Friday 8 March 2013

அமர்ந்திரு ஓடிவிடாதே (11.08.2011 )

by Jo Joshua on Thursday, August 11, 2011 at 12:58am ·
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது. அவரால் என் இரட்சிப்பு வரும் (சங்.62:1).


மெய்யாகவே தேவனையே நோக்கி அமர்ந்திருத்தல் இன்ப வாழ்வை நோக்கியிருக்கும் நிலையாகும். இந்தநாள் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் இதுவே நம் நிலையாய் இருப்பதாக! ஆண்டவர் ஊழியம் செய்துகொண்டு மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடனும் ஜெபத்துடனும் திருப்தியுடனும் அவருக்கேற்ற தருணத்திற்காக அமர்ந்திருக்கிறோம். ஆத்துமா இவ்விதம் அமர்ந்திருக்கவே அது சிருஷ்டிக்கப்பட்டது. சிருஷ்டிப்பு சிருஷ்டிகர் முன்னும் ஊழியக்காரன் எஜமான் முன்னும் பிள்ளை தகப்பன் முன்னும் காத்திருக்கும் நிலை சிறந்த நிலை ஆகும். இது நாம் தேவனைக் குறித்த எந்த அதிகார ஆணைக்கும் அவரைக்குறித்த குறைகூறுதலுக்கும் எந்த எரிச்சலுக்கும் நம்பிக்கை இன்மைக்கும் இடம் கொடுப்பதில்லை. அதேசமயத்தில் ஆபத்து வருமுன் ஓடிவிடவாவது மற்றவர்களிடம் உதவிக்குப் போகவாவது நாம் பிரயாசப்படுவதில்லை. ஏனெனில் இவ்விதம் செய்தால் நாம் தேவனையே நோக்கி அமர்ந்திருப்பவர்களாய் இருக்க மாட்டோம். கடவுள் ஒருவரையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


இது பேரின்பத்திற்குரிய நம்பிக்கையாகும். அவரிடமிருந்து இரட்சிப்பு வருகிறது. அது வந்துகொண்டிருக்கிறது. அது அவரிடமிருந்தே வரும். வேறொருவரிடமிருந்தும் இல்லை. எல்லா மகிமையும் அவருக்கே உரியது. எனெனில் அவர் ஒருவரே இரட்சிக்கக்கூடும். அவருக்குரிய காலத்தில் அவருக்கேற்ற விதமாக நிச்சயமாக இரட்சிப்பார். தயக்கத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் அவதூறிலிருந்தும் இக்கட்டிலிருந்தும் இரட்சிப்பார். அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படாவிட்டாலும் ஆண்டவரின் சித்தத்துக்குக் காத்திருப்பதில் திருப்தியாய் இருக்கிறோம். ஏனெனில் அவர் அன்பையும் நேர்மையையும் குறித்து நமக்கு எவ்விதமான ஐயமும் இல்லை. கூடிய சீக்கிரத்தில் அவர் இரட்சிப்பை நிறைவேற்றுவார். வரப்போகும் கிருபைக்காக இப்போதே அவரைப் போற்றித் துதிப்போமாக!


 Sprueon's Daily Meditation..!!!!
விசுவாச தின தியானம்..!!!!

No comments:

Post a Comment