Tuesday 14 January 2014

உலகத்தின் ஆசைகளை வெறுத்துத் தள்ளுவோம்

விசுவாச வீரனாக நாம் மோசேயை எடுத்துக்கொள்ளலாம்,மோசே தேவனுக்காய் வெறுத்துவிட்ட மூன்று காரியங்கள் சாதாரணமானவைகள் அல்ல;அவை உலகப்பிரகாரமாக ஒருவன் பெற்று அனுபவிக்கக்கூடிய அனைத்திலும் சிறந்தவையும் கிடைப்பதற்கு அறிதானவைகள் ஆகும்.முதலாவது மிகச்சிறந்தபதவி  எகிப்தின் பார்வோன் இரண்டாவது எகிப்தின் ஆடம்பர சிற்றின்பங்கள்,மூன்றாவது எகிப்தின் பொக்கீசங்கள் இவற்றை அவன் தேவனுக்காய் வெறுத்து தன் சகோதர்களோடு துன்பத்தை தெரிந்துக்கொண்டான் (எபி11:24,25) பிற்காலத்திலே அவன் இஸ்ரவேல் ஜனத்துக்கு மேய்ப்பனாகவும்,அவர்களுக்காய் பரிந்துப்பேசும் உத்தமனாகவும் விளங்கமுடிந்தது. கூறப்போனால் இந்த உலகிலே துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துக்கொண்டான்.

                               யாரும் துன்பம் அனுபவிப்பதை தெரிந்துக்கொள்ளமாட்டார்கள்; ‘எனக்கு இப்போதிருக்கிற துன்பங்களே போதும்;இதற்கு மேல் எனக்கு பாடுகள் வேண்டாம் என்று மனிதர்கள் கூறுவதை நாம் பார்க்கலாம்.இயற்கையாகவே நாம் பாடுகளைத் தவிர்க்கும்படியாகவே பிரயாசப்படுகிறோம்.இன்னல்கள் நிறைந்த ஓர் இடத்தில் நாம் வைக்கப்பட்டிருப்போமாகில் அவ்விடத்திலிருந்து தப்புவிக்கவே நாம் வாஞ்சிப்போம்.துன்பங்களை விரும்பி தெரிந்துக்கொள்ளும் நபர்களை கான்பது மிக அரிதானவிசயம். பொதுவாக மனிதர்கள் கஷ்டம் வரும்போது முறுமுறுக்கின்றார்கள் அல்லது தைரியத்தை இழந்து சோர்ந்துப்போகின்றனர்.ஆனால் அப்.பவுலைப்போல “கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு வரும் பெலவீனங்களிலும்,நிந்தைகளிலும்,இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் 2 கொரி12:10 என்று கூறுபவர்கள் வெகு சிலர்தான் உண்டு.

                     அரண்மணையில் வளர்க்கப்பட்ட ஒருவன் சுகபோகங்களை உதறித்தள்ளிவிட்டு துன்பங்களை அனுபவிக்க வருவது முடியாத காரியம். பளைய ஏற்பாடு விசுவாச வீரன் மோசே இவ்விதமாய் துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்துக்கொண்டானால் புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் நாம் எவ்வளவு துன்பம் அனுபவிப்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். 

அருமையானவர்களே நீங்கள் பாடுகள் வரும்போது முறுமுறுக்கவேண்டாம்.கர்த்தருக்காய் பாடுபடும் அனுபவத்தை விட்டு ஓடும்படி பிரயாசப்படவேண்டாம்.நம்முடைய பாடுகளை நம்முடைய நிழலுக்கு ஒப்பிடலாம்.நம் நிழல் நமக்கு பின்னாக விழும்போது அவற்றிற்கு தப்பிக்க எவ்வளவு தூரம் ஓடினாலும் அவை நம் பின்னாகத்தான் இருக்கும்.ஆனால் நாம் கர்த்தருக்காய் துன்பம் அனுபவிக்கத் தெரிந்துக்கொள்ளும்போது அது நமக்கு இனிமையானதாக மாறிவிடும்.

                  நாம் பரலோகத்திற்குச் சென்று நமக்காய் வைக்கப்பட்டிருக்கும் மகிமையான கிரீடங்களையும் மகிமையையும் பார்க்கும் போது அந்த மேன்மையான பிரதிபலனைப் பார்க்கும் போது ஆ வென்று வியந்து நான் கிறிஸ்துவுக்காய் சகித்த கொஞ்சப் பாடுகளுக்காக இவ்வளவு அதிகமான மகிமை எனக்கு கிடைக்கும் என்று அப்போதே அறிந்துருப்பேனென்றால் ,அவருக்காய் இன்னும் அதிகமாக பாடுபட என்னை ஒப்புக்கொடுத்திருப்பேனே! என்று கூறக்கூடியவர்களாகத்தான் இருப்போம்.

                ஆனால் சிலர் கர்த்தாவே நான் சகிக்கும் இந்த பாடுகள் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று புலம்புகிண்றார்கள்.அருமையான நண்பர்களே நாம் மோசேயைப்போல கர்த்தருக்காய் துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துக்கொள்வேம். 

யோவான் 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல
யோவான் 17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள்உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

நம் தேவன் சொந்த தகப்பனாக நம்மோடு இருக்கிறார் ,அவர் கண்களுக்கு நாம் மறைவாய்  நாம் ஒருபோதும் இருப்பதில்லை. 

No comments:

Post a Comment