Saturday 9 March 2013

நண்பர்களே! அநேகர் சத்தியத்தை தவறாக தன் சுயத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு ஜணங்களை வஞ்சிக்கிறார்களே அதைதான் வெளிப்படுத்தி ஜணங்களை விடுவிப்பது பிரதான நோக்கம் அல்லவா! மற்றவனின் பாவத்தை சுட்டிக்காட்டி குற்றப்படுத்துவது தவறு ஆனால் இவர் ஜனங்களை தவறான சத்தியத்தில் வழிநடத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது ஒருபோதும் தவறில்லை .உலகத்தை சிநேகிக்காதே என்று வேதம் தேளிவாக கூறும் போது உலக காரியத்தை சபை அதிக முக்கியப்படுத்தி அதில் மூழ்கி உலக ஆசிர்வாதத்திர்காய் தேவனை தேடவே பயிற்சிக்கிறார்கள். தேவனுடைய உகந்த உபவாசம் பசியுள்ளவனுக்கு ஆகாரத்தையும்,வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரத்தை கொடுப்பதும் ,தரித்திரர்களின் தேவைகளை சந்திப்பதும் இவைகளையும் ,தேவனுடைய பரிபூரண பரிசுத்தத்தையும் அல்லது தேவனுடய குனாதிசத்தை வெளிப்படுத்துதலயும் விட்டுவிட்டார்கள். இதை சொல்லகூடாதா? உலகத்தை சினேகித்து தேவனுக்கு பகையாய் போய் நரகத்தில் ஜனங்கள் முடியவேண்டுமோ? இதை பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்க எங்களால் முடியாது .தேவன் ஜனங்களை இரட்சித்து கொண்டுவரும் போது இவர்களோ அவர்களை வஞ்சித்து தேவனுக்கு மருபடியும் எதிரியாக மாற்றுகிறார்கள்.இதைப்பார்த்து தேவனுடைய மனம் கொந்தளிக்காதா? எங்களால் இருதயத்தை கல்லாக்கி சும்மா இருக்க முடியாது .உலகசிற்றின்பத்தில் இருக்கும் கிறிஸ்தவனை கிறிஸ்துவின் சுபாவத்தை உடையவானாய் கிறிஸ்து அவனை மாற்றும்படிஉண்மையா சத்தியத்தை கூறுகிறோம் கதுள்ளவன் கேட்ககடவன்.

உலகத்தின் ஆசிர்வாதத்தை முக்கியப்படுத்தி,கிறிஸ்துவின் சுபவத்தினை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுக்கும் பாடுகளை இவர்கள் புறம்பே தள்ளிவிட்டார்கள்.பாடுகள் மத்தியில் தேவனை மகிமை படுத்த ஜனங்களை ஊக்கபடுத்தாமல் ,ஏதாகிலும் பாடுவந்தால் வேதனைப்பட்டு தேவனை நோக்கி புலம்ப கத்துக்கொடுக்கிறார்கள் அதில் தேவனுக்கு ஏற்ற கனி கொடுக்க உட்சாகபடுத்தாமல் போய்விட்டார்கள் இது தவறான வழிநடத்துதல் இல்லையா? இவர்கள் கற்றுக்கொடுக்கும் கள்ள உபதேசம் சுயத்தை வலுவூட்ட செய்யும் அடக்குமுரையும்,சட்டதிட்டங்களும்,கட்டுபாடாய் மனதை அடக்கி சுயமாய் முயற்சி செய்தலும்,உலக ஐசுவரியமும்,இவைகள் ஒருமனிதனில் கொள்கையாய் இருந்தால் கிறிஸ்து ஒருவனில் எப்படி ஆளுகை செய்யமுடியும் ,ஒருவனின் சுயம் அனுதினமும் செத்துக்கொண்டே இருந்தால்தான் தேவன் அவனை அனுதினமும் முழு ஆளுகையோடு அவனை நடத்தமுடியும் இந்தநாளில் என்ன நடக்கிறது? தேவனுடைய சுபவமா? சுயகர்வமா? இதை சுட்டிக்காட்டகூடாதோ? ஜனங்கள் சத்தியத்தை அறியக்கூடாதோ? அநேகர் அறிந்தும் உணர்வு இல்லாதிருக்கிறார்கள் ,

No comments:

Post a Comment