத்திலும்,அந்நியோந்நியத்திலும்,……உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” (அப் 2:42).
  ஒருகாலத்தில் அவள் அந்தக்காரத்துடன் ஐக்கியமாய் இருந்தாள்,ஆனால் இப்பொழுதோ அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறாள். “அவர் ஒளியில் இருக்கிறதுப்போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1யோவா1:7) அப். பவுல் ,தனக்கு அளிக்கப்பட்ட கிருபையை மற்ற அப்போஸ்தலர் கண்டபோது அந்நுயோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக தனக்கு அவர்கள் வலதுகை கொடுத்ததாகக் கூறுகிறார்.(கலா2:9)

    “மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு”
   அப்போஸ்தல உபதேசங்களினால் நாம் புதிய ஆத்துமாக்களைப் போசிக்கவேண்டும் , “இவைகளை நீ சகோதரருக்குப் போதித்து வந்தால் ,விசுவாசத்துக்கூரிய வார்த்தைகளிலூம் நீ அனுசரித்த நற்போதகத்திலும் தேரினவனாவாய்” (1தீமோ4:6) ,நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் நாம் அலங்கரிக்கவேண்டும் (தீத்து2:9),இளம் விசுவாசிகள் வளரும்படியாக அவர்கள் திருவசனமாகியப் பாலினால் போசிக்கப்படவேண்டும்.(1பேது2:3) .கர்த்தருடைய மந்தையைப் பராமரிக்கும் வேலையை மற்ற மேய்ப்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போது ,அவள் தன் அருகில் பிரதான மேய்ப்பன் இருப்பதை அவள் உணர்வாள்,அவர் அதை அங்கிகரித்ததற்கான அறிகுறிகளைக் கண்டு மகிழ்வாள். அவள் செய்வது கர்த்தராகிய இயேசுவுடன் கூடச்சேர்ந்து செய்யூம் சேவையாகவும்,கர்த்தராகிய இயேசுவுக்கு செய்யும் சேவையாகவுமிருக்கும். நாம் கர்த்தரில் கொண்டிருக்கும் அன்பு அவருடைய ஆடுகளை நாம் மேய்ப்பது மாத்திரமல்ல அவற்றிற்காய் நாம் கவலைப்பட்டு அவற்றை நாம் விசாரிப்பதிலும்கூட வெளிப்படுத்தப்பட்டுகிறது. நாம் அதைக் கர்த்தருக்கே செய்வதில்தான் நம் அன்பு வெளிப்படுகிறது. “ மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் (மத்25:40) என கர்த்தராகிய இயேசு கூறியிருக்கிறார்.
  8ம் வசனத்தில் காணப்படும் எருசலேமின் குமாரத்திகளுடைய மறுமொழியைக்காட்டிலும் 9,11 மணவாளனின் சத்தம் மிக இனிமையாக தொனிக்கிறது. மணவாளன்தாமே இப்போது திருவாய் மொழிகிறார். அவருடைய இருதயத்தின் ஜீவனுள்ள கனி அதாவது அவரோடுள்ள ஒருமைப்பாடு அல்லது ஐக்கியம்  இப்போது சந்தோசத்தின் சொற்களாக அவருடைய அன்பில் இருந்து வெளிப்படச் செய்கிறது 9ம் வசனத்தில் மணவாட்டியைப் புகழ்ந்துரைக்கும் வார்த்தைகள் மனதில் பதியத்தக்க விசேஷமான அழகு வாய்ந்தவையாயிருக்கிண்றன.

 தொடரும் ---------மனவாட்டி சபை தலையாகிய கிறிஸ்து இவர்களின்ஐக்கியம்

No comments:

Post a Comment